Samayalarai

நுங்கு சர்பத் இந்த வெயிலுக்கு இப்படி செய்து குடிங்க..

இந்த வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கு என்ன பழங்கள் எடுத்து கொள்ள வேண்டுமோ அதை தான் எடுத்து கொள்வோம். அந்த வகையில் கிராமத்திலும் சரி, டவுனில் சரி நுங்கு கிடைக்கும். இதனை வாங்கி வந்து சாப்பிடுவோம் அல்லது அங்கேயே சாப்பிடுவோம். இவை உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதனை எல்லாரும் வாங்க கூடிய அளவில் விலை குறைவாக காணப்படும்.

நுங்கு - Nungu - காலைலயே நுங்கு சர்பத் குடிக்க வாறேளா லே? | Facebook




சில நபர்களுக்கு இந்த பழம் பிடிக்காமல் கூட இருக்கும். அப்படி பிடிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த பதிவில் கூறியுள்ள ரெசிபி மாதிரி செய்து கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் நுங்கு சர்பத் செய்வது எப்படி என்று  அறிந்து கொள்வோம் வாங்க..

  • நுங்கு- ஒரு பவுல்

  •  எலுமிச்சை பழம்- பாதி

  •  நன்னாரி சர்பத்- 3 தேக்கரண்டி

  •  ஐஸ் கட்டி- 1/2 பவுல்




நுங்கு சர்பத் செய்முறை:

  • ஒரு பவுலில் நுங்கு எடுத்து கொள்ள வேண்டும். இதனை முழுதாக இல்லாமல் மிக்ஸ் செய்து விட வேண்டும். இதனுடன் ஐஸ் கட்டி தூளாக உள்ளது போல எடுத்து கொள்ள வேண்டும். இதனை நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும்.

  • பின் இதில் நன்னாரி சர்பத் 3 தேக்கரண்டி ஊற்றி கொள்ள வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சை சாறு மட்டும் ஊற்றி கொள்ள வேண்டும். பின் இதில் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். ஐஸ் கட்டி 2 சேர்த்து ஒரு மணி நேரம் வைத்து விட வேண்டும்.

  • அதன் பிறகு இதனை குடித்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரு முறை இந்த வெயில் காலத்தில் ட்ரை பண்ணி பாருங்க.. அப்பறம் தொடர்ந்து செஞ்சுக்கிட்டே இருப்பீங்க..

குறிப்பு: சளி பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மில்க் ஷேக் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை குளுமை நிறைந்தது. இதை பருகும் போது உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும்.

வீட்டுகுறிப்பு:

  • வெங்காய பஜ்ஜி செய்யும் போது சிறிதளவு வெங்காயத்தை வதக்கி விட்டு பிறகு பஜ்ஜி செய்தால் வெங்காயம் வட்ட வட்டமாக பிரிந்து வராது.

  •  பிரியாணி இலையை பிரியாணியில் போடும்பொழுது முழு இலை அல்லது பாதி இலையாக உடைத்துப் போட வேண்டும். சிறு சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டால் சாப்பிடும் போது தொண்டையில் மாட்டிக்கொள்ளும்.

  •  சப்பாத்தி மாவு இரண்டு கிண்ணம், ஒரு வாழைப்பழம், அரை கப் தயிர், தேவைக்கேற்ற உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்தால் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!