Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-26

26

மோகன் இறுதி ஆண்டு,இன்னும் சில மாதங்களில் இறுதி தேர்வு.

நல்ல க்ரேட் பாயிண்ட் இருந்தது.

முடிவில் பல்கலை கழக ரேங்க் 25பேருக்குள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பேராசிரியர்கள் கூறினர்.

ஆனால் வழக்கம் போல முதலில் வந்த பெரிய கம்பெனிகள் அனைத்தும் சாஃப்ட்வேர் நிறுவனங்களாக அமைந்தன.

மோகனின் சுய விவரங்களை படித்த மூன்று கம்பெனி காரர்களும் நேர் முகத் தேர்வில் கேட்ட ஒரே கேள்வி….?

“நீ பயோடெக் நிறுவனத்தில் வேலை கிடைத்தால் இந்த வேலையை என்ன செய்வாய்…?”

” இதனை விட்டு விட்டு அங்கே சேர்ந்து விடுவேன்.. “

மோகனின் இந்த பதிலுக்கு ஒரு வருடத்தில் வேலையை விட்டு விட்டால் 3மாதம் சம்பளத்தை கொடுத்தால் தான் நீ அடுத்த கம்பெனியில் சேர முடியும் ..”

” தெரியுமா…???’

“தெரியாது சார்…

அப்படி இருந்தால் அந்த ஒரு வருடம் பொருத்துக் கொண்டு தான் வேலை செய்யவேண்டும்.”

“பணத்தை கட்ட வசதி எல்லாம் கிடையாது சார்..”

இவன் சொன்ன உண்மை அவர்களுக்கு ஏற்பாக இல்லை.

தெரிந்து ஒருவனுக்கு வேலை கொடுத்து அவன் சேராமல் இருக்க காரணம் இருப்பதால் அவன் தேர்வு செய்யப்படவில்லை.

மது, ரசிகா, கைலாஷ் அனைவருக்கும் வேலை உறுதியாகி விட்டது.

சில மாணவர்கள்

” இவன் படிக்க தான் லாயக்கு…”

வேலை செய்ய படிப்பு மட்டும் போறாதே…”

என பேசிக் கொண்டனர்.




ஒரு நாள் பிரின்சிபால் கூப்பிட்டு அனுப்பினார்.

அங்கே ஏற்கனவே பயோடெக் தலைமை பேராசிரியர் , இன்னும் இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர்.

“மோகன்…வா….”

“நீங்களே சொல்லுங்க…”

என பிரின்ஸிபால் கூற,

” உனக்கு ஆராய்ச்சி கட்டுரை குறிப்பெடுத்து அனுப்புவது தானே வேலை..ஏன் வேறு வேண்டாத வேலையில் ஈடுபட்டாய்…”

” சார்…நான் அது சம்மந்தமாகத் தான் அனுப்பினேன்…என்ன ஆச்சு சார்..?”

நீ அனுப்பின சில குறிப்புகளில் தமிழகத்தை சேர்ந்த மிக முக்கியமான அரசியல் புள்ளியின் மகளும் ஒரு கல்லூரி பேராசிரியையுமான ஒருவரின் கட்டுரையும் , அதே போல ஒரு அயல் நாட்டு பேராசிரியர் கட்டுரையும்  ஏற்கனவே வேறு ஒருவர் ஆராய்ச்சி கடுரையில் இருப்பது என கூறி  குறிப்பு அனுப்பினாயா???”

”  ஆமாம் சார் இந்த கட்டுரைகள் வெளி வந்தால் பின்னால் அதை வெளியிட்ட இதழின் பேர் கெடலாமே….”

“அதான் சார் அனுப்பினேன்..”

“அது தெரிந்து  இப்போது   ஒரு விசாரணைக்காக உன்னைப் பார்க்க மும்பையிலிருந்து சிலர் வருகின்றனர்.”

“முக்கியமாக,  வருபவர்களில் ஒருவர் இந்த கட்சியின் பெரும் புள்ளியிடம் தொடர்பு உள்ள இன்னொரு கட்சியை சேர்ந்தவர்..”

“இவர்கள் சிலர் எப்படி முனைவர் பட்டம் வாங்கி மாணவர்களை முனைவர் பட்டத்துக்கு தயார் செய்கின்றனர் என, எங்களுக்கு எப்பவுமே சந்தேகம் உண்டு..”

“ஆனால் நாங்க அமைதியா இருக்கிறோம்..”

“உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை…”

“சேர்மன் காலை முதல் கவலையில் உள்ளார்…” என்றார் துறை தலைவர்.

” நீ உன்னுடைய பதில்களை தயாராக வைத்து கொள்…”

“ஏற்கனவே உனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை, இப்போ இது வேறா…??” என்றார் துணை தலைவர்.

மதியம் மீண்டும் அழைக்கப் பட்டான்.

உள்ளூர் கம்பெனியில் ஒருவர், மும்பை யிலிருந்து இருவர், வெளி நாட்டவர் ஒருவர் இருந்தனர்.

“இவன் தான் மோகன்….”அறிமுகம் செய்யப்பட்டான்.

” நீ எப்படிக் கண்டு பிடித்தாய்? ,

இவை ஏற்கனவே ஆராய்ச்சி கட்டுரையாக உலகத்தில் எங்கேயோ வந்திருக்கிறது என்று…”

“இப்போது சாஃப்ட் வேர் எல்லாம் வந்து விட்டதே…இதை கண்டு பிடிக்க….”

“அதன் மூலம் தெரிந்த பிறகு தான் வெளியிடுவோம் எங்கள் ஜார்னலில் என்றார்…”மும்பையை சேர்ந்தவர்… தங்கள் செயலுக்கு நியாயம் தேடினார்.

” சார்…உங்கள் அனைவருக்கும் இசை, திரை இசை, திரைப் படங்கள் தெரியும் என நினைக்கிறேன்…”

“அவற்றில் ஏதாவது ஒன்று காப்பி, சாயல் என்றால் சிலர் ரசிக்க மட்டும் செய்வர், சிலர் சாயல் இருக்கிறது என்பர், சிலர் மட்டும் இதற்கு இது மூலம் என கண்டு பிடிக்கின்றனரே…”

“அவர்கள் எந்த சாஃப்ட் வேர் வைத்தும் செயல் படவில்லை தானே…”

“அது…..”

” அவர்கள் அந்த இசையின் மேல் உள்ள அதீத ஆர்வத்தில் கண்டு பிடிக்கின்றனர்…”

“எல்லா இசையும் அத்துப்படி அவர்களுக்கு….”

“அதே காரணம் தான் எனக்கும்…”

“மூன்று வருடங்களாக ஒரு ஆயிரம் கட்டுரைகளின் குறிப்பு எடுக்கும் போது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ரெஃபரன்ஸ் கட்டுரையையும் தேடிப் படிப்பேன்.

இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி யில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது.”

“அதன் மூலம் தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். இவை ‘காப்பி ‘என கண்டு பிடித்தேன்..”




இது வரை பேசாமல இருந்த வெளி நாட்டவர்

இப்போது,

” நீ அந்த வொயிட் போர்ட் அருகில் செல்..”

“நான் கேட்கும் கேள்விக்கு விளக்க சொல்ல முடியுமா..??”

” தெரிந்த வரை சொல்கிறேன் சார்.”

முதலில் இவன் கண்டு பிடித்த காப்பி அடிக்கப்பட்ட கட்டுரையை பற்றி கேள்விகள் கேட்டார்.

பதில் சொல்லும் போதே, அது சம்பந்தமாக ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சி பற்றியும் கூறினான்.

இவர்களின் ஆராய்ச்சி முறையையும், வெளி நாட்டு ஆராய்ச்சி முறையையும் ஒப்பிட்டு, அதற்கு தேவைப் படும் சில உபகரணங்கள் சில இந்தியாவில் இல்லை எனவும்,

சில மூலக்கூறுகளின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகம் எழுந்தது பற்றியும் கூறி விட்டு,

” அதனால் தான் இவை காப்பி அடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

மேற்கொண்டு படித்து கண்டு பிடித்து குறிப்பு எழுதினேன் சார்..”

என்றான்.

இதன் பேர் என்ன தெரியுமா…??

“அறிவியல் ஆராய்ச்சியை இது போல தன் பேரில் சொந்தம் கொண்டாடுவது ,

” பிளேஜரிசம் “

“இது ஒரு மிகப் பெரிய துரோகம் சார்…”

“ஒரு கண்டு பிடிப்பாளருக்குத் தான் தெரியும் , தன்னுடைய உழைப்பை மற்றவர்கள் பெயரில் பார்க்கும் போது…”

” ஆத்திரம் கூட வரும் சார்..”

” தன் குழந்தையை, இன்னொருவர் சொந்தம் கொண்டாடும் போது ஏற்படும் தாயின் வேதனைக்கு ஈடானது சார் இந்த வேதனை…”

ஆதாரத்துடன் தன் செயலுக்கு நியாயம் கற்பித்தான்.

“நீ கூறின அந்த மூலக் கட்டுரைகளை எழுதி இந்த துறையில் உலகில் முன்னோடியாக இருப்பவர் யார் தெரியுமா ..??” என்றார் மும்பை பேராசிரியர்.

“தெரியும் சார் …”

“கலிபோர்னியாவை சேர்ந்த டாக்டர்.வில்லியம் டெய்லர் சார்..”

இப்போது எழுந்து வந்த அந்த வெளி நாட்டவர்….

” அயம் வில்லியம் டெய்லர்..”

“உன்னை சந்தித்ததை பெருமையாக நினைக்கிறேன்..”

இப்போது சேர்மன் முதற்கொண்டு அனவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியம்!!!”

“உன் குறிப்பு எனக்கு வந்தது. நீ சொன்னது போல ஒரு தாயின் வேதனை தான் இது. உலகம் முழுக்க காப்பி அடிப்பவர்கள் இருக்கிறார்கள்…”

“அதற்கு நான் கவலைப் பட்டால் அடுத்த ஆராய்ச்சி செய்ய முடியாது…”

“ஆனால் இதனை கண்டு பிடித்தவரின் உண்மைத் தன்மையை அறிய விரும்பினேன்..”

“ஒரு மாநாட்டிற்காக இந்தியா வந்தேன்…”

“உன்னை பார்க்க ஆசைப்பட்டேன், இங்கே இருக்கிறேன்…”

“நீ இந்த வருடம் படிப்பு முடிந்தவுடன் எனக்கு கீழ் ஆராய்ச்சிக்கு கலிபோர்னியா வர முடியுமா…??

சேர்மன் முதல் அனைவரும்

“இது மிகப் பெரிய வாய்ப்பு…”

“கண்டிப்பாக அனுப்பி வைக்கிறோம்…”

என்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கிக் கொள்ள,

” சார் அது என்னால் முடியாது…”

என்றான்.

“ஏன் ..? உனக்கு என் கீழ் ஆராய்ச்சி செய்ய விருப்பமில்லையா….???”

அவன் கூறிய பதில் அனைவரையும் திகைக்க வைத்தது.

” உனக்கு ஒரு இரண்டு மணி நேரம் கொடுக்கிறேன்…..”

“யோசித்து சொல்…” என்றார்…

அப்படி என்ன பதில் சொன்னான்…???




What’s your Reaction?
+1
5
+1
9
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!