Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று – 21

21

” அதென்ன எப்போ பாத்தாலும் என்னை கிறுக்கச்சி மாதிரியே பேசுறது …? உங்களுக்கு அவரை பிடிக்கலைங்கறதுக்காக அவர் செயற நல்லது எல்லாத்தையும் குற்றம் சொன்னால் எப்படி ?நீங்கள் வராவிட்டால் இருங்க .நான் நாராயணசாமி மாமாவை பார்த்து பேசத்தான் போகிறேன் …” 

” கொன்னுடுவேன்டி உன்னை …” ஆவேசத்துடன் கையை ஓங்கிக் கொண்டு வந்தான் .அவனது அந்த அறை மட்டும் தன் மேல் பட்டிருந்தால் தான் நிச்சயம் எலும்பு எலும்பாக சிதறியிருப்போமென்றே நினைத்தாள் கவிதா. அத்தனை வெறி இருந்த்து அவனது பார்வையிலும் , கை வீச்சிலும் .

கண்ணாத்தாள் இடையில் கை நீட்டி தம்பியை தடுத்து அப்பால் தள்ளினாள.்

” என்ன அய்யா இது …? திருப்பி அடிக்க மாட்டான்னுதானே அவளை அடிக்க கை ஒங்குற …? தப்புய்யா .இதை நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை ” 

” அக்கா உனக்கு இவளை பத்தி தெரியாது . இவளுக்கு தானாவும் தெரியாது .சொன்னாலும் புருயாது. மூளைக்கு பதிலா களிமண்ணுதான் மண்டைக்குள்ளாற இருக்கு .இவளெல்லாம் காலேசு போயி என்னத்தை படிச்சு கிழிச்சாளோ …” 

கணவனின் தொடர்ந்த இகழ்வில் கவிதாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன .

அவள் நாராயணசாமியை என்றோ வெறுத்து விட்டாள் .ஆனால் அய்யனாருக்கு பயந்து காருக்குள. கை காட்டி யின்றவனைத்தான் வெறுத்தாள் .அவள் பார்க்க கம்பீரமாய் கோர்ட்தில் வாதாடிய நாராயணசாமியை அவள் இன்னமும் நம்பிக் கொண்முதான் இருக்கிறாள் .அவனது வாத தறமை மேல் அவளுக்கு இன்னமும் அபார நம்பிக் கை இருந்த்து .தனக்கு பிடிக்காதவன் என்ற காரணத்துக்காக ஒரு நல்ல வக்கீலை ஊர் இழப்பதை அவள் விரும்பவில்லை .அதனாலேயே அவள் அடிக்கடி நாராயணசாமி பற்றி பேசிக் கொண்டிருந்தாற் .

” பாருங்க அண்ணி .எப்போ பார்த்தாலும் இப்படித்தான் பேசுறாரு .கை நீட்டுறாரு .என்னைக் கண்டாலே இவருக்கு புடிக்கலை .எங்க ரெண்டு பேருக்கும் எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க . பேசாமல் என னை எங்க அம்மா வீட்டுக்கே அனுப்பி வச்சுடுங்க .” விம்மினாள் .

” அடிங் …இந்த வீட்டு வாசப்படியை தாண்டி காலை வச்சு பாருடி .காலை வெட்டி வீட்டுக்குள்ள போடுறேன. …” அய்யனார் கத்தினான் .

விம்மியவளை ஆதரவாக அணைத்து தேற றிய கண்ணாத்தாள் .பார்வையால் தம்பியை எரித்தாள் .

” அய்யா என்ன இது …கசாப்பு கடைக்காரன் மாதிரி பேசுற .  நீ வெளியே போ .அவகிட்ட நான் பேசிக்கறேன் ” 

” இந்த வீட்டை விட்டு அவள் வெளியே காலெடுத்து வைக்க கூடாதுக்கா .மீறினா நான் மனுசனா இருக்க மாட்டேன் ” 

” சரிதான்டா இப்போ மட்டும் மனுசனாவா இருக்குற …? அதென னடா ஆம்பளைங்க எல்லோருக்கும் இப்படி ஒரு திமிர் .பொண்டாட்டின்னா அடிக்கலாம் , வெட்டலாம் ,குத்தலாம்னு .தப்பு அய்யா. இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் நான் துணை போக மாட டேன் ” 




” நல்லா கேளுங்கண்ணி .என்னை போராட்டத்துக்கு கூட வரக் கூடாதுன்னு சொல்லிட்டாரு ” கவிதாவின் விசும்பல் அழுகையாகி இருந்த்து .

” அப்படியா சொன்னான் . அவன் கிடக்குறான் .நீ நாளையிலிருந்து என் கூட வா புள்ள .நான் உன்னை கூட டி போறேன் ” 

” அக்கா வேண்டாம் .அவள் அங்கே வந்தால் சரி வராது ” 

” எல்லாம் சரி வரும் .நீ வெளியே போ ” 

பாதங்களை அழுத்தி ஊன்றி கவிதாவின் மேல் பார்வை பதித்து நின்றவனை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளினாள் .கவிதாவை தன் அறைக்கு அழைத்துப் போய் ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்தாள் .

மறுநாளிலிருந்து கவிதாவும் போராட்டத்தில் கலந்து கொள் ள ஆரம்பித்தாள் .ஆற்றின் முன்னாலும் , தொழிற்சாலையின் முன்னாலும் , ரோட்டிலும் தொடர்ந்து பேராட்டங்கள் நடத்தினர் ஊர் மக்கள் .

அன்னாசிலிங்கம் அவரது ஊர் மக்களுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார் .அய்யனார் அவனது ஊர் மக்களுடன் வந்தான் .இரண்டு ஊர் ஜனங்களும் இணைந்து மூன்று மாதங்களாக போராடினர். ஆனால் பலன்தான் எதுவும் கிடைப்பதாக இல்லை .

” என்னத்தடி போட்டோ புடிக்கற …? ” பின்னால் கேட்ட கணவனின் குரலுக்கு திரும்பாது சுற றி சுற்றி போட்டோ எடுத்தாள் கவிதா.

இதோ இந்த போராட்டம் ஆரம்பித்த மூன்று மாத காலமாக இருவருக்குள்ளும் அவசியமான விசயத்திற்கு தவிர வேறு பேச்சில்லை .அதுவும் ஆம் , இல்லை , சரி இது தவிர ஒரு தலையசைப்பு , ஆமோதிப்பு இப்படித்தான் .

அன்றிலிருந்து கண்ணாத்தாள் ஆட்சேபித்தாலும் அவளுடைய அறையிலேயே படுத்துக் கொண்டாள் கவிதா  தம்பியின் நடவடிக்கையில் அவளுக்குமே திருப்தி இல்லாமலிருக்கவே .  சில தடவை சொல்லிப் பார்த்து விட்டு கண்ணாத்தாளும் பேசாமல் விட்டு விட்டாள் .

பகல் முழுவதும் போராட்டம் பிற வேலைகள் இரவில் அலுத்து வந்து உறக்கம் .என ஒரு வித எந்திரமாக கழிந்து கொண்டிருந்த்து அவர்கள் வாழ்வு .

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நிற்பவள் மேல் இப்போதும் கோபம் பெங்கி வர பல்லை கடித்து அதனை அடக்கியபடி நின்றான் அய்யனார் .

தன் போனில் எடுத்த போட்டோக்களை தனது முகநூலிலும் , வாட்ஸ்அப்பிலும் ஏற்றினாள் கவிதா .தங்கள் ஊர் நலைமையை தெளிவாக விவரித்நாள் .தனது நண்பர்கள் அதனை உடனுக்குடன் பலருடன் பகிருமாறு கேட்டுக் கொண்டாள் .திரும்பி கணவனை பாரத்தாள் .

தான் செய்த வேலையை விளக்கினாள் .இதனால் ஏதாவது நமக்கு நல்லது வர வாய்ப்பிருக்கிறதென கூறினாள் .அவளது விளக்கங்கள் பதிந்த்தை விட அவள் பேசிய இதழ்களும் , விரிந்த கண்களுமே அய்யனாரை அதிகம் கவர்ந்தன .இவள் இப்படி நேருக்கு நேர் நின்று என்னிடம் பேசி எவ்வளவு நாட்களாயிற்று …

தன் போனிலிருந்து நிமிர்ந்து கணவனை பார்த்தவள் அவன் பார்வைக்கு முகம் சிவந்தாள.நான் எவ்வளவு முக்கியமான விசயம் பேசிக் கொண்மிருக்கிறேன் .இவன் இப்போது போய் இப்படி பார்த்துக் கொண்மிருக்கறானே .செல்லமான ஊடல் பார்வை ஒன றுடன் அவனைக் கடந்து போனாள் .

ஒரு வாரம் எந்த மாறுதலுமின்றி கழிய , மதிய நேரம் சற று ஓய்வாக கண்ணாத்தாளின் அறையினுள் படுத்திருந்தாள் கவிதா .

” கவி …” அறைக்கு வெளியே அய்யனாரின் குரல் கேட க திரும்பி பார்த்தாள் .அறை வாசலில் நின்றிருந்தான் அவன் . கவிதா இங்கே தங்க முடிவெடுத்ததில் இருந்து அவன் கண்கள் உயிர்ப்பை இழந்திருயந்த்து .தினமும் இரவு அக்காவின் அறைக்கு படுக்க போகும் மனைவியை ஙெறுமை பார்வையால் பார்த்தபடி இருப்பான் .ஏதோ கட்டுப்பாடு போல் அந்த அறைக்கிள ளும் நுழையாது இருந்தான் .

இப்போதும் அறை வாசலில் நின்று வா என அழைத்தான் .பரவசம் படர்ந்து கிடந்த அவன் முகத்தை கூர்ந்து பார்த்தபடி ” ம்ஹூம் ” படுத்தபடியே தலையாட்டினாள் .




” ஏய் வாடி .ஒரு முக்கியமான விசயம் ” 

ப்ச் , கவிதாவிற்கு சலிப்பாக இருந!து .இந்த போராட்டம் கிணற்றில் கிடக்கும் கல்லாக இருப்பது அவளுக்கு எரிச்சலாக இருந்த்து .எனவே எல்லாவற்றலும் ஒரு அதிருப்தி .

” எனக்கு தூக்கம் வருது ” கண்களை மூடிக் கொண்டாள் .

” நான் வரவா …? ” தயக்கமாய் அறையின் வாசல் படி ஏறி நின்று கேட்டான் .

” உங்களை வரக் கூடாதுன்னு நான் எப்போ சொன்னேன் …? ” 

அவ்வளவுதான் சூரியனை கரைத்து ஊற்றியது போல் அவன் முகம் பிரகாசித்தது .இரண்டே எட்டுக்களில் அறைக்கிள் நுழைந்து அவளது கட்டிலை அடைந்தான் .அவனது வேகத்தில் லேசான மிரட்சியுடன் எழுந்து கொள்ள போனவளை விடாமல் அவளுக்கு இரு புறமும் கைகளை ஊன்றி தடுத்து அவள் முகமருகே குனிந்தான்

பச் பச்சென சத்தத்த்துடன் அவள் முகம் முழுவதும் பதிந்தன அவன் இதழ்கள் . உற்சாகமும் மகிழ்ச்சியுமாக முதலில் இருந்த முத்தங்கள் மோகமும் , தாகமுமாக போக போக மாறியது .காதல் கலந்து வந்தவைகள் காமத்தின் வாசலை தொட்டு அவளது மேனியில் பதிய ஆரம்பித்த போது கவிதா விழித்துக் கொண டாள் .

” ச்சீ என்ன இது …? விடுங்கள் ” செல.லமாக அவனை தள ளினாள் .

” சந்தோசம்டி .ரொம்ப சந்தோசம் .நீ சாதிச்சிட்டடி ” மீண்டும் அவளை இழுத்து இறுக்க அணைத்துக் கொண டான் .

” நீ வாட்ஸ் அப் , பேஸ்புக்கல் போட்டு விட்ட போட்டோக்கள் விபரங்கள் உலகம் முழுவதும் பரவி நம் ஊர் விசயம் நம்ம நாடு பூராவும் பேசுறாகளாம் .இப்போ சட்டமன்றத்துலயே இதைப் பத்த பேசி , சென்னை கோர்ட்டுல இருந்து மதுர கோர்ட்டிக்கு ந்ம்ம ஊர் கேஸை பத்து நாளில் முடிக்கனிம்னு உத்தரவு வந்திருக்குதாம் .நம்ம வக்கீல் இப்போதான் போன் பண்ணினார் ” 

” நிஜம்மாவா …? ” உற்சாக்கம் மிக கணவனின் கழுத்தைக் கட்டிக் கொண டாள் அவள் .

இறுக மனைவியுடன் பிணைந்து கொண்டவன் ” என னடி அவ்வளவுதானா …? ” ஏக்கமாய் கேட்டான் .

” வேறு என ன …? ” புரியாமல் கேட்டவளுக்கு உதடுகளை குவித து காட்டினான் .

” ம்ஹூம் ….” மறுத்து ஊடியவளின் ஆடிய காது ஜிமிக்கி அவனது மோகத்தை தூண்ட , வேகமாக அவள் கன்னங்களை பற்றினான் .

” ஏன்டி …? ” தாபமாக வினவினான் .

அப்போதே அங்கேயே இணையுடன் கூடத் துடிக்கும் வல்லூறென படபடத்து நின்றான் அவன் .

” ஷ் …அண்ணியோட ரூம் ” அவசரமாக அவள் நனைவுறுத்த , அதே நேரம் ….

” அய்யா …” என்ற கண்ணாத்தாளின் குரல் வாசலில் கேட க இருவரும் அவசரமாக விலகக் கொண்டு வாசலுக்கு வந்தனர் .

கண்ணாத்தாளும் , அன்னாசிலிங்கமும் வந்தனர் .

” கவிம்மா , நல்ல வேலை செய்தடா ” கை நீட டிய தந்தையன் கைகளை பற்றிக் கொண்டாள் மகள் .

” ஒரு முயற்சிதான்பா ” 

” நானும் இப்போதான் பாராட்டிட்டு இருந்தேன் மாமா ” தந்தையின் தோள்களில் உரிமையாக சாய்ந்திருந்தவளை கணவனாக பார்த்தான் அய்யனார் .வெட கமாய் பார்வை திருப்பக் கொண டாள் .

” நம்ம சங்கரலிங்கம் தான் இந்த கேசுக்கு ஜட்ஜா வருவாராம் மாப்பிள்ளை ” 

” எந்ந சங்கரலிங்கம் மாமா ? ” 

” அவர் எங்க ஊர்க்கார்ர. வக்கீலா இருந்தாரு . இப்போ ஜட்ஜ் ஆயிட்டாராப்பா …? ” 

” ஆமாம்மா .சென்னையில் இருந்தவரு .இப்போ பதவி உயர்வுல ஜட்ஜாகி மதுரைக்கு வந்துருக்காரு ” 

” அப்பா அவர்கிட்டயே பேசிப் பார்க்கராமா …? ” 

” அவர் அப்படி கேஸ் விசயம் வெளியே   பேச மாட்டாரேம்மா .” 

” அதெல்லாம் பேசலாம்பா .நாராயணசாமி மாமா முன்னாடி  ஒரு தடவை இப்படி ஜட்ஜ் கூட பேசலாம னுசொல்லியிருக்கிறாரு ” வேகமாக சொல்லிவிட்டு உதடு கடித்தாள் .அவள் எதிர் பார்த்தது போல் அய்யனாரின் முகம் சிவந்திருந்த்து .இப்போதே அடித்து விடுபவன் போலத்தான் நின்றிருந்தான் .

” நாம முயற்சி செய்வோம் புள ள ” கண்ணாத்தாள் கவிதாவின் கையை பிடித்துக் கொண்டாள் .




What’s your Reaction?
+1
19
+1
13
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!