Beauty Tips

ஃபேஸ்பேக் போடும்போது இந்த தவறுகளை மட்டும் கண்டிப்பா செய்யாதீங்க!

ஃபேஸ் பேக் பயன்படுத்துவது நமது அன்றாட சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. ஆனால் அதன் பலன்களை அதிகப்படுத்தவும், பக்க விளைவுகளை தடுக்கவும் அதனை சரியான முறையில் செய்வது அவசியமாகிறது. ஃபேஸ் பேக் பயன்படுத்தும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

5 நிமிடத்தில் பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தைப் பெற 'இந்த' ஃபேஷியல் பேக்கை யூஸ் பண்ணுங்க...! | Quick 5-Minute Facial To Get Glowing Skin in tamil - Tamil BoldSky




பேட்ச் டெஸ்ட் செய்யாமல் இருப்பது : ஒருவருக்கு சிறந்த முடிவுகளை தரக்கூடிய ஒரு ஃபேஸ் பேக் மற்றொருவருக்கு எரிச்சலையும், அலர்ஜியையும் உண்டாக்கலாம். எனவே எந்த ஒரு ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதற்கு முன்பும் உங்கள் சருமத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியில் பேட்ச் டெஸ்ட் செய்து, அந்த குறிப்பிட்ட ஃபேஸ் பேக் உங்களுக்கு ஏற்றதா என்பதை தெரிந்து கொண்ட பிறகு அதனை உங்கள் முகத்தில் பயன்படுத்துவது அவசியம்.

அதிகப்படியான ஃபேஸ் பேக் பயன்படுத்துவது :  ஃபேஸ் பேக் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அளித்தாலும், அதனை அடிக்கடி பயன்படுத்துவது அதிகப்படியான எக்ஸ்ஃபோலியேஷன் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதிகப்படியான எக்ஸ்ஃபோலியேஷன் என்பது உங்கள் சருமத்தில் வறட்சி, சிவத்தல் மற்றும் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கலாம். எனவே எந்த ஒரு ப்ராடக்டை பயன்படுத்துவதற்கு முன்பும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். இல்லையெனில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தோல் நிபுணரை அணுகி ஆலோசனையை பெறலாம்.




சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருப்பது சுத்தமான சருமத்தில் பயன்படுத்தினால் மட்டுமே ஃபேஸ் பேக் மூலமாக சிறந்த பலன்களை நீங்கள் அடைய முடியும். அழுக்காக இருக்கக்கூடிய சருமத்தில் நீங்கள் ஃபேஸ் பேக் பயன்படுத்தும் போது அந்த ப்ராடக்ட் உங்களது சருமத்தில் நுழைய முடியாமல் அதன் பலன்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்காமல் போகலாம். எனவே ஃபேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீண்ட நேரத்திற்கு ஃபேஸ் பேக் பயன்படுத்துவது : எந்த ஒரு ஃபேஸ் பேக்கையும் பயன்படுத்துவதற்கு அதற்கான குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். குறைவான நேரமோ அல்லது அதிகமான நேரமோ ஒரு ஃபேஸ் பேக்கை நீங்கள் பயன்படுத்தும் பொழுது சருமத்தில் வறட்சி அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே நீண்ட நேரம் அதனை பயன்படுத்தாமல் சரியான நேரத்தில் அதனை அகற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒத்துப் போகாத இரண்டு பொருட்களை ஒன்றாக பயன்படுத்துவது :  ஃபேஸ் பேக்கை ஸ்கின் கேர் ப்ராடக்டுகள் அல்லது பொருட்களுடன் இணைந்து செயல்படும் பொழுது அது உங்கள் சருமத்தில் மோசமான எதிர்வினை ஆற்றலாம். எனவே இதனால் சரும எரிச்சல், சிவத்தல் அல்லது அலர்ஜி உண்டாகும். ஆகவே உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் நீங்கள் எந்தெந்த பொருளை ஒன்றாக கலந்து பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!