kadak katru Serial Stories

Kadal Kaatru – 36

                                              36

மொறு மொறுப்பும் , மென்மையுமான ஆப்பங்கள் சுட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு ஆப்பங்களை எடுத்து தட்டில் வைத்து தேங்காய் பாலை ஊற்றி சீனியை போட டுக் கொண்ட சமுத்ரா  ” யோகன் சாப்பிட வருகிறீர்களா ? ” அன்புடன் அவனுக்கும் அழைப்பு வைத்தாள் .

உணவு மேஜைக்கு வந்த யோகன் ஒரு டம்ளர் நீர்ருந்தி விட்டு வெளியே செல்ல அவன் கைகளை பற்றி நிறுத்தி , சாப்பிடவில்லை  …? ” என்றாள் .

” அந்தம்மா கை சாப்பாடு நான் சாப்பிடுவதில்லை .என்னை விடு ” கைகளை உதறிவிட்டு வெளியேறினான் அவன் .

” போகிறாயா ..? போடா …போ …இந்த சாப்பாடு நீ சாப்பிட மாட்டாயென்று  எனக்கு தெரியும் ்அதுதானே இந்த ஏற்பாடு பண ணினேன் .எங்கே போய் விடுவாய் ? திரும்ப இங்கேதானே வரனும் .வா …அப்போது கவனித்து கொள்கிறேன் ” வலை விரித்து வைத்து விட்டு காத்திருக்கும் வேடனாய் காத்திருந்தாள் .

திரும்பவும் இரவுதான் உள்ளே வந்தான் யோகன் .அவனுக்காக ஹால் சோபாவிலேயே சாய்ந்து அமர்ந்து கொண்டு காத்திருந்தாள் சமுத்ரா .அவளை கவனியாத்து போல் மாடியேற துவங்கினான் .இவன் இனி தோப்பு வீட்டிற்கு கிளம்புவான் .அங்கேயிருந்தபடியே அவனைக் கவனித்தபடியிருந்தாள் .வேகமாக கிளம்பி கீழே வந்தவன் சமுத்ரா புறம் திரும்பாமலேயே வெளியேற முயல தயங்கியபடி ஓர் ஒரமாக வந்து நின்றாள் புவனா .

” என்ன …? ” குரலில் கடுமை இருந்த்து .

” வந்து …பிள்ளத்தாய்ச்சி பொண்ணு .காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்ன ஆவது .? ” தயக்கமாக சொனபடி நின்றாள் .

” சாப்பிடவில்லையா …? ஏன் …? ” பதட்டத்துடன் சமுத்ராவிடம் வந்தான் .

” இது என்ன பிடிவாதம் …? ” மிகுந்த எரிச்சல் அவன் குரலில் .” எழுந்து போ …போய் சாப்பிடு …” அவளருகில் வந்து நின்றான் .

” என் அருமை கணவர் சாப்பிடாமல் இருக்கும் போது நானெப்படி சாப்பிட முடியும் ..? ” குரலை இனிமையாக்கி எழும் எண்ணமின்றி சாய்ந்தபடி பேசினாள் .

தாடை இறுக கண்களை மூடி நின்றான் யோகன் .” சமுத்ரா நீ எல்லை மீறுகிறாய் .உன்னிஷ்டம் போல் உண்ணாமல் இருப்பதற்கு நீ இப்போது ஒரு உயிரல்ல …” வேகத்துடன் சொல்லிக் கொண்டு போனவன் உதட்டைக் கடித்து பேச்சை நிறுத்தினான்.

” சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும் ் யோகன் …? குழந்தை இந்த குழந்தை கலைந்து விடுமா …? நல்லதுதான் ஆஸ்பத்திரி செலவு இல்லை பாருங்கள் ”  ஏற்ற இறக்கமாய் பேசினாள் .

” சாப்பாடு எடுத்து வையுங்கள் ” கத்தினான் யோகன் .

” எழுந்திரி …” என்றான் .சமுத்ரா அழுத்தமாக சோபாவில் சாய்ந்து கொண டாள் .” எங்கே …? ” என்றாள் .

” வா …சாப்பிடலாம் ..”

” ஐ …நீங்களுமா …? அப்போது சரி …” வேகமாக எழுந்தவளின் பாதம் பிரள தடுமாறினாள் .




அவளை பற்றி நிற்க வைத்த யோகன் ” இது உன் நேரமென்று ஆடுகிறாயா ? ” அவள் தோள்களை அழுத்தமாக பிடித்திருந்தன அவன் கைகள் .

” யெஸ் நவ் தி பால் இஸ் இன் மை கோர்ட் ” என்று அவனைப் போன்றே ரகசிய குரலில் கூறிவிட்டு அவன் கைகளை பற்றியபடி நடக்க முயன்றாள் .

அவளை வெறுப்புடன் தள்ளி நிறுத்திவிட்டு உணவு மேஜையை நோக்கி நடந்தான் யோகன் .எப்படி விரட்டி விரட்டி தழுவினாய் .இப்போது நானாக நெருங்கினாலும் தள்ளி விடுகிறாய் .இப்படியோரு வாய்ப்பைத்தானே எதிர் பார்த்திருந்தேன் முகம் முழுவதும் மலர்ந்த்து சமுத்ராவிற்கு .

உணவு மேஜையில் உண்ண முடியாத  அவன் தடுமாற்றத்தையும் , செய்வதறியாது விழிக்கும் அவன் கோலத்தையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி உண்டாள் சமுத்ரா .

கஷ்டப்பட்டு விழுங்கி முடித்தவன் , இவளை திரும்பியும் பாராமல் வாசலுக்கு நடக்கலானான் .அப்படியா என்னை பார்க்க கூட பிடிக்காமல் அவளிடம் ஓடத் தோன்றுகிறது உனக்கு ….இரு வருகிறேன் .

யோகன் புல்லட்டை எடுத்து திருப்பி நிறுத்திய போது , அவன் முன் வந்து நின்றாள் சமுத்ரா .” சென்னைக்கு …ஆஸ்பிடலுக்கு எப்போது போகலாம் யோகன் …? “

” போகலாம் …எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது ..” முணுமுணுத்தான் அவன் .

” அச்சச்சோ …உங்களுக்கு வேலை வந்துவிட்டதா …? அப்போது நான் வேண்டுமானால் அந்த பாட்டியிடம் போய்விட்டு வரட்டுமா …? குருர புன்னகையுடன் கேட்டாள் .

” எந்த பாட்டி …? ” மிகுந்த தடுமாற்றம் யோகன் குரலில் .

” ஐய்யோ …மறந்துட்டீங்களா …? அவுங்கதான்பா ..நம்ம இருளாயிக்கு கூட ஏதோ மருந்தை கரைச்சு கொடுத்து கலைச்சாங்களே ..நீங்க கூட அப்போது என்னை வலுக்கட்டாயப்படுத்தி அந்த பாட்டியை ஜாமீன்ல எடுக்க வைக்கலை ..??..அன்னைக்கு நாம் இரண்டு பேரும் போகும் போது இருளாயி ரத்தம் சொட்ட …சொட்ட …” மேலே பேச முடியவில்லை சமுத்ராவினால் .அவ்வளவு இறுக்கமாக அவளை அணைத்திருந்தான் யோகன் .

” போதும் …போதும் …பேசாதே …” வேதனையும் , தவிப்புமாய் வெளிவந்த்து அவன் குரல் .அவள் முகத்தை திருப்பி தன் மார்போடு இறுக்கி கொண்டான் .
” ராட்சசி ஏன்டி இப்படியெல்லாம் செய்கிறாய் ..? ” அரற்றினான் .எத்தனை முறை என்னை ் அசுரன் , ராட்ச்சன் , அரக்கன் என்று இவனை நினைக்க வைத்திருக்கறான். இன்று எனது முறை .இப்படி எண்ணிக்கொண்டு மேலே அவனை குத்தி கிழிக்க எண்ணியவளின் இதழ்களின் மேல் தன் விரல்களை வைத்து தடுத்தான் .

” முத்ரா ..ப்ளீஸ் …தப்புதான் …நான் நிறைய தப்பு செய்திருக்கிறேன்தான் .அதற்காக எனக்கு தண்டனை கொடு .ஆனால் கண்ட வழிகளையும் யோசித்து உன் உடம்பை பாழாக்கி கொள்ளாதே .தயவுசெய்து மேலே போய் படுத்து தூங்கு .நாளை …நாம் பேசிக் கொள்ளலாம் ” அவளை வீட்டின்புறம் திருப்பி விட்டான் .

யோகனின் தவிப்பையும் , வேதனையையும் அசை போட்டபடி உள்ளே வந்த சமுத்ராவை எதிர்கொண்டாள் புவனா .

” எதற்கு என் மகனை இப்படி வேதனைப்படுத்துகிறாய் …? ” கோபம் அவள் குரலில் .

அட , பார்றா …இந்தம்மாவுக்கு மகனாம்  அவர் ..இவர்களை ஒரு துரும்பாக கூட மதிப்பதில்லை அவன் .இந்தம்மா என்னவென்றால் அவனுக்கு சப்போர்ட்டுக்கு வருகிறார்கள் .

” அப்படி என்ன உங்களை பாராட்டி  சீராட்டிவிட்டார் அவர் .ஒரு வாய் சாப்பாட்டை அள்ளி சாப்பிட்டதற்கு இந்த பாடா …? ” வெறுப்பு  சமுத்ராவின் குரலில் .

” அது ..எங்கள் அம்மா மகனுக்குள் நடக்கும் விசயம் .அதைப்பற்றி நீ கவலைப்பட தேவையில்லை .அதற்காக என் கண் முன்னாலேயே என் மகனை பேசுவதை கேட்டுக் கொண்டு  இருக்க என்னால் முடியாது “

” ஆஹா ..பெண்கள் குல திலகமே ….!!!என்ன பட டம் கொடுக்கலாம் உங்களுக்கு …? கீழே இழுத்து போட்டு மிதிப்பவர்களின் காலை வருடி விடுவேனென்கிறீர்களே ….? உங்பளைப் போன ற ஒரு மாதர் குல மாணிக்கத்தினை நான் பார்த்ததில்லை “

” ஆமாம்டி நான் அப்படித்தான் .எனக்கு திட்டினாலும் , அடித்தாலும் என் கணவரும் , பிள்ளைகளும் முக்கியம்தான் .ஆனால் உனக்கு அப்படியில்லையென று எனக்கு தெரியும் . அதனால்தான் உன்னை அன்றே வீட்டை விட்டு வெளியே போய்விடு என்றேன் .ஆனால் நீ கேட்கவில்லை “

” நீங்கள் போ என்றதும் போய்விட நான் தலையாட்டி பொம்மையா …? “

” ஏன்டி நீ யாருக்கும் அடங்கவே மாட்டாயா …? அதுசரி இந்த ஊரையே அடங்க வைக்கிறவன் என் பிள்ளை .அவனுக்கே நீ அடங்கலை .நானெல்லாம் உனக்கு எந்த மூலைக்கு …? “

” ஆமாம் அடங்க மாட்டேன் .அது என் பழக்கமில்லை .என் பழக்கத்திற்கு விரோதமாக உங்கள் மகன் என னை அடக்க பார்த்தார் .முடியவில்லை .என்னை அடக்க நினைத்ததற்கு அவரை நான் பழி வாங்காமல் விட மாட்டேன் ” உறுதியாக கூறி கைகளை வீசினாள் சமுத்ரா .

” வேண்டாம்மா சமுத்ரா ….” அவள் கைகளை பற்றினாள் புவனா. “ஒரு பெண்ணிற்கு இவ்வளவு ஆங்காரம் கூடாது .எப்போதும் எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண் தன் குழந்தையை கலைக்க எண்ணவே மாட்டாள் .பழி வாங்குவதாக எண்ணிக்கொண்டு உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதே ..”




” ஓஹோ …அப்போது இந்த ஆண்கள் செய்யும் அடாவடியையெல்லாம் பொறுத்துக் கொண்டு தலையாட்டி க் கொண்டு போக வேண்டுமென்கிறீர்களா …? “

” வேண்டாம் அவர்களை திருத்த முயற்சிக்கலாமே ..இப்படி உன்னைப் போல பதிலுக்கு அடாவடியை காட்டி அல்ல .அன்பினால் …அன்பிற்கு அடங்காத உயிர் இந்த உலகில் கிடையாது “

” அப்படியா …அப்படி அன்பை கொட்டி …கொட்டி …இந்த வீட்டில் நீங்கள் என்ன சாதித்தீர்கள் ..? யார் யாரை திருத்தினீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம் …?”

இந்த கேள்வியில் தளர்ந்து அமர்ந்தாள் புவனா . ” நீ சொல்வது சரிதான் சமுத்ரா .அருவியாய் அன்பை கொட்டினாலும் இந்த வீட்டில் என்னால் யாரையும் திருத்த முடியவில்லை .அன்று நீ இந்த வீட்டினுள் நுழைந்த போது அப்போதுதான்  மலர்ந்த தாமரையை நினைவூட்டினாய் .ஏதோ முன்பே உன்னை பலமுறை பார்த்து பழகிய எண்ணம் எனக்குள் .யோகனின் பார்வை உன் மேல் விழுந்த்தை உணர்ந்தேன் . ஊழிக்காற்றாய் உறவுகள் ஆடும் காடு இந்த வீடு .இங்கே பூங்கொடி போன்ற நீ சிக்கிக் கொள்ள கூடாது என்று எண்ணினேன் .அதனால்தான் உன்னை மிரட்டி இங்கிருந்து வெளியேற்ற எண்ணினேன் .ஆனால் விதி …உன்னை இங்கேயே அழுத்தி விட்டது ..” 

பதில் பேச தோன்றாது மெல்ல அவளருகில் அமர்ந்தாள் சமுத்ரா .புவனாவின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டாள் .” மூன்று குழந்தைகள் …மூன்று கருக்களை என் வயிற்றினுள் நானே சாகடித்திருக்கிறேன் சமுத்ரா …” எல்லையில்லா வேதனையை கண்கள் காட்ட , தனது வாழ்வை சமுத்ராவிடம் திறந்து காட்ட துவங்கினாள் புவனா .

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!