Serial Stories அதிகாலை பூங்காற்று

அதிகாலை பூங்காற்று-15

15 

” உனக்கும் அந்த நாராயணசாமிக்கும் எப்படி பழக்கம ? ” அறைக்குள் நுழைந்த்தும் கேட்ட கணவனை வெறித்து பார்த்தாள் .

என்ன கேள்வி கேட்கிறான் …? இந்த பேச்சிறகாகவா  இன்று முழுவதும் இவனுடனான தனிமைக்கு காத்திருந்தேன் ?.வரட்டுமா எனக் கேட்ட கண்ணீரை , மூக்கை உறிஞ்சி மறைத்துக் கொண்டு தைரியமாக நிமிர்ந்தாள் .

” அவர் எங்கள் சொந்தக்கார்ர் .எனக்கு மாமா முறை தெரியுமா …? ” கிண்டலாக கேட்டாள் .

வெறியேறி சிவந்த்து அவன் விழிகள் .

இவனுக்கு மட்டும் அத்தனையும் அத்தை பொண்ணு ..மாமா.பொண்ணு .அதே உறவு முறை எனக்கு மட்டும் இருக்ககூடாதா …? என் சொந்த்த்தை சொன்னால் இவனுக்கு ஏன் கண் எரிகிறது .

” எவன்டி உனக்கு மாமன் …? ” ஆத்திரமாக அவளை நெருங்கி தோளை வெறியோடு பற்றினான் .

” உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக என்னுடைய உறவு முறையெல்லாம் மாற்றமுடியுமா …? ” 

வேங்கையென எதிரே நிற்பவனை பார்க்க பயமதான்.  உள்ளூறபொங்கும் காதலும்தான் . .ஆனாலும் தனது சுயமரியாதையை , தனமானத்தை விட்டுக. கொடுக்க அவள் தயாரில்லை .

” உன்னோட அந்த உறவுமுறையின் யோக்யதை தெரியுமா உனக்கு ? ” 

” ஏன் தெரியாமல் ..்அவர் நிறைய படித்தவர் .அதிக புத்திசாலி . கோர்ட்டில் அவர் நுழைந்தாரானால் குற்றவாளிகள் நடுநடுங்குவார்கள் …அவர் ….” பேசிக் கொண்டிருக்கும் போதே தீப்போட்டது போல் தன் கன்னம் எரிய அதிரந்தாள் .

அடித்தானா …? என்னையா …? நம்ப முடியாமல் கன்னத்தை பிடித்தபடி அவனை வெறித்து பார்த்தாள் .

” என்னடி ஒரேடியாக புகழ்த்திக்கிட்டு இருக்க …? ஒரு மனுசனா மதிச்சு பேசக்கூட தகுதியத்தவனை நீ பெரிய மேதை மாதிரி பேசிட்டு இருக்க …” வெறும் வாய் பேச்சுடன் நிறகவில்லை அவன் .அவளது கூந்தலை பிடித்து உலுக்கியபடி பேசினான் .

கண்டிப்பான பெற்றோரால் வளர்க்கப்பட்டவள்தான் .ஆனால் பொக்கிசம் போல் பார்த்து பார்த்து பொத்தி வைத்து வளர்க்கப்பட்மவள் .அப்பா அதட்டுவார் , கண்ணை உருட்டுவாரே தவிர , அவள் மீது விரல் கூட பட்டதில்லை. அம்மா எப்போதோ சிறு வயதல் படிப்பு சம்பந்தமாக லேசாக அடித்த ஞாபகம் .சித்தப்பாவிறகு  அவர் குழந்தைகளுக்கு எல்லோருக்குமே அவள் தேவதைதான் .

அப்படி வளர்ந்தவளை தாலி என்று  ஒன்றைகழுத்தில் மாட்டிவிட்டு இதோ இவன் கை நீட்டி அடிப்பதா …? தலையை பிடித்து உலுக்குவதா …? கவிதா அந்நேரம் அய்யனாரை மிக வெறுத்தாள் .

” காட்டுமிராண்டி ” வெளிப்படையாக அவனுக்கு கேட்கும் படியே முணுமுணுத்தாள் .

” என்னடி சொன்ன …? காட்டுமிராண்டியா நான் …? உன் மனமோ உடலோ நொந்துவிடக் கூடாது என்று பார்த்து பார்த்து உன்னை தொட டேனே நான் காட்டுமிராண்டியா …? நேற்று உன் உணர்வுகளை மதித்து ஒதுங்கப் போய் படுத்தேனா , நான் காட்டுமிராண்மியா …?  காட்டுமிராண்டிகளை உனக்கு தெரியாதுடி .இப்ப நான் காட்டுறேன் …தெரிஞ்சுக்கோ …” 

இரைச்சலாய் கத்தியவன் நடுநடுங்கி நின்று கொண்டிருந்தவளின் ஒற றைக் கையை பிடித்து இழுத்து அநாயசமாக தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான் .

துணியை சுருட்டி எறிவது போல் கட்டிலில் அவளை எறிந்தவன் , முரட்டுத்தனமாக தானும் அவள் மேல் விழுந்து பரவினான் .கவிதா இதனை எதிர்பார்கவில்லை .அவளும் அன்று முழுவதும் கணவனின் அருகாமையை அணைப்பை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் .ஆனால் இப்படி அல்ல …

கண்களின் கண்ணீர் கூட நின்றுவிட டது . ஒரு மாதிரி மரத்த மனதுடனும் , உடலுடனும் கணவனை எதிர்பொண்டாள் .ஙெகுநேரம் கழித்தே அய்யனார் மனைவியின் மரத்த மரக்கட்டை உணர்வை , உடலை உணர்ந்தான் .




சுளித்த புருவங்களும் , இறுக மூடிய விழிகளுமாக தன் முன் கிடந்தவளை குற்றவுணர்வுடன் பார்த்தான் .கலைந்து முகத்தில் பரவிக் கிடந்த முடிகளை ஒதுக்கினான் .மெல்ல அவளை வருடினான் .விழிகளை திறந்து அவனை உறுத்தவள் உன் வெறி தீர்ந்த்தா …என பார்வையால் கேட்டாள்.

அந்த பார்வைக் கேள்வி அய்யனாரை மிகவும் பாதித தது .அவள் முதலில் போல் பதிலுக்கு பதில் பேசியிருந்தால் , எதிர்த்து நின்றிருந்தால் இவனும் பதிலடியாக அவளை புரட்டியிருப்பான் .ஆனால் அவனது ஙெறிக்கு தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு …அநாதரவான பார்வை ஒன்றுடன் கிடந்தவளை பார்க்க பார்க்க அவனுள் குற்றவுணர்வு மிகவும் பெருகியது .

” மன்னிச்சுடு கண்ணு .ஏதோ கோபத்துல …” கரகரத்த குரலோடு அவள் கன்னம் வருடி நெற்றியில் முத்தமிட வந்தவன் அசையாமல் அவன் கண்களை ஊடுறுவிய அவள் பார்வையில் ஸ்தம்பித்தான் .விழிகளை மூடி தன்னைத்தானே சபித்தபடி அவளை விட்டு எழுந்தான் .

” தூங்கு கண்ணு …” போர்வையை இழுத்து அவளை மூடி போர்த்தியவன்  தளர்ந்த நடையுடன் பால்கனியை அடைந்து முன்தினம் போல் அங்கேயே படுத்தான் .

உடலும் , மனமும் வேதனையில் எரிய ,இருளில் மேலே சுழன்றபடி இருந்த மின்விசிறியை வெறித்தபடி ஙெகுநேரம் தூங்காமல் கிடந்தாள் கவிதா .




What’s your Reaction?
+1
14
+1
18
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!