Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 3

3

 

 

ஒரு பிஸினஸ் லன்ஞ்சுக்காக அங்கே வந்திருந்தான் மனோகரன் .மாடியில் சன்னலருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து லன்ஞ்சுடன் அந்த ஜப்பானியர்களுடன் பிஸினஸ் பேசிக் கொண்டிருந்த போது ,தற்செயலாக ஜன்னல் வழியாக பார்த்த போது வைசாலி ஸ்கூட்டியுடன் வருவதை பார்த்தான் .

சட்டென உடலில் ஒரு சிறு பரபரப்பு சேர்ந்து கொண்டது அவனுக்கு .இவள் இங்கே எங்கு வருகிறாள் …?

அவள் ஒரு மாதிரி ரகசியம் போல வண்டியை சிறிது மறைவாக நிறுத்துவதை கவனித்தான் .தொடர்ந்து யாரும் தன்னை பார்க்கிறார்களா …என சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டாள் அவள் .அவளது இந்த நடவடிக்கைகள் அவனுக்கு சுவாரஸ்யத்தை கூட்ட , ” எக்ஸ்யூஸ் மீ …பிப்டீன் மினிட்ஸ் ப்ளீஸ் ” என தான் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் கூறிவிட்டு , இறங்கி வந்து மறைந்து நின்று அவளை கவனிக்கலானான் .

அவள் நான்கு டயர்களையும் குத்தி கிழித்து முடித்ததும் அவள் முன் வந்து நின்று ” என்னதிது …? ” என்றான் .திருதிருவென விழித்தாள் அவள் .தெரியாமல் இனிப்பை திருடி தின்றுவிட்டு அம்மாவிடம் மாட்டிக் கொண்ட குழந்நையை நினைவுறுத்தினாள் .அந்த கத்தியை பின்புறம் மறைதநுக் கொண்டாள் .

” இ…இது …உங்க …காரா …? “

அவன் மௌனமாக கை சுட்டிக் காட்டினான் .அங்கே கார் பார்க்கிங்கில் அன்று காலை வைசாலி சண்டை போட்டு காப்பாற்றிய அவனது அதே கார் .அந்த கீறலை சரி பண்ணிவிட்டானா …என சற்று எட்டி பார்த்தாள் .

” இல்லை ..இன்னும் சரி  பண்ணவில்லை …” பதில் வந்த்து .

நான் நினைத்தது இவனுக்கு எப்படி தெரியும் …? என நினைத்தபடி மெல்ல அந்த இடததை விட்டு நழுவ முயற்சித்தாள் .அதனை எதிர்பார்த்தவன் போல் அவன் அவளது வழியை மறித்து நின்றான் .

” உனக்கு கார்கள்னா பிடிக்கும்தானே …? பின் ஏன் இப்படி பண்ணினாய் …? “

எனக்கு கார் பிடிக்கும்னு இவனுக்கு எப்படி தெரியும் ….? யோசித்தபடி  நின்றாள் .

” சொல்லு வைசாலி ….” என்க திடுக்கிட்டாள் .

” என் பெயர் உங்களுக்கு எப்படி …? ” அவன் பெயர் கேட்டபோது தான் பதில் பேசாது வண்டியை ஸ்டார்ட் பண்ணியது நினைவு வந்த்து .

” அது பெரிய விசயமில்லை .இந்த வேலை நீ ஏன் செய்தாய் …? ” என கைகளால் குத்துவது போல் ஜாடை செய்தான் .

” அது …அவர்களுக்கு ஒரு பனிஷ்மென்ட் மாதிரி இருக்கட்டுமென்று ….” தலைகுனிந்து முணுமுணுத்தாள் .

” 
” பனிஷ்மென்ட் …அது எதற்கு …? “

” அவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களா …? “

” ம் …கொஞ்சம் பழக்கம்தான் .சொல்லு என்ன செய்தார்கள்  …? ” 
இவனிடம் ஏன் இதையெல்லாம் சொல்ல வேண்டுமென்று மனதிற்குள் நினைத்தாலும் , ” அவர்கள் …. என்னை …இப்போது …கொஞ்ச நேரத்திற்கு முன்னால் …கிண்டல் செய்தார்கள் ….”

” என்ன சொன்னார்கள்  ….? “

” வ…வந்து ..கொஞ்சம் …அசிங்கமாக ….” முகம் சிவக்க தலை குனிந்தபடி பதில் சொன்னாள் .அவனிடமிருந்து பதிலில்லாமல் போக நிமிர்ந்து பார்த்தாள் .

கர்ச்சீப்பை வைத்து முகத்தை அழுந்த   துடைத்துக் கொண்டிருந்தான் அவன் .” நீ போ …நான் அவர்களிடம் பேசுகிறேன்….” என்றான் .

என்ன பேச போகிறான் …? அவனை அண்ணாந்து பார்த்தாள் . ” நான் கண்டிக்கிறேன் .நீ போ ….” என்றான் .

ஏதோ ஒரு நம்பிக்கையுடன் தலையாட்டிவிட்டு நடந்தாள் .

வீடு திரும்பி …அம்மாவிற்கு சமையலில் உதவி , தம்பி தங்கைக்கு வீட்டுபாடத்தில் உதவி படுத்த பிறகு , ஏதோ ரொம்ப  தெரிந்தவன் போல் , உறவின்ன் போல் இவனிடம் ஏன் இதையெல்லாம் ் பகிர்ந்து கொண்டேன் ..? அவனும்தான் ஏதோ உரிமையானவன் போல் நான் கண்டிக்கிறேன் போ ..என்றானே …ஏன் …?

வைசாலி அவனை நீ இன்று காலைதான் பார்த்தாய் .நினைவு வைத்துக்கொள் …அவன் பெயர் கூட உனக்கு தெரியாது . தனக்குத்தானே நினைவுறுத்தியபடி தூங்கிப் போனாள் .

மறுநாள் காலை வழக்கம் போல் பால் பாக்கெட் வாங்க கிளம்பினாள் .உடன் சேர்ந்து கொண்ட விஜயா , ” வைசாலி நேற்று அவரு …” என ஆரம்பிக்க …முருகா காப்பாற்றப்பா ..என மனதினுள் நினைத்தபடி …காதுகளை அடைத்துக் கொண்டாள் .

பதிபக்தி இருக்க வேண்டியதுதான் .ஆனாலும் இப்படி இருக்கக் கூடாது …” என்னை …இப்படி ஒரு அழகான பொண்ணை நான் பார்த்ததே இல்லைங்கிறாரு ”  நாண பெருமூச்சுடன் அவள் கூறிக்கொண்டிருக்க , ஆமாம் உன் புருசன் நேற்று காலை என்னை பார்த்த பார்வையை நீ பார்க்கவில்லையே …ஏளனமாக மனதிற்குள் நினைத்துக கொண்டாள் .

” கொஞ்சம் வேகமாக நடந்தாயானால் நன்றாகயிருக்கும் ..” என அவளை விரைவுபடுத்தியபடி நடையை எட்டிப் போட்டாள் .அவர்களது வேக நடைக்கு தடையாக இடையில் வந்து நின்றனர் அந்த ஆட்கள் .அந்த அதிகாலை அரை இருளில் இப்படி திடீரென இரண்டு கரிய உருவம் வழி மறிக்கவும் வாய் திறந்து கத்த தோன்றியது வைசாலிக்கு .

அருகே விஜயா ..யோசனை ஏதுமின்றி கத்தியே விட்டாள் .அங்குமிங்கும் பால் வாங்க , வாக்கிங் என சென்று கொண்டிருந்தவர்களில் சிலர் திரும்பி பார்க்க , ” ஐயோ சிஸ்டர் நாங்கள்தான் ..” செல்போன் ப்ளாஷ் அடித்து தங்கள் முகத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டவர்கள் அன்று மாலை வைசாலியை தரங்குறைந்த வார்த்தைகளால் காயப்படுத்திய அந்த கார்க்கார்ர்கள் .

” நீ ..நீங்கள் …? இ…இங்கே ஏன் …? எப்படி …? ” தடுமாறினாள் வைசாலி .அடக்கடவுளே இவர்கள் கார் டயரை கிழித்த விசயம் தெரிந்து விட்டது போலவே .அதுதான் இப்படி கால்ங்கார்த்தாலே வீடு தேடி சண்டைக்கே வந்துவிட்டார்கள் .இப்படி ஒரு மன ஓட்டம் அவளுள் .

” நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்க வந்தோம் சிஸ்டர் “

என்ன ..!!! இப்போதுதான் அவர்களின் சிஸ்டரை கவனித்தவள் ” எப்படி …? இது ….எப்படி …? ” குரல் தடுமாற கேட்டாள் .

மாலை அவர்கள் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகள் நினைவில் வந்து கோப அலை உடல் முழுவதும் ஓடியது .அவளது முக மாறுதல்களிலேயே அவளது மன ஓட்டத்தை அறிந்து கொண்ட அவர்கள் ” சாரி சிஸ்டர் நேற்று எங்களுக்கு கொஞ்சம் புத்தி மழுங்கிப் போயிடுச்சு …அதுதான் அந்த மாதிரி பேசிட்டோம் .இப்போது அதற்கு மன்னிப்பு கேட்கத்தான் வந்தோம் “

” என்னது  மன்னிப்பா …!!! ” அவள் ஆச்சரியமாக அவர்களை பார்க்க , அவர்கள் சற்றும் தயங்காமல் தங்கள் கரங்களை குவித்து ” எங்களை மன்னித்து விடுங்கள் சிஸ்டர் …” என்றனர் கோரஸாக.

கண்டிக்கிறேன் போ …என்ற அவனது சொல்லை அசை போட்டபடி தலையாட்டினாள் வைசாலி .எப்படி இதனை சாத்தியமாக்கினான் ….?

” ஐயோ தலையெல்லாம் ஆட்டாதீங்க .மன்னிச்சிட்டேன்டா …வாய் திறந்து சொல்லுங்க ப்ளீஸ் ” இறைஞ்சினான் ஒருவன் .

இவன் நேற்று என்னை ..என்ன வார்த்தை சொன்னான் ….? வைசாலியின் கைகள் இறுகின .”வேண்டுமானால் இரண்டு அறை கூட அறைந்து கொள்ளுங்கள் சிஸ்டர் .” கன்னத்தை திருப்பி காட்டினான் மற்றொருவன் .

இதழ் மலர திருப்தியான மனதுடன் ” மன்னித்து விட்டேன் .இனி ஒழுங்காக இருங்கள் ” மகாராணி தோரணையில் கைகளை அசைத்தாள் .

இவ்வளவு நேரம் ஏதோ ஒன்றின் பிடியில் இருந்த்து போன்ற முக பாவனையில் இருந்தவர்கள் இப்போது விடுதலை மூச்சு விட்டனர் .வைசாலி அருகிலிருந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஜயாவிற்கு நடக்குமாறு ஜாடை காட்டிவிட்டு நடக்க தொடங்க , மீண்டும் அவளை வழிமறித்தனர் அவர்கள் .

” என்ன …? “

” நீங்கள் எங்களை மன்னித்து விட்டீர்களென்ற விசயத்தை சாருக்கு ஒரு போன் பண்ணி சொல்லி விடுங்களேன் “

” எந்த சாருக்கு ..? “

” என்ன சிஸ்டர் இப்படி கேட்கிறீங்க …? மனோகரன்  சாரை தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நீங்கள் இருக்கும் திசை பக்கம் திரும்பியும் பார்தநிருக்க மாட்டோமே ….”

ஓ…அவன் பெயர் மனோகரனா …? …

” மனோகரா …அப்படி யாரையும் எனக்கு தெரியாதே …? ” 
வைசாலி உண்மையைத்தான் சொன்னாள் .ஆனால் அவர்களிருவரும் அவள் கால்களில் விழுபவர்கள் போல் வந்துவிட்டனர் .

” சிஸ்டர் இப்படி எங்களிடம் விளையாட்டாக அவரை தெரியாது என்பது போல் , அவரிடம் எங்களை தெரியாது என்று விடாதீர்கள் ….எங்கள் கதி அவ்வளவுதான் ” நடுங்கினர் .

என்னடாயிது ….இப்படி இவர்களிருவரும் நடுங்கும் அளவு அவன் என்ன பெரிய ஆள் …? யோசித்தவள் முன் ஒரு பேப்பரை நீட்டினர் .அதில் ஒரு போன் நம்பரிருந்த்து .

” இந்த நம்பரில்தான் இப்போது சாரிடம் பேசமுடியும் .நீங்கள் இந்த நம்பரில் அவரை அழைத்து நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்ட விசயத்தை கூறிவிடுங்களேன் “

” சரி …” என வைசாலி அந்த பேப்பரை வாங்கிய பின்பும் , ” ப்ளீஸ் மறந்துவிடாமல் சொல்லுங்கள் சிஸ்டர் .உங்கள் போனில் அந்த நம்பரை ஏற்றிக் கொள்ளுங்களேன் ” என பிடிவாதமாக நின்றனர் .

வைசாலி தனது போனில் அந்த நம்பரை சேவ் செய்து கொண்டு ” நான் பிறகு எனக்கு டைம் கிடைக்கும் போது பேசுகிறேன் ்இப்போது நீங்கள் போகலாம் ” என்றாள் உத்தரவாக .

நிச்சயம் போன் போடுமாறு மீண்டும் இருமுறை அவளை வலியுறுத்திவிட்டு சிறு கலக்கத்துடனேயே அவர்கள் நடந்தனர் .

விவரம் கேட்ட விஜயாவிற்கு ஓரளவு விபரம் கூறியபடி நடந்தாள் வைசாலி . அவனை அன்று காலைதான் பார்த்ததை மட்டும் சொல்லவில்லை .தெரிந்த நண்பன் என்றாள் .

” நண்பனென்று சொல்கிறாய் …ஆனால் அவர் செய்திருக்கும் காரியங்கள் அவர் உன்னை தோழியென நிறுத்தவில்லை என்றல்லவா சொல்கிறது …? “

” ஏன் அப்படி சொல்கிறாய் …? “

” மனதிற்கு பிடித்தவளுக்குத்தான் இது போன்ற துன்பம் வருவதை ஆண்களால் பொறுத்துக் கொள்ள முடியாது .இந்த அளவு வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்குமளவு இவர்களை மிரட்டியிருக்கிறாரென்றால் …எனக்கென்னமோ …தோன்றுகறது …” குறும்பாக கூறினாள் .

ஆமாம் உனக்கு எப்போதும் கண்றாவியாகத்தானே தோன்றும் .்என நினைத்தபடி ” என்ன ..? என்ன தோன்றுகிறது உனக்கு …? ” எரிந்து விழுந்தாள் .

” அந்த ..அவர் …உன்னை விரும்புகிறாரோ …அதுதான்பா காதலிக்கிறாரே …என்று ….”

” மண்ணாங்கட்டி …நீயும் உன் மதிப்பீடும் .ஒழுங்காக வாயை மூடிக்கொண்டு வா .இல்லை நாளை பால் வாங்க உன்னைக் கூப்பிடாமல் நான் மட்டுமே வந்துவிடுவேன் “

விஜயாவால் தனியாக பால் வாங்க வர முடியாதென்பதாலும் , துணைக்கு அவள் கணவனை நூக்கதநிலிருந்து எழுப்பி  அழைத்தால் அவன் அறைந்தாலும் அறைவான் என்பதாலும் வாயை மூடிக்கொண்டாள் அவள் .

ஆனால் அவள் தூவிய விதை வைசாலியின் மனதினுள் விழுந்து ஆழப்புதைந்து முளைக்க வழி பார்த்துக் கொண்டிருந்த்து. காலையில்தான் பார்த்த பெயரே தெரியாத ஒருத்தியை , ஒருவன் …அதுவும் அவ்வளவு காஸ்ட்லி காரில் வந்து இறங்குபவன் விரும்புவானாமா …?இந்த விஜயா சரியான லூசு …

ஆனால் அது எப்படி மாலைக்குள் என் பெயரை தெரிந்து கொண்டான் …? இதோ என் வீட்டைக் கூட தெரிந்து கொண்டு …இவர்களை மன்னிப்பு கேட்க என் வீட்டிற்கே அனுப்பி …இவையெல்லாம் ஏன் ….? குழம்பினாள் .

இதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடியவன் அவன் மட்டும்தான் .வீட்டிற்கு போனதும் முதல் வேலையாக அந்த நம்பருக்கு போன் செய்தாள் .எப்படியும் அவர்கள் மன்னிப்பு கேட்டதை சொல்ல வேண்டுமல்லவா …?

இரண்டாவது ரிங்கிலேயே அவள் கால் கட் செய்யப்பட்டது .திரும்பவும் முயற்சிக்க , இப்போது முதல் ரிங்கிலேயே கட் செய்யப்பட்டது .ஏமாற்றத்தோடு , கொஞ்சம் கோபமும் வர ..போயேன் என முகத்தை சுளித்தபடி குளிக்க போனாள் .

அன்று அவள் கடக்கும் ஒவ்வொரு சிக்னலிலும் அவன் காரினை தேடினாள் .ஆனால் அவன் தென்படவில்லை .
அன்று மட்டுமல்ல அதன் பிறகு இரண்டுநாட்கள் அவள் கண்களில் படவில்லை .போனும் பண்ணவில்லை .

What’s your Reaction?
+1
8
+1
4
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!