lifestyles

கிரெடிட் கார்டு கடன்ல நொந்து போயிட்டீங்களா.. இதை ஃபாலோ பண்ணுங்க, வாழ்க்கை கண்டிப்பா மாறிடும்..!!

கிரெடிட் கார்டு கடன் அளவை கவனிக்காமல் விட்டுவிட்டால், உங்களுடைய மொத்த சம்பளத்தையும் கிரெடிட் கார்டு ஏப்பம் விட்டுவிடும். அதிக வட்டி விகிதங்கள் உங்களை பல ஆண்டுகள் கடன் சுழலில் சிக்க வைக்கும்.




ஆனால் கவனமான திட்டமிடல் மற்றும் உங்கள் நிதிகளை நீங்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் கிரெடிட் கார்டு நிலுவையை விரைவில் சரி செய்யலாம். கிரெடிட் கார்டு கடனில் இருந்து விடுபட உதவும் சில பயனுள்ள உத்திகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

உங்கள் கடனை மதிப்பிடுங்கள்: உங்கள் அனைத்து கிரெடிட் கார்டு அறிக்கைகளையும் சேகரித்து, நீங்கள் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையைக் கணக்கிடுவதன் மூலம் கடன் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கலாம்.

பட்ஜெட்டை உருவாக்கவும்: உங்கள் கிரெடிட் கார்டு கடனை அடைக்க நீங்கள் எவ்வளவு ஒதுக்கலாம் என்பதை தீர்மானிக்க உங்கள் மாத வருமானம் மற்றும் செலவுகளை மதிப்பீடு செய்யவும்.கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் பணத்தை ஒதுக்கவும்.

அதிக வட்டிக் கடனுக்கு முன்னுரிமை கொடுங்கள்: உங்களிடம் பல கிரெடிட் கார்டுகள் இருந்தால், முதலில் அதிக வட்டி விகிதத்தில் பெற்றக் கடனை செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள். அதிக வட்டிக் கடனைத் தீவிரமாகச் சமாளிப்பதன் மூலம், நீண்ட காலத்திற்கு வட்டிக் கட்டணத்தில் நீங்கள் செலவு செய்யும் பணத்தைச் சேமிக்கலாம்.




EMI-ஆக மாற்றலாம்: நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை மாற்ற சொல்லி உங்கள் வங்கிகளிலோ அல்லது கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களிலோ கேட்கலாம். ஏனென்றால், EMI கடனுக்கான வட்டி விகிதம் வெறும் 10.5 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை தான். ஆனால் கிரெடிட் கார்ட் கடன்களுக்கு நீங்கள் வருட வட்டியாக 36 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை செலுத்த வேண்டும்.

பர்சனல் லோன் பெறலாம்: நீங்கள் உங்கள் கிரெடிட் கார்ட் கடனை அடைக்க, அதற்கு ஈடான தொகையை கடன் வழங்கும் வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ பெறலாம். இதனால் நீங்கள் உங்கள் கிரெடிட் கார்ட் கடனை முழுவதுமாக க்ளோஸ் செய்துவிடலாம். பர்சனல் லோனுக்கான 10.50 சதவீதம் மேலும் இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடலாம். ஆனால் கிரெடிட் கார்டுக்கு ஒரு வருடத்திற்கு, நீங்கள் 36 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும்.

லோன் பெறலாம்: உங்கள் கிரெடிட் கார்டு கடனை முழுவதுமாக அடைப்பதற்கும் கார்டை கிளோஸ் செய்வதற்கும், உங்கள் நிலையான வைப்புத்தொகை (FDகள்), பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் தங்கத்திற்கு நீங்கள் கடன் வாங்கலாம். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் 13.50% ஆகும், இது கிரெடிட் கார்டுகளின் அதிக வருடாந்திர வட்டி விகிதங்களை விட மிகக் குறைவானதாகும்.

குறைந்தபட்ச தொகையை விட அதிகமாக பணம் செலுத்துங்கள்: உங்கள் கிரெடிட் கார்டு இருப்பில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவதைத் தவிர்க்கவும். கடனைத் திருப்பிச் செலுத்துவதை விரைவுபடுத்தவும், வட்டிச் செலவுகளைக் குறைக்கவும் ஒவ்வொரு மாதமும் உங்களால் இயன்ற தொகையைச் செலுத்துவதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.

இந்த உத்திகளைச் செயல்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு கடனை சீக்கிரம் கட்டி முடிக்கலாம். மேலும், கடன் இல்லாத எதிர்காலத்தை நோக்கிச் செயல்படத் தொடங்க உங்களுக்கு இந்த வழிகள் உதவியாக இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!