Beauty Tips

எந்தெந்த கிழமைகளில் எப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

குளியல் என்பது நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்று. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக வைத்திருப்பது உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் குளியல் அவசியமாகிறது. உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வைக்கிறது. தமிழர்களாகிய நாம் எண்ணெய் குளியலை நம் பாரம்பரிய மரபாகக் கொண்டிருக்கிறோம். சித்த மருத்துவத்திலும் இது நன்மைகள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.

 




எண்ணெய் தேய்த்து குளிப்பதில் இத்தனை சாஸ்திரம் இருக்கா? மறந்தும் சில தவறுகளை செய்யாதீர்கள் | Why oil bath on Wednesday and Saturday check the Spiritual reason - Tamil Oneindia

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் உஷ்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவை உடல் உறுப்புகளில் தேங்கி இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் உடல் வலியை போக்கி உற்சாகத்தை கொடுக்கிறது. சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தெந்த நாட்களில் எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் எண்ணெய் குளியலில் பின்பற்ற வேண்டிய முறைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம் .

  • சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஜுரம் வரும் என எச்சரிக்கின்றனர்.

  • பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என அறிவுரை வழங்குகின்றனர். கண்டிப்பாக நல்லெண்ணெய் தான் குளியலுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும் காய்ச்சிய எண்ணெயை தான் பயன்படுத்த வேண்டும்.




  • வாத தேகத்தை கொண்டிருப்பவர்கள் நல்லெண்ணெயுடன் சிறிது சீரகம் மற்றும் ஒரு பல் பூண்டு தட்டி போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். பின்னர் எண்ணெயை வடிகட்டி எடுத்து ஆற வைத்து பயன்படுத்த வேண்டும். பித்த தேகம் அல்லது உஷ்ண தேகமாக இருப்பவர்கள் நல்லெண்ணெயுடன் சிறிது சீரகம் சேர்த்து சூடு படுத்த வேண்டும்.

  • சீரகம் கருகுவதற்கு முன் அடுப்பை அணைத்து எண்ணெயை வடிகட்டி பயன்படுத்த வேண்டும். குளிர்ச்சியான தேகம் உடையவர்கள் நல்லெண்ணெயில் மிளகை ஊற வைத்து பத்து நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் எண்ணெயை மட்டும் வடிகட்டி பயன்படுத்த வேண்டும். நம் உடலின் தன்மை தெரியவில்லை என்றால் நல்லெண்ணெயுடன் வர மிளகாய் சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து காய்ச்சி அந்த எண்ணெயை தேய்த்து குளிக்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!