கில்லி படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகையாக நடிக்க வேண்டியது தான் என நடிகை கிரண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த படங்களுள் அதிக வசூலை அளித்து குடும்பத்திலுள்ள அனைவரையும் ரசிகர்களாக மாற்றிய படம் கில்லி. அதேபோன்று அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை திரிஷாவிற்கும் சினிமா துறையில் மார்க்கெட்டை உயர்த்தியது கில்லி படமே. அந்த படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்திற்கு தற்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
முதலில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேறொரு நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 90 காலகட்டத்தில் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வந்த நடிகை கிரணை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஆனால் அந்த நேரத்தில் அதில் நடிக்க நடிகை கிரண் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் அந்த வாய்ப்பு திரிஷாவிற்கு சென்றுள்ளது. இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கிரண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கிரண் நடிக்க மறுத்த பிறகு தான் படத்தின் கதையை இயக்குநர் திரிஷாவிடம் கூறி அவருக்கு கதை ரொம்பவே பிடித்து போக உடனடியாக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.
கில்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை இவ்வாறு மிஸ் செய்து விட்டீர்களே என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். கில்லி படம் கடந்த ஏப்ரல் 20 -ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1