Beauty Tips

உங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா?

நரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பேருக்கு ஆரம்பமாகிவிட்டது. அதனை மறைக்க கெமிக்கல் கலந்த கலரிங் உபயோகிக்கிறார்கள். இதனால் ஒன்றிரண்டு நரை முடி, பெருகிவிடும். மேலும் பக்க விளைவுகளையும் உண்டாக்கும்.

இந்த பிரச்சனைகளுக்கு இயற்கையில்தான் தீர்வு காண வேண்டும். கண்ட கண்ட டைகளை போட்டு, தீங்கினை விலைக்கு வாங்காதீர்கள்.

இள நரை ஊட்டச்சத்து குறைபாடு, வேலை மற்றும் மன அழுத்தம், கெமிக்கல் கலந்த ஷாம்பு, மாசுபட்ட சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் பரம்பரை காரணமாக ஆகியவற்றால் எளிதில் கூந்தலின் வேர்கால்கள் பாதித்து இள நரை வருகிறது.

நன்றாக சாப்பிட்டு, நல்ல தரமான ஷாம்பு உபயோகித்து நரை முடி வராமல் தடுக்க முடியும். ஆனால் வந்தபின் எவ்வாறு நரை முடியை கருமையாக மாற்ற முடியும் என தெரியுமா? எளிய வழி. ஆனால் பலன் அருமையானது.




உருளைக் கிழங்கு எல்லார் வீட்டிலும் கிடைக்கக் கூடியதே. அதில் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. மற்றும் தேவையான விட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன.

அது கூந்தலில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யும். இதனால் நரை முடி மெல்ல மறைந்து, கருமையான கூந்தல் கிடைக்கும். உருளைக் கிழங்கு வைத்து எப்படி நரை முடியை குறைக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

Premature White Hair Problem | நரை முடி முற்றிலும் கருப்பாக மாற இயற்கை வீட்டு வைத்தியம் | Health News in Tamil

தேவையானவை :

உருளைக் கிழங்கு தோல்- 5

நீர் – 2 கப்




தயாரிக்கும் முறை:

நீரினை அடுப்பில் கொதிக்க வையுங்கள். அதில் உருளைக் கிழங்கு தோலினை போட்டு வேகும் வரை விடவும். வெந்த பிறகு ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.

பின் அடுப்பைஅணைத்து, நீரினை ஆற விடுங்கள். ஆறிய பின் வடிகட்டி அந்த நீரினை எடுத்துக் கொள்ளவும்.

முதலில் தலைமுடியை நன்றாக நீரில் நனையுங்கள். பின்னர் இந்த வடிகட்டிய நீரினால் மெதுவாக ஸ்கால்ப்பில் மசாஜ் செய்யுங்கள். ஒரு 5 நிமிடங்கள் இந்த நீரில் உங்கள் கூந்தலை ஊற விடுங்கள். பின்னர் தலையினை அலசுங்கள்.

இது போல் வாரம் இருமுறை அல்லது மூன்று முறை செய்தால், சில வாரங்களிலேயே உங்கள் கூந்தல் நரைமுடி மறைந்து கருமையான முடிகள் வளர ஆரம்பிக்கும்.

நீங்களும் வீட்டில் முயன்று பாருங்கள். எளிதாய் வீட்டில் கிடைக்கும் பொருள். செய்யப்படும் நேரமும் மிகக் குறைவு. ஆனால் பலன் அதிகம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!