Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-20

 20 

” என்னிடம் சொல்லவேநில்லையே ” பால்கனியில் படுக்க தயாரான கணவனின் வெற்று முதுகை பார்வையால் அளைந்தபடி பேச்சில் இழுத்தாள் .

” உனக்கு இது பிடிக்காமலிருக்கலாம் .அதுதான் சொல்லலை ” அமைதியாக சொல்லிவிட்டு நேராக படுத்து கைகளை மடித்து மார்பின் மேல் வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாடன்.

” எனக்கு ஏன் பிடிக்காதாம் …? நானும் உங்களை போல்தான் .அந்த ஆறு சுத்தம் செய்யப்பட டு நம் ஊருக்குள் ஓடி வர வேண்டுமென நனைக்கறேன் ” ரோசமாக சொன்னாள் .

” அப்படியா …? சந்தோசம் ” கண்களை திறக்காமலேயே பதில் சொன்னான் .

” போராட்டத்திற்கு என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்கள் …? ” 

” ஆத்துக் கரையில் கும்பல் சேர த்து கோசம் போட்டபடி போய்  அந்த தொழிற்சாலை வாசலில் சிறிது நேரம் போராட டம் .பிறகு நேராக போய் கலெக்டரிடம் மனு ” விளக்கினான் .

” ஓ …நானும் வரட்டுமா …? ” 

அவனடமிருந்து சத்தம் எதுவும் வரவல்லை .தூங்கவிட்டானா …அதற்குள் ளா …? கட்டிலில் உட்கார்ந்தபடியே மெல்ல எட்டி பார்த்தாள் .அசையாமல் படுத்திருந்தான் .நான் ஒருத்தி இங்கே கத்திக்கிட்டிருக்கேன் இவன் பாட்டுக்கு தூங்கினால் எப்படி …கோபம் வர எழுந்து அவனரிகே போனாள் .

” நானும் வரட்டுமான்னு கேட்டேன் ” நின றபடி குனிந்து அவனடம் கேட்டள் .

அவனடம் சலனமில்லை .அதற்குள் அப்படியா தூங்கிவிட்டான் .இல.்லை நடிக்கிறான் …அவளுக்கு தெளிவாகிவிட ,இவனை விடக்கூடாது , வீம்புடன் மண்டியிட டு அவனருகே அமர்ந்து குனிந்தாள் .

” நானும் வரட்டுமான்னு கேட்டேன் ” சத்தமாக அவன் காதருகே குனிந்து கேட்டவள் வீலென ற அலறலுடன் அவன் மார்பில் கிடந்தாள் .

வேகத்துடன் கையை வீசி அவளை இழுத்து மார்பன் மீது போட்டுக் கொண்டிருந்தான் அவன் .

” எங்கடி வரப் போற …? ” மேலே கிடந்தவளின் தோள் பற்றி உலுக்கக் கொண்டிருந்தான் .

அந்த இடம் மிக்க் குறுகலானது .ஒரு ஆள் மட்டுமே படுக்க முடிந்த அந்த இடத்தில் ஆஜானுபாகுவான அய்யனாரே உடல் குறுக்கித்தான் படுத்திருந்தான் ்இதில் அவள் எங்கே இருக்க , வேறு வழியின்றி அவன் மேலேயே பாரமாக கிடந்தாள் கவிதா .அசைய முடியாமல் அவளை அழுத்தி பிடித்திருந்தான் அவன் .

உடல் முழுவதும் பரவக் கிடந்த கணவனின் ஸ்பரிசத்தில் பேச்சு வராமல் தவித்தபடி கண்களை அகல விரித்து தனக்கு மிக அருகே கிடந்த அவன் அடர்ந்த மீசையை பார்த்தபடி இருந்தாள கவிதா .




முதலில் வேகமாக இழுத்த போது அய்யனாரின் செயலில் கோபம் இருந!ததுதான் .ஆனால் இப்போது …மனைவியின் மென்னுடல் தன்னுடன் உறவாடிக் கிடக்கும் இவ்வேளையில் அவனது கோபம் ஆவியாகி விட மோகம்மட்டுமே மீந்திருந்த்து..மேலே கிடந்தவளின் தேகத்தை மென்மையாக வருடிய அவன் கைகள் காதலை மட்டுமே சும்ந்திருந்தன .

” என னடி வேணும் உனக்கு …? ” அவனது மீசை முடிகள் அவளது கன்னத்தில் உராய்ந்தன .

தாள முடியா தாபத்தில் கண்களை மூடிக்கொண்டவள் ” நானும் உங்களோடு வரனும் ” முணுமுணுத்தாள் .

” வேண்டாம் ..” அவன் பதிலும் முணுமுணுப்பகவே இருந தது .

” ஏன் …? எனக்கு ஆசையாக இருக்கறது ” கண் திறந்து கணவன் முகம் பார்த்தாள் .

” உனக்கு என்னை தவிர எல்லாவற்றின் மேலும் ஆசை வரும்டி ” அவனது நக்கலில் கோபம. வந்த்து அவளுக்கு .

சரியான முட்டாப்பய இவன் .பற்களை கடித்தாள் .

” காட்டான் மாதிரி பொண்டாட்டி மேல பாயுறவரிடம் ஆசை எப்படி வரும் …? ” கேட்டவளின் பார்வை அந்நேரம் ஆசையுடன் அந்த காட்டானைத்தான்  பார்த்தபடி இருந!தது ்

ஆனால் அது அவனுக்குத்தன. புரியவில்லை .அவளது காட டானில் மனம் பாதிக்க பட்டவன் , சட்டென கையால் அவள் இடை பற்றி தூக்கி தன்னை விட்டு விலக்கிஅறையினுள்   கீழேதரையில்  அமர வைத்தான் .

” நான் காட்டான்டி .கிட்ட வராதே , கடிச்சு குதறிடுவேன் ” 

கவிதாவிற்கும் கோபம் வந்த்து .ஆனால் விலகிப் போவதற்கு பதில் அவன் மேல் விழுந்து பிறாண்ட தோன்றியது .இவன் சொன்னதும் எழுந்து போக வேண்டுமா நான் …? வீம்பாக அழுத்தி சம்மணிமிட டு அமர்ந்தாள் .

” முடியாது . நானும் நாளை போராட்டத்திற்கு உங்களுடன் வரத்தான் செய்வூன் ” 

அவன் உதடுகளை அழுந்த கடித்தான் . கோபத்தை அடக்குவது நன்றாக தெரிந்த்து .

” எந்திரிச்சு போயிடுடி …பிறகு வருத்தப்படுவ ” 

” ம்ஹூம் .போக மாட்டேன் …” தலையை அசைத்தவள் அடுத்த நொடி அதிர்ந்தாள் .

தூங்கக் கிடந்த சிங்கம் சீண்டி விடப்பட்டு எழுந!தது போல் வேகமாக எழுந்திருந்தான் அவன் .

” போய் படுங்கறேன் .வெட்டியா வாதாடிட்டு இருக்குற .. அன்னைக்கு மாதிரி உன்னை …” முடிக்காமல் விட்ட அவனது வார்த்தைகளின் மீதியை அவன் விழிகள் சொல்ல, கவிதாவின் முகம் வெட்கமும் , கோபமும் கலந்து சிவந்த்து .

இவனுக்கு பொண்டாட்டி என்றாலே அப்படி இவன் கைகளில் சிக்கி திண்டாடுவதற்குத்தானா …இதழ்கள் துடக்கு எழுந்து விட்டாள் .

” காட்டுமிராண்டி …காட்டான் …போடா …” கையை நீட்டி அவனை வைதாள் .

” அடியேய் …” அவன் வேகமாக அவள்புறம் பாய்ந்து வரும் முன் பால்கனி கதவை மூடித் தாளிட்டு விட்டாள் .

” ஏய் கதவை திறடி …” 

” முடியாது போடா …” கூண்டுக்குள் கிடந்த சிங்கத்தின் தைரியத்தில் தெளிவாகவே ” டா ” சொல்லிவிட்டு போய் படுத்துக் கொண்டாள் .

இரண்டு முறை கதவை தட்டி விட்டு அவனும் அமைதியாகி ஙிட்டான் .படுத்து விட்டான. போலும் .அங்கேயே கிடடா…கறுவியபடி கண் மூடி உறங்க முயன்றவளின் மனதினுள் அன்னைக்கு மாதிரி உன்னை என விரலாட டி பேசிய அய்யனாரே இரவு முழுவதும் இம்சித்தபடி வலம் வந்து கொண்டிருந்தான் .

———————-

சில்லென்ற மண்பானை தண்ணீரை சொம்பு நிறைய மொண்டு கண்ணாத்தாளிடம் நீட்டினாள் கவிதா .மடமடவென அவள் அதை குடித்த வேகத்தில் அவளது தாகம் தெரிந்த்து .அவள் போராட்டத்தை முடித்து விட்டு வந்தருந்தாள் .

” என்ன ஆச்சு அண்ணி …? ” மின் விசறயை சுழல விட்டு விட்டு அவளரிகே வந்து அமர!ந்தாள் .

கண்ணாத்தாள் உதடு பதுக்கனாள் .” ஒண்ணும் ஆகுற மாதிரி தெரியல .  அந்த இடத்தில் அப்படி ஒரு ஆறே இல்லைன்னு அரசாங்க வரைபடத்துல வரைஞ்சு வாங்கிட டாகளாம் .அந்த கம பெனி ஆளுக . .கலெக்டர் ஆபிசில் மனுவை வாங்கி வச்சுட்டு எங்கள விரட்டுறதுலதான் குறியா இருக்காக .என்ன செய்யன்னு தெரயல ” 




அடப்பாவிகளா …என்றிருந்த்து கவிதாவிற்கு .இப்படி முழுதாக ஒரு ஆற்றையே மறைக்க முடியுமா ? …இதற்கு சட்டம் எப்படி அனுமதி அளிக்கும் …? ஆதங்கத்துடன் யோசித்தவள் மனம் பளீரிட்டது.

” அண்ணி நான் ஒரு ஐடியா சொல்றூன் கேட்குறீங்களா ? ” 

” சொல்லு புள்ள .இந்த நேரம் எந்த குப்பையை வேணும்னாலும் கொட்டு .அதிலிருந்து நம்க்கு எதுவும் கடைக்குதான்னு பார்க்கலாம் ” 

” என் சித்தி சரளா இருக்காங்கள்ல ,அதான் அண்ணி தங்கபாண்டியன் சித்தப்பாவோட தம்பி நாராயணசாமி .அவர் பெரிய வக்கீல் .அவர்கிட்ட ஏதாவது யோசனை கேட்கலாமா …? .இப்படி கவர்ன்மென்ட் லெட்ஜர்லயே மாற்றி எழுதியிருக்காங்கன்னு சொன்னால் அவர் அதற்கு சட்டப்படி ஏதாவது யோசனைகள் சொல்வார. ” 

சரளா …தங்கப்பாண்டியன் பெயர்களை சொன்னவுடனேயே கண்ணாத்தாளின் முகம் மாறியது .

” வேண்டாம் ” 

” ஏன் அண்ணி …அவர் மதுரை ஹை கோர்ட்டில் பெரிய வக்கீல் .அவரோட சினியர் வக்கீல் அங்கே கோர்ட்டில் ரொம்ப பெரிய ஆள் .ஜட்ஜ் கூடெல்லாம் அவருக்கு பழக்கம் இருக்கும் .அவர் கூட நம்ம ஊர் பக்கமா வாதாடுவதாக அப்பாவிடம் சொன்னார் .அவரிடம் கேட்டால் …” 

” வேண்டாம் என்றேன் …” அதிகார குரலில் சொல்லி விட்டு கண்ணாத்தாள் எருந்து நடக்க கவிதாவிற்கு கோபம. வந்த்து .

அக்காளும் , தம்பியும் என்னதான் நினைத்துக் கொண்மிருக்கின்றனர. .ஊருக்காக உழைக்கிறேன்னு சொல்லக் கொண்டு அவரவர் வாழ்வின் சொந்த விருப்பு வெறிப்புகளின் தடங்களை ஊரார் மேல் ஏவிக் கொண்மிருக்கின்றனர.் .

” நில்லுங்க அண்ணி .ஏன் வேண்டாம் …உங்கள் சொந்த வாழ்க்கை தோல்வியை  ஏன் ஊரார் மேல் சுமத்துகிறீர்கள் …? உங்களை வேண்டாமென திருமணத்தை நிறுத்திய என் சித்தப்பா மேல் இருக்கும் கோபத்தை அவரது உறவினர் மேல் காட்டாதீர்கள.சித்தப்பா படித்தவர் .படிக்காத உங்களை அவருக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில.லை .அதனை பெரிதாக எடுத்துக் கொண்டு இன்னமும் அவரையே நனைத்துக் கொண்டு நீங்கள்தான் இப்படியே இருக்கிறீர்களென்றால் , அந்த கோபத்தை ஏன் ஊர் மக்களிடமும் காட்டுகறீர்கள் …? ” கண்ணாத்தாள் வேகமாக திரும பி அஒளிடம் வந்தாள் .அவளது இரு தோள்களையும் பற்றி ஆட்டினாள் .

” என்னடி சொன்ன ..? உன் சித்தப்பன் என்னை வேண்டாம்னு சொன்னானா …? யாருடி உனக்கு இப்படி சொன்னது …சொல்லுடி ” 

” அ …அது …எ…என் சித்தி ” 

” ஓஹோ …பொண்டாட்டிக்கிட்டு இப்படி சொல்லி வச்சு அவன் கௌரவத்தை காப்பாத்திக்கிட்டானாக்கும் .அவனெல்லாம் ஒரு மனுசனா …ச்சீ .இப்போ சொல்றேன் கேட்ணுக்கோ …இந்த கல்யாணத்தை நிறுத்துனது நான்தான் ்எனக்கு உன் சித்தப்பனை பிடிக்கலை .வேணாம்னு சொன்னேஊன்” 

” ஆ …ஆனால் கல்யாணத்தை அப்பாதானே நிறுத்தினார் .சித்தப்பா சொல்லத்தனே அப்படி செய்தார் ” 

” கல்யாணத்தை நிறுத்தியது உன் அமஞப்பாதான் .ஆனால் நான் சொல்லியதால்தான் …எனக்காகத்தான்  நிறுத்தினார் ” 

” ஏன் அண்ணி …? ” 




” படிக்காத பட்டிக்காட்டு பொண்ணை கட்டிக்கிட டா , நான் வீட்டுக்கு வரவும் கை கால் அமுக்கி விட்டு ,சமைச்சு போட்டு , துணி துவைச்சி போட்டு எனக்கு அடிமை மாதிரி இருப.பா .அதுக்குத்தான் நிறைய படிச்ச நான் இந்த பட்டிக்காட்டு சிறுக்கியை கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்.இப்படி தோப்புக்குள்ள வச்சு உன் சித்தப்பன் அவன் பிரண்டுகிட்ட சொல்லிட்டிருந்தான் .அதை நான் கேட்டிட்டேன் .அடிமையாய் கிடக்குற ரகம் இல்லடி நானு .அம்மாவிற்கு அப்புறம் வீட்டுலயும் , அப்பாவிற்கு அப்புறம் ஊருக்குள்ளயும் அதிகாரமா வாழ்ந்து வர்றவ .அன.பால என்னை அடக்க மிடியுமே தவிர , அதிகாரத்தால இல்லை .அந்த நிமிசமே என் மனசிலிருந்து உன் சித்தப்பனை தூக்கி எறிஞ்சிட்டேன் .நேரா உன் அப்பாகிட்ட போனேன் .எல்லாத்தையும் சொல்லி கல்யாணத்தை நிறுத்ந சொன்னேன் .எனக்காக அவரும் கல்யாணத்தை நிறுத்திட்டார் ” 

இமையாசைக்காமல் நடந்த்தை கேட டபடி இருந்த கவிதாவினுள் சித்தி சித்தப்பா மேல் மேலும் வெறுப்பு வளர்ந்த்து .நடந்த்தை எப்படி திரித்து சொல்லியிருக்கிறார்கள் .

“:சரிதான் அண்ணி ்உங்கள் நியாயத்தை நானும் ஒத்துக் கொள்கறேன் .ஆனால் அதற்கு பிறகு நீங்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை .அதனால்தானே சித்தி சித்தப்பா உங்களை பற்றி இப்படி பேசக் கொண்ணருக்கிறார்கள் …” 

” எவனோ …என்பவோ பேசுறான்கிறதுக்காக என் வாழ்க்கையை சுலபமாக தூக்கி இன்னொருத்தன் கையில் கொடுத்துட மாட்டேன்டி .எனக்கு ஆண்கள் மேலேயே வெறுப்பு வந்துடுச்சு .எல்லாருமே சுய நலப் பிசாசுகள் .பெண்ணகள் எல்லோரும்  அவர்!களுக்கு ஏவல் சொய்யவெனவே பறந்தவர்களென நனைத்தார்கள் .எனக்கு யாரையும் படக்கவில்லை .இது வரை என் மனதுக்கு திருப்தியான எந்த ஆணையும் நான் சந்திக்கவில்லை .அதனால் இன்னமும் இப்படியே இருக்கறூன. .” 

பிரமிப்பாய் கண்ணாத்தாளை பார்த்தாள் கவிதா .ஐந்தாவது வகுப்பு வரை படித்தவள் .என ன தெளிவாக யோசிக்கிறாள் .்?படித்து பட்டம் வாங்கிய அவளது சித்தப்பாவும் , சித்தியும் எவ்வைவு மட்டமாக நடந்து கொண்டுள்ஏனர் ..?

” படிப பு மட டுமே வாழ்க்கை இல்லை .படித்நவர்கள் மட்டுமே புத்திசாலகள் இல்லைங்கறதை நன்றாக காட டி   வைத்திருக்கறீர்கள் அண்ணி .நீங்கள் நான் மதிக்கும்பெண் .ஆனால் நம் ஊருக்கென யோசிக்கும் போது சித்தியின் தம்பியை பார்த்து பேசுவது தவறில்லையென்றே எனக்கு நோன்றுகிறது ” 

” திரும்ப திரும்ப படித்தவர்கள் எல்லாருமே முட்டாள னே காட டிக்கிட்டு இருக்கியேடி  மடக்கழுதை ” ஆவேசமாக கத்தியபடி உள்ளே  வந்த அய்யனாரை முறைத்தாள. கவிதா .

இவன் இவ்வைவு நேரமாக நாங்கள. பேசியதை கேட டிக் கொண்டிருந்தானா ….? 

” அக்கா இவ்வளவு தூரம் சொல்கிறாள் ்நீ திரும்பவும் அவனிடமே போய் நிக்கனுங்கிறியே ..மதியோடதான் இருக்கியா நீ …” 

கண்வனின் தொடர்ந்த கீழிறக்கும் பேச்சில் ஆவேசமானாள் கவிதா .




What’s your Reaction?
+1
15
+1
20
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!