Beauty Tips

கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்யலாமா கூடாதா ?

கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஹேர் கலரிங் செய்வதை முற்றிலும் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

குறிப்பாக கெமிக்கல் கலந்த ஹேர் கலர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகள் அந்த முதல் மூன்று மாதங்களில் தான் வளரத் தொடங்கும். தவிர்க்க முடியாத நிலையில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அவசியம் ஹேர் கலர் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில்,  கர்ப்பிணிகள் அமோனியா கலக்காத ஹேர் கலர் மற்றும் டையை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். அது ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.

அதேபோல கெமிக்கலே கலக்காத வெஜிடபுள் ஹேர் கலர்களை உபயோகிப்பதும் சிறந்தது. உதாரணத்துக்கு, ஹென்னா உபயோகிக்கலாம். அது கெமிக்கல் ஹேர் டைக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

ஹேர் கலர் அல்லது டை உபயோகிக்கும்போது கூடியவரையில் அது முடியின் வேர்க்கால்களில் படாதபடி தடவவும். அதன் மூலம் அனாவசிய கெமிக்கல் உட்கிரகிப்பைத் தவிர்க்க முடியும்.  அதாவது இப்படி உபயோகிக்கும்போது ஹேர் கலரில் உள்ள கெமிக்கலானது முடிக்கற்றைகளோடு நின்றுவிடும்.

மண்டைப்பகுதியில் பட்டு ரத்தத்துடன் கலப்பதையும் தவிர்க்கலாம். இந்த முறையைப் பின்பற்றினால் ஹேர் கலரால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தாயும் கருவிலுள்ள குழந்தையும் பாதுகாக்கப்படுவார்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!