Serial Stories காதல் தேசம்

காதல் தேசம்- 7

லக்னோ நகரத்தின் முக்கிய வீதிகளில் ஒன்றின் நடு மையமாக நின்று கொண்டிருந்தான் ‘கணேஷ்’.,

தோழர்களே, எல்லோரும் நான் சொல்வதை சிறிது கவனியுங்கள். நாம் அனைவரும் மகாத்மாவின் வழி நடப்போம். “பாகிஸ்தானிலிருந்து” வந்து கொண்டிருக்கும்  அபலைப் பெண்களுக்கு வாழ்வளிக்க மகாத்மா அழைப்பு விடுத்திருக்கிறார்.  இந்தக் கலவரம் அடங்க வேண்டும். கலவரத்தால் பாதிக்கப்பட்ட, நம் மக்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும் .எனவே, இளைஞர்களே ஓடோடி வாருங்கள் மகாத்மாவின் வேண்டுகோளை ஏற்று நிற்கதியாய் வந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு வாழ்வளிக்க ஓடோடி வாருங்கள்.

‘ஒலிப்பெருக்கி’ போன்ற எந்த ஒரு உபகரணம் இல்லாமல் திடீர் என்று மக்கள் மத்தியிலே நின்றபடி மகாத்மாவின் கொள்கைகளை பிரச்சாரமாக பெருங்குரலெடுத்து பேச ஆரம்பித்தான் கணேஷ். ஆரம்ப காலம் தொட்டே அவனுக்கு மகாத்மா மீது தீராத பற்று உண்டு.




மதக் கலவரத்தினால் கற்பிழந்து விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாய் இந்தியாவிற்குத் திரும்பும் இளம் பெண்களுக்கு வாழ்வளிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று மகாத்மா விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக முடிவு செய்தான். தன்னால் இயன்றவரை மகாத்மாவின் இந்த கோரிக்கையை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் லக்னோ நகர வீதிகளில் இதை ஒரு பிரச்சாரம் ஆகவே செய்ய ஆரம்பித்தான்.

கணேஷின் பேச்சால் கவரப்பட்டு சிலர் அவனை சுற்றி நின்று அவன் பேசுவதை கேட்டனர். அப்போது கையில் இருந்த சில துண்டுப் பிரசுரங்களை அவர்களுக்கு விநியோகம் செய்தான்.பத்து நிமிடம்தான் இப்பொழுது அந்த இடத்திலிருந்து வெளியேறி வேறு முக்கியமான இடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

எவருக்கும் தீங்கு இல்லாது தேசப்பிதாவின் வேண்டுகோளை மக்கள் மத்தியில் பரப்பி கொண்டிருந்த அவனை சில கண்கள் தொடர்ந்து வெறியோடு கவனித்துக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு இடமாக தன்னுடைய கருத்தை வலியுறுத்தி ,மக்களிடம் பேசிக்கொண்டே வந்த கணேஷ் லக்னோ ரயில் நிலையத்திற்கு வந்தான்.

லக்னோ ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் மக்கள் அமர்வதற்காக அமைத்து வைக்கப்பட்டிருந்த கருங்கல் மேடையில் சட்டென்று ஏறி நின்று பேச ஆரம்பித்தான்.

மிகவும் உருக்கமாக அமைந்தது கணேஷின் பேச்சு. பேச்சில் முடிவில் “அனுமதியோம் நாட்டை துண்டாட அனுமதியோம்” என்ற பாடலை தாளம் போட்டு பாடினான்.

மதத்தின் பெயர் சொல்லி வந்தாலும், இனத்தின் பெயர் சொல்லி வந்தாலும், மொழியின் பெயர் சொல்லி வந்தாலும் , குண்டு மழை வீசி வந்தாலும் இதயத்தை நோக்கி சுட்டாலும் ,அனுமதியோம் நாட்டை துண்டாட அனுமதியோம் என்று உரத்த குரலெடுத்து அவன் பாடிய போது ரயில் நிலையத்தில் இருந்த அனைவரும் கரவொலி செய்து மகிழ்ந்தனர்.

கணேஷின் பேச்சை ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருந்தவர்களில் சக்தியும் ஒருத்தி. கணேஷின் பேச்சால் வெகுவாக கவரப்பட்டு வைத்த கண் வாங்காமல் அவன் பேச்சிலே லயித்து இருந்தாள்.

பேச்சின் இடையிலேயே கூட்டத்தில் இருக்கும் சக்தியை உணர்ந்து கொண்டான் கணேஷ். அதனாலேயே மேற்கொண்டு பேச முடியாமல் பலமுறை அவன் தடுமாறி போனான். இருப்பினும் பல தடுமாற்றங்கள் இடையே சொல்ல வந்த செய்தியை முழுமையாக சொல்லிவிட்டு கல் மேடையிலிருந்து கீழே இறங்கி மக்கள் கூட்டத்தில் சக்தியை நோக்கி நடந்தான்.

“சக்தி….நீங்கள் சக்தி தானே”?

நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லையே?……இது சக்தி

“நான் கணேஷ்”.

கணேஷ் என்றால், யார் இந்த நாட்டின் அதிபரா  என்ன , இடை புகுந்தாள் “ஆயிஷா”.
சக்தியைப் பொருத்தவரை நான் இந்த நாட்டின் அதிபருக்கும் மேலே
புரியாமல் இரண்டு பெண்களும் விழிக்க….

சிரித்தபடி” நான் கணேஷ்” அன்வரின் நண்பன் .அதுமட்டுமல்ல மற்றுமொரு முக்கிய விசயம். அன்வர் இப்பொழுது இங்கே இதே லக்னோவில் என்னுடன் தான் இருக்கிறான்.

சக்திக்கு நடப்பதெல்லாம் உண்மைதானா அல்லது ஏதாவது கனவா என்ற எண்ணம் வந்தது .ஏதோ ஒரு வேகத்தில் பாய்ந்து சென்று கணேஷின் சட்டையை பற்றிக் கொண்டாள்.  நீ……..நீங்கள் சொல்வது உண்மைதானா?

திடீரென்று சூழ்நிலை உணர்ந்து கணேஷின் சட்டையில் இருந்து கையை எடுத்தபடி மன்னித்து விடுங்கள் அண்ணா, அவர் எங்கிருக்கிறார்? என்று கேட்டாள்.

தன்னுடைய சட்டையை நீவி சரிசெய்தபடி தங்காய், அவன் என்னுடன் தான் இருக்கிறான். நீ இப்பொழுது என்னுடன் கிளம்பி வா, அரை மணி நேரத்திற்குள் அன்வரிடம் நான் உன்னை அழைத்துச் செல்வேன்.

வாருங்கள் ….வாருங்கள் போகலாம் சுற்றம் சூழல் எதையும் உணராமல் உடனடியாக கிளம்ப ஆயத்தமானாள் சத்தி.

திடீர் என்று கணேஷ் சக்தி இருவருக்கும் இடையே புகுந்து ஆயிஷா ‘நீங்கள் யார் ‘உங்களுக்கு அன்வரை எப்படி தெரியும்? எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவள் உங்களுடன் வருவாள்??? அன்வர் உங்களுடன் இருப்பது உண்மையானால் நாங்கள் இங்கேயே இருக்கிறோம், நீங்கள் போய் அவரை அழைத்துக் கொண்டு வரலாமே என்பது போன்ற கேள்விகளை மளமளவென அடுக்கினாள்.

ஆயிஷாவின்  புத்திசாலித்தனமும் சக்தி மீது அவள் வைத்திருந்த  அக்கரையும்  கணேஷை மகிழ்ச்சி அடையச் செய்தது.

தங்காய்  உனது பாதுகாப்பு உணர்வு குறித்து எனக்கு மகிழ்ச்சி. ஆனால் ,நான் சக்தியை என் நண்பன் முன்னால் திடுமென்று நிறுத்தி அவனை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்க ஆசைப்படுகிறேன்.அவன் சிறிதும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிர்பாராத இடத்தில் திடுமென்று சக்தி அவன் முன்னால் நின்றால் அவன் என்ன செய்வான். அதை நான் அருகிருந்து பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும். எனவே, சக்தி என்னுடன் வரவேண்டும்.

சரி ஐயா நாங்கள் எப்படி உங்களை நம்புவது?




ஆயிஷாவிற்கும் கணேஷிற்கும் இடையிலான விவாதம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து ஆயிஷாவை சமாதானப்படுத்தி இருந்தான் கணேஷ்.

இப்பொழுது சக்தி ஆயிஷாவை தன்னுடன் அழைத்தாள்.

இல்லை சக்தி ,நீ அன்வர் உடன் ஓரிரு நாட்கள் இங்கு தங்கிய பின் கூட கிளம்ப நினைக்கலாம். ஆனால், என் நிலை அப்படி இல்லை. நான் தனி ஆள் நான் எவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தான் சென்றடைகிறேனோ அவ்வளவு சீக்கிரம் நான் உயிரோடு இருப்பதற்கு உண்டான சாத்தியங்கள் அதிகம். இங்கிருந்தபடியே நான் உங்கள் இருவரையும் மனதார வாழ்த்துகிறேன். போய் வா சக்தி.

அன்வர் இன்று கிளம்பும் இதே ரயிலில் பாக்கிஸ்தான்  கிளம்ப போகிறான் என்ற தகவலை சொல்லி விடுவோமா என்று எழுந்த ஆவலை கணேஷ் கட்டுப் படுத்திக் கொண்டான்.

இந்தப் பெண் சிறிது நேரத்திற்கு முன்பு எப்படி எல்லாம் கேள்வி கேட்டு என்னை துளைத்து எடுத்தாள். இன்னும் சிறிதுநேரம் சக்தியிம் அன்வரும் இன்றைய ரயிலிலேயே இவள் உடனேயே பயணிக்க போகிறார்கள் என்பது தெரியாமல் இவள் இருக்கட்டும். அதுவும் ஒரு சுவாரஸ்யம் தான் எனவே அதை சக்திக்கும் சொல்லாமல் நாம் மறைத்து வைக்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

நேரம் மதியம் 2 மணி ரயில் மாலை 7 மணிக்கு பாக்கிஸ்தான் நோக்கிக் கிளம்பும். அதற்குள்ளாக நாம் சக்தி அன்வர் இருவரையும் சந்திக்க செய்து மீண்டும் ரயில் நிலையம் அழைத்து வர வேண்டும்.

காதலர்கள் இருவரின் சந்திப்பை காண கணேஷின் மனம் குதியாட்டம் போட்டது.

கணேஷ் சக்தி இருவரும் ரயில்நிலையத்தில் இருந்து வெளியேறினார். அங்கிருந்த கைவண்டி ரிச்சா ஒன்றில்அவன் சக்தியை ஏறி அமர வைத்தான். ரிச்சாஉடன் சேர்ந்து தானும் நடக்க ஆரம்பித்தான்.

இன்னும் எத்தனை தினங்கள் காத்திருக்க வேண்டுமோ என்று எண்ணியிருந்தேன். ஆனால், இப்படி இவ்வளவு விரைவாக இதோ இன்னும் சில நிமிடங்களில் நான் அவரை சந்தித்து விடப் போகிறேன் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை சக்திக்கு.

கணேஷ் சொல்வதுபோல் சற்றும் எதிர்பாராமல் திடீரென்று என்னை பார்க்கும் பொழுது அன்வர் என்ன செய்வான். பலவிதமான கற்பனை சிந்தனைகள் சக்தியின் உள்ளத்தில் நிழல் படமாக ஓட ஆரம்பித்தது. அந்த கற்பனை காட்சிகளில் அவள் கண்ணங்கள் சிவப்பேற பலமுறை வெட்கப்பட்டாள் .கடைக்கண்ணால் சக்தியை பார்த்தபடி  மனதிற்குள் சிரித்தபடி நடந்து வந்தான் கணேஷ்.

அப்பொழுது திடீரென்று ஒரு வெறி பிடித்த கும்பல் ஒன்று கணேஷை சரமாரியாக தாக்க ஆரம்பித்தது. ரிச்சா காரன் ரிச்சாவை விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட ஆரம்பித்து விட்டான். அது கேட்பதற்கு ஆளற்ற அனாதரவான வீதியாக இருந்தது.

சத்திக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  அவர்கள் தாக்கும் வேகத்தில் ஒருவேளை கணேஷ் இறந்து விடவும் கூடும் என்று அச்சப்பட்டாள்.

அவள் தன்னுடைய சுய பாதுகாப்பிற்காக தன்னுடைய மடியில் முடிந்து வைத்து இருந்த மிளகாய் பொடியை எடுத்து, அந்த கும்பலின் மேல் தூக்கி அடிக்க ஆரம்பித்தாள். அதன் எரிச்சல் தாங்காமல் அவர்கள் கணேஷை விடுவிக்க அவனை  இழுத்து ரிச்சாவில் போட்டுக்கொண்டு தன் பலத்தையெல்லாம் திரட்டி ரிச்சாவை இழுத்தபடி ஓட ஆரம்பித்தாள்.

(தொடரும்….)




What’s your Reaction?
+1
7
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!