Samayalarai

தாபா ஸ்டைல் முட்டை கிரேவி!

கீரை மற்றும் முட்டை பல ஆரோக்கியம் நன்மைகளை கொண்டது. அதனால் தான், மருத்துவர்கள் தினசரி உணவில் கீரை மற்றும் முட்டையை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

அந்தவகையில், இரண்டு சத்து நிறைந்த பொருட்களை கொண்டு ஒரு சுவையான கிரேவியை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை நாங்கள் கூறுகிறோம். இது மிகவும் சத்து நிறைந்தது, சுவையானது. தாபா ஸ்டைல் முட்டை கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம்.




தேவையான பொருட்கள்

  • முட்டை 4

  • எண்ணெய்- 4 ஸ்பூன்

  • வெண்ணெய்- 2 ஸ்பூன்

  • மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

  • மிளகாய் தூள் 1 ஸ்பூன்

  • மல்லி தூள் 1 ஸ்பூன்

  • கரம் மசாலா 1/2 ஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு

  • காய்ந்த மிளகாய்-2

  • பட்டை – சிறிய துண்டு

  • கிராம்பு-2

  • ஏலக்காய்-2

  • பிரிஞ்சி இலை-2

  • சோம்பு-1ஸ்பூன்

  • மிளகு-4

  • வெங்காயம்-2

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 1/3 ஸ்பூன்

  • தக்காளி-2

  • கஸ்தூரி மேத்தி-2 ஸ்பூன்

  • கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி




செய்முறை விளக்கம்:

முதலில் முட்டையை வேகவைத்து உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து வெண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு, 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து முட்டையை சேர்த்து வதக்க வேண்டும்.

3 நிமிடம் வதக்கிய பின்பு  முட்டையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

பின் அதே கடாயில்  எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மிளகு, காய்ந்த மிளகாய்,சோம்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.




வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்,1ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள்,1/2 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதித்து கிரேவி  பதம் வந்ததும்,  அதில் முட்டையை சேர்த்து கிளறி விட்டு கொத்தமல்லி இலை தூவி பின் கசூர் மேத்தி 2 ஸ்பூன் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் முட்டை கிரேவி தயார். இதை சூடான சாதம், சப்பாத்தி, நாண் உள்ளிட்டவற்றுடன் வைத்து சாப்பிடலாம். ‘

 




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!