Entertainment News

பக்கவிளைவுகளை ஒப்பு கொண்ட AstraZeneca…கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..?

பெருந்தொற்றான கொரோனா மிக தீவிரமான நிலையில் இருந்த போது பிரிட்டன் நாட்டை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி இணைந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தன.

இந்த மருந்தை நம் நாட்டில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து கோவிஷீல்ட் என்ற பெயரில் தடுப்பூசி கோடிக்கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த சூழலில் கோவிஷீல்ட்டால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மிக அரிய சந்தர்ப்பத்தில் பக்க விளைவுகளை தங்கள் தடுப்பூசி ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனகா ஒப்பு கொண்டுள்ளது உலகளவில் குறிப்பாக இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனகா தங்களது கோவிட் தடுப்பூசி த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் எனப்படும் TTS என்ற அரிய பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று ஒப்பு கொண்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 13, 2021 அன்று SARS-CoV-2-க்கு எதிரான தடுப்பூசி பிரச்சாரம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. Covaxin மற்றும் Covishield எனப்படும் 2 வகையான தடுப்பூசிகள் அதிகம் செலுத்தப்பட்டன. இதில் நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் Covishield தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையின் நியூரோ இன்டர்வென்ஷன் மற்றும் ஸ்ட்ரோக் பிரிவின் இணை தலைவர் டாக்டர் விபுல் குப்தா பேசுகையில், ஒரு நிபுணராக தடுப்பூசி விளைவுகள் குறித்த தகவலை வழங்க வேண்டியது அவசியம்.




கோவிஷீல்ட் தடுப்பூசியால் ஏற்படும் என குறிப்பிடப்படும் TTS பக்கவிளைவானது முக்கியமாக லோ பிளேட்லெட் எண்ணிக்கை, ரத்த உறைவு மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்த கூடும். அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசியைப் பெற்ற பிறகு இளம் வயதினரை பாதிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் ஏற்படும் மிக குறைந்த ஒட்டுமொத்த நிகழ்வாக TTS பக்கவிளைவு இருந்தாலும் கூட, அதன் சாத்தியமான தீவிரத்தன்மையை கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது என்றார்.

Marengo Asia Hospital-ஐ சேர்ந்த மருத்துவர் யோகேந்திர சிங் ராஜ்புத் பேசுகையில், AstraZeneca/Oxford கோவிட்-19 தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளவர்களில், குறிப்பாக 60 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தால்,TTS சிக்கல் மற்றும் ரத்த உறைவுக்கான அறிகுறிகள் குறித்து எச்சரிக்கை மற்றும் கவனமாகவும் இருக்க அறிவுறுத்தி உள்ளார். இந்தியாவில் அதிகம் பிரச்சாரம் செய்யப்பட்டு அதிக மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி என்பதால் Covishield போட்டு கொண்ட இந்தியர்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். ஒப்பீட்டளவில் TTS அரிதானது என்றாலும், இந்த தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் தங்களுக்கு ஏதேனும் விசித்திரமான அறிகுறிகளை உணர்ந்தால் நிபுணரிடம் செல்வது அவசியம் என்றார்.

TTS என்பது சில கோவிட்-19 தடுப்பூசிகளுடன் தொடர்புடைய ஒரு அரிதான ஆனால் தீவிரமான நிலையாகும், குறிப்பாக ஜான்சன் & ஜான்சனின் ஜான்சன் தடுப்பூசி மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி போன்ற அடினோவைரஸ் வெக்டர் தடுப்பூசிகளுடன் தொடர்புடையது. இது குறைந்த அளவிலான பிளேட்லெட்டுகளுடன் இணைந்து பிளட் க்ளாட்களை உருவாக்குவதை உள்ளடக்கியது, இது பொதுவாக தடுப்பூசி போட்ட 2 வாரங்களுக்குள் நிகழ்கிறது.




கோவாக்சின் பாதுகாப்பானதா.?

கோவாக்சின் என்பது இந்தியாவின் முதல் உள்நாட்டு கோவிட் தடுப்பூசியாகும், மேலும் இது பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. “AstraZeneca/Oxford கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்கள்,குறிப்பாக 60 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் இளைய நபர்கள் ரத்த உறைவால் (TTS) பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆனால் டிடிஎஸ் மிகவும் அரிதானது என்பதையும், தடுப்பூசிகள் பொதுவாக தீமைகளை விட அதிக நன்மைகளை கொண்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்வது அவசியம் என்றும் கூறுகிறார் யோகேந்திர சிங் ராஜ்புத்.

இதனிடையே பாரத் பயோடெக்கின் போர்ட்டலில் உள்ள தகவல்களின்படி, கோவாக்சின் (Covaxin) எடுத்து கொண்ட பின் கடும் ஒவ்வாமை எதிர்வினைகள் மிக அரிதாகவே ஏற்படக்கூடும். இவை அனைத்தும் கோவாக்சினின் சாத்தியமான பக்க விளைவுகளாக இருக்காது.தீவிரமான மற்றும் எதிர்பாராத பக்க விளைவுகள் ஏற்படலால் என கூறியுள்ளது. கோவிஷீல்ட் அரிதான சந்தர்ப்பங்களில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அஸ்ட்ராஜெனெகா ஒப்பு கொண்டுள்ள நிலையில், Covaxin பாதுகாப்பானது மற்றும் எந்த பக்க விளைவுகளும் அற்றது என்று பாரத் பயோடெக் சமீபத்தில் கூறியுள்ளது.

தங்களது தடுப்பூசி பாதுகாப்பில் கவனம் செலுத்தி, சிறந்த செயல்திறனுடன் உருவாக்கப்பட்டது என்றும் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பாரத் பயோடெக்கின் கோவிட் தடுப்பூசி மத்திய சுகாதார அமைச்சகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டது. தங்களின் தடுப்பூசி அதன் உரிம செயல்முறையின் ஒரு பகுதியாக 27,000-க்கும் மேற்பட்ட சப்ஜக்ட்ஸ்களில் மதிப்பீடு செய்யப்பட்டதாக பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!