lifestyles

சுலபமாக உங்க EMI முடிக்க சூப்பர் டிப்ஸ்.. கண்டிப்பா இதை நோட் பண்ணுங்க!

வங்கிகளில் நீங்கள் எடுத்துள்ள கடன்களின் EMI களை எளிதில் கட்டி முடிப்பதற்கான வழிகளை இங்கே வழங்கி உள்ளோம். தற்போது ரெப்போரேட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும் அது உங்களுக்கு EMI செலுத்த சாதகமாக இருக்கும் என்று நம்ப முடியாது. ரெப்போ ரேட்டில் மாற்றம் ஏற்பட்டால் நாம் வாங்கிய கடனையும் அது பாதிக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் நாம் சில திறமையான யுத்திகளை கையாளும்போது இத்தகைய மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகளைக் குறைக்க முடியும்.

EMI Moratorium: Opting for it now means ...




நம்மில் பலர் வங்கிகளில் இருந்து கடன் பெற்று EMI செலுத்த முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் உங்களுக்கு உதவும் வகையில் சில திறமையான நிர்வகிக்கக்கூடிய உத்திகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?:

ரெப்போ விகிதம் என்பது, நாம் நமக்குத் தேவையான நேரத்தில் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது போல், வங்கிகளும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடமிருந்து கடன் பெறும். அதற்கு ஆர்பிஐ நிர்ணயத்துள்ள வட்டி விகிதம் தான் ரெப்போ ரேட் எனப்படும். ஆர்பிஐ நிர்ணயிக்கும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வங்கிகளும் நமக்கு கடன் மற்றும் வீட்டு லோன்கள் வழங்குவதில் அதிக வட்டிகளை நிர்ணயிக்கின்றன. இந்த ரெப்போ ரேட் குறையும் பட்சத்தில் வங்கிகள் நமக்கு குறைந்த வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றன.




1) பிற வங்கிகள் உங்களின் தற்போதைய கடனின் வட்டி விகிதங்களை விட குறைவாக தருகிறதா? என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் வங்கிகள் குறைந்த வட்டியுடன் தென்பட்டால் நீங்கள் உங்கள் வீட்டுக் கடன் நிலுவைத் தொகையை வேறு வங்கிக்கு மாற்றுவதை குறித்து பரிசீலிக்கலாம்.

2) உங்கள் வங்கி மேலாளரை சந்தித்து உங்களின் கடன் குறித்து பேசி தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் சிறப்பு திட்டங்கள் உள்ளதா என்பதை பற்றி விசாரிக்கலாம். ஏனென்றால் இப்போது நிறைய வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள இதுபோன்ற சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளனர். எனவே, இது குறித்து உங்கள் வங்கி மேலாளரிடமும் அல்லது வங்கியில் பணியாற்றும் ஊழியர்களிடமோ தெரிந்து கொள்ளலாம்.

3) மாதம் மாதம் கட்டும் ஒரு குறிப்பிட்ட EMI தொகையில், உங்களால் முடிந்த தொகையை சேர்த்து கட்டுவதன் மூலம் உங்களின் EMI காலத்தை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம்.

4) கடன் காலத்தை நீட்டிப்பதை பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் உங்களின் EMI கடன் காலத்தை நீங்கள் நீட்டிக்கும் போது அது நீங்கள் வாழ்நாள் முழுவதும் செலுத்தும் வட்டியை அதிகரிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5) சில வங்கிகள் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் திட்டங்களை வழங்குகின்றனர். அத்தகைய சலுகைகள் ஏதேனும் உங்களுக்கு கிடைக்கிறதா? என்பதை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கவும்.

6) உங்களின் கடன் விகிதங்களை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது உங்களின் EMI சுமையை குறைக்க உதவும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!