Uncategorized

இன்றைய ராசி பலன் (14.4.24)

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 04.47 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று அதிகாலை 05.17 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்களின் உதவியாளர் முக்கிய செயலை முடிப்பீர்கள். மூலதனத்துக்கு தேவையான பணம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். அலுவலகப் பணிகளின் அதிக சுமையால் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள்.சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பழக்கத்தின் மூலமாக பணப் புழக்கத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலா செல்வீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்து தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வீர்கள். காதலி கேட்ட துணிமணியை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.முருகப் பெருமானை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இறைவழிபாட்டில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.




மிதுன ராசி அன்பர்களே!

வண்டி வாகனங்கள் வேலை சமயத்தில் ரிப்பேர் ஆவதால் டென்ஷனாவீர்கள். சகோதர சகோதரிகளின் சண்டையால் மரியாதை இழப்பீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பெற மாட்டீர்கள். பத்திரகாளியாக மாறும் மனைவியை மாற்ற முடியாமல் தடுமாறுவீர்கள். பணியின் காரணமாக மூச்சு திணறல் நோய்க்கு ஆளாவீர்கள். விபத்து ஏற்பட்டு சிறிய காயம் அடைவீர்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

வியாபாரப் போட்டியால் சின்ன நஷ்டம் அடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி முன்னேற்றம் ஏற்படாமல் சுணக்க நிலையை காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாவதால் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்குவீர்கள். வேலை இடத்தில் செய்யாத குற்றத்திற்காக குறை கூறப்படுவீர்கள். கைப் பொருள்களை பத்திரமாக வைத்திருக்க மறக்காதீர்கள்.விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.




சிம்ம ராசி அன்பர்களே!

நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வை அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த நோய் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களை உங்களுக்குச் சாதகமாக முடிக்க முயற்சி செய்வீர்கள். உபரி வருமானத்தில் பழைய பாக்கிகளை அடைப்பீர்கள். பிள்ளைகளின் கல்வித்திறனால் பெருமைப்படுவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

பெரியவர்களின் ஆசியால் பல நல்ல காரியங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தின் மூலம் நல்ல காண்ட்ராக்ட்களை பெறுவீர்கள். உங்கள் நடத்தையால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். தொழிலுக்கு இடையூறாக இருந்த முட்டுக்கட்டைகளை தவிடு பொடியாக்குவீர்கள்.அம்பிகை வழிபாடு அல்லல்களைப் போக்கி மன நிம்மதி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.




துலா ராசி அன்பர்களே!

உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகளின் எண்ணத்தை மன உறுதியால் வெற்றி பெறுவீர்கள். தொழிலுக்கு இருந்த போட்டிகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அதிக வருமானம் பெற மாட்டீர்கள். பணவரவு செலவில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாற்றம் அடைவீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண் டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும்

விருச்சிக ராசி அன்பர்களே!

மூளைக்குள் திட்டம் தீட்டி வேலைக்கு வடிவம் கொடுப்பீர்கள். வெளியூர்ப் பயணங்கள் அவ்வளவு சிறப்பாக அமையாததால் உடல் சோர்வு அடைவீர்கள். அரசு வேலைகளில் சங்கடங்களை எதிர்நோக்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் தொய்வான நிலையை காண்பீர்கள். எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.ஆறுமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படும்.




தனுசு ராசி அன்பர்களே!

ஏட்டிக்குப் போட்டியாக பேசிய இல்லத்தரசியை இணக்கமாக கொண்டு வருவீர்கள். பந்தயங்களில் லாபத்தை பெறுவீர்கள். ரியல் எஸ்டேட்டை அமோகமாக நடத்துவீர்கள். பங்குப் பரிவர்த்தனைகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வீர்கள். வேலை இடத்தில் நல்ல மதிப்பு பெறுவீர்கள். உற்சாகமான பேச்சால் உறவுகளை மேம்படுத்தி அனைவரையும் ஒன்று சேர்ப்பீர்கள். மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் வீண் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு கிடைக்கக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

இரும்பாக இருக்கும் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். விருந்தினர்களுக்கு வீட்டில் சுவை மிகுந்த உணவு கொடுத்து அன்பை வெளிப்படுத்துவீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.




கும்பராசி அன்பர்களே!

பணப்புழக்கம் இருந்தாலும் கை மீறி போகும் செலவால் கவலைப்படுவீர்கள். தேவையில்லாத சிந்தனையால் தூக்கம் கெடுவீர்கள். மனைவி மக்கள் உறுதுணையாக இருப்பதால் சற்று நிம்மதி அடைவீர்கள். நண்பர்களின் உதவியை தகுந்த நேரத்தில் பெறுவீர்கள். வியாபாரத்தை சரளமாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான லாபம் காண்பீர்கள்.கால பைரவரை வழிபடுவதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனராசி அன்பர்களே!

வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனும் அடைவீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!