Entertainment lifestyles News

மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயம் ஊற வைக்க வேண்டும்.. ஏன் தெரியுமா..?

கோடை காலத்தில் நமக்கு அதிக அளவில் கிடைக்கக்கூடிய பழங்களில் மாம்பழங்கள் ஒன்று. முக்கனிகளில் ஒன்றான மாம்பழ விரும்பிகள் ஏராளமானோர். எனினும் மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு அதனை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் என்ற ஒரு பொதுவான நம்பிக்கை இருந்து வருகிறது. அது உண்மையா, அதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாம்பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாம்பழங்கள் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக அமைகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாடு, கண்பார்வை ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் போன்றவற்றில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. மேலும் மாம்பழத்தில் காணப்படும் உணவு நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கும் அவசியமாகிறது.




பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்களும் மாம்பழங்களில் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நமது செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதற்கும் இந்த ஆன்டி-ஆக்சிடென்ட்கள் பணிபுரிகிறது.

அடுத்தபடியாக, மாம்பழங்களில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் K போன்றவை இதய ஆரோக்கியம், எலும்பு வலிமை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு அவசியம். நாவூறச் செய்யும் இனிப்பான சுவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழங்களை நமது சரிவிகித உணவில் தாராளமாக சேர்த்து சாப்பிடலாம்.

மாம்பழங்களில் அதிக அளவு வைட்டமின் C இருப்பதால் இது நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, தொற்றுகள் மற்றும் உடல்நல கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு மாம்பழங்கள் அற்புதமான தீர்வாக அமைகிறது.

News18

மாம்பழங்களை ஊற வைப்பது அவசியமா?

சாப்பிடுவதற்கு முன்பு மாம்பழங்களை தண்ணீரில் ஊற வைப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. மாம்பழங்களில் காணப்படும் பைடிக் அமிலம் நமது உடலில் சிங்க், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மாம்பழங்களின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் இந்த ஆக்டிவ் காம்பவுண்ட் மாம்பழங்களில் உள்ள பலன் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களுடன் குறுக்கிடுகிறது. மேலும் இதனால் தலைவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

சாப்பிடுவதற்கு முன்பு மாம்பழங்களை தண்ணீரில் எதற்காக ஊற வைக்க வேண்டும் என்பதற்கு மேலும் சில காரணங்களை பார்க்கலாம்.




சுத்தப்படுத்துதல்

மாம்பழங்களை நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊற வைக்கும் பொழுது அதன் மேற்பரப்பில் இருக்கும் அழுக்கு அல்லது பூச்சிக்கொல்லிகள் போன்றவை அகற்றப்படுகிறது. நீங்கள் வாங்குவதற்கு முன்பு மாம்பழங்கள் சரியாக கழுவப்படாத சூழ்நிலையில் இது உதவியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் சேமிப்பு அல்லது போக்குவரத்தின் பொழுது மாம்பழங்கள் ஒரு சில மாசுகளுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கலாம்.

மென்மையாதல்

ஒரு சில சமயங்களில், மாம்பழங்களை நீங்கள் குறுகிய நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கும் பொழுது அதன் தோல் மென்மையாகி மாம்பழங்களை வெட்டுவது எளிமையாகிறது. கடினமான தோல் கொண்ட மாம்பழங்களுக்கு இது ஏதுவானதாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாக பெரும்பாலான சூழ்நிலைகளில் மாம்பழங்களை ஊறவைத்து சாப்பிடுவது அவசியம் அல்ல. எனினும் அவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது மாம்பழங்களை முழுமையாக சுத்தம் செய்வதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!