Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 20

20

 

இன்று  வருவானா …? ஆவலுடன் வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள் வாசுகி .அவள் கைகள் அடிக்கடி மென்மையாக தன் வயிற்றை வருடிக் கொண்டிருந்தன .சொல்ல வேண்டும் அவனுடைய கர்ப்ப விவரத்தை கணவனுக்கு சொல்ல வேண்டும்எப்படி சொல்ல போகிறாள் வெட்கம் கூச்சத்தோடு இன்னமும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது .இதனை எப்படி எடுத்துக் கொள்வான்…? ஏற்றுக் கொள்வானாஅவளுக்கு நிறையவே பேச வேண்டியிருந்தது

 




இதோ அவர்களின் இந்த காதல் அடையாளத்தை பற்றிஅதனை வெறுக்கும் அவனுடைய அம்மாவை பற்றி வாசுகியின் உடம்பினுள்  பய மின்னல் ஓடியது .முதல் நாள் ராதா அவளிடம் நாட்களை விசாரித்துக் கொண்டு இருக்கும்போது திடுமென வந்து நின்றாள் மங்கை .கனலை கக்கிய அவளது கண்கள் இவர்களது பேச்சை கேட்டு விட்டதை சொன்னது.

 

ராதாவின் விசாரணைக்கு பதில் சொல்லாமல் எழுந்து விட்ட வாசகி ”  சும்மா இருடி அதெல்லாம் ஒன்றும் இல்லை ”  எனவும்  மங்கையின் முகத்தில் சிறு நிம்மதி.

 

எங்கள் குழந்தையின் மேல் இவர்களுக்கு ஏன் இந்த வெறுப்புவாசுகியின் மனம் வருந்தியது .மாமியாரை கண்டுகொள்ளாதது போல் அவள் கிளம்பி வந்து விட்டாள். தன் குழந்தையை முதன்முதலாக தன் கணவனிடமே பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தாள்.

 

அன்று தேவராஜன் வரும்போதே மிகவும் பரபரப்பாகவே வந்தான். ”  மாமா இன்று வசு ஆட்டோவில் காலேஜ் போகட்டும். நாம் இருவருமே  இன்று மரம் வெட்டும் இடத்திற்கு   செல்ல வேண்டும் .கூலியாட்கள் சிலரை அழைத்துக் கொண்டு வந்து அந்த ட்ரான்ஸ்போர்ட்காரர் மரங்களை எடுக்கவிடாமல் தகராறு செய்ய போவதாக கேள்விப்பட்டேன் ” 

 

தேவராஜனின் பரபரப்பு ஜெயக்குமாருக்கும்  தொற்றிக் கொள்ள அவரும் வேகமாக கிளம்பலானார் .கணவனின் பார்வையை சந்தித்து தனது நிலையை உணர்த்தி விட வாசுகி முனைய அதற்கான நேரம் அமையாமல் போய்விட்டது .தேவராஜன் அவள் பக்கம் திரும்பவே இல்லை. கணவனும் தந்தையும் வெளியேறுவதை பார்த்தபடி நின்றவள் தளர்வாக வீட்டிற்குள் திரும்பினாள் .ராஜாத்தி அடுப்படிக்குள் இருக்க மாலினி கல்லூரிக்கு கிளம்பி போய் இருந்தாள்.

 




சோர்வுடன் சோபாவில் அமர்ந்த  வாசுகியின் தலை மெல்ல வருடப்பட முகம் மலர  அவள் வேகமாக திரும்பி பார்த்தாள் .அங்கே புன்னகையோடு தேவராஜன் நின்றிருந்தான். ”  என்னிடம் எதுவும் சொல்ல வேண்டுமா வசு ? ”  உள்ளம் கரைய வேகமாக எழுந்த வாசகி அப்படியே அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

 

” ஏய் என்னடா …? ” திடுமென நடுவீட்டில் தழுவிக்கொள்ளும் மனைவியை ஆச்சரியமாக பார்த்தான் தேவராஜன் .உணர்வுகள் பொங்கும் விழியுடன்  வாசுகி அவன் கண்களை பார்க்க இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று தழுவி கிடந்தன. சில நொடி துளிகள் அவைகள் பேசிக்கொண்ட சேதியில் எல்லை கடந்த காதல் இருந்தது.

 

” வசு ” உணர்ச்சியில் நடுங்கியது தேவராஜனின் குரல் .ஒருவித எதிர்பார்ப்பு வினாவுடன் அவன் கை அவள் வயிற்றில் படிந்தது . ” ம் ..? ” ஒற்றை எழுத்தில் அவளிடம் கேட்டவனுக்கு இரு விழிகளையும் அழுந்த மூடி சைகை ஆமோதிப்பு  தந்தாள அவள் .ஒரு நொடி விழிகளை அழுந்த மூடி திறந்தவன் அடுத்த நொடி அவளை இறுக அணைத்துக் கொண்டு விட்டிருந்தான்.

 

” வசுவசு …”  ஜெபம் போல் அவள் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்தவன் உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்த அவள் இதழ்களை தன்  இதழ்களால் அழுந்த மூடி சமாதானம் செய்தான் .

 

” தேங்க்ஸ் வசுநன்றி வசு …”  மெலிதான புலப்பங்களில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினான்.

 

அடுப்படியில் இருந்து வெளியே வந்த ராஜாத்தி  இவர்கள் நிலையைப் பார்த்ததும் மீண்டும் உள்ளேயே நுழைந்து கொண்டாள். ”  பாப்பா காலேஜுக்கு நேரம் ஆகவில்லையா ” ” உள்ளே இருந்தபடியே குரல் கொடுத்தாள். அவசரமாக கணவனிடம் இருந்து விலக போன வாசுகியை அதற்கு அனுமதிக்காமல் அணைத்தபடியே ” அத்தை ஏதாவது ஸ்வீட் எடுத்து கொண்டு வாருங்கள் ” என குரல் கொடுத்தான் தேவராஜன்.

 

” ஸ்வீட்டா ..? ” ஆச்சரியமாய் கேட்டபடி வெளியே வந்த ராஜாத்தி் கணவனின் அணைப்பில் முகம் சிவந்து அன்றலர்ந்த கமலமாய் நின்ற மகளைப் பார்த்ததும் உணர்ந்து கொண்டாள் .வேகமாக உள்ளே போய்   நெய் கசியும் மைசூர்பாகுவை எடுத்து வந்து இருவர் வாயிலும் திணித்தாள் 

 

 

” ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை ” கண்கள் கலங்கியது அவளுக்கு .ராஜாத்தியின்  மகிழ்ச்சியை யோசனையுடன் பார்த்த தேவராஜன் , ” வசு  நீ அம்மாவை போய் பார்த்து இந்த விஷயத்தை சொல்லி விடுகிறாயா ? ” எனக் கேட்க ஆயிரம் தேள்கள்  ஒன்றாகச் சேர்ந்து கொட்டியது போல் துடித்தாள் வாசுகி

 

” நானாஇல்லை…”  வாசுகி தடுமாற ” இதோ உன் அம்மாவைப் போல தானேஎன் அம்மாவிற்கும் இந்த செய்தி மகிழ்ச்சியாக இருக்கும் .எனக்கு  இப்போது நேரமில்லை .இந்த நல்ல விஷயத்தை தள்ளிப் போடாமல் உடனடியாக அம்மாவிடம் சொல்ல வேண்டும்போல் இருக்கிறது .நீயே போய் சொல்லி விடுகிறாயாஅவனது வேண்டலில் வாசுகி தூள் தூளாக உடைந்தாள் .

 




” மாப்பிள்ளை சொல்வதும் சரிதான் பாப்பா .பேரப்பிள்ளை  வரும் செய்தி கேட்டதும் உன்னை அவர்கள் வீட்டிற்கே அழைத்துக் அழைத்துக்கொள்ள கூட  நினைப்பார்கள் இல்லையா ? நீ கிளம்பி போய் பார்த்து விட்டு வா ” ராஜாத்தியும்  ஒத்துப்பேச  வாசுகி பதில் பேச முடியாதவள் ஆனாள் .

 

” மறக்காமல் போய்விட்டு வந்து விடு சரியா ? ”  என்றுவிட்டு மாமியார் அருகில் இருக்கும் லஜ்ஜை இல்லாமல் மனைவியை அணைத்து வகிட்டில் முத்தம் ஒன்றை பதித்து விட்டு வெளியேறினான் தேவராஜன்.

 

” நீ தனியாக போக வேண்டாம்  பாப்பா நானும் வருகிறேன் .” என்று உடன் வந்த அன்னையின் துணை ஆயிரம் யானையின் பலத்தை அவளுக்கு உணர்த்தியது.

 

இருவரும் சேர்ந்து வீட்டிற்குள் வருவதை பார்த்ததும் மங்கையின் முகம் சுருங்கியது .எதுவும் பேசாமல் அவள் பார்த்தபடி நிற்பதை கவனித்த ராஜாத்தி கொஞ்சம் தயங்கி ” ஒரு சந்தோசமான விஷயம் சொல்வதற்காக வந்திருக்கிறோம் அண்ணி .வந்துஎன் மகள் இல்லை உங்கள் மருமகள் குழந்தை உண்டாகி இருக்கிறாள் .உங்களுக்கு பேரனோ பேத்தியோ வரப்போகிறார்கள்  ” சந்தோஷத்துடன் சொன்னாள்.

 

மங்கையின் முகம் கறுத்தது. கூர்மையாக பார்த்து”  அப்படியா ? ” என்றாள் வாசுகியிடம் .ஒப்புதலாக  தலையசைத்தாள்.

 

இந்த சந்தேகம் முதல் நாளே மங்கைக்கு வந்தது .ஆனால் அப்போது வாசுகிதான் இல்லை என்று பொய் கூறி தப்பித்துக் கொண்டாள். கடும் பாறையாய் இறுகியது மங்கையின் முகம். இரண்டு நிமிடங்களில் அந்த முகத்தின் மீது ஒரு சிரிப்பை ஒட்ட வைத்துக் கொண்டாள்.

 

”  அப்படியா நல்ல செய்திதான். ரொம்ப சந்தோசம் அண்ணி. திலகா வீட்டில் என்ன இனிப்பு இருக்கிறது என்று பார் ” உள்ளே திரும்பி மகளுக்கு உத்தரவிட்டு விட்டு வாசுகியின் கையை பற்றிக்கொண்டு மெல்ல வருடினாள்.

 

இனிப்பிற்கான காரணத்தை தெரிந்து கொள்ள திலகாவும் கௌதமும் வேகமாக அங்கே வந்து நின்றனர்.

 

” உங்கள் மகள் மிகவும் புத்திசாலி அண்ணி .கல்யாணம் முடிந்து இங்கே வந்த கொஞ்ச நாட்களுக்கு ஒரு மாதிரி முன்னுக்குப் பின்னாக பேசிக்கொண்டு அங்குமிங்குமாக திரிந்து கொண்டிருந்தாள் .உங்களுக்கு ஒன்று தெரியுமாஅப்போதெல்லாம் இவள் தேவாவின் அறையில் போய் படுக்கவே மாட்டாள். ஏன் இவர்கள் முதலிரவின் போது கூட தேவாவின் அறைக்குள் போகவில்லை .இதோ இந்த சோபாவில் தான் படுத்துக் கொள்வாள் .ஒரு மாதிரி பேக்கு  போல் விழித்துக் கொண்டு  இருப்பாள் .இப்போது எல்லாம் மாறிவிட்டது போல

 

மங்கை பேசப்பேச ராஜாத்தி திகைத்தாள் .இவர்கள் என்ன சொல்கிறார்கள்

 

 

”  இவளை ஒரு தடவை  சாப்பிட வைப்பதற்குள் தேவா மிகவும் கஷ்டப்பட்டு விடுவான் .சாப்பாட்டு தட்டை கொடுத்தால் தரையில் வீசி எறிவாள் . பாலை கீழே கொட்டுவாள்.என் மகன் கௌதம் கூட அண்ணியை சைக்கியாட்ரிஸ்ட்டிடம் கூட்டிப் போ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.” 

 

மங்கை மேலும் மேலும் விவரங்களை அள்ளித் தெளித்துக் கொண்டே போக வாசுகி பேசமுடியாமல் இறுகிப் போய் நின்றிருக்க ராஜாத்தி கலங்கி கொண்டிருந்தாள்.

 

” வரவர இவளுடைய நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது . யாரோ ஒரு தெருவில் போகிற பெண்ணோடு தேவாவோடு  சேர்த்து வைத்து தப்பாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். அது பொறுக்க முடியாமல் தேவா  அவள் கன்னத்தில் அறைந்து விட்டான் .அந்த நேரத்தில் தான் உங்கள் கணவர் உள்ளே வந்தார் .என் மகள் பெரிய ராஜகுமாரியாக்கும்னு   இவளை அங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் ” 

 




மங்கை முடிக்க ராஜாத்திக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆனது ”  இதெல்லாம் என்ன பாப்பா ? ” வாசுகியிடம் கேட்டாள் அவள்.

 

” அவள் சுய புத்தி இல்லாமல் பைத்தியம் போல்  இருந்ததை உங்கள் யாரிடமும் சொல்லியிருக்க மாட்டாள் என்று தெரியும் .அதனால் தான் நானே உங்களுக்கு சொல்கிறேன் .ஆனால் உங்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பில்லையே.. பெற்ற மகளை பற்றி தாய்க்குத் தெரியாதா ? ” கேட்டுவிட்டு கிண்டல் போல் உரக்கச் சிரித்து கொண்டாள் மங்கை.

 

” 

” இப்போது மூன்று மாதங்களாக உங்கள் மகள் உங்கள் வீட்டில்  இருக்கிறாள். எங்கள் தேவா எங்கள் வீட்டில் இருக்கிறான் .பிறகு எப்படி இது ? ”  என்று கேட்டபடி ஒற்றை விரலால் வாசுகியின் வயிற்றை சுட்டிக் கேட்டாள் மங்கை.

 

இந்தக் கேள்வியில் தாயும் மகளும் அதிர்ந்தனர் . மனநிலை பிசகியவள் ,   வம்புச் சண்டை இழுப்பவள்ஒழுக்கம் கெட்டவள்மகள் மீது எந்த குற்றச்சாட்டைத்தான் விட்டு வைத்திருக்கிறாள்  இந்த அம்மாராஜாத்தியின் மனம் குமுறியது.

 

” வாய் கூசாமல் இப்படி கேட்கிறீர்களே அண்ணிமாப்பிள்ளை எங்கள் வீட்டிற்கு வருவதும் போவதும் ஊருக்கே தெரியுமே ? ” 

 

” அப்படியா எனக்கு தெரியாதேஆனால் தொழில் விஷயமாக பேசகொள்ள  என்று அவ்வப்போது வருவான் .அதற்குள்ளாகவா எப்படிநம்ப முடியவில்லையே ” மங்கை யோசிப்பது போல் பேச

 

” போதும் அத்தை நிறுத்துங்கள் ”  பெண் சிங்கமாய் கர்ஜித்தாள் வாசுகி.”  எவ்வளவு மோசமான புத்தி உங்களுக்குஎன் தேவுடைய  அம்மா என்று உங்களைச் சொல்லிக் கொள்ளவே எனக்கு கூசுகிறது ” 

 

 மங்கையின் முகத்தில் ஆத்திரம் கொந்தளித்தது.”  என்னை சொல்வதற்கே உனக்கு கூசுகிறதாஎவ்வளவு திமிர் உனக்குஇத்தனை வருடமாக நான் கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை .நான்கே மாதத்தில் கொள்ளை கும்பல் போல் நீங்கள் எல்லாம் வந்து பிடுங்கிக்கொண்டு போய்விடுவீர்கள் .நான் விரல் சப்பிக்கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா ? ” 

 

” இவ்வளவு பேசுபவர்கள் எதற்காக உங்கள் மகனுக்கு கல்யாணம் முடித்து வைத்தீர்கள் ? ” ராஜாத்தி ஆவேசமாக கேட்க

 

” மகனுக்கு மணம் முடிக்கும் எண்ணமே இவர்களுக்கு கிடையாது அம்மா ”  பதில் சொன்னவள் வாசுகி.

 

” என்ன சொல்கிறாய் பாப்பா ? ” 

 

” ஆமாம் அம்மா இவர்கள் மகளுக்கும் இரண்டாம் மகனுக்கும் இவர்களுக்குமே ஒரு இடையூறற்ற எதிர்காலத்தை உண்டாக்கிக் கொண்டு அதற்குப் பின்புதான் மகனுக்கு திருமணம் என்று திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். ஆனால் தேவ் என்னை பார்த்ததும் திருமணம் முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட வேறு வழி தெரியாமல் எங்கள் திருமணத்தை முடித்து வைத்தார்கள் .ஆனாலும் நாங்கள் குழந்தை பெற்று எங்கள் குடும்பம் எனும் தனி எண்ணம் கொண்டுவிடக் கூடாது என்று எங்களுக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக ஏதோ மூலிகை மருந்தை இவர்கள் ஊரில் இருக்கும் தூரத்து சொந்தக்கார அம்மா ஒருவரிடம் இருந்து வாங்கி வைத்திருக்கிறார்கள். அந்த மருந்துக்கு பயந்து தான் நான் இவர்கள் வீட்டிற்கு வந்த நாள் முதல் சாப்பிடுவதே கிடையாது .அத்தோடு அவருடன் இருப்பதைக் கூட தவிர்த்தேன் ” 

 

வாசுகி விளக்க ராஜாத்திக்கு நெஞ்சம் பதை பதைத்தது .” ஐயோ என் மகள் இத்தனை பிரச்சினைகளுடன்  இருந்திருக்கிறாளே ” 

 

 ” அட எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கிறாயே ” மங்கை வாசுகியை பாராட்டினாள்.

 

” சீச்சீ என்ன மனுஷி நீங்கள்பெற்ற பிள்ளை வாழ்க்கையையே இப்படியா கெடுக்க முயற்சிப்பீர்கள் ” சீறினாள்.




” பெத்த பிள்ளையாயார்நான் பெற்ற பிள்ளையாக இருந்தால் இப்படி எங்களைப் பற்றிய கவலை இல்லாமல் தன் சுயநலமே பெரிதாக இருப்பானா ? ” 

 

வாசகி அதிர்ந்தாள். அம்மாவை திரும்பி பார்க்க ராஜாத்தி தலையசைத்தாள் .” ஆமாம் பாப்பா மாப்பிள்ளை உன் மாமனாரின் மூத்த தாரத்து மகன் .இவர்கள்  இரண்டாம் தாரம் .இது எங்களுக்கு பெரிய விஷயமாக தெரியாததால் உன்னிடம் சொல்லவில்லை ” 

 

வாசுகியின் மனதினுள்  இத்தனை நாட்களாக  ஒரு தாய் எப்படிஇப்படி

என்று ஓயாமல் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது .ஆக இவை மாற்றான் தாயின் வஞ்சக எண்ணங்கள்.

 

” எவ்வளவு எளிதாக இரண்டாம் தாரம் என்று சொல்கிறீர்கள் .அந்த இடத்திற்கு வரும்போது நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருப்பேன் .எல்லா பெண்களையும் போன்று நானும் முதல் மனைவியாக வாழத்தான் ஆசைப்பட்டேன் .ஆனால் விதி என்னை வேடிக்கை செய்துவிட்டது .ஆனாலும் கிடைத்த வாழ்க்கையில் திருப்தி அடைந்து தேவாவை நான் என் பிள்ளையாகத் தான் கவனித்தேன் .அதற்கான மரியாதை எனக்கு என் கணவரிடமிருந்து கிடைக்கவில்லை .எப்போதுமே அவருடைய மூத்த மகனை நான் கொடுமைப்படுத்த வந்தவள் போன்றே பார்ப்பார் .அவருடைய சம்பாத்யங்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும் அவன் பெயரிலேயே வைத்திருந்தார் .எதிலும் எந்த உரிமையும் எனக்கோ என் பிள்ளைகளுக்கோ கொடுக்கவில்லை .இதுகுறித்து நான் கேட்டபோது உங்கள் எல்லோரின் சொத்து என் மகன் தான் .அவன் தான் உங்கள் எல்லோரையும் கடைசிவரை காப்பாற்ற போகிறவன் என்று அவரது இறுதிக்காலம் வரை சொல்லிக் கொண்டே இருந்து அதுபடியே எங்கள் எல்லோரையும் செல்லாக்காசாகி எல்லாவற்றையும் அவனிடமே ஒப்படைத்து விட்டு போய்விட்டார் ” 

 

” நானும் தேவாவை நம்பிக் கொண்டு தான் இருந்தேன் .ஆறு மாதங்களுக்கு முன்புவரைஇதோ இவளை அவன் பார்க்கும் வரை .ஏன் ராஜாத்தி அவனுக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது ? 26 வயதில் என்ன திருமணம் வேண்டியிருக்கிறதுஎன் கணக்குப்படி அவனுக்கு இன்னும் ஐந்து ஆறு வருடங்கள் கழித்துதான் மணமுடிக்க எண்ணி இருந்தேன். ஆனால் என்று இவளைப் பார்த்தானோ அன்றிலிருந்தே உடனே திருமணம் என்று துடித்துக் கொண்டிருந்தான்.

 

தங்கையின் திருமணம் தம்பியின் படிப்பு என்று எதுவும் அவன் மனதில் படவில்லை .ஒரேடியாக தான் தன் வாழ்வு என்ற எண்ணம் மட்டுமே இருந்தது .இப்படி சுயநலமாக மாறிவிட்ட ஒருவனால் நானும் கொஞ்சம் என்னை மட்டுமே யோசித்தால் என்னஅதனால் தான் என்னுடைய திட்டங்கள் நிறைவேறும் வரை அவனுக்கென்று ஒரு குடும்பம் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

 

இவள் கர்ப்பம் அடையாமல் இருக்க வேண்டும் என்று மருந்து வாங்கி வைத்தேனே தவிர அதை ஒரு தடவை கூட இவளுக்கு கொடுக்கவில்லை .ஒரு மாதிரி லூசு போல் நடந்து கொண்டு இவளே என் வேலையை சுலபமாக்கி கொண்டிருந்தாள் .அதனை எனக்கு சாதகமாக்கி பைத்தியம் என்று உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன் .ஆனால் நீங்கள் என்னைவிட பயங்கரமாக திட்டம் போட்டு இருக்கிறீர்கள்.

 

எங்கள் வீட்டிலேயே உங்கள் மகளை வைத்துக் கொண்டு அங்கேயே என் மகனையும் வரவழைத்து இதோ இப்போது இவள் கர்ப்பம் என்று வந்து நிற்கிறாள் .முன்பும் இப்படித்தான் உங்கள் மகளை காட்டி மயக்கி என் மகனை திருமணம் வரை இழுத்துக் கொண்டு போனீர்கள் .இப்போதும் அவளை உங்கள் வீட்டிற்கு அழைத்துப் போயும் அங்கே வைத்தே என் மகனை மயக்கி…”

 

” மங்கை போதும் நிறுத்துங்கள் .இதற்கு மேலும்  இப்படி பேசினீர்கள் என்றால் நன்றாக இருக்காது ”  ராஜாத்தி மங்கையிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே வாசுகியினுள் ஒரு வெளிச்சம்.

 

இதோ இங்கு இருக்கும் இந்த சூழலை தேவ் புரிந்து கொண்டாரோஇங்கேயே இருந்தால் தனக்கென வாரிசு உருவாகாது என உணர்ந்து கொண்டுதான் என்னை அம்மா வீட்டிற்கு அனுப்பி அங்கே என்னுடன் வாழ நினைத்தாரோநினைக்க நினைக்க அப்படித்தான் என உறுதிபட வாசுகியின் முகம் பிரகாசமானது.

 

சண்டையிட்டுக் கொண்டிருந்த அம்மாவின் கையைப் பிடித்து அழுத்தி தடுத்தாள் .” எதற்காக அம்மா தேவை இல்லாமல் சண்டை போடுகிறீர்கள்ஒரு கணவன் மனைவியைத் தேடி அவள் இருக்குமிடம் வருவது தவறாஇருவரும் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை வாழ்ந்தால் வாரிசு உருவாகும் என்பது இயற்கைதானேஇதற்கு நாங்கள் எப்படி விதிவிலக்காவோம்இயற்கையாக நடந்த ஒரு விஷயத்திற்காக நீங்கள் இருவரும் ஏன் இப்படி சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் ? ” வாசுகிக்கு இப்போது தன் கணவன் தனக்கு துணை இருக்கிறான் என்ற தெம்பு பலமடங்காக வந்துவிட்டிருந்தது.

 

வாசுகியின் இந்த நிதானமான அணுகுமுறையில் மங்கை அதிர்ந்தாள் .வாசுகி பொதுவாக உணர்ச்சிவசப்படும் பெண். அவளை லேசாக தூண்டிவிட்டாலே அவள் உணர்வுகளை வார்த்தைகளாக கொட்டி விடுவாள். அதை காரணமாக வைத்து மீண்டும் கணவன் மனைவியை பிரித்து விடலாம் என்ற எண்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தவள் இப்போது அவளது புரிதல் பேச்சில் திகைத்தாள் .வாய்க்கு வந்ததை பேசி தாயையும் மகளையும் வாய்ப்பேச்சிற்கு  தூண்டிவிட்டு பெரிய சண்டை இழுத்து கடைசியாக என்னை கண்டபடி பேசி விட்டனர் என்று மகனிடம் சொல்லி மீண்டும் இரண்டு குடும்பத்தையும் பிரிக்கும் திட்டம் மங்கையுடையதாக இருந்தது.

 

ஆனால் ஆமாம் அப்படித்தான் உன் மகன் என் கணவன். என் கணவனுடன் நான் மனைவியாக மகிழ்ந்து இருந்தேன் .எங்களுக்கு குழந்தை உண்டாகி இருக்கிறதுஎன்று வெளிப்படையாக பேசும் மருமகளை என்ன செய்வதென்று அவளுக்கு தெரியவில்லை திகைத்து நின்றாள்.

 

தன் மாமியாரின் செய்கையற்ற நிலையை உணர்ந்துகொண்ட வாசுகியின் மனம் திருப்தியுற்றதுசில மாதங்களாக அவள் இங்கே பட்ட துன்பத்திற்கு சிறிதளவாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமா

 




” உங்களுக்கு ஒன்று தெரியுமா அத்தைதேவ் இப்போது என் கைப்பிடியில் தான் இருக்கிறார் .நான் சொல்வதைத் தான் கேட்பார் .உங்களுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ  ஏதாவது தேவை என்றால் என்னிடம் தான் கேட்க வேண்டியது இருக்கும் ”  மமதையுடன் அவள் பேச மங்கை கொதித்தாள்.

 

” அடிப்பாவி எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ.. அதை நடத்தி விட்டாயே .என் வயிறு எரிந்து சொல்கிறேன் நீ உருப்படவே மாட்டாய் .உனக்கு இந்த வாழ்க்கை நிலைக்கவே செய்யாது ” இரண்டு கைகளையும் மடித்து நொடித்து  அவளை நோக்கி மங்கை சாபமிட்ட அதே நேரம் அவர்கள் வீட்டு தொலைபேசி ஒலித்தது.

 

அதனை எடுத்து பேசிய திலகா ”  அம்மா  தேவா அண்ணா அங்கே சண்டையில் அடிபட்டு் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறாராம் ” என்று வீறிட்டாள்.




What’s your Reaction?
+1
21
+1
21
+1
1
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!