kadak katru Serial Stories

Kadal Kaatru – 29

                                               ( 29 )

” இல்லை இந்த சுடிதாரெல்லாம் ஒரு மணிநேரத்திலேயே நீங்க நிச்சயமா ஆல்டர் பண்ணி தரனும் ….” சுடிதார் பெட்டிகளை அடுக்கி அந்த ஜவுளிக்கடை டெய்லரிடம் தள்ளினாள் சமுத்ரா .

” நிறைய இருக்கு மேடம் .ஒரு நாள் டைம் கொடுத்தா …” என இழுத்த டெய்லரிடம் தீவிரமாக மறுத்தாள் .

” என் நாத்தனாரை காலேஜ் ஹாஸ்டலில் விட போகிறேன் சார் .அதனால் கண டிப்பாக ஒரு மணி நேரத்தில் வேண்டும் ” அழுத்திக் கூறிவிட்ட ” வா மேகலை ,உனக்கு இன்னர்ஸ் பார்க்கலாம் ” என்றாள் .

அவளை முறைத்தாள் மேகலை .” கடைசில நீ நினைச்சதை சாதிச்சிட்டீல்ல .என்னை என் அண்ணனை விட்டு பிரிச்சிட்டில்ல ” குரல் தழுதழுத்தது .

” படிக்கனும்னா சொந்த்த்தையெல்லாம் விட்டுட்டு ஹாஸ்டலில் இருந்துதாம்மா  ஆகனும் …”

” நான் படிக்கனும்னு கேட்டேனா ..?நான் பாட்டுக்கு சமைச்சு வச்சுட்டு டிவி பார்த்துட்டு வீட்டில் இருந்தேன் .படிக்க விரும்பாதவளை கொண்டு வந்து படிக்க தள்ளினால் அவள் எப்படி படிப்பா ..?”

” எந்த குழந்தைம்மா பள்ளிக்கூடம்னு சொல்லவும் குதிச்சிட்டு ஓடி வருது ..?”

” நான் குழந்தையா …?என்னைப் பார்த்தா  குழந்தையாவா தெரியுது ..?” எகிறினாள் .

நின்று திரும்பி அவளை உறுத்தாள் சமுத்ரா .” இல்லை நீ குழந்தையில்லை .அது எனக்கு தெரியும் ” ஏதோ சேதி சொல்லின அவள் விழிகள் .

” என்ன ….? என்ன தெரியும் உனக்கு …?” குழம்பினாள் மேகலை .

” தெரியும் .நிறைய தெரியும் …” மேகலையின் விழிகளுக்குள் உறுத்தபடி கூறிவிட்டு ” சொல்லும்மா உன் சைஸ் என்ன ..? ” என்றாள் .

ஏனோ ஒரு கலவரம் உருண்டது மேகலையினுள் .இதனால் எழுந்த குழப்பத்தில் கல்லூரியில் இன்டர்வியூவில் வேண்டுமென்றே சொதப்ப வேண்டும் என்ற அவளது எண்ணம் சற்று தயங்கியது .

அவளும் நான்கு நாட்களாக வீட்டில் உள்ள அனைவரிடமும் முயற்சித்து விட்டாள் .யாருமே படிக்காமலிருக்க அவளோடு ஒத்து வரவில்லை .எப்போதுமே யோகன் மட்டுந்தான் அந்த வீட்டில் அவள் பக்கம் பேசுவான் .ஆனால் இந்த சமுத்ரா என்ன சொக்குபொடி போட்டாளோ ..? அவள் பக்கம் லேசாக காதை திருப்ப கூட மறுத்து விட்டான் .

படி …அதுதான் உனக்கு நல்லது …ஒரே வார்த்தைதான் .மேகலைக்கு அவனைத் தெரியும் .இந்த அழுத்தத்தில் அவன் பேசி விட்டானானால் அதன் பின் மாற மாட்டான் .மயில்வாகனத்திற்கு மகன் என்ன செய்தாலும் சரி .புவனாவிற்கு மேகலை வீட்டை விட்டு ஒழிந்தால் சரி .

மேகலை இல்லாவிட்டால் வீட்டுவேலை முழுவதும் தன் தலையில்தான் என உணர்ந்து செல்வமணி சற்று தயங்கினாலும் , மேகலையின் இந்த மறுப்பு அவளுக்கு ஆனந்தமாக இருந்த்து .அழுகை சுவாரசியமாக இருந்த்து .மேலும் இப்போதெல்லாம் யோகேஷ்வரனை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை .

யோகன் பெண்கள் விசயத்தில் சற்று பலவீனமானவன் என்று தெரியும் .கண் முன் சாட்சி சாவித்திரி இருக்கிறாள் .அடிக்கடி நடக்கும் அவன் சென்னை தங்கல்கள் இருக்கிறது .ஆனால் அந்த பலவீனங்களுக்கு அவன் ஒரு ் வரையறை வைத்திருந்தான் .சென்னை செல்ல ஒரு கணக்கு வைத்திருந்தான் .தோப்பு வீடு செல்லவும்தான் .இரவு மட்டுந்தான் .அதுவும் விடிந்து வெளிச்சம் வரும் முன்பே டாண் என ஓடி வந்துவிடுவான் .இடையில் …பகலில் என மனம் போனபடி அங்கே போவது கிடையாது

தனது தகாத பழக்கங்களுக்கும் ஒரு விதி வகுத து இம்மி பிசகாமல் அதிலேயே நடந்து வந்தான் .செல்வமணி முன்பு நினைத்ததுண்டு .பெண்் பலவீனத்தை வைத து தன் தம்பியை யாராலும் மடக்க முடியாதென்று .ஆனால் இப்போதோ சமுத்ரா விசயத்தில் செல்வமணி குழம்பி போயிருந்தாள் .எந்த பெண்ணையும் இதற்கு முன்பு வரை யோகன் இந்த அளவு தாங்கியதில்லை .சமுத்ரா மீதான யோகனின் ஆர்வப் பார்வைகளை செல்வமணி உணர்ந்தே இருந்தாள் .முதலில் ஒரு அழகான பெண்ணிற்கான பார்வையென்றே அதனை நம்பினாள் .ஆனால் அப்படியில்லையோ …? வேறு ஏதோ விசயம் இருக்கிறதோ ..? என அவள் எண்ணத் தொடங்கிய போதோ சமுத்ராவை திருமணம் முடித்துக் காண டு வந து நின்றான் யோகன் .




அப்படி எளிதாக தன் முழு வாழ்வையும் ஒரு பெண்ணின் கைகளில் ஒப்படைக்கும் சாதாரண ஆணாக தன் தம்பியை எண்ணியிருக்கவில்லை அவள் .ஆனால் நான் அப்படித்தான் என செய்கை காட்டிக் கொண்டிருந்தான் யோகன் .சமுத்ராவின் விருப்பங்களை எழுத்துக்கு எழுத்து நிறைவேற்றுக் கொண்டிருந்தான் .யாருக்கும் விருப்பமில்லையென தெரிந்த பின்னும் வலுக்கட்டாயமாக வீட்டில் தங்க வைத்த மேகலையை சமுத்ரா சொன்ன ஒரு வார்த்தைக்காக ஹாஸ்டலில் சேர்த்து விட்டானே .

கணவனுடன் சண்டையிட்டு தம்பி தயவில் வாழ்ந்து வரும் தனக்கும் அதே கதியென்றால் … அதனால் சமுத்ராவை பகைத்துக் கொள்ள விரும்பாத அவளும் அவளும் சேர்ந்தே மேகலையை ஹாஸ்டலுக்கு அனுப்ப தயாரானாள் .

இப்படி வீட்டு உறுப்பினர்கள் அனைவருடன் மோதி தோற்றுதான் இங்கே வந்து நிற்கிறாள் மேகலை .காலேஜ்  வகுப்புகள் துவங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. மேலும் மேகலை ப்ளஸ் டூ முடித்து இரண டு ஆண்டுகள் இடைவெளி விழுந்து விட்டது .இந்த காரணங்களால் தன்னை காலேஜில் சேர்க்க மாட்டார்களென மேகலை நம்பினாள் .

ஆனால் சமுத்ரா அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டே வந்திருந்தாள் .அந்த கல்லூரி பிரின்ஸிபால் மேடம் சமுத்ராவிற்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள் .அவர்களது கேள்விக்கு மேகலை அரைகுறையாக பதிலளிக்க கொஞ்சம் வெளியே இருக்குமாறு அவளை அனுப்பினார் .கொஞ்ச நேரம் வெளியே நின்ற மேகலை மெல்ல கதவை இம்மியளவு திறந்து அவர்கள் பேசுவதை கேட்டாள் .

” மேடம் இவள் இன்னும் மூன்று வருடங்களுக்கு எங்கள் ஊர் பக்கம் எட்டியே பார்க்க கூடாது .அது உங்கள் கையில்தான் இருக்கிறது ” எனக் கூறிக் கொண்டிருந்தாள் .

பாவி …எப்படியெல்லாம் என்னை பழி வாங்குகறாள் .முணுமுணுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த மேகலையின் பின்புறம் ” மேகலை என்ன செய்து கொண்டிருக்கிறாய் …?” என்ற கண்டிப்பான குரல் கேட்டது .

யோகன்தான் .அவளுடைய சர்ட்டிபிகேட்களை ஜெராக்ஸ் எடுத்து வரப் போயிருந்தான் .மேகலையின் தவறான செய்கையை கண டு கடிந்தபடி பின் நின்றான் .
” அண்ணா …” அழுகை வந்த்து .மேகலைக்கு .” உங்க பொண்டாட்டிக்கு நான் என்ன துரோகம் பண ணினேன் …?என்னை மூணு வருசம் நம்ம ஊர் பக்கமே விடக் கூடாதுன்னு அந்த பிரின்சிபால் கிட்ட கேட்டுட்டு இருக்காங்க ” கண்ணீர் வழியத் துவங்கியது அவளுக்கு .

யோசனையில் சுருங்கியது யோகனின் புருவங்கள் .” அப்படியா …?வா …போய் கேட்கலாம் ..” என்றவன் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான் .

திரும்பி இவர்களை பார்த்த சமுத்ரா ” மேகலை உனக்கு சீட் கிடைச்சாச்சு …” என்றாள் சந்தோசமாக .

மலர்ந்திருந த அவள் முகத்தில் பார்வையை பதித்தபடி ” வணக்கம் மேடம் ..” என்றான் யோகன் .

” வணக்கம் உட்காருங்க .உங்க தங்கைக்கு நம்ம காலேஜ் ல சீட் கொடுத்திட்டேன் .திறமையான பொண்ணு அவா …நல்லா வருவாள் .்” என றார்  மேடம் .
” ஓ….ஆனால் வீட்டுக்கு எப்போதெல்லாம் அனுப்புவீர்கள் மேடம் ?” யோகன் .

” அது …பொது விடுமுறை தினங்கள்தான் .ஆனால் இவள் லேட் அப்பாயின்மென்ட் என்பதால் ஒரு வருடத்திற்காவது ஹாஸ்டலிலேயே தங்கியிருப்பது நல்லது ” என்றார் .

பார்த்தாயா …?என ற மேகலையின் பார்வையை ஆமோதித்தபடி சமுத்ராவிடம் திரும்பினான் .

அவன் முகத தை கூர்ந து பார்த்துக் கொண்டிருந்தவள் அலட்சியமாக திரும்பிக் கொண்டாள் .தொடர்ந்து பிரின்ஸி சொன்ன  காலேஜ் , ஹாஸ்டல் விபரங்களை கேட்டபடியிருந்தாலும் யோகனின் பார்வை அடிக்கடி யோசனையிடன் சமுத்ராவை வருடியபடியிருந்த்து .

” சரி ரூமுக்கு போம்மா .நாளையிலிருந்து வகுப்புகளை அட்டென் பண ண ஆரம்பி ” என்ற பிரின்சியை வேண்டா வெறுப்பாக பார்த்த மேகலை நகர , ” உன்னோட பைலையும் எடுத்திட்டு போம்மா .அருமையான பைல் .பத்திரமாக வைத்துக்கொள் .உன் எதிர்காலம் இதில்தான் இருக்கிறது ” என அந த பைலை நீட்டினார் பிரின்ஸி.

அந த பைலை சமுத்ராதான் தன்னுடன் எடுத்து வந்து பிரின்ஸியிடம் கொடுத்திருந்தாள் .என்னுடையதா ்…? அது என்ன …? வாங்கி பிரித்து பார்த்த மேகலை திகைத்து போனாள் .அவளுடையதுதான் .அவள் பொழுது போகாமல் வீட்டில் செய்து வைத்தருந்த பெயின்ட்டிங்குகளும் , தையல்களும் , கைவினை பொருட்களும் மிக அழகாக படம்பிடிக்கப்பட்ட அந த பைலை ் நிறைத்திருநதன.

அழகாக அவை படம்பிடிக்கப்பட்டிருந்த விதமும் , நேர்த்தியாக அவை அங்கே அடுக்கி வைக்கப் பட்டிந்த விதமும் இவற்றையொல்லாம் உருவாக்கினது தான்தானா …?என்ற சந்தேகத்தை மேகலைக்கு உண்டாக்கியது .இந்த பைலை பார்த்துத்தானா தனக்கு இங்கே இடம் கிடைத்திருக்கிறது …? தான் அவ்வளவு திறமையானவளா …?சுய அலசலில் இறங்கத் தொடங்கினாள் மேகலை .

” இதோ உன்னோட டிரஸ்ஸெல்லாம் இங்கே அடுக்கிட்டேன் .புக்ஸ் நாளைக்கு தந்திடுவாங்க .இதுவரை நடந்த பாடத்துக்கு உனக்கு நோட்ஸ் க்கு ஏற்பாடு பண்றேன் …” தனக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தவளை பார்த்தாள் மேகலை .




” இதெல்லாம் எப்போ ஏற்பாடு பண்ணுனீங்க …?” பைலை காட்டினாள் .

” அப்பப்ப…நீ வரைஞ்சது தச்சது எல்லாத்தையும் போட்டோ எடுத்து வச்சிருந்தேன் .உன்னை காலேஜ்ல சேர்க்கனும்னு தோணினப்ப அதை பைலா மாத்தினேன் …” புன்னகைத்தாள் சமுத்ரா .

” ஆனால் நிறைய பாடம் நடந்திருச்சே …” தயங்கி பயந்தாள் மேகலை .

” சாரிக்கா லேட்டாயிடுச்சு .இன்னைக்கு ஸ்பெசல் கிளாஸ் வச்சாங்களா ..அதுதான் லேட் …” பரபரப்புடன் உள்ளே நுழைந்தாள் ஒரு பெண் .

” மேகலை இது சுந்தரி .என் ப்ரெண்டோட தங்கை .இங்கதான் படிக்கிறா. இவள் சொல்லித்தான் இந்த காலேஜை உனக்காக தேர்ந்தெடுத்தேன் .படிப்பு விசயத்தில் உனக்கு வேண்டிய உதவிகளை இவள் செய்வாள் .சுந்தரி இது மேகலை …” அறிமுகம் செய்து வைத்தாள் மேகலை .

மேகலையுடன் கை குலுக்கிய சுந்தரி ” கவலைப்படாதப்பா …சீக்கிரம் படிச்சிடலாம் .நான் நோட்ஸ் தர்றேன் .படிக்க ஹெல்ப் பண்றேன் ்நம்ம ஸ்டாப்ஸ் எல்லோருமே நல்லா ஹெல்ப் பண்ணுவாங்க. ” தைரியமூட்டினாள் .

அரைகுறையாக தலையசைத்தாள் மேகலை .

” நீங்க கிளம்புங்க்க்கா நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்றாள் சுந்தரி .

சரியென்று சமுத்ரா கிளம்ப  திடீரென தனித்து விடப்பட்ட உணர்வில் திடுக்கிட்ட மேகலை அநிச்சையாக அவள் கைகளை பற்றினாள் .குனிந்து அவள் கைகளை பார்த்த சமுத்ரா ” என்ன மரியாதை தூள் பறக்கிறது …?சற்று முன் மேகலை காட்டிய மரியாதையை நக்கலாக குறிப்பிட்டு புருவம் உயர்த்தினாள் .

இப்போது வீம்பு  தலைதூக்க சமுத்ராவின் கைகளை தள்ளிய மேகலை ” நான் அண்ணனை பார்க்க போகிறேன் ” என்று நடக்க தொடங்கினாள் .

” என்ன ..?எனக்கு இந்த படிப்பெல்லாம் படிக்க முடியாது .என்னை இங்கிருந்து கூப்பிட்டு போய் விடுங்கள் என்று உன் அண்ணனிடம் கண்ணை கசக்க போகிறாயோ …? “

அதெல்லாம் இல்லை .எனக்கு புத்தி உண்டு .நான் இருந்து படிக்க போகிறேன் .நீ போகலாம் ” என்றாள் தலை நிமிர்த்தி .

” சரிதான் அதை வெளியே காத்திருக்கும் உன் அண்ணனிடம் வந்து சொல்லி விடு .பாவம் அந்த மனுசனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் “

தப் ..தப்பெனும் காலடி ஓசையுடன் முன்னே நடந்த மேகலையை சிறு சிரிப்புடன் பின்பற்றினாள் சமுத்ரா .

பெண்கள் விடுதியென்பதால் வெளியே காத்திருந்த யோகனிடம் தான் இருந்து படிக்க போவதாக கூறி விடை பெற்றுக் கொண்டாள் மேகலை .அவள் தலையை மென்மையாக வருடி யோகன் விடை கொடுப்பதை பார்த்தபடி மேகலையிடம் ஒரு பெட்டியை நீட்டினாள் சமுத்ரா .

அண்ணனும் , தங்கையும் கேள்வியாய் பார்க்க ” திறந்து பார் ” என்றாள் .

அது ஒரு செல்போன் .விழிகளை அகல விரித்தாள் மேகலை .” எனக்கா …? ” பார்வையால் கேட்டாள் .

” உன் படிப்பிற்கு தேவைப்படும் .அதுதான் வாங்கினேன் .அத்தோடு உன் அருமை அண்ணனுடன் பாசமலரை இதிலேயே நீர் ஊற்றி வளர்த்துக் கொள் ” நக்கலாக மொழிந்து விட்டு காரினுள் சென்று அமர்ந்து கொண்டாள் .

ஆஹா என்ன கரிசனம் ….அக்கறை தங்கை மீது .உன் தங்கையாய் வரித்திருக்கும் பெண்ணென்றால் இவ்வளவு கரிசனம் .அடுத்தவன் தங்கையென்றால் நீ அலட்சியமாய் ஆக்ரமிப்பாய் ….????நகம் கடித்தபடி யோகனின் தலை வருடலை  மனதிற்குள் பொருமினாள் சமுத்ரா .

முன்தின விடியல் பொழுதில் மீண்டும் தன்னை ஆக்ரமித்த யோகனின் நினைவு ராட்ச்ச அலையாய் நெஞ்சை ஆக்ரமித்தது .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!