Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 5

5

உலகம் மறந்த என் உறக்க பொழுதுகளில் 
வாள் சுழற்றி ஆட்சி புரிகிறாய் ,
படறி மயிர் சிலிர்க்க கனைக்கும் 
வெண்புரவி மேல் வேந்தனே
கீழிறங்கி சீக்கிரம் வாயேன்டா 
விடிந்து விட போகிறது

அன்று அதிகாலையே சாத்விகாவிற்கு தூக்கம் கலைந்து போனது . சன்னல் ஸ்கிரீனை விலக்கிய போது அப்போதுதான் நிறமாகி கொண்டிருந்த வானத்தை பார்த்ததும் …எப்படி இவ்வளவு சீக்கிரம் விழிப்பு தட்டியது …என யோசித்தாள் . பேசாமல் திரும்பவும் படுத்து தூக்கத்தை தொடர்ந்தால் என்ன ? நினைத்தபோதே வேண்டாமென அவளுக்கு ஒத்துழைக்க மறுத்தது உடல் .

ஐயோ …அதற்குள் எழுந்தால் காலேஜ் போகும் வரை பொழுது போகாதே …சன்னல் கதவை திறந்து வெளியே பார்த்தபடி கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள் . சன்னலை திறந்த்தும் வெளிக்காற்று குளிராய் சாத்விகாவை தீண்டியது .தோட்டத்தின் சுற்று பாதையில் சீரான லயத்தில் ஓடிக்கொண்டிருந்த வீரேந்தர் கண்ணில் பட்டான் .வீரேந்தர் அவர்கள் வீட்டு அவுட்ஹவுசில் தான் தங்கியிருந்தான் .உடலை ஊடுறுவும் குளிரில் ஒரு சாதாரண டி ஷர்ட்டுடன் எப்படி ஓடுகிறான் பார் ….

_இவனிக்கு குளிராதா ….? நினைத்துக் கொண்டே குளிர்ந்த தனது கைகளை தேய்த்து சூடேற்றிக் கொண்டாள் .இவனுக்கு இது போன்ற குளிரை தாங்குவதற்கும் சேர்த்து பயிற்சி கொடுத்திருப்பார்களாயிருக்கும் ….கார்த்திக் முனதினம் வீரேந்தரை பற்றி சொன்ன விபரங்கள் ஞாபகம் வந்த்து .




சண்முகபாண்டியன் அவளிடம் இனி ப்ளாட்பார கடைகளில் சாப்பிடாதே பேபி …. என்று வேண்டுதலாய் கேட்டபோது முதலில் அவளுக்கு ஆச்சரியமே வந்த்து . விழிகளை விரித்தபடி அவரருகே நின்ற வீரேத்தரை பார்த்தாள் .அவன் யாரோ …யாருக்கோ …எதையோ சொல்கிறார்களென்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு பார்வையை சுற்றிலும் அலைய விட்டுக்கொண்டிருந்தான் .

பாவி ..சத்தமில்லாமல் பற்ற வைத்துவிட்டு அப்பாவி போல் விழிப்பதை பார் ….அவனை முறைத்தவளின் முகத்தை பற்றி தன்புறம் திருப்பி …

” உன் நல்லதுக்காகத்தானேடா .ப்ளிஸ்டா பேபி ….” என்றார் .

இப்படி கெஞ்சலாய் கொஞ்சி அல்ல …அப்பா எப்படி சொன்னாலும் அதை மறுக்கும் பழக்கம் மகளுக்கு கிடையாது .அதே போல்தான் அப்பாவிற்கும் .ஒருவரையொருவர் இருவரும் மறுக்கவே மாட்டார்கள் .அப்படியே மறுக்கும் சந்தர்ப்பங்களில் ஒருவரோடொருவர் ஒத்து சமாதானமாகி விடுவார்கள் .

” எதற்குப்பா ப்ளீஸ் எல்லாம் ….வேண்டாமென்றால் சரியென்று விட்டு போகிறேன் ….”

இது போன்ற சிறு விசயங்களிலெல்லாம் மகளை சண்முகபாண்டியன் கட்டுப்படுத்துவது இல்லை .ஆனால் …இப்போது …இதை எப்படி சாதித்தாய் …? கண்ணால் சாத்விகா கேட்ட கேள்விக்கு ஒரு அலட்சிய இமை திருப்பலை தந்தான் வீரேந்தர் .இவனுக்கு சண்முகபாண்டியனை தவிர மற்ற எல்லோரும் அலட்சியம்தான் .அவரிடம் மட்டும்தான் அவனது செயல் , பேச்சு எல்லாவற்றிலும் மரியாதை தெரியும் .மற்றவர்களையெல்லாம் அற்ப்பதரே பார்வை பார்ப்பான் .

” அண்ணா ரொம்ப பிஸியாக இருக்கிறீர்களா அண்ணா …? “

தன் காதில் விழுந்த பவ்ய குரல் தங்கையுடையதுதானா ….சந்தேகம் தீராமல் துடைத்துக் கொண்டிருந்த துப்பாக்கியை திருப்பி தன் உள்ளங்கையில் குத்தி பார்த்துக் கொண்டான் கார்த்திக் .




” சும்மா உங்களோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாமென வந்தேன் அண்ணா .நீங்கள் ப்ரீதானே …? “

கார்த்திக் இப்போது துப்பாக்கியை திருப்பி தன் தோள்களில் இடித்து பார்த்துக் கொண்டு ” கனவில்லையே …? ” முனகிக் கொண்டான் .

” ஏய் …என்னை கலாய்க்கிறியா …உனக்கு கொழுப்புடா அண்ணா …”

” ஹப்பா …கனவில்லை .என் தங்கைதான் .ம் …சொல்லும்மா ….என்ன விபரம் வேண்டியிருக்கிறது …? ” என்றவனை முறைத்தாள் .

” யெஸ் திஸ் இஸ் கரெக்ட் .இப்படியே பேசு .முதலில் போல் அநியாயத்திறகு மரியாதையெல்லாம் கொடுத்தாயானால் யாரோ ஒரு தங்கை …யாரோ ஒரு அண்ணனை கூப்பிடுகிறாளென போய் கொண்டேயிருப்பேன் …”

சாத்விகாவிற்கு வந்த எரிச்சலுக்கு அந்த துப்பாக்கியை பிடுங்கி அதனால் அவன் தலையில் கொட்டி போடா நீயும் …உன் விபரமும் என போயிருப்பாள் .ஆனால் அவளுக்கு விபரங்கள் வேண்டியிருந்தன. உதடுகளை இறுக மூடி கஷ்டப்பட்டு உம் கொட்டி அவள் அண்ணனிடமிருந்து பெற்ற விபரங்கள் …

வீரேந்தர் ஒரு எக்ஸ் மிலிட்டரி மேன் . இப்போது விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு ஒரு ப்ரைவேட் செக்யூரிட்டியாக பெரிய நிறுவனம் ஒன்றில் படியாற்றிக் கொண்டிருக்கிறான் .செக்யூரிட்டி என்றால் வாட்ச்மேன் வேலை இல்லை .அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தைத்தான் நம் நாட்டின்   மிகப்பெரிய பணக்கார்ர்கள் முதல் நம் நம் நாட்டின் பிரதமர் வரை தங்களின் ப்ரைவேட்  செக்யூரிட்டிக்காக அணுகுவார்கள் .அங்கே வேலை பார்க்கும் ஒவ்வொரு ஊழியரும் எல்லாவித சண்டை பயிற்சிகளும் , ஆயுத பயிற்சிகளும் பெற்ற திறமையான ஆட்கள் .

தாங்கள் காக்க வேண்டிய ஆட்களை அவர்கள் விரும்பும் காலம் வரை நிழல் போல் உடனிருந்து காப்பார்கள் .அந்த காலகட்டம் முடிந்த்தும் அவர்களை விட்டு விலகி விடுவார்கள் ….லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டு .சண்முகபாண்டியனை மூன்று மாதங்கள் பாதுகாக்க வீரேந்தருக்கு பேசப்பட்ட தொகையை கேட்டதும் சாத்விகாவிற்கு வாய் தானாக திறந்த்து .

” நம் அப்பாவின் உயிருக்கு முன் இந்த லட்சங்கள் பெரியதா பாப்பா …? ” திறந்த அவள் வாயை மூடியபடி கேட்டான் கார்த்திக் .

” இல்லைதான் அண்ணா .ஆனால் அப்பா அந்த பயங்கரவாதிகளை அவ்வளவு தீவிரமாக ஆராய்ந்து அந்த ரிப்போர்ட்டை தயார் பண்ணி கொடுத்திருக்க வேண்டாம் .அதை வைத்து உங்கள் போலீஸ்கார்ர்கள் அவர்களை பிடித்திருக்க வேண்டாம் .அந்த ஐந்து பேருக்கும் தூக்குதண்டனை தீர்ப்பு சொன்னதால்தானே …அந்த தீவிரவாத அமைப்பு அப்பாவை கொல்ல போவதாக மார் தட்டிக் கொண்டிருக்கறது …” சாத்விகா பயத்துடன் பதட்டமும் சேர பேசினாள் .

” அந்த ரிப்போர்ட்டை தயாரிக்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா பாப்பா …? நீ லேசாக வேண்டாமென்று  பேசுகிறாயே …”




” இல்லைண்ணா இப்போது அப்பா உயிருக்கு ஆபத்தென்றால் …” லேசாக தடுமாறிய தங்கையின் குரலை உணர்ந்து ஆறுதல் போல் அவள் தோள்களை தட்டினான் கார்த்திக் .

” ஒன்றும் ஆகாது பாப்பா .நாங்கள் எல்லோரும் எதற்கு இருக்கிறோம் …? இப்போது வீரேந்தர் வேறு இருக்கிறார் . இன்னமும் மூன்று மாதங்களில் அந்த பயங்கரவாதிகள் ஐந்து பேரையும் தூக்கிலிட போகிறார்கள் ்அதன் பிறகு நமக்கு பயமில்லை ….” துடைத்த துப்பாக்கியை சுற்றிலும் திருப்பி குறி பார்க்க தொடங்கினான் .

சண்முகபாண்டியன் D.G.P .கார்த்திக் S.B .இவர்கள் மட்டுமல்ல சண்முகபாண்டியனின் அப்பா , தாத்தா என அனைவருமே போலீஸ் துறையில் பணியாற்றி D.G.B வரை வந்து ஓய்வு பெற்றவர்கள்தான் .சௌந்தர்யாவின் குடும்பத்தனரும் போலீஸ் குடும்பம்தான் .அவளின் அப்பா , சித்தப்பா , மாமா என அனைவரிமே ஏதோ ஒரு போலிஸ் இலாகாவில் பணியாற்றுபவர்கள் தான் .

சண்முகமாண்டியனின் தங்கை வித்யா மட்டும் கொஞ்சம் …கொஞ்சம்தான் வித்தியாசம் .அவளை ஒரு வக்கீலுக்கு திருமணம் முடித்து அவர் இப்போது ஜட்ஜாக இருக்க , அவர்கள் மகன் சுகுமார் இப்போது லாயராக இருக்கிறான் .




இப்படி சுற்றி சட்டம் , ஒழுங்கு , தீவிரவாதம் , கொலை , கொள்ளை போன்ற பேச்சுக்களை கேள்விப்பட்டு அவைகளை பற்றியெல்லாம் அந்த குடும்பத்து பெண்களிக்கு எந்த பயமும் இருப்பதில்லை . ..சண்முகபாண்டியனுக்கு  வந்த கொலை மிரட்டலுக்கு முதலில் கொஞ்சம் பயந்த ரங்கதாயகியும் , சௌந்தர்யாவும் …தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின. பிறகு தங்கள் இயல்பான வாழ்க்கையோடே இருந்தனர் .
தந்தையை பற்றிய எண்ணங்களிலிருந்து விடுபட்ட சாத்விகா வீரேந்தர் எத்தனையாவது சுற்று வந்திருப்பான் …அசராமல் ஓடிக்கொ்ண்டிருக்கிறானே என எண்ணினாள் .இத்தனை ஓட்டத்திற்கு எப்படி அவனுக்கு மூச்சு வாங்காமல் இருக்கிறது ..ஏறியிறங்கும் அவன் மார்பு துடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டபடி நின்றவளுக்கு அவனிடம் பேச வேண்டும் போலிருந்த்து .

இரவு உடையின் மேல் அந்த கனமான கோட்டை எடுத்து போட்டுக் கொண்டவள் …கீழிறங்கி அவனிடம் சென்றாள் .

” குட்மார்னிங் …”

சுற்றிலும் மலர்ந்து கொண்டிருந்த மலர் கூட்டங்களிடையே நடக்கும் பூந்தோட்டமென தன் எதிரே வந்து நின்று காலை வணக்கம் சொன்ன அந்த அழகான பெண்ணை கண்டு கொள்ளாமல் தனது ஓட்டத்தை சிறிதும் தளர்த்தாலும் நேர் கோட்டில் தன் போக்கில் போனான் வீரேந்தர்




What’s your Reaction?
+1
19
+1
12
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!