Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-22

 22

இரவுப் பூச்சிகளின் ரீங்காரம் காதுகளில் சத்தம் போட்டு தூங்க விடாமல் செய்ய , கவிதா விழித்துக் கொண்டாள.அருகில் கண்ணாத்தாள் அயர்ந்து உறங்கிக் கொண்மிருந்தாள. .அரிக்கேன் விளக்கில் ஒளியில் அவள் வழக்கபத்தை விட அழகாக தெரிந்தாள. .

இந்த ஊர் பிரச்சனை இப்படி கண்ணாத்தாள் வாழ்விற்கும் விளக்கேற்றும் என்பது கவிதா  எதிர்பாராத்து .

தூக்கம் வரும் போல் அவளுக்கு தோன்றவில்லை .மெல்ல எழுந்து கூடாரத்தை விட்டு வெளிநே வந்தாள் .அந்த ரசாயன தொழிற்சாலையை மூடிம் வரை விடப் போவதில்லை என்ற உறுதியோடு அவர்கள் ஆற்றங.கரையிலேயே கூடாரம் அமைத்து இரவு , பகலாக போராடி கொண்மிருக்கன்றனர.் .

  .எதிரே சிறு சிறு குண டு குழிகளில் ஆற்று நீர் தெரிந்த்து .சுற்றுப்புறம் முழுவதும் சுத்தமாக்கப்பட டு பளிச்சென இருந!தது .ஆறு தூர் வாரும் பணி இப்போது நடந்து கொண்டிருந!தது .திருப்தியுடன் சுற்றுபமிறத்தை பார்த்தபடி மெல்ல நடந்தாள் .

” கவி தூக்கம் வரலையா …? ” கேஊட்டபடி வந்தான் அய்யனார் .அவன் வலது  கையில் பெரிய தடியும் , இடது கையில் பெரிய டார்ச்சும் வைத்திருந்தான் .இவனை போல் சிலர் அந்த இடத்திலேயே தங்கி இருக்கும் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாய் அந்த இடத்தை சுற்றி வருவார்கள் .

” ம் ” தலையசைத்தவளின் முகத்தை பார்த்தபடி …” வா இங்கே கொஞ்ச நேரம் உட்காரலாம் ” அருகே கிடந்த பாறை திட்டை காண்பித்தான் .

அரை வட்டமாக காட்சியளித்த நிலவை பார்த்தபடி இருவரும் அருகருகே அமர்ந்தனர் .கால் குவித்து அமர்ந்திருந்தவளின் கால் கொலுசை வருடியது  அய்யனாரின் கை. மெல்ல பாதங்களை சேலைக்குள் இழுத்துக் கொண்டாள் கஙிதா .
ஆட்சேபம் காட டியவனின் பார்வையை சந்திக்காது நிலவை பார்த்தாள் .

” டேம் திறந்து விடவும் இங்கே எல்லாம் தண்ணீர் வந்திடும்ல …” தாங்கள் அமர்ந்திருந்த பாறையை காட்டிக் கேட்டாள் .

” ஆமாம் .இந்த ஆறு நிரம்பி கால்வாய் வழியாக நல்லாம்பட்டி கண்மாய்க்கு கூட தண்ணீர் வந்து விடும் . ஆனால் அதற்கு முன்ன இந்த தொழிற்சாலையை மூடனும் . அப்போதான் கழிவு தண்ணீ இங்கே வந்து கலக்காம இருக்கும் ஆறு ஆறா ஓடும் .அது உன் அப்பா ஊர் வரை வர்றப்ப உதவும்னுதான் முன்னாலேயே கணக்கு போட்டு நடுவுல கிடக்குற சில பேரிடைய யநிலங்களையெல்லாம் வாங்கி வைத்நிருக்கிறேன் ” 

கவிதா அவனை உற்றுப் பார்த்தாற் ” உமா …? “

” ம் .அவர்கள் நிலம்தான் அதில் முக்கியமானது .உமாவின் அப்பா நிலத்தை நம்மிடம் அடகு வைத்து மேலும் மேலும் பணம் வாங்கி நிலம் மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டது .அதனால் நானே அதிகமாக பணம் கொடுத்து அந்த நிலத்தை வாங்கிக் கொண்டேன் .அவர்கள் அந்த பணத்தையும் வீண்டித்துவிட்டு நான் ஏமாற றி அவர்கள் நிலத்தை பிடுங்கிக் கொண்டதாக ஊருக்குள் பரப்பினர் .ஊராருக்குத்தான் மாடசாமியை பற்றி தெரியுமே .அதனால் நம் வீடு இருக்கும் பக்கமே அவன் குடும்பம் வரக் கூடாதென தடை விதித்து வைத்ழிருந்தனர. …அப்படியும் உன்னை வைத்து திரும்ப உள ளே நுழைய முயன்றார்கள் ” 

” நீங்கள் தடுத்து விட்டீர்கள் …” குற்றவுணர்வுடன் ஒலித்தது கவிதாவின் குரல் .

” என்னிடம் சொல்லியிருக்கலாமே …” 

” எங்கே நாம் நிதானமாக உட்கார்ந்து பேசும் சூழலே அமையவில்லையே …” 

கவிதாவின் பார்வை தாழ்ந்த்து …

” நீங்கள் அடிக கடி சொல்வது போல் நான் முட டாள்தான் போல ” குன்றலாய் பேசினாள் .

அய்யனார் ஆதரவாக அவள் தலை வருடினான் .” இல்லை கண்ணு .கொஞ்சம் சறு பிள்ளை பிடிவாதம் உனக்கு .அவ்வைஙுதான் ” 

கஙிதாவின் குனிந்த பார்வையில் அய்யனாரின் அகன்ற பாதங்கள் விழுந!தன .சற்று முன் அவன் தன் பாதங்களை வருடியது நினைவு வரு ஒரு விரல் நீட்டி அவனது கால் பெருவிரலை தொட்டாள் .மிக லேசான அந்த தெடுகைக்கே அய்யனாரின் உடல் மின்சாரம் வாங்கியது போல் சிலிர்த்தது .அது கஙிதாவிற கு நன்கு தெரிந்த்து .

தன் பாதம் தொட்ட விரலை எடுத்து உதட்டில் வைத்து ஒற்றியவன் , ” இதெல்லாம் வேண்டாம் கண்ணு .எனக்கு ஒரே ஒரு …” என உதடு குவித்து கேட டான் .

” ஐயோ …இங்கேயா …யாராவது பார்த்து விடுவார்கள் ” 

” ப்ச் இங கே யாரும் இல்ல கண ணு .வாயேன் ” தாபமாக அழைத்தவனன் கன்னம் பதிய துடித்த தனது இதழ்களை மடித்துக் கடித்து அடக்கினாள் கவிதா .தலையசைத்து மறுப பு சொன்னாள் .




” இப்படித்தான் உங்க அக்கா கூட நினைச்சாங்க …ஆனால் நான் கூடாரத்திற்குள் இருந்தேன் ” 

” என்ன சொல்ற கண்ணு , ஒண்ணும் புரியலை ” கேட டது கடைக்காத அதிருப்தியில் சலித்தவனை பார்வையால் கொத்தியபடி …

” நம்ம ஜட்ஜ் ஐயாவை பற்றி உங்களுக்கு முழு விபரம் தெரியுமா  ..? ” என்றாள் .

” ஏன் அவருக்கு என்ன …? ” 

” நான் சொல்றேன் கேட்டுக்குங்க ” பேச ஆரம்பித்தாள் .

சங்பரலிங்கம் …திறமையானவன் .அறிவாளி .மூன்று தங்கைபள் , இரண்டு தம்பிகள் என பெரிய குடும்பம் அவனுடையது .சிறு வயதிலேயே தந்தை இறந்து விட குடும்பத்தை தாங்கும் பொறுப்பு .அவன் தோள்களில் .சலிக்காமல் குடும்பம் தாங்கி தங்கை தம்பிகளை கரை சேர்த்து இடையில் தனது படிப்பையும் கவனித்து வாழ்வில் செட்டிலாகி நிமிர்ந்து போது , காதோரம் நரையும் , முன் நெற்றி சுருக்கமும் வந்திருந்த்து .

அம்மாவும் இறந்து விட , உறவுகள் எல்லோரும் தங்பள் தங்பள் வாழ்க்கையோடு ஐக்கியமாகி விட தனக்கென ஓர தனி வாழ்வெனும் எண்ணமே இல்லாமல் அவன் தனியாகவே நின்று போனான. தொடர்ந்து தொழிலில் காண்பித்த தீவிரம் நாற்பது வயதிலேயே அவனுக்கு நீதிபதி பதவியை பெற்று தர , தனது ஊர் அருகிலேயே  மாற்றலாகி வந்தான் .

அவன் சந்திக்கும் முதல் கேஸே அவனது ஊர் சம்மந்தப்பட்ட கேஸ் .இந்த விபரம் கொஞ்சம் கொஞ்சம் அவனுக்கு முன்பு தெரிந்திருந்தாலும் அதை பற்றிய கூடுதல் விபர பைல்களை புரட்டியபடி காரில் வந்து கொண்டிருந்தான் .

” ஐயா யாரோ இரண்டு பொண்ணுங்க நிக்கிறாங்கய்யா ” டிரைவர் கூற எட்டப் பார்த்தான் .

அந்த பெண்கள் ரோட்டில் நின்றிருந்தனர் .எங்கோ பார்த்த சாயல் தெரிய காரை நிறுத்தி இறங்கினான் .இருவரும் வணங்கியபடி கார்ருகல் ஓடி வந!தனர் .

” வணக்கம் சார் .நான் சாயல்குடி அன்னாசிலிங்கம் மகள் கவிதா .இப்போது நல்லாம்பட்டி அய்யனாரின் மனைவி .” 

” நான் அய்யனாரின் அக்கா கண்ணாத்தாள் ” 

” ம் …நினைவிருக்கு .நானும் சாயல்குடிதானே .உங்பள் இரண்டு பேரை பற்றியும் கேள்விபட்ணிருக்கிறேன் .அன்னாசிலிங்கம் , அய்யனார் ஊர் பெரிய மனிதர்கள் .அவர்பள் வீட டு பெண்கள் ஏன் இப்படி நடு ரோட்டில் …? சொல்லுங்க என்ன விசயம ? ” 

ஆதரவாக விசாரிக்க ஆரம்பித்தவன் அவர்கள் வந்த விசயம் அறிந்த்தும் முகம் மாறினான் .

” அந்த ஆறு விசயத்தில் நம்ம ஊர்க்பகு சாதகமாக தீர்ப்பு சொல்லனும் நீங்க ” 

” அது என் தொழில் .நான் எப்போதும் என் தொழிலஉக்கு விசுவாசமாக இருப்பேன் .அதில் யாருடைய ஆலோசனையையும் யான் கேட க மாட்டேன் . நீங்கள. போகலாம் ” 

அவனது கண டிப்பில் இரு பெண்களும் முகம் சோர்ந்து திரும்பனர் .பக்கவாட்டு ரோட்டில் இறங்கி அவர்கள் நடப்பதை பாரழத்தபடி காரில் ஏற அவர்களில் உயரமாய் இருந்த அந்த பெண் திரும்பி கை தட்டி அழைத்தாள் .

ஒரு ஹைகோர்ட் ஜட்ஜை கைதட்டி அழைக்க இவளுக்கு என்ன தைரியம. …சங்கழலிங்கம் கோபமாக திரும்ப , 

” மன்னிச்சுக்கோங்க ஐயா .நீங்க வோறொண்ணும் செய்ய வேணாம் .ஒரே ஒரு முறை அங்கன வந்து பாருங்க .எங்க ஜனங்களெல்லாம் என்ன பாடு படுதுகன னு உங்களுக்கு தெரியும் .உங்க ஊருங்கதான்யா .நீங க பெரிய பதவக்கு போயிட்டாலும் கொஞ்சம் இறங்கி வந்து பாக்கராம் தப்பில்ல .” கண டிப்பும் , கறாருமாக பேசிவிட டு உடன. வந்த பெண ணை இழுத்துக் கொண டு நடந்தாள் .

அந்த பெண்ணின் ஆளுமையில் பலமாக ஈர்க்கப்பட டான சங்கரலிங்கம் .

” அண்ணி ஜட்ஸ் வந்திருக்கிறாரு ” கவிதா பரபரப்பாக வந்து நின்றாள் .

தற்காலிகமாக அவர்கள் தங்க அமைத்திருந்த கூடாரத்திற்குள் இருந்து வெளியே வந்து பார்த்தாள் கண்ணாத்தாள் .சங்கரலிங்கம் அவளுக்பகு முதுகு காட்டி நின்றிருந்தான் .அந்த இடங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான் .அவனருகில் அய்யனாரும் , அன்னாசிலிங்கமும் நின்று நிலைமையை விளக்கியபடி இருந்தனர் .கூடியிருந்த எளிய விவசாய மக்களிடமும் பேசி விபரங்களை தெரிந்து கொண்டான் .

அவனருகே போய் வந்த்தற்கு நன்றி சொல்ல நினைத்தாள் கண்ணாத்தாள் .ஆனால் ஏனோ ஒரு கூச்சணம் அவளை தடுத தது .கவிதா அவர்களுருகே போய்விட , அவள் கூடாரத்தற்குள்ளேயே தேங ்கி நின்று பார்த்துக் கொண்மிருந்தாள் .சங்கழலிங்கம் களம்பி விட்டான் .ரோட்டில் நிறுத்தியிருந்த காரில் ஏறிம் மின் அவன் திரும்பி தன் பக்கம் பார்த்தது போல் இருக்க , அவணரமாக தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள் கண்ணாத்தாள் .அவள் முகம் சிவந்த்து .இந்த அனுபவம் அவளுக்கு புதியது .யாரிடமும் நேருக்கு நேராக நின்று கண்களை பார்த்து பேசத்தான் அவளிக்கு பழக்கம் .

மறுநாளே அவர்கள் கூடியிருந்த இடத்திற்கு ஐந்து பேர் கொண ட கும்பல் வந்த்து .அவர்களன் முன்னால் வந்தவன் முகம் சோர்ந்து தொங்கியிருந்த்து .அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தில் அடர்ந்து கிடந்த கருவேல மரங்களை வெட்டி வேரோடு  அகற்ற ஆரம்பித்தனர .

விசாரித்தபோது ஆற்று மணல் கொள்ளையில் சம்பந்தப பட டவனாம் அந்த ஆள். அவர்களுக்கான தண்டனையாக பத்து நாட களில் இங்கே இருக்கும் கருவேல மரங்களை அகற்ற சொல்லீ ஜட்ஜ் சங்கரலிங்கத்தின் தீர்ப்பாம் .சூப்பர் கவிதா கை தட்ட கண்ணாத்தாள் விழி விரித்தாள் .என்ன அருமையான தீர்ப்பு .




அன று மட்டுமல்ல அடுத்தடுத்து சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுஙோருக்கு தண்டனையாக ஆற்றின் குப்பைகளை ஒதுக்க வேண்டும் , ஆற்றை தூர் வார வேண்டும் , ஆற்றிலிருந்து கண்மாய் வரை கால்வாய் குப்பைகளை அகற்றி சரிப்படுத்தி கால்வாயை ஆழப்படுத்த வேண்டும் போன்ற தண்டனைகள் ஜட்ஜ் சங்கரலிங்கத்தால் கொடுக்கப்பட்டன .அவர்களை கண்காணிக்க காவல் துறையினரும் வந்த்தால் அந்த இடம் விரைவாக சுத்தமாக ஆரம்பித்தது .

உடன் ஊர் மக்களும் உற்சாகமாக சேர்ந்து கொள்ள , சீக்கிரமே அந்த இடம் பளிச்சென்றானது .

பத்தே நாட்களில் ஆற்றில் கலந்திருந்த ரசாயன நீர் அப்பிறப்படுத்தப்பட்டு ஓரளவு நீர் நீலை போல் ஆறு தோற்றமளிக்க, சுற்றுப்புறம் குப்பை , கூளங்கள் , முட் செடிகள் அகன்று ஏதோ கொஞ்சம் மணலுடன் ஓரளவு ஆற்றங்கரை போன ற தோற்றத்தை அந்த இடம் பெற்றிருந்த்து .

மனித உழைப்பன் மகத்துவத்தை வியந்தபடி கண்ணாத்தாள் நின்று சுற்றுப்புறத்தை பார்த்தபடி இருக்க …

” இப்ப ஓ.கேங்களா மேடம் …? ” என்ற சத்தத்திற்கு பின்னால் திரும்பி பார்த்து அதிர்ந்தாள் .

சங்கரலிங்கம் புன்னகையிடன் நின்றிருந்தான் .

” நீ …நீங்களா ஐயா .வா …வாங்க ஙெயில் .உள ளே கூடாரத்திற்கிள் வாங்க ” 

” பரவாயில்லை .இன்று கோர்ட் லீவ் .வேலை எந்த அளவு முடிந்திருக்கறது என பார்க்க வந்தேன் . ம் .பரவாயில்லைதானே …இனி வேறெண்ண …? ” 

கண்ணாத்தாள் விழித்தாள் .அவளிடமா கேட்கிறான் …? பெரிய ஜட்ஜ் .அவளிடம் வந்து அடுத்து என்ன செய்யவென நிற்கிறானா …? குபீரென எங்கருந்தோ ஒரு ஙெட்பம் வந்து முகம்ப்பிக் கொள்ள தலை குனிந்தாள் .

” மஹூம் ” அவள் முன் ஒற்றை விரலாட்டினான் .

” எப்போதும் போல் நிமிர்ந!து தைரியமாக நின்று என்னை பார்த்து பேசுங்க மேடம் .அதுதான் உங்கள் சிறப்பு .எனக்கு பிடித்தது கூட உங்களின் அந்த நிமிர்வுதான் ” 

கண்ணாத்தாளின் தலை தானே நிமிர்ந்து கொண்டது .நன்றியாய் அவன் கண்களை சந்தித்தது .

” தட்ஸ் குட் மேடம் ” 

” மரியாதையெல்லாம் வேணாமுங்க .சாதாரணமா பேசுங்க ” 

” ஓ …எப்படி கூப்பிட ? ஊரில் எல்லோரும் கூப்பிடுகிறார்களே ஆத்தா  என று அப்படியா …? ” 

கண்ணாத்தாளின் தலை வேகமாக மறுப்பாய் ஆடியது .

” பின்னே கண்ணு …அப்படிக் கூப்பிடவா …? ” கேட்டுவிட்டு சங்கரலிங்கம் நடந்துவிட்டான் .மின்னல் தாக்கியது போல் கண்ணாத்தாள் அதே இடத்தில் வேரூன்றி நின று விட்டாள் .

தன் கார் கதவை திறந்தபடி திரும்பி பார்த்த சங்கரலிங்கம் ” கண்ணு …” மெல்ல அழைத்தான் .

விழிகள் படபடக்க நிமிர்ந்து பார்த்தவளிடம் ” தீர்ப்பு …என் கையில் …” தன் நெஞ்நில் கை வைத்து காட்டியவன் காரிலேறி போய்விட்டான் .

கண்ணாத்தாள் அப்படியே காலடியில் கிடந்த சிறு பாறையில் உறைந்து அமர்ந்துவிட்டாள் .

மதிய வெயிலுக்கு பயந்து அங்கே நிறைய பேர் இல்லை .இருந்த சிலரும் கூடாரங்களினுள் ஒதுங்கியிருந்தனர் .நல்லவேளை யாரும் பார்க்பவில்லை .திரெஉம்பி திரும பி பார்த்துக் கொண்டாள் .

ஆனால் அருகிருந்த கூடாரத்தினுள் இருந்த கவிதா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தாள் .அவள் முகம் வெண் தாமரையாய் மலர்ந்திருந்த்து .

இப்போது அய்யனாரின் முகம் சூரியனாய் சுடர் விட்டுக் கொண்டிருந்த்து .

” கவி …” வேகமாக மனைவியை இழுத்து அணைத்துக் கொண டான் .

” எல்லாம் உன்னால்தான் கண்ணு .உன்னை முட்டாள னு சொன்ன நான்தான் முட்டாள் ” அவனது உதடுகள் அவளது தோள்களில் படிந்து படிந்து விலகின .

ம்க்கும் என்னை இப்படி அணைச்சுக்க இவனுக்கு ஏதாவது ஒரு சாக்கு பெருமிதமாய் யினைத்தபடி போலியாய் கணவடனை தள ளினாள் .

அப்போது தீனமாய் ஒரு குரல் அவர்கள் காதுகளில் விழுந்த்து . ….




What’s your Reaction?
+1
14
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!