தோட்டக் கலை

தக்காளி செடியில் காய்கள் அதிகமாக காய்க்க இதை மட்டும் செய்யுங்க..

தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது. இதனை மொத்தமாக கடையில் வாங்கி வைக்கவும் முடியாது. சீக்கிரம் அழுகி விடுவதால் ஒரு வாரத்திற்கு மட்டும் தான் வாங்கி வைத்திருப்போம். கடையில் வாங்கும் தக்காளியானது ரசாயனம் கலந்து பழுக்க வைத்திருப்பார்கள். அதனால் நீங்க வீட்டிலேயே தக்காளி செடி வளர்த்தால் ஆரோக்கியமான தக்காளி காய்களை பறித்து சமைக்கலாம். சில பேர் தக்காளி செடி வைத்திருப்பார்கள், ஆனால் அதிலிருந்து காய்கள் காய்க்காமலே இருக்கும் , அதனால் இந்த பதிவில் தக்காளி செடியில் அதிக காய்கள் காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

தக்காளி செடி வளர என்ன உரம் கொடுக்கலாம்:

தக்காளி செடிக்கு பொட்டாசியம் சத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு பக்கெட் எடுத்து தண்ணீரை நிரப்பி கொள்ளவும். அதில் சாம்பலை சேர்த்து கரைத்து கொள்ளவும். இந்த தண்ணீரை செடியின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். இந்த கரைசலை ஊற்றுவதன் மூலம் செடி நன்றாக வளரும்.




பூச்சி தாக்காமல் இருக்க:

சாம்பல் கரைசலை கொடுத்த பிறகு ஒரு வாரம் கழித்து சுண்ணாம்பு கரைசலை கொடுக்க வேண்டும். இதற்கு சிறிகளவு தண்ணீரில் சுண்ணாம்பை கலந்து கொள்ளவும். இந்த கரைசலை செடிகளில் தெளித்து வர வேண்டும். இந்த கரைசலை தெளிப்பதால் செடிகளில் உள்ள பூச்சிகள் அழிந்து விடும்.

முக்கியமாக இந்த உரத்தை பூக்கள் பூப்பதற்கு முன்பு கொடுக்க வேண்டும்.

மேலும் தேமோர் கரைசலையும் கொடுக்கலாம். இந்த கரைசலை கொடுப்பதன் மூலம் பூச்சிகள் வராமல் இருக்கும்.

தக்காளி செடியின் தண்டுகளில் உள்ள பூச்சிகளையும் இலைகளின் உள்ள பூச்சிகளையும் போக்க விரலி மஞ்சள் , பூண்டு இரண்டையும் நச்சு தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும. பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி செடிகளின் தண்டுகளில் தெளித்து வந்தால், செடிகளில் உள்ள பூச்சிகள் இறந்து விடும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!