gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அனுமான் வந்த கதை..!

மகாபாரதத்தில் அனுமான் வந்த கதை..!

மகாபாரத இதிகாசத்திலும் அனுமார் தோன்றியுள்ளார். ராமாயணத்தில் அவருடைய அதிமுக்கிய பங்கை யாரும் மறந்திருக்க மாட்டோம். ஆனால் மகாபாரதத்தில் இரண்டு இடத்தில் அனுமார் வருவது நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க கூடிய விஷயமாகும். அனுமார் சிரஞ்சீவிகளில் ஒருவர் என்பது நன்கு அறியப்பட்ட ஒரு செய்தி. சிரஞ்சீவிகள் என்பவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அனுமானும் சிரஞ்சீவிகளில் ஒருவர், அவரும் சாகா வரத்தை பெற்றிருந்தார்.






மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்..!!

அதனால் தான் மகாபாரதத்திலும் கூட அனுமார் குறிப்பிடப்பட்டுள்ளார். அனுமானுக்கும், பீமாவுக்கும் வாயு தான் தந்தை என்பதால் இருவரும் அண்ணன் தம்பியாக கருதப்பட்டனர். அதனால் பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட போது பீமாவை சந்திக்க மகாபாரதத்தில் முதல் முறை அனுமார் தோன்றுவார். குருஷேத்ர போர் முழுவதும் அர்ஜுனனின் தேரை காக்க அர்ஜுனின் கொடியில் அனுமார் இருந்தார். இது அவர் மகாபாரதத்தில் தோன்றுவது இரண்டாவது முறையாகும். அதிர்ச்சியாக உள்ளதா? மகாபாரதத்தில் அனுமாரின் பாத்திர படைப்பை பற்றி இன்னும் விவரமாக தெரிந்து கொள்ள ஆவல் தூண்டுகிறதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

அனுமாருடனான பீமாவின் போராட்டம்..!

பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட போது, தனக்கு சுகந்திகா மலர்கள் வேண்டும் என ஒரு முறை பீமனிடம் திரௌபதி கேட்டாள். போகும் வழியில், ஒரு பெரிய குரங்கு படுத்து கொண்டு ஓய்வெடுப்பதை பீமன் பார்த்தான். இதனை பார்த்து எரிச்சலடைந்த பீமன், பாதையை விடும் படி அந்த குரங்கை கேட்டான். ஆனால் அந்த குரங்கோ தனக்கு மிகவும் வயசாகி விட்டதென்றும், உதவியில்லாமல் தன்னால் தனியாக நகர முடியாது என்றும் கூறியது. அதனால் பீமன் தொடர்ந்து செல்ல வேண்டுமானால் குரங்கின் வாலை நகர்த்தி விட்டு தான் செல்ல வேண்டும்

மன்னிப்பு கேட்ட பீமன்..!

அந்த குரங்கினால் எரிச்சலடைந்த பீமன் அதன் வாலை தன் தண்டாயுதத்தால் நகர்த்த முயற்சித்தான். ஆனால் அது ஒரு பொட்டு கூட அசையவில்லை. நீண்ட நேரம் கடுமையாக முயற்சித்த பின்னர், இது சாதாரண குரங்கு அல்ல என பீமன் உணர்ந்தான். தன் முயற்சியை கைவிட்ட பீமன் அந்த குரங்கிடம் மன்னிப்பு கோரினான். அதன் பின் தன் சுய ரூபத்தில் வந்த அனுமார் பீமனுக்கு அருள் வழங்கினார்.

பாலம் கட்டிய அர்ஜுனன்..!

மகாபாரதத்தில் மற்றொரு நிகழ்வில், சாதாரண குரங்கின் தோற்றத்தில், ராமேஸ்வரத்தில் அர்ஜுனனை சந்தித்தார் அனுமார். இலங்கையை அடைவதற்கு ராமர் எழுப்பிய பாலத்தை பார்த்த அர்ஜுனன், இந்த பாலத்தை கட்டுவதற்கு குரங்குகளின் உதவியை ராமர் எதற்கு நாடினார் என்றெண்ணி வியந்தான். அதுமட்டுமின்றி, அதுவே அவ்விடத்தில் தான் இருந்தால் தன் அம்புகளாலேயே இந்த பாலத்தை தனியாளாக எழுப்பியிருப்பேன் என்றும் கூறினான். அம்புகளால் பாலத்தை எழுப்பினால் அது போதுமானதாக இருக்காது என்றும் ஒரு ஆளின் எடையை கூட தாங்காது என்றும் குரங்கு வடிவத்தில் இருந்த அனுமார் அர்ஜுனனை விமர்சித்தார். இதனை சவாலாக எடுத்துக் கொண்டான் அர்ஜுனன். ஒரு வேளை தான் கட்டிய பாலம் போதிய எடையை தாங்க முடியாமல் போனால், தீயில் குதித்து விடுவதாக அர்ஜுனன் சபதம் எடுத்தான்.






அர்ஜுனன் தேரில் அனுமர்..!

அதனால் தன் அம்புகளால் அர்ஜுனன் ஒரு பாலத்தை கட்டினான். அதன் மீது அனுமார் காலை வைத்ததும் அந்த பாலம் இடிந்தது. குழப்பமடைந்த அர்ஜுனன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தான். அப்போது அவன் முன் தோன்றிய கிருஷ்ணர், தன் தெய்வீக ஸ்பரிசத்தால் அந்த பாலத்தை மீண்டும் எழுப்பினார். இப்போது அதன் மீது அனுமாரை மீண்டும் நிற்க சொன்னார். இம்முறை பாலம் உடையவில்லை. அதனால் தன் அசல் தோற்றத்திற்கு வந்த அனுமார், போரின் போது அர்ஜுனனுக்கு உதவுவதாக வாக்களித்தார். அதனால் குருஷேத்ர போர் தொடங்கிய போது, அர்ஜுனனின் தேரில் உள்ள கொடியில் போர் முடியும் வரை தங்கியிருந்தார்.

தீப்பற்றி எரிந்த தேர்..!

குருஷேத்ர போரின் கடைசி நாளின் போது, முதலில் தேரை விட்டு வெளியே வருமாறு அர்ஜுனனை கிருஷ்ணர் கேட்டுக் கொண்டார். அர்ஜுனன் வெளியே வந்தவுடன், கடைசி வரை உடன் இருந்ததற்காக அனுமாருக்கு நன்றி தெரிவித்தார் கிருஷ்ணர். அதற்கு தலை வணங்கிய அனுமார் தேரை விட்டு சென்றார். அனுமார் சென்ற அடுத்த நொடியே தேர் தீப்பிடித்துக் கொண்டது. இதை பார்த்த அர்ஜுனனுக்கோ ஆச்சரியமாக இருந்தது. அனுமார் மட்டும் தேரை காக்காமல் இருந்திருந்தால், வானளாவிய ஆயுதங்களால் அந்த தேர் எப்போதோ எரிந்திருக்கும் என கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்கினார்.

குறிப்பு – அனுமார் ராமாயணத்தில் மட்டும் மைய பாத்திரமாக விளங்காமல் மகாபாரதத்திலும் கூட முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளார் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!