Serial Stories

விநாடி நேர விபரீதங்கள்-14

வினாடி ..14

“என்ன கார்த்திக் அம்மா? இந்த இன்ஸ்பெக்டர் ஏதேதோ பேசறார்? ஏதோ டிரஸ்ட்டு..கவுன்சலிங்…இதெல்லாம் சரியில்லை. கடைசியில் யார்யாரோ செஞ்ச தப்பெல்லாம் நம்ம பிள்ளைக தலையில் போடப்போறாங்க.”

ரேவதி ஏற்றி விட ரோஜாமணி டென்ஷனானாள் 

“அதானே!

அப்பா! இவங்க பேச்சை கேட்டு என் பிள்ளை வாழ்க்கை நாசமா போகப் போகுது. நான் பேசாம எங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்றேன்.அவர் பெரிய வக்கீலா ஏற்பாடு பண்ணுவார்.

பேச வேண்டிய இடத்தில் பேசி கரெக்ட் பண்ணிக்கலாம் .இவங்க சொல்றதுக்கு ஆதாரம் இருக்கா?”

“இல்லாமலா பேசுவாங்க‌. எல்லாம் இருக்கு.”

“அதெல்லாம் போலி. இவங்க தயாரிச்சது.”

“ரோஜா கண்மூடித்தனமா பேசாதே.”

“அவங்க சொல்றது சரிதானே பா.

ஏதோ டிரஸ்ட்டுல சேர்க்க நம்ம பிள்ளைக அனாதைகளா?

உறவுக்காரர்களுக்கு தெரிஞ்சா அவமானம் இல்லையா?”

“அம்மா ரேவதி..இது பிள்ளையை வளர்க்கறப்ப தோணியிருக்கணும்.ஒழுங்கா கவனிச்சிருக்கணும்.”

“ம்க்கும். கார்த்திக் அம்மா நீங்க சொன்னது சரி தான்‌. ஊருக்கு ஒருத்தர் உங்கப்பா மாதிரி..வேணாம் இவர் ஒருத்தரே போதும். நம்மளை பழி சொல்ல…இது சரிவராது. நான் என் மாமாவுக்கு ஃபோன் பண்றேன். அவருக்கு பெரிய பெரிய போலீஸ் ஆபீஸர் எல்லாம் தெரியும்.”

ரேவதி நகர்ந்ததும் ரோஜா தெய்வநாயகத்தைப் பிடித்து கொண்டாள்.

“உங்களுக்குத் தெரியாத பெரிய மனுஷங்களா? எம்புள்ளையைக் காப்பாத்தணும். அவனை எங்கேயோ கொண்டுவிட நான் தயாரில்லை. ஏஸி இல்லாம தனி ரூம் இல்லாம அவன் இருக்கமாட்டான்.நான் இப்பவே என் ஃபிரண்ட் கிட்டே பேசறேன். அவள் ஹஸ்பண்ட் லீடிங் லாயர்..”

அவள் மொபைலை எடுக்க..

சட்டென அவள் கையிலிருந்து அதைப் பிடுங்கினான் சகா.

“இதோ பாருங்க மேடம். நிலைமையோட தீவிரம் தெரியாம விளையாடாதீங்க. உங்க பிள்ளைகளின் வாழ்வு பாழாயிடக்கூடாது ன்னு தான் நாங்க இத்தனை மெனக்கிடறோம். நீங்க விவரம் இல்லாம யாருக்காவது ஃபோன் செஞ்சா விஷயம் வெளியே கசிஞ்சிடும்.அப்புறம் டிரஸ்ட் இல்லை சிறுவர் ஜெயில் தான்.”

“என்ன சார் மிரட்டறீங்களா?”

“மிரட்டவில்லை. எச்சரிக்கிறேன்.

தெய்வநாயகம் சார் உங்க கிட்ட டிரஸ்ட் பத்தி விபரமாக சொல்லிட்டேன். எடுத்து சொல்லிப் புரிய வைங்க. கமிஷ்னர் வர்றார்.அவரும் நான் ரிக்வெஸ்ட் பண்ணினதால‌ இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டார். உங்களுக்கு வேண்டாம்னா சொல்லுங்க சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிடறோம்” 

அவன் உள்ளே சென்றுவிட..

தெய்வநாயகம் எல்லோரையும் கடுமையாகப் பார்த்தார்.

“இங்கே பார் ரோஜா உன் பிள்ளை மேல் உனக்கு உண்மையான அக்கறை இருந்தா வாயை மூடிட்டு பேசாம இரு. இனியாவது ஒரு நல்ல அம்மாவா நடந்துக்க.”

“சரி சார். காதம்பரி பற்றி மீதியையும் சொல்லுங்க.அந்த பெண்ணுக்கு என்ன ஆச்சு? அவங்களுடையதா இந்த ட்ரஸ்ட் ”

பார்த்தா வின் அப்பா பரபரத்தார். சகா தொடர்ந்தான்.




கவுன்சலிங் செய்ய இடம் பார்த்திட்டு பூர்ணிமாவுடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தாள் காதம்பரி. வழியில் பூர்ணிமா இறங்கி விட பீச் ரோடு பக்கம் திரும்பும் போதுதான் அது நடந்தது.

நாலைந்து சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். மாஞ்சா போட்டு முறுக்கேறிய நூல் கட்டிய பட்டம் மேலே மேலே போக…சட்டென ஒரு காற்றடித்து கீழே இறங்க ஆரம்பித்தது.

அதை துரத்தி வந்தவன் கீழேயிருந்து நூலை சுண்டி மேலேற்ற முயல அது வேகமாக இறங்கி காதம்பரியின் கழுத்தில் சரியாக சுற்றியது.

ஒரு நிமிடம் தான் எல்லாமே முடிந்து போனது.

நிலை தடுமாறி விழுந்தவள் தலையில் அடிபட்டு நினைவிழந்தாள்.

“ஐயோ! சின்ன பெண்ணாச்சே!”

“ஆமாம்‌. சின்ன பெண்ணாய் இருந்தாலும் அந்த சிறுவர்கள் மேல் எந்த கம்ப்ளெயிண்டும் கொடுக்கக் கூடாது னும்.அவ பேரில் டிரஸ்ட் ஆரம்பிச்சு வழி தடுமாறும் சிறுவர்களை நல்வழிப்படுத்தணும் னு சொல்லிட்டு போயிட்டா.

அவங்கப்பா லாயர் சத்தியமூர்த்தி தான் இதை நடத்திட்டு வர்றார்.

“உங்க எல்லோருக்கும் ஒண்ணு சொல்றேன். ஸ்மார்ட் ஃபோன், காஸ்ட்லி பைக், ஏஸி ரூம் இதெல்லாம் கொடுத்தா தான் நல்ல பெற்றோர் னு இல்லை. பிள்ளைகளை கண்ணும் கருத்துமா கவனிக்கணும்.அவங்க மேல் படிப்பை மட்டும் திணிக்காம அவங்களுக்காக நேரம் ஒதுக்கி பேசணும்.அவங்க நியாயமான ஆசைகளை சரியான வழியில் அடைய ஊக்குவிக்கணும்.”

சகாதேவனின் பேச்சு அவர்களை சுருக்கென தைத்தது.

அதற்குள் அரசு உள்ளே வந்து அவன் காதைக் கடிக்க…

சகாதேவன் முகம் இறுகியது.பல்லைக் கடித்தவன் முஷ்டியால் டேபிளைக் குத்தினான்.

“ஜனாவை யாரும் சந்திக்க விடாதீங்க.நான் ஜட்ஜ் கிட்ட பேசி கஸ்டடியில் எடுத்திடறேன். அவனை க்ளோசா வாட்ச் பண்ணுங்க..”

படபடவென கட்டளையிட்டவன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாரானான்.

அதற்குள் சேனல்காரர்கள் கண்ணனிடம் பேட்டி எடுக்க ஸ்டேஷனில் குவிந்தார்கள்.

“அதிகமா ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்துக்கு படிக்கிற இந்தப் பையன் ஏன் போனான்?”

“தண்டவாளம் விரிசலா இருக்கிறது எப்படி தெரியும்?”

“சிவப்பு சட்டை அவனுக்கு ஏது?”

ஆளாளுக்கு கேட்ட கேள்விகளுக்கு சகாதேவனே பொருத்தமாய் பதில் சொல்ல…

“அந்தப் பையனை ஏன் பேச விட மாட்டேங்குறீங்க?”

ஒருத்தர் கேட்க..

“அவன் பயந்திருக்கான். நாங்க உங்களை விட அதிகமா விசாரிச்சிட்டோம்.போலீஸ் விசாரணை எப்படியிருக்கும் னு தெரியும்ல?”

அதற்குமேல் அவர்கள் பேசாமல் அமைதி காக்க..

“நல்லது பண்ணினா பாராட்டுங்க அதை விடுத்து நீங்க விசாரிக்காதீங்க. அதை நாங்க செய்றோம். இப்ப கிளம்புங்க..”

அவர்களை அனுப்பியவனுக்கு வெண்மதி நினைவுக்கு வந்தாள்.

‘பாவம் என்ன செய்கிறாளோ. படிக்காத பெற்றவர்களை எப்படி சமாளிக்கிறாளோ‌. கண்ணனை மீடியாவின் குடைச்சல் இருந்து தற்காலிகமாக காப்பாற்றிவிட்டான். அவனையும்‌ காதம்பரிக்கு அனுப்பிவிட்டால் பின் ஏதும் பிரச்சினையில்லை. ஆனால் ஜனா!

அவன் ஏதும் வாய்திறக்காமல் இருக்க வேண்டுமே. தான் தப்பிக்க சிறுவர்களைக் கைகாட்டாமல் இருக்க வேண்டும்.’

“டேய் சகா! உன் தங்கச்சியை வச்சு உன் மானத்தை வாங்கிட்டேன்.அடுத்து உன் உசுரு தான்.உன்னால முடிஞ்சா தப்பிச்சிக்கோ!”




ஜனாவின் கொடூரமான சிரிப்பு இன்னும் அவன் காதுகளில் எதிரொலித்தது.

ஜனா விவகாரத்தை கவனிக்க வேண்டும்.அந்த பாவி என்னென்ன நாசவேலைகளில் ஈடுபட்டிருக்கானோ.. வேறேதும் அசம்பாவிதம் நடக்காம பார்த்துக்கணும். குறிப்பா இந்த ஏரியாவில் தான் ஏதாவது ஐடியா போட்டிருப்பான்.நான் தானே அவன் டார்கெட்.

அரசு விடம் சில இன்ஸ்ட்ரக்ஷனை கொடுத்து விட்டு மறுநாள் காலை அவனது ஏரியா மனுநாளுக்கு வரும் கலெக்டரைப் பார்க்க  கிளம்பினான்.

கலெக்டரிடம் மனு கொடுக்க மனு மகேந்திரன் வரப்போவதாகத் தாக்கல் வந்திருப்பதாக அரசு தெரிவிக்க..

சட்டென மின்னல் தெறித்தது அவனுள்.

நாளை முழுதும் அவன் கலெக்டருடன் இருப்பான்.அப்போது‌ ஏதாவது 

பிளான் செய்திருப்பானோ.

மனு மகேந்திரனுக்கு வேறு வேலையே கிடையாது. யார் மேலாவது பிராது கொடுத்துக் கொண்டே இருப்பார். பெரிய மனிதர் போர்வையில் சமூக சீர்கேடுகளுக்கு துணை போகிறவர்களை தோலுரிப்பதும் தண்டனை வாங்கிக் கொடுப்பதும் தான் அவர் வேலை. அவரைப் போய் பார்த்தால் என்ன? அவர் வருவதால் ஏதாவது விவகாரம் இருக்கக் கூடும்.

அவரைப் போய்ப் பார்க்க ..பல விஷயங்கள் தெளிவாயின.

அரசாங்க கான்ட்ராக்ட் விஷயத்தில் ஏகப்பட்ட தில்லுமுல்லு செய்து வாங்கியிருக்கிறார் தொழிலதிபர் ரத்னவேலு.அவர் பெயரில் வாங்காமல் பினாமி தன்ராஜ் பேரில் செய்திருக்கிறார்.அதற்கான ஆதாரங்கள் மகேந்திரனிடம் பக்காவாக இருந்தது.

“இந்த விஷயம் ரத்னவேலுக்கு தெரியுமா ?”

“நல்லா தெரியும். நான் ஆதாரங்களை கலெக்ட் பண்றப்ப உஷாராயிட்டார்.”

“அந்த தன்ராஜ்?”

“அவன் ஒரு மோசமான கிரிமினல். ஏற்கனவே வெளிநாட்டில் கொஞ்சநாள் இருந்தான்.அங்கே தகிடுதத்தம் பண்ணி மாட்டி அங்கேயுள்ள கிரிமினல்களோட சப்போர்ட்டில் தப்பிச்சு இங்கே வந்து ரத்னவேலுவோட நிழலாக இருக்கான்.”

“ஓ..”

‘ஜனாவுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?

அவன் வங்கிக்கணக்கில் தன்ராஜ் ஏன் பணம் அனுப்பியிருக்கார்?

இரண்டும் இரண்டும் நாலு…எஏன் குழந்தை கூட சொல்லுமே.

ஆக மனு மகேந்திரனை ஏதேனும் செய்வதற்காக‌ இருக்குமோ?’

அவரை எச்சரிக்கையாக இருக்க சொல்லிவிட்டு மனுநாள் நடைபெறும் இடத்தை செக் செய்தான்.பந்தோபஸ்து போலீசாருக்கும் கலெக்டரின் உதவியாளருக்கும் ரகசிய எச்சரிக்கை கொடுத்தான்‌.

இரவெல்லாம்  என்ன யோசித்தும் ஜனா என்ன செய்யப் போகிறான் என புரிபடவில்லை. ஆனால் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது…! என் உசிரை எடுப்பதாக சொல்லியிருக்கானே.

வெண்மதி! அவசரப்பட்டு என் காதலை உன்னிடம் சொல்லிட்டேன்.

நோ…

அவன் சதியை முறியடிப்பேன் உன்னைக் கரம்பிடிப்பேன்

ஏதேதோ

யோசித்தபடியே உறங்கியவனை மொபைல் எழுப்பியது.

“ஜனா தப்பிச்சிட்டான் சார்.”

“என்னது? “

“அந்த பசங்களை விடமாட்டேனு சொல்லிட்டு போயிருக்கான் சார்.”

சிறுவர்கள் தப்புவார்களா?

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!