Beauty Tips News

உங்கள் கால் விரல்களை எப்படி பராமரிக்க வேண்டும்..?

நம்முடைய ஒட்டுமொத்த உடல் எடையைத் தாங்கி நிற்பது கால்கள் தான். இதில் சிறிய வலி ஏற்பட்டாலும் கூட நம்மால் எந்த வேலையையும் முறையாக செய்ய முடியாது. எனவே தான் கால்கள் மற்றும் கால் விரல் நகங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பொதுவாக நம்முடைய விரல்களை சுத்தமாக வைத்திருக்காவிடில் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.




இதனால் நகத்தின் நிறம் மாறுதல், நகம் தடிமனாகுதல், நகத்தின் விளிம்பு உடைதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதுப்போன்ற பாதிப்பிலிருந்து உங்களது நகங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வலிமிகுந்த கால் விரல் நகத்திற்கு சிகிச்சையளிக்கும் முறைகள்:

கால் விரல் நகங்களில் சிறிய பூஞ்சை தொற்று மற்றும் வலி ஏற்பட்டாலும் கூட நம்மால் எந்த வேலையும் நம்மால் செய்ய முடியாது. இந்த நேரத்தில் உங்களது விரல்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம்.

உங்கள் நகங்கள் மற்றும் தோலை மென்மையாக்க, நீங்கள் உங்களது கால்களை வெதுவெதுப்பான நீரில் ஒரு நாளைக்கு 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

நீங்கள் விரல்களில் நகங்களை வெட்டும் போது எப்போதும் விரல்களின் மூலைப் பகுதியில் வெட்டக்கூடாது. இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு சில நேரங்களில் வலி ஏற்படும். எனவே நீங்கள் கால் நகத்தின் குறுக்குப் பகுதியில் இருந்து தான் வெட்ட வேண்டும்.




நகங்கள் முறையாக வளர்வதற்கு ஏற்ப, ஒரு சிறிய காட்டனை உள்நோக்கிய விளிம்பின் கீழே வைக்கவும்.

உங்களது கால் விரல் நகங்களில் வலி இருக்கும் பட்சத்தில், நீங்கள் உட்கார்த்திருக்கும் போது அல்லது படுத்திருக்கும் போது எப்போதும் உங்களது கால்களை நீட்டி உட்கார வேண்டும். அதாவது இதயத்தின் மட்டத்திற்கு மேலே உயர்த்தி வைக்கவும்.

கால் விரல் நகங்களில் தொற்று அல்லது புண்கள் ஏற்பட்டிருந்தால் அந்த இடத்தில் நீங்கள் சில ஆண்டிபயாடிக் கிரீம் அல்லது வலி நிவாரணிகளைப் பயன்படுத்துங்கள். மேலும் மஞ்சள் மற்றும் எண்ணெய் கலந்து கால் விரல்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் நீங்கள் உபயோகிக்கலாம்.

கால்கள் நகங்களில் அழுத்தம் ஏற்பட்டாலும் கூட சில நேரங்களில் நமக்கு வலிகள் ஏற்படும். எனவே எப்போதும் உங்கள் கால்களுக்குப் பொருத்தமான ஷு மற்றும் செப்பல்களை நீங்கள் அணிய வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதுப்போன்ற முறைகளை நீங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை. எவ்வித செலவும் இன்றி வீட்டிலேயே உங்களது கால் விரல் நகத்திற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இனி நீங்களும் டிரைப் பண்ணிப்பாருங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!