Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-23

 23

” பொன்னிலாவை காணோம் அய்யா ” புலம்பியபடி வந!தாள் ராசாத்ந்தி .

” பக்கபத்து குடிசையில் படுத்திருப்பாள் போய் பாருங்க ராசாத்தி .” 

” இல்லைங்கய்யா . என் பக்கத்துலதான் படுத்திருந்தா .இப்போ காணலை .” பரிதவித்தது தாயின் உள ளம் .

விசயம் வேகமாக பரவ எல்லா குடிசைகளும் விழித்துக. கொள ள , அனைவருமாக குழந்தையை தேட ஆரம்பித்தனர் .

சுற றி எல்லா பகுதிகளையும் பார்த்துக் கொண மிருக்கும் போது , அய்யனாரின் கண்கள் அந்த மணல் மேட டை தயக்கத்துடன் பார்த்தது .நடுங்கும் கால்பகளுடன் அதனை நோக்கி நடந்தான் .

அது தெழிற்சாலையிலிருந்து ஆற்றில் விழும் ரசாயன கரவைகள் குழம்பிய மண்ணை அள்ளி குவித்த மேடு .தினமும் இது போல் சேர!ந்த மேடுகளை அதிகாலை ஊருக்கு வெளியே கொண டு போய் தட டினர் .இவர்கள் போராட்டத்தை மதிக்காமல் தெழிற்சாலை தொடர்ந்து தனது உற்பத்தியை செய்து வர , இந்த அளவு மண் குவியல் தினமும் சேர்ந்து கொண்டிருந்!தது .அதனை அப்படியே விட்டு விட்டால் இத்தனை நாளைய தங்களது உழைப்பு வீணாகி விடுமென தனமும் சளைக்காமல் அந்த மண்ணை அள் ளி குவித்துக் கொண்டிருந்தனர் ஊர் மக்கள் .

” ஐ …தங்கம் , வெள்ளி …மின்னுது அக்கா ” அன்று மாலை வெயிலில் மின்னிக் கொண்மிருந்த அந்த ரசாயன மண்ணை பார்த்து கை தட்டிக் குதித்துக் கொண்டிருந்தாள் பொன்னிலா .

” ஷ் நிலா அது மருந்து தொடக்கூடாது ” எச்சரித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்தபடி நடந்தான் அய்யனார் .

இதோ இந்த நிலவு ஒலியிலும் அந்த மணல் மேடுகள் மன்னக் கொண்டிருந்தன. இதனை பார்க்க ஆசைப்பட்டு குழந்தை ….தயங்கிய கால்களை இழுத்து வைத்து நடந்தவன் அதிர்ந்தான் .

பொன்னிலா அங்கேதான் இருந்தாள் .ஈரமும் , சகதியுமாக சொத செதவென ஊறிக் கிடந்த அந்த மணல் மேட்டில் ஏறிய குழந்தை அதனுள் அப்படியே அமிழ்ந்து ….நெற்றி மட்டும. ஙெளியே தெரிந்த குழந்தையை ” பொன்னிலா ” என்ற பத்தலுடன் வாரி எடுத்தான் .

தடதடவென அனைவரும் அங்கே ஓடி வர , ராசாத்தி தலையிலடித்து கதறினாள் . மகளை மடியில் வாங்கப் போட டு கூச்சலிட டு கத்தினாள் .கவிதா உறைந்து போய் அந்த பிஞ்சை பார்த்தாள் .அவளது விளையாட்டு தோழி .மிகுந்த மனத்துயரில் அவள் இருக்கும் போதெல்லாம் இந்த குழந்தைகள் தான் அவளுக்கு ஆறுதல் அளித்தனர் .அவர்களில் ஒருத்தி இப்போது இல்லையா …? 

விழி நிலை குத்த நின்றிருந!தவளன் தோளை பிடித்து அசைத்தான் அய்யனார் .

” கவி அழுதுடும்மா .போ …போய் குழந்தையை பாரு ” 

கஙிதாவினுள் துயரை விட ஆவேசம் பொங்கியது .இதற்கெல.லாம் காரணமானவர்பளை விடக் கூடாதெனும் வைராக்யம வளர்ந்த்து .

” ஏங்க என்னோடு வர்றீங்களா …? நாம் போய் நாராயணசாமி மாமாவை பார்த்துட்டு வரலாம் ” 

” இப்போது அவனை எதற்கு …? “

” இதை இப்படியே விடக் கூடாதுங்க .உடனடியாக அந்த பேக டரியை நறுத்தனும் .நம்ம சார்பாக ,நன்றாக படித்தவர் , பேச்சணு திறமை உள்ளவர் யாராவது அந்த பேக்டரி முதராளிங்க கூட பேசனும் .அதற்கு நாராயணசாமி மாமாதான் சரியான ஆள் .வாங்க அவரை பார்த்து பேசலாம் ” 

தன் கையை பிடித்தவளை உதறியவன் ஆக்ரோசமாக கை வீசி அவளை அறைந்தான் .

” முட்டாள் …முழு முட்டாள் .எந்த நேரத்தில் என ன நினைப புடி உனக்கு …? அப படி என னடி உனக்கு அவன் மேல் நம்பிக கை …? இனி ஒரு தரம் அவன் பேச்சை என னடம் எடுத்தால் கொன றே விடுவேன் ” 

” இல்லைங்க ..அவர் மேல் இருக்குற வெறுப்பு உங்க கண்ணை மறைக்குது .நீங்க கொஞ்சம் யோசித்து …” பேசிவிட்டு மீண்டும் அடி வாங்கனாற் .




” வாயை மூடுடிங்கிற , உம் பாட டுக்கு பேசிட்டே போறியே ” 

புழந்தையை சுற றி கதறியபடி அனைவரும் இருந்தாலும் இந்த கணவன் மனைஙி சண்டையையும் ஊரார் சிலர் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் .அதை கவனித்த கவிதாவின் முகம் அவமானத்தில்  சிவந்த்து .அப்போது …

” குழந்தைக்கு மூச்சு இருக்குது …” அப போதுதான் குழந்தையை தன் மடிக்கு மாற்கியிருந்த கண்ணாத்தாள் குரல் கொடுக்க ,

” குழந்தையை தூக கிட ்டு வாங்க ”
அய்யனார் ஓரமாக நிறுத்ழியிருந்த தனது காரை நோக்கி ஓடினான் .

விநாடியில் அங்கிருந்தவர்கள் அனைவரும் களைந்து காரை நோக்கிப் போய்விட , கவிதா மட்டும் அந்த நிலவிலும்  , இருளிலும் தனித்து நின்றாள் .அவள்  , கன்னங் கள்  எரிந்தன .மனம் அதை விட எரிந்த்து .கன னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள் ஒரு முடிவுடன் நடந்தாள் .

அவள் போனது நாராயணசாமியின் வீடு .அவன் இவர்களின் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து இங்கேயேதன் ஒரு வீடெடுத்து தங்கியிருந்மான் .அடிக கடி இவர்கள் போராட்டத்தை பார்க்க வருவான் . மக்களுடன் பேசுவான் .சில ஐடியாக்கள் சொல்வான் .கவிதாவை பார்த்ததும் தலை குனிந்தபடி போய்விடுவான் .

காலிங்பெல்லை அழுத்தி விட்டு காத்திருக்க , கதவு திறந்தவன் கவிதாவை இந்த இரவு நேரத்தில் அங்கே எதிர் பார்க்கவில்லை .

” கவிதா …என்ன இந்த நேரத்தில் …? ” 

கவிதா நடந்த்தை சொன னாள் .அவர்களுக்காக அவன் அந்த பாக டரி ஓனரிடம் பேச வேண டிமென கேட டுக. கொண டாள. .நாராயணசாமி மௌனமாக இருந!தான் .பிறகு வாய் திறந்தான் .

” அப படி பேசுவதால் எனக்கு என்ன லாபம் ? ” 

கஙிதா அதிர!ந்மாள் .ச்சீ இவன் என ன மனுசன் …இந்த நிலையிலும் பணத்தை பற்றி பேசுகறானே …வெறுப்பாய் இருந!தது அஒளுக்கு .ஆனாலும் காரியம் ஆக வேண்டுமே …

” உங்களுக்கு எவ்வளவு பணம் ஙேண டும் …? நான் தருகிறேன் ” 

” எவ்வைவு தருவ ..? ” 

” ஒரு லட சம் ” 

” அது எதற கு …? ” 

” அந்த பேக்டரி வேலையை நறுத்தி மூட வைக்க ” 

அவன் கடகடவென சிரித்தான் .

” அந்த பாக டரி தொடர்ந்து நடக்க வைக்கறேனென உறுதி கொடுத்து ஒரு கோடி ருபாய் வாங்கியிருக்கிறேஊன. .அதை என ன செய்வது …? ” 

கவிதா அதிர்ந்தாள் .

” எ …என்ன சொல்கறீர்கள் …? ” 

” ஆமாம் டியர. .அந்த பேக்டரி ஓனர் பையனும் , நானும் க்ளாஸமேட்ஸ் .சட்டப படி அந்த பாக்டரி ஓமுவதற கான திட்டங்களை சட்டத்தின் ஓட்டைகள் மூலமாக கண்டறிந்து ஐடியாக்கள் கொடுத்து கொண்டிருப்பதே நான்தான் .புரியலையா …? அந்த கம பெனியோட லீகல் அட்வைசர் நான்தான் .உங்க போராட்டத்தை நிறுத்துறேன னு ஒரு கோடி வாங்கியிருக்கிறேன் .அந்த வேலையை நீ கொடுக்கிற ஒரு லட்சத்திற்காக மாற ற சொல்கிறாயா …? ” 

கவிதா தலையை பிடித்துக் கொண்டு தெப்பென அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட டாள் .பாவி …இவன. எவ்வளவு பெரிய படுபாவியாக இருக்கிறான் …? அதுதான் அவர் இவனை நம்பாதே …இவட் பேச்சை பேசாதேன்னு சொல்லக் கொணழமேயிருந்தார் போல .




அதிர்ந்து அமர்ந்திருந்தவளன் முகத்தன் முன் சொடக்கிட டான ் அவன் .

” உனக்காக நான் இதனை செய்வேன் கவி .ஆனால் நீ எனக்காக என்ன ஞெய்வாய் …? ” 

கவிதாவின் மனிதினுள் ஏதோ அபாய அறிவிப்பு தோன்றரமெல்ல தலைநிமிர்ந்தாள் .

” எனக்காக …உன் ஊர் மக்களுக்காக உன னை எனக்கு கொடுத்ழு விடேன் பஙிதா .” அப்படியே அவனை பார்த தபடி எழுந்து நின றாள் .

” அக்காவிற்காக , உன் அப்பாவின் சொத்திக்களிக்காக என மற ற காரணங்கள ் இருந்தாலும் , உன னை தருமணம் செய்ய நனைத்த முக கிய காரணம் உன் அழகு …” அவன் பார்வை மேனயை அசிங்கமாக வருட உடல் கூசியது கவிதாவிற்பகு .

” நீ இதற கு சர்மதித்தால் நாளையே அந்த பேக்மரி ஒனருக கு நறைய சட்ட சிக்கல்களை உருவாக கி , அவராகவே ஒரே வாரத்தில்  பேக்டமரியை மூட  வைக்கிறேன். அதற கு பறகு நீயும. உன் ஊர் மக்களிம் விவசாயம் பண்ணி வளமாக வாழலாம் …என ன சரிதானே …? ” 

பேசியபடி தன னை நெருங்க வந்தவனை இயலாமையுடன  பார்த்தபடி நின்றாள் கவிதா.

——————–

அய்யனார் வீட்டிற்கு திரும்பிய போது விடிய ஆரம்பித்திருந்த்து . அவனது வீட்டின் முன்னால் ஊர் மக்கள் கும்பலாக கூடியிருக்க , எதற்கு இவ்வளவு கூட்டமென யோசனையுடன் உள்ளே வந்தான் .

வீட்டின் கூடத்தில் சங்கரலிங்கம் அமர்ந்திருந்தான் .ஜட்ஜ் அய்யாவிடம் மக்கள் தங்கள் துயர்களை சொல்லிக் கொண்டிருக்க அவர் தலையசைத்து பொறுமையாக கேட டுக் கொண்டிருந்தார் .அறையினுள் கண்ணாத்தாள் நின்றிருந்தாள் .

” குழந்தை விசயம் கேள்விப்பட்டதும் சார் நேரடியாக இங்கேயே வந்துட்ணார் அய்யா .அடுத்த வாரமே அந்த தெழிற்சாலையை மூடிடுறேன ்னு சொல்றாரு .” தம்பிக்கு தகவல் சொன்னாள் .

அய்யனார் நன்றியுடன் சங்கரலிங்கம் கைகளை பற்றிக் கொண்டான் .

” ரொம்ப நன்ற சார் ” 

” நானும் இந்த ஊருக்காரன் தான் அய்யனார் .எனக்கும் நம் ஊர் நன்றாக இருக்க வேணுமுன்னு ஆதங்கம் இருக்காதா ..? அடுத்த மாதம் டேம்ல தண்ணீர் திறந்து விடுவாங்க .அதற்குள் ஆர்டர் போட டு அந்த தெழிற்சாலையை மூட வைக்கறேன் .திறந்து விடுற தண்ணீர் புது வெள்ளமாக உங்கள் வயல்களை எல்லாம் நிச்சயம் வாழ வைக்கும் ” 

மீண்டும் நன்றி சொன்ன அய்யனார் அப்பொஓதுதான் அதை கவனித்தான் .சுற்றிலும் சூழ்ந்திருந்த கூட்டத்தில் கவிதாவை காணவில்லை .கண்களால் மனைவியை தேடியவன் , மெல்ல எழுந்து மாடியேறி பார்த்தான் .பின்பக்கம் , முன் திண்ணை ம்ஹூம் எங்கும் அவளை காணோம் .

முன்னிரவு அவளை அனைவர் முன்னும் அடித்தது நினைவு வர , அவன் கைகள் காந்தி அவனையே பழித்தன .கோபத்தில் எங்கேயும் போய்விட்டாளா …? தனது போனை வேகமாக எடுத்து அன்னாசிலிங்கத்திற்கு போன் போட , அவர் அவர் ஊர.  நிலைமையை பேசி அங்கிருக்கும் நிலவரம. விசாரிக்க ஆரம பித்தார் .அவர் பேச்சில் கஙிதா அங்கேயும் இல்லையென உறுதியாகிவிட அய்யனாரினுள் பதட்டம் வந்த்து .

” கவி ….” அரற்றிய மனதுடன் வேகமாக வெளியே போய் தேடும் முடிவுடன் அவன் கீழிறங்க போன போது கவிதாவை பார த்தான் .

அவள் …தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள் .தடுமாற்றத்துடன் இருந்த்து அவளது நடை ்மிக சோர்வாக தெரிந்தாள் .




What’s your Reaction?
+1
6
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!