தோட்டக் கலை

வீட்டிலேயே பூண்டு செடியை நடுவது எப்படி?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட முடியும். அதுவும் உங்கள் வீட்டிலேயே  நீங்களே செய்யலாம். பூண்டு விற்கும் விலைக்கு இந்த காலகட்டத்தில் பூண்டு செடி வளர்ப்பது அவசியமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்கும் பூண்டை வெறும் தண்ணீரிலேயே முளைவிட வைக்க முடியும். இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? எப்படி வீட்டில் வளர்ப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.




வெறும் தண்ணீரில் எப்படி பூண்டை வளர்ப்பது?

  • முதலில் ஒரு லிட்டர் காலி வாட்டர் கேன் பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதி அளவிற்கு கட்  செய்து தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள். தண்ணீர் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். ஒரு பெரிய பூண்டின் வேர்ப்பகுதியை அதாவது தலைப்பகுதியை தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் படி வைத்து விடுங்கள். நன்றாக வெயிலும் நிழலும் சேர்ந்து இருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். 4 நாட்களுக்குள் பூண்டின் மேல் பகுதியில் முளைவிட ஆரம்பித்திருக்கும்.




  • அதை அப்படியே பத்து நாட்கள் வரை விட்டு விடுங்கள். பத்து நாட்கள் கழித்து நீங்கள் பார்க்கும் பொழுது இன்னும் நன்றாக வளர்ந்து பயிர் போல் பசுமையாக காட்சியளிக்கும்.  அடியிலும் வேர் முளைத்து விடும். வாட்டர் கேனில் இருக்கும் தண்ணீரில் பார்த்தால் வெள்ளையாக வேர்கள் அருமையாக முளைத்திருக்கும். இப்போது அதை ஒவ்வொரு பல்லாக பிரித்து எடுக்க வேண்டும்.

  • பூண்டு பற்களின் ஒவ்வொரு பல்லிலும் வேறும் விட்டிருக்க வேண்டும். மேலே பசுமையாக செடியும் முளைத்திருக்க வேண்டும். இப்போது இந்த பூண்டு பற்களை சிறிய மண் தொட்டியில் நட்டு வைத்தால் ஆறு மாதங்களில் உங்களுக்கு பூண்டை அறுவடை செய்யும் அளவிற்கு நிறைய பூண்டுகள் உற்பத்தி ஆகி இருக்கும். இதற்கு அதிக தண்ணீர் கூட தேவைப்படாது. சிறிதளவு தினமும் தண்ணீர் தெளித்து வந்தாலே போதுமானது. அதிகம் தண்ணீர் விட்டால் பூண்டு அழுகிவிடும்.

நாம் கடைகளில் வாங்கும் பூண்டை விட நாமே பயிர் செய்த பூண்டை அப்பொழுதே பரித்து, சமைக்கும் பொழுது அதில் கிடைக்கும் சுகமே தனிதான். சுவையும் அலாதியானது! நீங்கள் அனுபவித்து பார்த்தால் உங்களுக்கு புரியும். வாரம் ஒரு முறை பூண்டு குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியத்தை அள்ளித்தரும். ஒரு டம்ளர் பாலில் 6, 7 பூண்டுகளைப் போட்டு நன்கு கொதிக்கவிட்டு பூண்டையும் பாலையும் சேர்த்து அருந்தினால் எப்படிப்பட்ட இருமல், ஜலதோஷம், சளி, தலைவலியும் உடனே நீங்கிவிடும். குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை செய்து கொடுத்தால் நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!