Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 3

3

முள்ளூறும் உன்  முக ஜாடை பரிட்சயங்களுக்கு பிறகுதான்
கள்ளூறும் மலருறியும் வண்டுகளை 
உணரத் தொடங்கினேன்

,” என் மகள் உடைக்க விரும்பினால் நான் அதற்காகவே புது காரே வாங்கி தருவேன் .புரிகிறதா உனக்கு …? “

சண்முகபாண்டியனின் வார்த்தைகளில் ஆச்சரியப்பட்டு தலையசைத்த வீரேந்தர் …இவருக்கு மகள் மேல் இவ்வளவு பாசமா …வியந்தான் .அவனுக்கு சண்முகபாண்டியனின் மேல் மரியாதை கூடிக்கொண்டே சென்றது .

” தப்பு செய்த்து உங்கள் பெண்தான் அம்மா .போய் பாருங்கள் எப்படி இடித்து வைத்திருக்கிறாளென …” அம்மாவிடம் சொல்லிவிட்டு தங்கையை முறைத்தபடி சென்றான் கார்த்திக் .

” வெவ்வெவ்வே ….” அண்ணனுக்கு பளிப்பு காட்டினாள் .

” இவளையெல்லாம் முதலிலிருந்தே கையை காலை கட்டிப் போட்டு வளர்த்திருக்க வேண்டும் .இல்லை கொட்டியாவது வளர்த்திருக்க வேண்டும் ….” சொல்வதையே செய்வது போல் அவள் தலையில் நறுக்கென கொட்டிவிட்டு உள்ளே போனார் ரங்கநாயகி .
” ஆ ” என அலறிய பெண்ணின் தலையை தடவி விட்ட  சௌந்தர்யா …” அவள் குழந்தைப்பா . இதற்கு போய் இப்படியா துப்பாக்கியையெல்லாம் காட்டி மிரட்டுவாய் …? ” அதட்டலோடு அவள் கேட்ட பின்பே தன் கை துப்பாக்கியை உணர்ந்து இறக்கிக் கொண்டவன் …




போய் உங்கள் குழந்தை செய்த காரியத்தை காரில் பாருங்கள் என தனக்கிள் கூறிக்கொண்டான் .ஆனால் சௌந்தர்யா விற்கோ , சண்முகபாண்டியனுக்கோ அவர்கள் மகள் செய்த குளறுபடியை கண்ணால் பார்க்கும் எண்ணமே இன்னமும் வரவில்லை .அப்படியே பார்த்தாலும் இருவருமாக அட நம் கார் இப்போது இன்னமும் அழகாகிவிட்டதே என்பார்கள் போல…

இவர்கள் இருவருக்கும் இவள் மேல் இப்படி ஒரு பாசமா …? இன்னமும் வீரேந்தருக்கு ஆச்சரியம்தான் .

” வாடா பாப்பா சாப்பிடலாம் .வா சுகுமார் .” சௌந்தர்ய இருவரையும் உள்ளே அழைத்து செல்ல , அவள் பின்னால் போன வீரேந்தரின் பார்வையை கலைத்தார் சண்முகபாண்டியன் .

” அவள் என் மகள் சாத்விகா .அவன் என் தங்கை பையன் சுகுமார் “

” சாரி சார் .எனக்கு அவர்களை தெரியாது ” வீரேந்தரின் உடல் ராணுவ விறைப்பிற்கு போனது .

” இனி தெரிந்துகொள் .இப்போது வந்தவர்கள் என் குடும்ப நபர்கள் .என் அம்மா , மனைவி , மகன் …”

” தெரிந்து கொண்டேன் சார் .இனி ஜாக்கிரதையாக நடந்து கொள்கிறேன் …”

” ம் …” என்ற உறுமலுடன் அவர் உள்ளே மறைந்த்தும் தனது உடலை தளர்த்தி பெருமூச்சு விட்டான் வீரேந்தர் .

————

” பாட்டி உங்களுக்கு கூழ் வருது .அதுக்கு முன்னாடி என் பொங்கலை பார்த்து பொறாமையில் பொங்காதீர்கள் …” ரங்கநாயகிக்கு எளிதாக டென்சனேற்றிக் கொண்டிருந்தாள் சாத்விகா.

” நீயே வாயில் திணித்தாலும் அந்த பொங்கலை நான் சாப்பிடமாட்டேன் …நெய்யும் , முந்திரியும் வழியும் இந்த பொங்கலை சாப்பிடும் வயதா எனக்கு …? ” ரங்கநாயகி தன் தலை கொண்டையை சரி செய்தபடி சொல்ல ..

” அப்போ நாங்க எல்லோரும் டேபிளுக்கு வருவதற்கு முன்பு , முதல் ஆளாக வந்து கை நிறைய பொங்கலை அள்ளி சாப்பிட்டீர்களே பாட்டி  …அது ….” நாடியில் தட்டி யோசிப்பது போல் பாவனை காட்டிய சாத்விகாவால் ரங்கநாயகியின் முகம் கறுத்தது .

சுற்றிலுமிருந்தவர்கள் அவள் சொன்னதை கவனித்தும் கவனியாத்து போல் தலையை குனிந்து மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க ….

” ஐய்யய்யோ ….” சத்தமாக கத்தி வாயை பொத்தியவள் …

” நான் மைன்ட் வாய்ஸ்னு நினைச்சு தெரியாமல் சத்தமாக பேசிவிட்டேன் பாட்டி .சாரி …இனி முதல் ஆளாக வந்தாலும் நீங்கள் டேபிளில் இருந்தால் நான் எதையும் பார்க்க மாட்டேன் ….”

இந்த பேச்சில் சண்முகபாண்டியன் கடகடவென சிரிக்க , சௌந்தர்யா முயன்று சிரிப்பை அடக்கினாள் .தண்ணீர் குடித்தும் அடங்காத சிரிப்பினால் புரையேறினான் கார்த்திக் .

” அப்படியா நடந்த்து ….சூப்பர் சாத்விகா ….” சுகுமார் தொடர்ந்து சிரித்து கொண்டிருக்க ….ரங்கநாயகி நெற்றிக்கண்ணை திறந்து சாத்விகாவை பார்த்தாள் .

அவள் தலையே நிமிராமல் அடக்கமாக குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் .காலையில் ரங்கநாயகி குட்டிய தனது தலையை தடவி விட்டுக்கொண்டாள் .அந்த கொட்டுக்காகத்தான் இப்படி செய்தாளாம் .

” பிள்ளையையா வளர்த்து வச்சிருக்கீங்க .பிசாசு குட்டி இவள் ….” மேலே தொடர போன ரங்கநாயகியை அம்மா என சண்முகபாண்டியன் அதட்ட அவள் பாதி சாப்பாட்டில் எழுந்து போனாள் .

” பாட்டி பெரியவங்க பாப்பா .நீ இப்படி பேசக்கூடாது …” கார்த்திக் அறிவுறுத்த …

” பெரியவங்க …பெரியவங்களாக இருக்கவேண்டும் .இல்லையென்றால் ….நான் ….இப்படித்தான் ….” எல்லோருக்கும் சேர்த்தே அழுத்தமாக சொல்லவிட்டு எழுந்தவள் நின்று ….

” அப்பா …யாரப்பா அந்த புது ஆள் ….? “கட்டைவிரலால் வாசலை சுட்டி கேட்டாள் .

” அது வீரேந்தர் பேபி .எனது புது டிரைவர் .”

” ஏன் பழைய ஆள் என்னவானார் ….? “

” அவனுக்கு உடம்பு சரியில்லையென்று மூன்றுமாதம் லீவ் கொடுத்திருக்கிறேன் .அது வரை இந்த புது ஆள் ….”

” ஐயே அவனும் அவன் மூஞ்சியும் .எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை …”

” உனக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை பாப்பா …அவர் அப்பாவின் ஊழியர் .அவருக்கு நாம் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் ….” 

” மரியாதையெல்லாம் நீயே கொடுத்துக் கொள் அண்ணா .எனக்கு தோணியதைத்தான் நான் செய்வேன் …” போய்விட்டாள் .

” அப்பா இவளை நாம் கொஞ்சம் கவனிக்கவேண்டும்ப்பா .ரொம்பவே அடம் பிடிக்கிறாள் …”

” விடுடா கார்த்தி .சின்னப்பெண் .சரியாகிவிடுவாள் .”




” கார்த்திக் என் எதிர்காலத்தை நினைத்தால் எனக்கு பயம்மாக இருக்கிறது . ” சுகுமார் குரலை குறைத்து கார்த்திக்கிடம் புலம்பினான் .குறைந்த குரலில்தான் .இதனை சண்முகபாண்டியன் , சௌந்தர்யா எதிரில் சத்தமாக அவனால் சொல்ல முடியாது .

” உன் தலையெழுத்து சாத்விகா தான்னு எழுதியாச்சு மச்சான் .இனி ஒன்றும் பண்ணமுடியாது ….நீயே கொஞ்சம் உன்னை மாற்றிக்கோ ….” கார்த்திக் கிண்டலாக முணுமுணுக்க சுகுமார் பெருமூச்சு விட்டான் .

—————-

” எங்கள் காலேஜுக்கு வந்திருந்த புது புரபெசர் பற்றி சொல்லியிருக்கேனில்லையா …அவருக்கு  .இருபத்தியாறு வயதுதான் இருக்கும் .காலேஜ் பையன் போல இருப்பார்் .சூப்பர் ஹேர் ஸ்டைல் .சும்மா ஹேன்ட்சம்மா ….செமையா …உடனே என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஜொள் விட ஆரம்பித்துவிட்டார்கள் .உடனே அந்த ஆளுக்கு தான் பெரிய ஹீரோன்னு நினைப்பு வந்துடுச்சு .கேர்ள்ஸை பார்க்கும் போதெல்லாம் அலட்சியமாக பார்ப்பது ….என் பின்னாடியே வாங்கன்னு ஒரு லுக் விடுறது ….இந்த மாதிரி நிறைய வேலை செய்துட்டு இருந்தார் .எனக்கு மட்டும் அந்த ஆளை பார்த்ததிலிருந்தே ஒரு சின்ன உறுத்தல் …சந்தேகம் வந்துவிட்டால் அதை விட்டுடுவேனா ….

காலேஜ் ப்யூனுக்கு பணம் கொடுத்து அந்த ஆளோட பயோடேட்டாவை வாங்கி அதிலிருந்த போட்டோவை பார்த்தால் …என் சந்தேகம் சரிதான் .காலேஜில் ஓவராக படித்துவிட்டார் போல ….முன் முடி பூராவும் கொட்டி பின் மண்டையில் போனா  போகுதுன்னு கொஞ்சூண்டு கறுப்பா ஏதோ ஒட்டக்கிட்டு இருந்த்து . அந்த ஆள் அதைத்தான் முடின்னு சொல்லிட்டு திரிஞ்சிருக்காரு .

பிறகு வேலை கிடைத்ததும்தான் அந்த தரிசு நிலத்தை உழுது , விதை விதைத்து ….நாற்றை ஒட்டி வைத்து …ஏதோ கொஞ்சம் பார்க்கிற மாதிரி மாறியிருக்கிறாரு.நான் அவருடைய சொட்டை போட்டோவை பெரிதாக்கி ப்ரேம் போட்டு கிளாஸ் ரூமில் டேபிள் மேல் வைத்து இது யார் சாரென கேட்க ….ஆள் கப் சிப் .இப்போது ஹீரோயிசத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சாதாரண புரொபசராக வந்து போய் கொண்டிருக்கிறார் ….”

சண்முகபாண்டியன் தன்னை மீறி கடகடவென சிரிக்க ,எப்போதும் கறாரும் , கண்டிப்புமாக இருப்பவர் . மகளென்றால் மட்டும் இவருக்கு எப்படி இப்படி சிரிப்பு வருகிறது .காரை ஓட்டிக்கொண்டே ஆச்சரியமாக நினைத்தான் வீரேந்தர் .

எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது கற்சிலை போல் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவனை , இவனுக்கு  எந்த உணர்வும் கிடையாதா …என   குரோத்த்துடன் பார்த்தாள் சாத்விகா .




What’s your Reaction?
+1
17
+1
10
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!