Cinema Entertainment

உடல் மொழியை அடக்கி தான் வைத்திருக்கிறேன்.. வடிவேலு

தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்ற அடைமொழியால் நகைச்சுவையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் இவருடைய சினிமா பயணத்தை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அவரா இந்த அளவுக்கு பெரும் புகழும் அடைந்திருக்கிறார் என்ற பிரமிப்பை ஏற்படுத்தும்.




தெருவில் ஆடி பாடி கொண்டிருந்த வடிவேலு ராஜ்கிரண் மூலமாக இந்த சினிமா துறைக்கு வந்து ஆரம்ப காலங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கவுண்டமணி செந்தில் பீக்கில் இருக்கும்போதே அவர்களுடன் இணைந்து ஒரு துணை நடிகராக ஒரு சில படங்களில் காமெடியில் கலக்கி வந்தார்.

5 memorable movies with Vadivelu and Prabhudeva | The Times of India

அதன் பிறகு விஜயகாந்த் தான் நடித்த சின்ன கவுண்டர் படத்தில் அவருக்கு குடை பிடித்துக்கொண்டு வரும் ஒரு சிறு கேரக்டரில் நடிக்க வைத்தார். படம் முழுக்க விஜயகாந்துடன் ட்ராவல் பண்ணும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவுக்கு அந்தப் படத்தில் இருந்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

நாகேஷ் போலவே வடிவேலுவும் தன்னுடைய உடல் மொழியால் அனைவரையும் சிரிக்க வைத்தவர். இதற்கு இணையான புகழைப் பெற்றவர் விவேக். அவர் சிந்தனை நிறைந்த கருத்துக்களை தன்னுடைய நகைச்சுவையால் மக்களுக்கு கொடுத்து வந்தார். ஆனால் வடிவேலு தன்னுடைய முகபாவனைகளாலும் உடல் மொழியாலும் நகைச்சுவையை கொடுத்து வந்தார்.

தன்னுடைய உடல் மொழிக்கு இந்த அளவு வரவேற்பு இருக்கிறதா என்பதை லவ் பேர்ட்ஸ் படத்தின் மூலம் தான் வடிவேலு அறிந்து கொண்டாராம். பிரபுதேவா உடன் வடிவேலுவின் காம்போ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. லவ் பேர்ட்ஸ் படமும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றிருந்த சமயத்தில் பிரபுதேவாவை தேடும் காட்சியில் வடிவேலு நடித்துக் கொண்டிருந்தாராம்.




தேடுவதைப் போல் வடிவேலு சில பாவனைகளை செய்து கொண்டிருந்ததை பார்த்த அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டார்களாம். வடிவேலுவுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். அதன் பிறகு பிரபு தேவாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பிரபுதேவா உன்னுடைய உடல் மொழிக்கு தான் இந்த அளவு சிரிக்கிறார்கள் என்ற சொல்ல அதன் பிறகு வடிவேலுவுக்கு தெரிந்திருக்கிறது.

உடல் மொழியாலும் மக்களை சிரிக்க வைக்கலாமோ என நினைத்து சார்லி சாப்ளினை வணங்கிவிட்டு மேலும் நடிக்க தொடங்கினாராம். இதை ஒரு பேட்டியில் கூறிக் கொண்டிருந்த வடிவேலு இப்பொழுது கூட நான் என்னுடைய உடல் மொழியை அடக்கி தான் வைத்திருக்கிறேன். ஆரம்பிச்சா நீங்க தாங்க மாட்டீங்க. இந்த அளவுக்கு சாதாரணமாக பேசும் போது கூட என்னை அறியாமல் என்னுடைய அந்த உடல் மொழி வெளிப்பட்டு விடுகிறது .அதற்கு கடவுளுக்கு நன்றி எனக் கூறினார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!