Serial Stories

கடல் காற்று-48 (நிறைவு)

48 

அதோ …அது ..அது …மலையரசன் கண்களை சுருக்கி பார்த்தான் .குழந்தையை தூக்கியபடி வரும் அந்த பெண் சாவித்திரிதான் .மலையரசன் துள்ளிக் குதிக்காத குறைதான் .” சம்மு ..சாவித்திரி வந்து விட்டாள் …” வேகமாக கீழே இறங்கி ஓடினான் .சமுத்ராவும் இறங்கினாள் .

மிரண்ட விழிகளுடன் வந்து நின்ற சாவித்திரி சமுத்ராவை பார்த்ததும் இன்னமும் மிரண்டாள் .” பயப்படாதம்மா சம்முகிட்ட எல்லாம் சொல்லிவிட்டேன் .” அவளை சமாதானப்படுத்தினான் மலையரசன் .

” மன்னிச்சிடுங்க இவ்வளவு நாட்களாக உங்கள் வாழ்க்கையில் இடையூறாக நின்றதற்கு .இவ்வளவு நாட்களாக ஈஸ்வர் எங்களுக்கு ஒரு காவல்கார்ராகத்தான் இருந்தார் . கட்டிலை வெளியில் போட்டு பனியில் படுத்துக் கொண் டிருந்தார” தங்கள் விசித்திர வாழ்வை சமுத்ராவிற்கு விளக்கி விட முனைந்தாள் சாவித்திரி.

புரிந்து கொண்டதன் அறிகுறியாய் அவள் கைகளை பற்றி வருடினாள் சமுத்ரா.குளிரில் நடுங்கியபடி தன் கணவன் அங்கே தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கையில் தான் இங்கே மெத்தையில் ஜாலியாக சாய்ந்து கொண்டு அவனை வைது கொண்டு டிரந்தோமே …? என வருந்தினாள் .

் .ஈஸ்வரை சார்ந்து வாழ என்னை விட என் குழந்தை மிகவும் பழகி விட்டாள்,தினமும் இரவு அவர் கதை சொன்னாள்தான் அவளுக்கு தூக்கம் வரும், அதனால் நிறைய தடவைகள் உங்களை தொந்தரவு செய்த்ருக்கிறோம். மன்ன்த்து விடுங்கள்.” தனது இரவு நேர அழைப்புகளை தொடர்ந்து விளக்கியபடி தலைகுனிந்து பேசினாள் சாவித்திரி .

” அதை விடுங்கள் சாவித்திரி.இப்போது நீங்கள் முழு மனதோடுதானே இந்த முடிவினை எடுத்தீர்கள் சாவித்திரி .கொஞ்சம் தயக்கமிருந்தாலும் சொல்லிவிடுங்கள் .உங்கள் இடம் உங்களுக்கு தயாராகவே இருக்கிறது ” என்றாள் சமுத்ரா .மலையரசனின் முகம் அவள் பேச்சிற்கு ஆட்சேபம் காட்டியது .

” இல்லை இது என் கணவரின் கடைசி விருப்பம் .அதனை நிறைவேற்றுவது என் கடமை .அத்தோடு எத்தனை நாட்கள் ஒரு நல்ல நண்பனின் தோளில் ஏறிக் கொண்டே இருக்க முடியும் ..? அதனால் இந்த முடிவெடுத்தேன்.. இவள்தான் புதிய வாழ்வினை  எப்படி ஏற்றுக்கொள்ள போகிறாளோ..? தோளில் தூங்க்க் கொண்டிருந்த குழந்தையை வருடினாள்.” சாவித்திரி .

” சரி ஆனால் உங்களது இந்த புதிய வாழ்வில் எந்த குழப்பம் வந்தாலும் உங்களுக்காக இந்த நண்பனின் வீடு காத்திருக்கிறது ்அதனை மறந்துவிடாதீர்கள் ” மலையரசனை பார்த்தபடி இதனை கூறினாள் சமுத்ரா .

சாவித்திரியை ஒழுங்காக பார்த்துக்கொள் .அவள் வாழ்வு உன் தங்கையின் வாழ்வுடன் பின்னி பிணைந்துள்ளது என்ற செய்தியை சகோதரனுக்கு சொல்லாமல்  சொன்னாள் .தலையசைத்து அதனை ஏற்றுக் கொண்ட மலையரசன் சாவித்திரியின் தோள்களில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தன் தோள்களுக்கு மாற்றிக் கொண்டான் .

” குழந்தைகளுக்கு நான் கூட நன்றாக கதை சொல்வேன் சாவித்திரி.சம்முவிடம் கேட்டு பாரேன். அவள் சிறு பிள்ளையாய் இருக்கும் போது நிறைய கதை சொல்லியிரிக்கிறேன்.இல்லை சம்மு…?” பார்வையை சாவித்திரியின் மேல் பதித்து சமுத்ராவிடம் கேட்டான் மலையரசன்.

பெருமூச்சோடு தலையசைத்துக் கொண்டாள் சாவித்திரி.

” சென்னையில் நாளை திருமண ஏற்பாடுகள் செய்து விட்டேன் .அடுத்த வாரம் டெல்லி கிளம்புகிறோம் .மாப்பிள்ளையிடம் எல்லாவற்றையும் விளக கமாக சொல்லிவிடு ..அப்புறம் நாங்கள் போகும் போது சாவித்திரியின் தோப்பு வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு போகப் போகிறோம் .கலவரத்தில் எரிந்த்தாக இருக்கட்டும் .மாப்பிள்ளையின் மறைமுக வாழ்வும் இதோடு முடிந்து விட்டது .உங்கள் வாழ்வில் இருந்து சாவித்திரி விலகிவிட்டாள் ” தங்கையின் வாழ்க்கையை செப்பனிட்டுவிட்டு தன் வாழ்க்கைக்கான ஆரம்ப புள்ளி ஒன்றை வைத்துக்கொண்டு மலையரசன் கிளம்பிவிட்டான் .




நெஞ்சு பஞ்சாக மாறி உயரே பறக்க மிகுந்த நிம்மதியோடு சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் சமுத்ரா .

அண்ணனின் வாழ்வு சீரடையவும் தன் வாழ்வு நினைவு வந்த்து சமித்ராவிற்கு .இப்போதுதான் இந்த கலவரம் பெரிய பீதியை ஊட்ட , ஊரெங்கும் நிலவும் அசாதாரணமான சூழலை உணர்ந்தாள் .

அப்போதே …உடனே …உடனடியாக ..கணவனை பாரத்தே தீரவேண்டுமென்ற எண்ணம் உருவாகும் போதே …இறுதியாக அவன் அளித்து விட்டு சென்ற இன்னமும் இதழ்களில் தித்தித்துக் கொண்டிருந்த முத்தம் கணவனுக்கான தாபத்தை அவளுக்குள் கிளறிவிட்டது .

ஏன்டா …? ஏன் …இது ..இப்படி என்று என்னிடம் ஒரு வார்த்தை சொன்னாயா நீ …? செல்லமாக தனக்குள் அவனை  கோபித்துக் கொண்டு தனது இதழ்களை நாவினால் வருடிப் பார்த்து கணவனை நினைத்துக் காண டிருந்த போது , அவனது பேச்சு நினைவு வந்த்து .என்ன சொன்னான் ..? இதுவே இறுதி ..யாக …என்றா ..? அப்படியா சொன்னான் ..? ஏன் …ஏன் …அப்படி சொன்னான் …?

சமுத்ராவின் மனக்குதிரை வேகமெடுக்க தொடங்கியது .சாவிற்கும் துணிந்துவிட்டானா …? இப்படி பேசிவிட்டு போனானே ..? அவ்வளவுதான் ..அதன்பிறகு நொடியும் சமுத்ரா அங்கிருக்கவில்லை .் சற்றும் யோசிக்காமல் வீட்டிற்கு வெளியே இறங்கிவிட்டாள் .அவளுக்கான இரவு உணவு தயாரித்து தட்டில் வைத்து கொண்டுவந்த புவனா …அவளைக் காணாமல் பதற தொடங்கினாள் .

ஊரே பற்றி எரிகிறதோ …என்ற சந்தேகம் வந்த்து சமுத்ராவிற்கு .அந்த அளவு அங்கே கலவரம் நடந்து கொண்டிருந்த்து .போலீஸ்காரர்கள் நிறைய இருந்தாலும் கலவரத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை .அவர்களும் திணறிக் கொண்டிருந்தனர் .யோகேஷ்வரன் தயார் செய்து வைத்திருந்த இளைஞர் படையும் போலீசுடன் சேர்ந்து போராடிக் கொண்டிருந்தனர் .

அவர்களில் நிறைய பேர் உடல் முழுவதும் காயம் வாங்கியிருந்தனர் .ரத்தம் சொட்ட சொட்ட போராடிக் கொண்டிருந்தனர் .இதோ ..இது போல்தான் அவனும் எங்கோ ஒரு மூலையில் தன் மக்களுக்காக போராடிக் கொண்டிருப்பான் .அவன் உடலும் இது போல் காயம் பட்டு ரத்தம் வடியுமா ..? அல்லது ..அவன் சொன்னது போல் …ஒரேடியாக உயிரையே …ஐயோ முருகா என் மாங்கல்யத்தை காப்பாற்று .தனது தாலியை இறுக பற்றிக் கொண்டு ஓடினாள் சமுத்ரா .

சுழட்டி வைத்து விட்டு போய்விடுவேன் என்று அபசகுனம் போல் அடிக்கடி கூறினேனே …அதற்காக இந்த தண்டனையா …?என் ் வாய்தான் அப்படி கூறியதே தவிர ,நான் ் மனதார அந்த தாலியை சுழட்ட வேண்டுமென ஒருநாளும் நினைத்ததில்லையே …சண்முகா ..வேலவா ..அப்படி சும்மா சொன்ன வார்த்தைகளுக்காக என்னை தண்டித்து விடாதே .வாய் திறந்து ் பேசியபடி ஓடினாள் .

” ஏய் ..ஏம்மா ..எங்கே போகிறாய் ..? உனக்கென்ன பைத்தியமா ..? இங்கே வா ..? இதற்குள் ஒளிந்து கொள் ..” ஒரு போலீஸ்கார்ர் ஓடிக்கொண்டிருந்த சமுத்ராவை பார்த்து கத்தினார் .ஊர் முழுவதும் ஆங்காங்கே பதுங்கு குழிகளை வெட்டி வைத்திருந்தனர் .அதனுள்தான் ஒளிந்து கொள்ள சொல்லி கூப்பிட்டார் அவர் .

அவரது குரலை கேட்டதும் இன்னமும் வேகமாக ஓடினாள் சமுத்ரா .உள்ளே போய் உட்கார்ந்து கொண்டால் அவள் கணவனை பார்ப்பது எப்படி ..?அந்த போலீஸ்கார்ர் இவள் பைத்தியமென்ற முடிவிற்கே வந்தார் .

“யோகன் உங்களை நான் புரிந்துகொண்டேன் .நீங்கள் இல்லாமல் எனக்கொரு வாழ்க்கை இல்லை. நமது குழந்தையோடு நாம் நெடுங்காலம் வாழ வேண்டும் .வந்துவிடுங்கள் ..” கலைந்த தலையும் , இரண்டு முறை கீழே விழுந்து எழுந்ததால்் அழுக்காகிவிட்ட சேலையுமாக கிட்டதட்ட பைத்தியக்காரி மாதிரி வாய் விட்டு புலம்பியபடி அங்குமிங்கும் பார்த்தபடி ஓடிக் கொண்டிருந்தாள் .

” முத்ரா …” வேகமாக கேட்ட அந்த குரலில் தேவலோகம் சேர்ந்தாற் போல் உணர்ச்சி தோன்ற திரும்பி பார்த்தாள் .யோகன்தான் .அவளை நம்ப முடியாமல் பார்த்தபடி அருகில் விரைந்து வந்து கொண்டிருந்தான் .இப்போது அது கலவர பூமியாக சமுத்ராவிற்கு தெரியவில்லை .அங்கிருந்த நெருப்பும் , புகையும் சேர்ந்து அதனுள்ளிருந்து வெளிப்பட்டு வந்த கணவன் அவள் கண்களுக்கு கந்தர்வனாக தோன்றினான் .

” ஏய் லூசாடி நீ ..? இங்கே எதற்கு வந்தாய் ..? ” அவள் தோள்களை பற்றி அவன் உலுக்க ” உனக்காகத்தான்டா …” சொன்னதோடு இல்லாமல் அதனையே நிரூபிப்பது போல் அவனை இறுக அணைத்துக்கொண்டாள் .




மனைவியின் இறுக்கமான இணைப்பு யோகனுக்கு நிறைய விசயங்களை உணர்த்த அவள் முகத்தை பார்க்க வேண்டி அவளை தன்னிடமிருந்து விலக்க முயன்றான் .ஆனால் விலக மறுத்து மேலும் அழுத்தமாக அவனுடன் ஒட்டிக்கொண்டவள் ” விட மாட்டேன் ..நான் உன்னை விட மாட்டேன் ..” மாறி மாறி புலம்பியபடி மேலும் மேலும் அவனுடன் ஒட்டினாள் .

கலவரக்கார்ர்கள் எறிந்த ஏதோ ஒரு பொருள் அவர்களை நோக்கி வர மனைவியோடு சேர்ந்து குனிந்து அதிலிருந்து தப்பியவன் ,அருகிலிருந்த பதுங்கு குழிக்குள் பத்திரமாக மனைவியோடு சேர்ந்து உருண்டான் .இத்தனை நேரத்தில் கணவனை விட்டு இம்மி கூட விலகவில்லை சமுத்ரா .

கண்களில் பொங்கி வடியும் காதலோடு தன்னை இறுக்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்த யோகனின் கோபம் சிறிது குறைந்தாலும் வேகம் குறையவில்லை .” என்ன சமுத்ரா ..ஏன் ….? ” வேகமாக இன்னமும் சரியாக புரியாமல் கேட்ட யோகனின் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்து தன னை ..தன் மனதினை கணவனுக்கு உணர்த்தினாள் சமுத்ரா .

” என்னடா …? என்ன ஆச்சு ..? என்ன நடந்த்து ..? ” உடலும் , மனமும் நெகிழ மனைவியை தழுவியபடி கேட்டான் .அவனது அணைப்பை அனுபவித்தபடி மெல்ல அவன் காதிற்குள் எல்லா விசயங்களையும் சொல்லலானாள் சமுத்ரா .சிறிதுநேரம் நம்ப முடியாத பிரமிப்பில் இருந்தான் யோகன் .

” அண்ணன் மீது உங்களுக்கு கோபம் இல்லையே ..? ” தயங்கியபடி கேட்டாள் .

” உன் அண்ணன் செய்த வேலைக்கு அவரை வெட்டிப் போட்டிருக்க வேண்டும் .ஆனால் தவறென்று உணர்ந்து அதற்குரிய தீர்வையும் கையிலெடுத்திருக்கிறாரே ..!! மேலும் இனி அவர் வாழ்வு சாவித்திரியின் வாழ்வோடு பிணைந்து விட்டதே .என்ன செய்ய முடியும் ..? சாவித்திரிக்கு இன்னொரு வாழ்வென்பது மூன்று வருடங்களாக அவளுடன் போராடி பார்த்தும் என்னால் முடியாததாக இருந்த்து .அதனை உன் அண்ணன் சாதித்திருக்கிறார் .அதற்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும் ” என்றான் .

சாவித்திரியின் மீது இவ்வளவு பாசம் வைத்நிருப்பவன் அவளுக்கு ஏன் மறுமணத்திற்கு முயற்சிக்கவில்லை என்ற சமுத்ராவின் உறுத்தல் மறைந்த்து .அவள் கணவன் தன்னிடம் வேலை பார்த்த ் சாயாதேவிக்கே இரண்டாவது மணம் முடித்து வைத்தவன் .சாவித்திரியை விடுவானா ..? கணவனை நினைத்து பெருமை தோன்றியது சமுத்ராவிற்கு .இன்னமும் அவனை நெருங்கி அவன் மார்பில் புதைந்து கொண்டாள் .

” சாவித்திரி விசயம் ஏன் என்னிடம் சொல்லவில்லை ..? ”
” சாவித்திரிக்கு அவள் கணவன் வீட்டு வழி , அவள் பெற்றோர் வீட்டு வழி ..சிக்கல் நிறைய இருந்த்து .உயிரை பறிக்க ஒரு குடும்பத்தினர் ் நினைத்தால் அவளை தூக்கி போய் தங்கள் ஆளுகைக்குள் வைத்துக் கொள்ள இன்னோருவர் நினைத்தனர் .இதனை என னிடம் விளக்கி என் பாதுகாப்பில் இருப்பவள் என்ற நிலைதான் அவளை காக்கும் என்று கூறி அதனால் கிளப்பி விடப்படும் எந்த வதந்திக்கும் அஞ்சக்கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கியபின்தான் முரளி ராணுவத்திற்கு சென்றான் .”

அவன் சென்றதும் உன் அண்ணன் ஆரம்பித்து வைத்த வதந்தியை ஊதி பெரிதாக்கி சாவித்திரியை என் பாதுகாப்பிலிருந்து வெளிக் கொணர முயன்றனர் .நாங்கள் இருவரும் அதற்கு அஞ்சவில்லை .இடையில் முரளியின் முடிவு சாவித்திரியை பைத்தியமாகவே ஆக்கிவிட்டது .இதனை சாக்காக வைத்து இரு வீட்டினரும் அவளை வெறியோடு நெருக்க , நான் அவளை என்னோடு நம் ஊருக்கு அழைத்து வந்தேன் .ஊருக்குள் பலவிதமாக பேச ஆரம்பிக்க முதலில் மிகவும் கூசிய சாவித்திரி பிறகு அதுதான் தனக்கு பாதுகாப்பு என்று கூறி இப்படியே இருந்துவிட முடிவெடுத்தாள் .




ஆனாலும் நான் அவளுடைய மறு வாழ்விற்காக போராடிக் கொண்டுதான் இருந்தேன் .அவள் சிறு நூலிழை கூட எனக்கு அதற்கு இடமளிக்கவில்லை “

” என்னிடம் ஏன் சொல்லவில்லை …? ” ஆதங்கத்தோடு கேட்டாள் சமுத்ரா .

” என்ன சொல்வேன முத்ரா ..? எப்படி சொல்வேன் ..? இதில் சம்பந்தப்பட்டிருப்பது சாவித்திரியின் வாழ்வு .அதனை நான் எப்படி மனைவியானாலும் உன்னிடம் கூற முடியும் ..?என்னை நீ உணர்ந்து கொண்டு  நீயே புரிந்து கொள்ள வேண டும் என நினைத்தேன் ..புரிந்து கொள்வாய் என எதிர் பார்த்தேன் ..? ஆனால் நீ ஒரேடியாக பிரிந்து செல்வதாக கூறிக் கொண்டிருந்தாய் .என்னை பிரிவதுதான் உனக்கு மகிழ்ச்சியை தருமென்று நினைத்தால் , அதற்கும் நான் தயாராக இருந்தேன் .ஆனால் உன்னை பிரிந்த பின் ஒரு வாழ்வை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை .அப்படி ஒரு  வாழ்வுதான் எனக்கென ஆகிவிட்டால் இந்த கலவரத்திலேயே என் உயிர் போய் விட்ட்டுமென றுதான் …”

” தப்பு தப்பாய் பேசாதீர்கள் ….” என தவறு செய்த உதடுகளை ் மீண்டும் தன் இதழ்களால் தண்டித்தாள் சமுத்ரா .

” இது போல் தண்டனை கிடைப்பதாக இருந்தால் நான் காலம் முழுவதும் தவறு மட்டுமே செய்து கொண்டிருப்பேனே …!!!” குறும்்பாக கூறினான் .

” ஆமாம் செய்வாய் நீ ..தான் அசுரனாயிற்றே …தவறுதான் செய்வாய் …அதுவும் என்னிடம் தவறு மட்டுந்தானே செய்வாய் ” குழைந்தாள் சமுத்ரா .

” அசுரனா நான் …? அவள் இரண்டு  கன்னங்களை தன் கைகளால் செல்லமாக கிள்ளி உலுக்கியபடி கேட்டான் .

” ஆமாம் அசுரன்தான் .என் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்கும் அழகிய அசுரன் நீ …” சமுத்ரா கொஞ்சினாள் .

” அசுரன் தப்பு தப்புகளாகத்தான் செய்வான் தெரியுமா ..? ” தவறென்று ஆரம்பித்த கணவனின் சில்மிசங்களை ஏற்று அதற்கான தண்டனைகளை தன் இதழ் வழியாகவே தந்து கொண்டிருந்தாள் சமுத்ரா .

ஊருக்குள் கலவரம் மெல்ல மெல்ல அடங்கி ..பதுங்குகுழிக்குள் இருப்பவர்களையெல்லாம் மீட்்டபடி போலீஸ் வந்து இவர்கள் இருந்த  குழிக்கும் வரும் வரை இந்த சுகமான தண்டனைகள் இருவருக்குள்ளும் தொடர்ந்த து .இந்த பைத்தியக்காரி இங்கே என்ன செய்கிறாள் யோசனையோடு பார்த்த போலீஸ்கார்ரை பார்த்து சிரித்தபடி வெளியே வந்தாள் சமுத்ரா .

வானம் வெளிச்சத்தை சிதறடித்தபடி விடிந்த்து .சமுத்ராவின் வாழவினை போலவே .

                                                                                                                                                                                                                                                                                    

சுபம் …

 




What’s your Reaction?
+1
18
+1
10
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!