Samayalarai

காய்கறி இல்லாத நேரங்களில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க..

இன்றைய சூழ்நிலைகள் காய்கறிகளின் விலை அதிகம உள்ளது, அதுமட்டுமில்லாமல் தினமும் என்ன சமைப்பது என தெரியாமல் குழம்பும் இல்லத்தரசிகளே இனிமேல் அந்த கவலையை விடுங்க… காய் இல்லாமலே நம்ம சூப்பரா குருமா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.




தேவையான பொருள்கள்:

  • சோம்பு – 2 ஸ்பூன்

  • பட்டை – 4

  • ஏலக்காய் – 1

  • மிளகு – ஒரு ஸ்பூன்

  • சீரகம் – ஒரு ஸ்பூன்

  • பொட்டுக்கடலை – இரண்டு ஸ்பூன்

  • முந்திரி – 2

  • இஞ்சி – மூன்று துண்டுகள்

  • பூண்டு – நாலு பள்ளு

  • கிராம்பு – மூன்று

  • தேங்காய் – அரை கப்

  • கசகசா – மூன்று ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் – 10

  • பெரிய வெங்காயம் – 2




செய்முறை விளக்கம் :

ஒரு மிக்ஸியில் ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, ஏலக்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகு, பொட்டுக்கடலை, முந்திரி, கசகசாவை பத்து நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்க்கவும். இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் சேர்க்கவும். ஒரு லிட்டர் வீதம் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கர் ஆறு விசில் வரும் வரை அப்படியே விடவும்.

இப்போது குக்கரை திறந்தால் வீடு மட்டும் இல்லை, தெருவே மணக்கும் குருமா ரெடி. இந்தக் குருமாவை இட்லி, தோசை சப்பாத்தி, இடியாப்பம், ஊத்தப்பம்  போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் தேங்காய் சேர்த்துள்ளதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர்க்கவும் .

இந்த மாதிரி காய் இல்லாத நேரங்களில் அல்லது காய் விலை அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்தக் குருமாவை செய்து அசத்துங்கள். அதுமட்டும் இல்லாமல் தினமும் சட்னி மற்றும் சாம்பார் வகைகளை செய்வதற்கு பதில் இது மாதிரி செய்து சாப்பிடுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!