Beauty Tips

அம்மைத் தழும்புகள் மறைய எளிமையான் டிப்ஸ் இதோ:

அம்மை நோய் வந்து பல நாட்கள் ஆனபின்பும் கூட அதன் தழும்பு இருக்கும். உடலில் இருந்தால் கூட பெரிதாக பிரச்சினை இல்லை. ஆனால் நிறைய பேருக்கு முகத்தில் தழும்புகள் இருக்கும். அது நீண்ட நாட்களாக மறையாமல் அவர்களுடைய அழகையே கெடுத்து விடும்.

அம்மை தழும்புகள் மறையாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மைத் தழும்புகளை நம்முடைய வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்தே எந்த செலவும் இல்லாமல் மறையச் செய்துவிட முடியும். அது எப்படி என்று இங்கு காணலாம்.




சின்ன வயசுல அம்மை போட்ட தழும்பு இன்னும் மறையலையா? அப்போ இத தடவுங்க... | How to get rid of dark spots caused by chickenpox - Tamil BoldSky

குறிப்பு 1 :ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.




குறிப்பு:2

தேவையான பொருள்கள்

கசகசா – 2 ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள் – 2 துண்டு

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

தயாரிக்கும் முறை:

  • கசகசாவை எடுத்து தண்ணீரில் நனடகு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மஞ்சளையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். சிலர் கசகசாவை அப்படியே ஊற வைக்காமல் பொடியாக அரைத்துக் கொள்வார்கள். அப்படியும் செய்யலாம்.

  • ஆனால் ஊற வைத்துப் பயன்படுத்தினால் சருமத்தில் நன்கு இறங்கும். கறிவேப்பிலையையும் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கசகசா மஞ்சள் கலவையை அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.




பயன்படுத்தும் முறை

  • கசகசாவை முகத்தில் அப்ளை செய்து வந்தால் சருமம் பளபளக்கும். இந்த கலவையை அம்மை தழும்பு உள்ள இடத்திலோ அல்லது முகம் முழுவதுமோ அப்ளை செய்யலாம்.

  • குளிக்கச் செல்வதற்கும் அரை மணி நேரத்திற்கும் முன்பாக அப்ளை செய்துவிட்டு உலரவிட்டு, பின் குளிக்கலாம். இது காலையில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

  • இரவு நேரத்தில் கூட பேஸ்பேக் போல இதை போட்டு உலரவிட்டு, பின் குளிர்ந்த நீரால் கழுவலாம். மிக வேகமாகவே முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் நீங்கிவிடும்.

  • பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!