lifestyles News

பலாப்பழத்தில் லட்சக்கணக்கில் வருமானம் பார்க்கும் 78 வயது கேரள விவசாயி தாமஸ்..!

கேரளாவை சேர்ந்த 78 வயதான பலாப்பழ விவசாயி தாமஸ் கட்டகாயம். கோட்டயத்தின் சக்கம்புழா கிராமத்தில் உள்ள அவரது பலாப்பழம் பாரடைஸ் பண்ணை விவசாய புதுமை மற்றும் லாபத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. இவர் பலா சாகுபடி மூலம் ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வருமானம் ஈட்டுகிறார். மேலும் அனைத்து செலவுகளுக்கும் பிறகும் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பாதிக்கிறார்.




பலாப்பழம் சாகுபடி செய்வதற்கான தாமஜின் பயணம் தீவிர பலாப்பழ ஆர்வலரான அவரது தந்தையிடம் இருந்து வந்தது. தாமஸின் தந்தை மிகச் சிறந்த பலாப்பழங்களிலிருந்து விதைகளை கவனமாக நடவு செய்யும் பழக்கத்தை தாமஸூக்கு கற்றுக் கொடுத்தார்.

ஆரம்பத்தில் தனது 5 ஏக்கரில் ஒரு பகுதியில் மட்டுமே பலாப்பழம் சாகுபடி செய்து வந்தார். ரப்பர் விவசாயத்தையும் அவர் மேற்கொண்டு வந்தார். இந்த சூழ்நிலையில், 2015ல் ரப்பர் வணிகத்தில் பெரும் சரிவை தாமஸ் சந்தித்தார். இதனையடுத்து தனது விவசாய நிலம் முழுவதையும் பலாப்பழம் சாகுபடிக்கு மாற்றினார்.

இயற்கை விவசாய முறையை பின்பற்றும் தாமஸ், விவசாய நிலத்தில் புல் மற்றும் மாட்டு சாணத்தை மட்டுமே இயற்கை உரங்களாக பயன்படுத்துகிறார். இன்று பலாப்பழம் பாரடைஸ் பண்ணையில், அவரது தந்தை நட்டு வளர்த்த மரங்களின் மரவு மற்றும் அவர் நட்டு வளர்த்த மரங்கள் செழித்து வளர்கிறது. பெரிய பலாப்பழ பண்ணையை வைத்திருக்கிறார் ஆனால் அவருக்கு பிரதான வருமானம் பலாப்பழம் விற்பனையில் கிடைக்காது. மாறாக மாறாக உலர்ந்த பழங்கள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை வாயிலாக கிடைக்கிறது.




காய்ந்த பழுத்த பலாப்பழம் கிலோ ரூ.2,000க்கும், காய்ந்த பலாப்பழம் கிலோ ரூ.1,000க்கும், உலர்ந்த வாழைப்பழம் கிலோ ரூ.750க்கும் விற்பனை செய்கிறார். இவர் தனது பண்ணையில் உலகின் மிகப்பெரிய பலாப்பழ மரபணு வங்கியை உருவாக்கிறார். மொட்டு ஒட்டுதல் முறையை பயன்படுத்தி இந்த மரபணு வங்கியை நிறுவி வருகிறார்.

இவர் தற்சமயம் 400 ரகங்களை நிர்வகித்து வருகிறார். ஆரம்பத்தில் தனது 5 ஏக்கர் நிலத்தில் 114 வகைகளை பயிரிட்டார். இவரது சேகரிப்பில் வியட்நாம், கம்போடியன், சிந்துரா, சித்து, தேன்வரிகா, சூப்பர் மற்றும் ஆல் சீசன் போன்ற தனித்துவமான பலாப்பழ வகைகள் உள்ளன. தாமஸ் பேட்டி ஒன்றில், பலாப்பழம் பாரடைஸ் பண்ணையானது வாய்மொழி வாயிலாக நாடு தழுவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

மரக்கன்றுகள் மற்றும் உலர்நத பழங்களை தேடும் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. பண்ணை சுற்றுலாவை விரிவுப்படுத்தவும், பழங்களின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து பார்வையாளர்களுக்கு கற்பிக்க வழிகாட்டப்பட்ட பாதையை உருவாக்கவும் விரும்புகிறேன் என தெரிவித்தார்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!