Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 6

6

உள்ளத்தில் ஊறி கிடக்கும் உனை மீட்க

எதை அடமானமாக்க…?

 

                               பஞ்சு போல் அவிந்திருந்த கொண்டைக்கடலையிலும் , புஸ்ஸென உப்பியிருந்த பூரியிலும் திருப்தியில்லை வேதிகாவிற்கு .என்ன கண்றாவி டிபன் இது என்றுதான் தோன்றியது .ஐந்தாவதாக தட்டிறகு வந்த பூரிக்கு மறுத்து எழுந்தாள் .” வெளியில் வேலைக்கு போகிற பிள்ளை இப்படி கொஞ்சமாவா சாப்பிடுறது …? ” திலகவதியின் புலம்பலுக்கு உதட்டை சுளித்துவிட்டு எழுந்தாள் .

” உங்க பொண்ணுக்கு வைங்க …” ஆறாவது பூரியிலிருந்த மௌனிகாவை கை காட்டிவிட்டு தட்டை கழுவினாள் .




” ஏன் …நீ என் பெண்ணில்லையா …? “

நான் என் அம்மாவிற்கு மட்டும்தான் பெண் வேதிகாவின் மன ஓட்டத்தை ஒட்டினாற்போல் ,” நான் மட்டுமதான்மா உங்க பொண்ணு ” பூரியை சுருட்டி வாயில் திணித்தபடி சொன்னாள் மௌனிகா .

போயேன் அம்மாவும் , மகளும் …உறவை கொண்டாடிக் கொள்ளுங்களேன் .என்னை விட்டால் போதும். முகத்தை திரும்பியும் பாராமல் நடந்தாள் .

” வேதா …” வாசலில் கௌரியின் குரல் .

” வாடி , இன்றிலிருந்து நம் கடைக்கு வருவதாகத்தான் இருந்தேன் .கிளம்பிட்டேன் போகலாமா …? “

” போகலாம் வேதா .உள்ளே வா கொஞ்சம் பேசவேண்டும் ” முன்னறை சோபாவில் அமர்ந்து கொண்டு ” நேற்று முருகேசன் ஒரே அடம் வேதா .ஒரே வாரத்தில் காலி பண்ணியே ஆகவேண்டிமென்கிறார் .கடைக்குள் உட்கார்ந்தி கொண்டு எழுந்து போக மாட்டேனென அடம் பிடித்து கொண்டிருந்தார் .அவரை பேசி அனுப்புவதற்கள் போதும் போதுமென்றாகி விட்டது …” கவலையுடன் பேசினாள் கௌரி.

” என்னடி ஒரே வாரத்திலென்றால் எப்படி காலி பண்ண முடியும் …? “

” ஒரு மாதமாக சொல்லிக் கொண்டுதானே இருக்கிறேன் என்கிறார் . கொஞ்சம் குரல் உயர்த்தினால் அழுகிறார் .குரலை குறைத்தால் எகிறுகிறார் .இவரை என்ன செய்வதென தெரியவில்லை .”

”  உடனே ஒரு புது இடத்திறகு நாம் எங்கே போவது …? பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் .ஒன்றும் அமையவில்லையே …”




” என்ன பிரச்சினை …? ” கேட்டபடி வந்த அமரேசன் சுவாதீனமாக வேதிகாவின் அருகில் சோபாவில் அமர்ந்தான்.வந்துவிட்டான் . மூக்கில் வியர்த்திடுமே …   எரிச்சலுடன்  உடனே .அநிச்சையாய் எழுந்துவிட்ட வேதிகாவின் கையை இறுக பற்றி இழுத்து மீண்டும் அமர்த்தினான் .

” உன் தோழிக்கு காபி பிறகு கொடுக்கலாம் முதலில் உட்கார் இந்த பிரச்சினையை சொல் .” கௌரிக்கு காபி தருவதற்காகத்தான் அவள் எழுந்த்து போன்றதொரு தோற்றத்தை உண்டாக்கிவிட்டு சற்றே நகர்ந்து அவள் தோள் உரசினாற் போல் அமர்ந்து கொண்டான் .

” வந்து …அந்த ..முருகேசன் …அவர் …எங்கள் …நாங்கள் …” தோள்களை தீண்டிய தோள்களினால் வார்த்தைகள் வகையற்று தடுமாற திணறினாள் வேதிகா .

” முருகேசன் நாங்கள் டிசைனிங் கடை வைத்திருக்கும் இடத்தின் ஓனர் அண்ணா. நாங்கள் மூன்று  வருடங்கள் அவருடன் வாடகை ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் .ஆனால் இப்போது திடீரென எங்களை காலி பண்ண சொல்கிறார் .”

” முடியாதென்று சொல்லுங்கள் .யாரை சாட்சியாக வைத்து ஒப்பந்தம் போட்டீர்கள் ? உன் அப்பாவை வைத்து பேசவில்லையா …? ” வேதகாவிடம் கண்டிப்பாக கேட்டான் .

அவள்தான் அப்பாஙிற்கு தெரியாமல் தனக்கு ஒரு தொழில் வேண்டுமென்று இதனை ஆரம்பித்தாளே .அவரிடம் என்ன சொல்ல முடியும் …?

” இ…இல்லை ..நா..நாங்களே ..கௌரியின் கணவரை வைத்து பேசி …”

” என் கணவர் இது போன்ற தகராறுக்கெல்லாம் ஆக மாட்டார் அண்ணா .அங்கே போய் நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்று தலையாட்டி விட்டு வந்துவிடுவார் …”

” சரி கிளம்புங்கள் .அந்த முருகேசனை நான் ஒரு வழி பண்ணுகிறேன் …” இப்பொது எழுந்த அமரேசனின் கையை இழுத்து பிடித்து அமர்த்தினாள் வேதிகா .

” இல்லை வேண்டாம் ” மறுத்தபடி இப்போது தன்னிடமில்லாத  தன் கைகளை இழுத்துக் கொள்ள முயன்றாள் .எப்போதென தெரியாமல் அவள் கைகள் அமரேசனின் கைகளுக்கு ள் போயிருந்தன.

,” ஏன் வேண்டாம் …? ” அவள் கைகளை விடுவிக்கும் எண்ணமன்றி அழுத்தியபடி கேட்டான் .வேதிகா திணறினாள் .




” நான் என்ன செய்ய வேண்டுமென்பதை மட்டும் சொல் வேதா ….” குறிப்பு போல் அழுத்தி பேசினான் .

என் சொல் கேட்டு நடப்பவனா நீ …? நான் சொன்னதையெல்லாம் நறைவேற்றினாயா …? தவறே செய்யாத்து போல் தன் விழி நோக்கும் அவன் பார்வையை விரும்பாது தலையை தாழ்த்திக் கொண்டு பேசினாள் .

” அவர் மகளின் திருமண செலவற்காக அந்த இடத்தை விறக போகிறார் .இதனை விட்டால் அவருக்கு வேறு வழி கிடையாது .ஏற்கெனவே திருமண ஏற்பாடுகளில் விழி பிதுங்கிக் கொண்டருப்பவரிடம் கடினமாக இப்படி பேச வேண்டாம் …”

” சரி …வேறென்ன செய்யட்டும் …? “

” நாங்கள் அந்த இடத்தை காலி பண்ணத்தான் போகிறோம் .எங்களுக்கு ஒரு புதிய இடம்தான் இப்போதைய தேவை .அதனை ….” அவனிடம் உதவியென கேட்க பிடிக்காது வார்த்தைகளை விழுங்கினாள் .

,” சரி வாருங்கள் .நான் காட்டும் இடம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என பாருங்கள் …” அவள் கையை பற்றி தூக்கியபடியே எழுந்துவிட்டான் .

” உங்களுக்கு தெரிந்தவர் இடமா அண்ணா …? ” ஆவலுடன் கேட்டபடி கௌரி வாசலுக்கு நடந்து தன் ஸ்கூட்டியை எடுத்தாள் . ,

” உன் ஸ்கூட்டி இருக்கட்டும் .என்னோடு பைக்கில் வா …”முன்னால் போய் பைக்கில் ஏறினான் .முதலாளி கட்டளை மட்டும்தான் இடுவார் .நாம் குடுகுடுவென பின்னால் போக வேண்டும் …வேண்டா வெறுப்பாக அவனுடன் பைக்கில் ஏறி அமர்ந்தாள் .முன்தினம் அவனுடன் பைக்கில் வந்து இறங்கிய மௌனிகா வேறு நினைவு வந்து தொலைத்தாள் .அவள் அமர்ந்த இடத்தில் நானும் அமர வேண்டுமா …? வேதிகாவிற்கு அந்த பைக்கின் சீட் அனல் போல் எரிந்த்து .அன்று இதழ்கள் எரிந்த்தே அதைப் போல …

அன்று அப்படி ஒரு அதிகார அராஜகத்திற்கு பின் அவளை அந்த மல்லிகை கொடிக்கடியிலேயே அலட்சியமாக உதறிவிட்டு அவன் போய்விட்டான் .சுற்றிலும் இருள் கவியும் வரை சுரணையற்று அங்கேயே அமர்ந்திருந்தாள் வேதிகா .மீண்டும் சுரணை வந்து அப்பாவிடம் இதை சொல்லி திருமணத்தை நிறுத்தும் வேகத்தில் அவள் கீழே இறங்கி வந்தபோது அப்பாவும் , அம்மாவும் அவர்கள் அறையில் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர் .

” நம்ம வேதாவுக்கு இந்த கல்யாணத்தில் அவ்வளவாக நாட்டமில்லாத்து போல் தெரிகிறதுங்க …”




” ம் …ம் …”

” எனக்கென்னமோ கொஞ்சம் பயமாக இருக்கிறது …”

” ஏன் உன் மகளை எங்கேயோ நடுக்காட்டில் தள்ள போகிறேனென நினைத்தாயா …? ” அப்பா எப்போதும் இப்படித்தான் அம்மாவின் கேள்விகளுக்கு ஒழுங்கான , திருப்தியான பதில்களை அளிப்பதில்லை .பெரும்பாலும் எனக்கு தெரியும் , நான் பார்த்துக் கொள்வேன் ரக பதில்கள்தான் .வேதிகாவிற்கே நிறைய நேரங்களில் எரிச்சல் வரும் .ஆனால் விசாலாட்சியோ அந்த அலட்சியங்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுப்பில் குக்கர் வைக்க போய்விடுவாள் .

அவனும் சற்று முன்பு அப்படித்தானே நடந்து கொண்டான் .உன் உணர்வுகளின் கவலை எனக்கில்லை .நான் ஆண்பிள்ளை என செயலில் காட்டினான் .அம்மாவிற்கு பின் நானா ….இல்லை இதனை நான் அனுமதிக்க முடியாது .

” உன் மகளுக்கு , திருமணம் என்றதும் பாரின் காரில் கோட்டும் , சூட்டுமாக வாசலில் வந்து பெரிய ராஜகுமாரன் நிற்பானென்ற எண்ணமிரந்திருக்கும் …” அப்பாவின் பேச்சில் வேதிகாவிற்கு சுரீரென்றது .ஏனெனில் அவளது கனவு கதாநாயகன் அப்படித்தான் இருந்தான் .உயர் ரக உடையணிந்து லட்சங்களில் விலையுள்ள காரில் வீட்டு வாசலில் இறங்கி அவளை திருமணம் செய்ய இறைஞ்சினான் .அது எட்டா கனவென்று மூளை அறிவித்தாலும் மனம் அந்த சுக சொப்பனங்களிலிருந்து மீள்வதாக இல்லை .

” நம் மாப்பிள்ளை தங்கம்டி .இது போல் நம் திருமண ஙேலையையும் சேர்த்து தானே பார்க்கும் பந்தா இல்லாத ஒரு மருமகன் நமக்கு வேறு எங்கு கிடைப்பான் ..? ஒரே மகளை வசதியை மட்டும் பார்த்து எங்கேயோ திருமணம் செய்து கொடுத்துவிட்டு கடைசி காலத்தில் நாம் என்னடி செய்வோம் …? நமக்கு தேவை மருமகன் மட்டுமில்லை .மகனும் கூட .அதற்கு அமரேந்தரை தவிர வேறு ஆண்பிள்ளை அமையமாட்டான் “

வேதிகா மீண்டும் மல்லிகை கொடியருகே வந்து அமர்ந்துவிட்டாள் .அப்பா சொல்வது நியாயம்தானே …ஆண்பிள்ளையற்ற எங்கள் குடும்பத்திற்கு இது போல் என் குடும்பத்தையும் , தன் குடும்பமாக பார்க்கும் ஒருவன்தானே சரியாக இருக்க முடியும் .பட்டும் படாமல் எட்டி நிற்கும் ஆண் எப்படி ஒத்து வருவான் …? அவனுக்கான என்ஹீரோயிச  கனவுகள் தவறுதானே …? வேதிகா குழம்ப ஆரம்பித்தாள் .மறுநாள் காலையிலேயே வீட்டிற்கு வந்த அமரேசன் அவளது கண்களின் குழப்பத்தை எளிதாக கண்டு கொண டு , தனக்கு சாதகமாக்கிக் கொண்டான் .

” எந்தக் குழப்பமும் வேண்டாம் .தெளிவாக யோசித்து உங்களுக்கு சரியென்று பட்டால் மட்டும் சம்மதம் சொல்லுங்கள் …” திடுக்கிட்டு மீண்டாள் வேதிகா .எந்த சம்மத்த்தை கேட்கிறான. …?

” உங்கள் வேலைகளுக்கு ஒத்து வருமென்றால் மட்டும் சம்மதித்தால் போதும் …” அந்த இடத்தை கைகளால் சுற்றி காட்டி அவர்களிடம் அபிப்ராயம் கேட்டான் .

ஒத்து வருமா …எவ்வளவு அருமையான இடம் இது …பத்துக்கு 
பத்து அறையில் நான்கு மெஷின்களுடன் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு , இந்த பரந்த இடம் கடல் போல் தோன்றியது .இங்கே தாராளமாக இருபது மிஷின்கள் போடலாம் .நான்கு கட்டிங் டேபிள் போடலாம் .இரண்டு டிரஸ்ஸிங் ரூம் போடலாம் .இதோ இந்த வாசலை ஒட்டி ஒரு சிறிய ரிசப்சன்கூட போடலாம் .




வேதிகாவின் மன ஓட்டத்தை வாய் வழியாக சொல்லிக் குதூகலித்து கொண்டிருந்தாள் கௌரி .கை தட்டி சிறு பிள்ளையாக குதிக்காத குறை .

” ஏதாவது புது பிஸினஸ் தொடங்க போகிறீர்களா …? அதற்காக இந்த இடத்தை பார்த்து ஙைத்திருக்கிறீர்களா …? ” வேதிகாவின் நக்கல் கேள்வியில் புருவம் சுருக்கினான் .

” ஏய் ..அவர் நமக்காகத்தான் ….” கௌரியை கையுயர்த்தி தடுத்தான் …” உங்களுக்காகத்தான் இந்த இடத்தை சொல்லியிருக்கிறேன் “

” வாடகை எவ்வளவோ …? நாங்கள் இரண்டு பெண்களாக சிம்பிளாக ஒரு தொழில் செய்து கொண்டிருக்கிறோம் .இந்த அளவு பெரிய இடத்தை வாடகைக்கு சொல்லி , எங்கள் தொழிலை நக்கல் செய்வது போல் உள்ளது …”

” வேதா நம்மால் முடியாதென்றால் அதை சொல்லிவிடலாம் .எதற்காக இந்த பேச்சு …? ” தோழியின் கோபத்தை சமாதானம் செய்ய முயன்றாள் கௌரி .

” வாடகை விபரம் , கீழே வாங்க பேசலாம் …” அமர்த்தலாக சொல்லிவிட்டு முன்னால் நடந்து ஆபிஸ் அறைக்கிள் நுழைந்தான் .பின்னால் சென்றவர்கள் அங்கே முதலாளி சேரில் அவனே அமர்ந்திருக்க கண்டு திகைத்தனர் .வேதிகா அவசரமாக வெளியே வந்து அந்த காம்ப்ளெக்ஸ் பெயரை எட்டி பார்த்தாள் .” அமரன் டவர்ஸ் ” அவனுடையதுதான் .அப்பா சொன்னது நினைவு வர , சிறு பிரமிப்பிடன் அந்த காம்ப்ளக்ஸை பார்த்தாள் .நகரின் மிக முக்கிய மைய பகுதியில் ஒரு ராஜாவின் கம்பீரத்துடன் இருந்த்து அந்த காம்ப்ளக்ஸ் .இதில் தொடங்கும் எந்த தொழிலும் நிச்சயம் வெற்றி பெறும் .

” ஓ…அப்போ இந்த ஹால் இப்போதுதான் கட்டி இருக்கிறீர்களா …? ” கௌரி அதற்குள் அந்த கட்டிடத்தின் வரலாற்றை விசாரித்து முடித்திருந்தாள் .

” நான்காவது மாடியில் இந்த ஹாலை கட்ட ஆரம்பித்த நாள் முதல் இதற்கு வாடகைக்கு ஆட்கள் தேடி வந்தபடி இருக்கின்றனர் .முழுவதுமாக வேலை முடிந்தபின் தான் எதுவும் சொல்ல முடியுமென இதுவரை நான் யாருக்கும் உறுதி சொல்லவில்லை .இப்போது உங்களுக்கு தரலாமென தோன்றுகிறது .சொல்லுங்கள் உங்களால்  எவ்வளவு வாடகை தர முடியும் …? “

தோழிகள் இருவரும் திகைத்தனர் .” இ…இல்லை எங்களுக்கு ஒத்து வராது …”

” ஏன் …? “

” எங்கள் மொத்த தொழில் முதலீடு தெரியுமா உங்களுக்கு …? எங்கள் வருமானம் தெரியுமா …? ஏன் இப்படி நோகடிக்கிறீர்கள் …? ” வேதிகா விட்டால் அவனை குதறி விடுவாள் போலிருந்தாள் .

” நாங்கள் அந்த கடைக்கு மாதம் மூவாயிரம்தான் அண்ணா கொடுத்தோம் .இரண்டு பேர் சம்பளம் , மற்ற செலவு போக எங்கள் இருவருக்கும் மாதம் ஐந்தாயிரம்தான் இருக்கும் .ஏதோ ஒரு தொழலென்று பார்த்து கொண்டிருந்தோம் …” கௌரி மெல்லிய குரலில் விளக்க முயன்றாள் .

” என் இடத்து வாடகை பதினைந்தாயிரம் . வெளியில் இருபத்தியைந்தாயிரம் வரை கேட்கின்றனர் .உங்களுக்காகத்தான் இந்த வாடகை .” அழுத்தமாக தெளிவாக சொன்னான் .

” ரொம்ப நல்லது .நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் .ஏய் வாடி போகலாம் ” வேதிகா எழுந்தாள் .




” எதற்கு துடித்து கொண்டிருக்கிறாய் …? உட்கார் ” அதட்டினான் .

” இல்லை அண்ணா .இது எங்களுக்கு  கட்டுபடியாகாது “

” ம் …முதலீட்டை கூட்டினால் …வருமானமும் கூடுமே …”

ம்க்கும் …இவன் கொடுப்பானாக்கும் .” இரண்டு பேரும் மூட்டை கட்டியா வைத்திருக்கிறோம் ….”

” இல்லையா ….? ” அவளை உறுத்தான் .

அப்பாவிடம் கேட்க சொல்கிறானா …? இல்லை இவனிடமேவா …? யோசித்து ” நான் யாரிடமும் கேட்க மாட்டேன் …” சுருக்கென பேசினாள் .

” உங்கிளிடமே பூட்டி    வைத்துக்கொண்டு யாரிடமும் எதற்கு கேட்க வேண்டும் …? “

இப்போது இருவருமே விழித்தனர் .

” இங்கே பாருங்கள் இந்த இடத்தில் தொழில் தொடங்க வேண்டுமென்றால் , இன்னமும் மிஷின்கள் வாங்க வேண்டும் .அதற்கு ஆட்கள் போடவேண்டும் ….”

” செய்யுங்கள் .நீங்கள் இருவரும் கட்டிங் வேலைகளை மட்டும் பார்த்து கொண்டு பத்து மிஷின்களை வாங்கி போட்டு ஆட்களை வேலைக்கு போட்டு தைத்து அனுப்புங்கள் .பெரிய ஜவுளி கடைகளில் ஆர்டர் எடுங்கள் .தொழிலை விரித்து செய்யுங்கள “

” ஹலோ …நிறுத்துங்கள் .இதெற்கெல்லாம் குறைந்த்து ஐந்து லட்சமாவது வேண்டும் …”

” ம் ….வேண்டுமதான் .உங்கள் தொழில் பணமும் நீங்கள்தான. ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் …”

” அதுதான் எப்படியென்று ….” பொறுமையற்றி படபடத்தவளை கையமர்த்தியவன் ” உங்கள் நகைகளை வைத்து ….” என்றான் .
இருவரும் ஒருவரையெருவர் பாரத்து கொண்டனர் .

” என்றோ ஒருநாள் எடுக்கறீர்கள் .மற்ற நாட்கள் பீரோவிற்குள் தூங்குகிறது .அவற்றை அடமானம் வைத்து பணம் புரட்டலாமே …”




இது சரியாக வருமா …ஒருவரையொருவர் யோசனையோடு பார்த்து கொண்ட போது ,” நகைகளின் மீது அளவில்லா மோகம் இல்லாமலிருந்தால் நிச்சயம் சரியாக வரும் …” என்றான் .

” என் நகை ஐம்பது பவுன் …” கௌரி தகவல் தந்தாள் .

” வேதாவுடையது எண்பது பவுன் …” வேதிகாவிற்காக அமரேசனே தகவல் சொன்னான் .

” நாங்கள் ஆளுக்கு ஐம்பது பவுன் போடுகிறோம் .அடமானம் எங்கே வைக்க …? ” கௌரி களத்தில் குதிக்க தயாரானாள் .

What’s your Reaction?
+1
2
+1
6
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!