Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-24

24

“இப்போ ரெண்டு பேரும் லவ் பண்ணலயா???”

மோகன் , வீணா பற்றிய விஷயத்தையும் எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்தான் முரளி..

ஒரளவுக்கு தனித் தனியே தெரிந்த விஷயம் என்றாலும் மற்றவர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என்ற பயம் அனைவருக்கும் இருந்தது.

முரளி இப்போது தூண்டி விட்டு விட்டான்.

இது பற்றி அதிகம் தெரியாத கோவிந்தன் தான் பேச்சை ஆரம்பித்தார்.

” ரகோத்தமன் சார்…நீங்க தப்பா நினைக்காதீங்க….”

முரளிக்கு இன்னும் புரியாத வயசு தான்..ஏதோ பேசுகிறான்..

நீங்க மனசுல வெச்சுக்காதீங்க..”

ருக்குவிடம்….

” அவங்க எவ்வளவு பெரிய இடம்….எத்தனை படிப்பு சாருக்கு…நம்ம நிலை என்ன….??அன்னாடம் காய்ச்சிதான் இன்னிக்கு வரைக்கும்…”

“வீணா…நீயும் மனசில எதுவும் வெச்சிக்காதம்மா…”

“உனக்குனு ஒருத்தன் பிறந்திருப்பான்…”

“மோகன் படிச்சு வேலை பார்த்து முன்னுக்கு வந்தப்புறம் தான் இந்த குடும்பம் முன்னுக்கு வரணும்….”

“மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தான் எங்களுக்கு கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியும்…”

“இல்லாவிட்டால் இது தான் வாழ்க்கை என பழகிப் போனவர்கள் நாங்க…”

“முரளி ,  மோகனுக்கு தீபாவளிக்கும், பள்ளி ஆரம்பிக்கும் சமயம் தான் புது துணியே வாங்குவோம்…”

“உனக்கு எதற்கு அந்த கஷ்டம் எல்லாம்…”

கண்ணில் எட்டிப் பார்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டார் கோவிந்தன்.

“பார்ப்போம் ….பிராப்தம் எப்படி இருக்கோ..”

தனம் பாட்டிக்கும் ருக்குவிற்கும் ஒரே நேரத்தில் ஏனோ பழைய கதையில் படித்த பிரபல எழுத்தாளரின் வாசகம் நினைவுக்கு வந்தது…

பிராப்தம்….ஹ்ம்ம்..அது என்ன இந்த மனுஷாளுக்கு ஜென்ம விரோதியா…??”

கல்லூரியில் ரகோத்தமனுக்கு இருக்கும் மரியாதையை சில நாட்களிலேயே அறிந்து கொண்டு விட்டார் கோவிந்தன்.

துணிக்கடையில் வேலை பார்த்த போது அங்கு பார்த்த நபர்கள் வேறு…அங்கு வருபவர்களுக்கு கொடுக்கும் போலி மரியாதையை கவனித்தவர் தான் கோவிந்தன்.

இப்போது ரகோத்தமனுக்கு மாணவர்கள் முதல் சேர்மன் வரை கொடுக்கும் மரியாதை , சேர்மனும்,  பொறியியல் முதல்வரும் சில விவகாரங்களில் இவரின் ஆலோசனை கேட்கும் போது ரகோத்தமனைப் பற்றிய பெரும் பிரமிப்பு ஏற்பட்டது..

அதனால்தான் கோவிந்தனின் வார்த்தைகள் அப்படி வந்தது…

அந்த நேரத்தில் கோவிந்தன் கூறியதில் இருந்த உண்மை ருக்குமணிக்கும், தனத்துக்கும் புரிந்ததால் அனைவரும் மௌனமாக இருந்தனர்.

சிறிது நேரத்தில் ரகோத்தமன் விஜிக்கும் , வீணாவுக்கும் ஏற்கனவே வீட்டில் இருந்த ரவிக்கை துண்டை வைத்துக் கொடுத்தாள்..

அவர்கள் போனவுடன்….

“அந்த பெண் வீணா மீது எனக்கும் ஆசை தான்…..

ஆனா வந்தவங்களுக்கு ஒரு நல்ல பரிசு வைத்துக் கொடுக்கக் கூட முடியாத நிலையில் தானே நாம இருக்கோம்…..”

ஆசைப் படறது வேற…..அதிர்ஷ்டம் வேற ஆச்சே….” என்றாள் ருக்கு.

தனம் பேச்சை மாற்ற….. முரளியும் மோகனும் உள்ளே எழுந்து போகிறார்கள்.

“அண்ணா….சாரிண்ணா….தெரியாம அப்படி எல்லார் முன்னாலயும் பேசிட்டேன்….”

“பரவாயில்லைடா….உன் பிறவி குணம் அது தானே….”

“ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு நீ உதவி தானே பண்ணியிருக்கே…”

“பின்னால் தெரிய வேண்டியது இப்போதே தெரிஞ்சுடுத்து….”

” நிறைய நேரம் இருக்கே எல்லோருக்கும்….

சிந்திக்க, முடிவெடுக்க….

” நீ சொன்னா மாதிரி வீணாவை பார்த்த பின்னாலும் எத்தனை பேருடன் பழகிட்டேன்…”

“ஆனால் வீணா என் மனசை அவ கிட்டயே தங்க வெச்சுக்கிட்டாளே….”

“அவளா அதை விட்டாதானே அது வேற யாரையாவது நினைக்கும்….”

“அப்போ வீணாக்கா மனசு உன்னிடம் இருக்காண்ணா????”

” முதலில் கொஞ்சம் பிடி படலை டா….’

“ஆனா அவளோட அந்த பிடிவாதமான ஆசை,

நான் அவளுக்கே அவளுக்கு என்று உரிமை கொண்டாடியது எல்லாம்….”

என்னை அவளிடம் கட்டிப் போட்டுடுத்து…”

“அவ மனசை என்னிடம் ஆணி வெச்சு அடிச்சுட்டா….. நான் அழிஞ்சாலும் அது அழியாது போலிருக்குடா…”

“அண்ணா… உங்க ரெண்டு பேருக்குள்ளும் இவ்வளோ ஆசை இருக்கா….”

“பாட்டி சேவிக்கற பெருமாள் நிச்சயம் உங்களுக்கு உதவுவார்ணா…”

“கவலைப் படாதே….”




அங்கே வீணா வீட்டில்

விஜி ,ரகோத்தமன் ஒரு அறையிலும் , வீணா ஒரு அறையிலும் இருக்கின்றனர்…

சிறிது நேரம் கழித்து,

” அப்பா….கொஞ்சம் இங்கே வரயா?? “

வீணா கூப்பிட…..

ரகோத்தமன் விஜியிடம்…

“நீ இங்கேயே இரு….அப்புறம் வா…”

“இது அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே….”

“நீ வந்தா குறுக்கே பேசி புரிய விடாம பண்ணுவே….”

” என்னம்மா….???

“அப்ப்ப்ப்பா……மடியில் படித்து கொண்டு கேவிக் கேவி அழுகிறாள்…”

அவள் அழுது முடியட்டும் என பொறுக்கிறார்…

கொஞ்சம் கேவல் முடிந்து பேச ஆரம்பிக்கிறா…

” இந்த அந்தஸ்து எல்லாம் எனக்கு தெரியாதேப்பா…”

அப்படி என்றால் என்னப்பா…??”

” நீ கேட்டவுடன் கிடைக்கும் ஸ்கூட்டி அவங்களுக்கு கிடைக்காது…”

“நீ புதுசா வீணை, வயலின், கீ போர்ட் ….ஏன் புதுசா வந்த செல் போன் வரை எதுவுமே முரளி, மோகனால நினைத்துக் கூட பார்க்க முடியாது….”

“இது தாம்மா நிஜம்… “

” அப்பா….நான் கூட முதலில் விளையாட்டா தான் மோகனுடன் பேச ஆரம்பிச்சேன்…தனம் பாட்டி அவனை பத்தி சொல்லும் போது ஏதோ கதை மாதிரி தான் கேட்டேன்…”

“அப்புறம் அவன் பேச்சில் தெரியும் ஒரு தெளிவு….., அவன் பார்க்கும் பார்வையில் இருக்கும் ஆசை….., ஏன் சில சமயம் முகத்தில் தெரியும் மிரட்டல்….., அவன் எழுத்தில் இருக்கும் வசியம்…..எல்லாம் எனக்கு முன்னாடியே பரிச்சயமா இருந்தா போல இருந்ததுப்பா…”

“இவ்வளவு வருஷம் கழிச்சு, இந்த ஒரு வருஷமா நீ பேசும் போது கவனிக்கத் தோணித்து…”

“உன் கண் பார்வையின் மிரட்டல்…., ஆசை…, எழுத்து வசியம்…., பேச்சு தெளிவு…. எல்லாம் அப்படியே அவனிடம் இருக்குப்பா.”

” அது தான் என்னையறியாமல் அவன் என்னை ஈர்த்து விட்டான் பா…”

அவனே கூட “‘நான் ஒண்ணும் அவ்வளோ அழகு இல்லே..’ நு சொன்ன போது கூட எனக்கு தோணலேப்பா…”

“ஆனா கொஞ்ச நாளா…. அவன் பார்வையில் உன்னையும்….,

உன் பேச்சிலே அவனையும் நினைக்க வைக்கிறதுப்பா இந்த மனசு….”

கேவல்களுக்கிடையே சொல்லி முடிக்கிறாள்…

வெளியே இருந்து இவற்றை கேட்கிறாள் விஜி. அப்பாவிடம் வீணா சொன்னது சரிதானோ…??

“அது சரிம்மா….

எல்லோருடைய போன் நம்பரையும் உன் செல்லில் பதிவு பண்ணி வெச்சுருக்கே…ஆனால் மோகன் வீட்டு போன் மட்டும் ஏன் வெச்சுக்கலை…”




“அது….அது….”

“நீ செல் வாங்கி கொடுத்த போது உனக்கு நான் கொடுத்த வாக்கு தான் காரணம்…??”

” நான் எப்போ சொல்லிருக்கேன் அவங்க வீட்டுக்கு பேசக் கூடாது என்று???”

” நீ என்ன சொன்னே…செல்லில் அதிக நேரம் பேசக் கூடாது நு தானே…..

 அவன் பேச ஆரம்பிச்சா ….அவன் கூட பேசிட்டே இருக்கணும் நு தோணும்…அதனால தான் அவங்க நம்பர் வெச்சுக்கலை….”

“அதுவும் தவிர அவன் படிப்பு கெடக் கூடாது நு தான் ……”

“அவன் படிச்சு நல்ல நிலைமைக்கு வந்தா தானே…..ரெண்டு பேருக்கும் ……. அப்புறம்….அப்புறம்….”

“அப்புறம் அப்புறம்நு ஏன் இழுக்கிறே…அப்புறம் என்ன…..விழுப்புரமா????”

” போப்பா…உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்…”சிணுங்கிக் கொண்டே….

அப்பாவின் உள்ளங்கையில் ரெண்டு செல்லக் குத்து விட….

ரகோத்தமன் ” பிடிச்சுக்கோ குத்து “என சொல்லி கெட்டியாக பிடிக்கிறார்…

மெதுவாக உள்ளே வந்த விஜி….

“நான் பேசலாமா …இப்போ அப்பாக்கும் பொண்ணுக்கும் நடுவே….”

பதில் எதிர்பார்க்காமல் பேசத் தொடங்குகிறாள்..

“அசடே….எங்க அப்பாவே என்னை அந்தஸ்து பார்க்காம…உங்க அப்பாவின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து தான் கல்யாணம் பண்ணி வெச்சார்…”

“ஆனால் எனக்கு இந்த கால் ஒரு குறை தான்…”

“உங்க அப்பா அதைக் கூட பொருட்படுத்தலை…”

“அவர் என்னை பிடிச்சு தான் பண்ணிண்டார்….

அனுதாபத்தில் பண்ணிக்கலே….”

“ஆனால் உனக்கு எந்த குறையும் இல்லே… அழகி…எல்லா கலையும் வருது….”

“அதனால் உங்க அப்பா என்ன நினைப்பாரோ…. என பயம் தான் எனக்கும்..”

“ஆனா மோகனுக்கு ஏற்பட்ட இன்னல்களும் நீ அப்போ பட்ட பாடும் பார்த்த அப்பா தெளிந்து புரிந்து கொண்டு விட்டார்..”

“நான் சொல்றது சரிதானே….”என்றாள் விஜி இப்போ ரகோத்தமனை பார்த்து…”

“என்ன சரி.????….என்னை பத்தி சொன்னது சரி…..”

.”உன் பொண்ணை பத்தி ‘அழகி, எல்லா கலையும் வருது’ நு அடுக்கிண்டு போனயே….”

“ஆனா ஒரே ஒரு குறை அவளுக்கும் இருக்கே….”

“வீணாவுக்கு என்ன குறைச்சல்…???”

“அதிர்ஷ்டம் இருக்கறவாளுக்கு தான் இவ கிடைப்பா…”

பெண்ணுக்கு குறைச்சல் என்றவுடன் இயல்பான கோபம் ஏற்பட்டது விஜிக்கு.




“எல்லாம் இருக்குதான்…..,”

“ஆனா என் மாப்பிள்ளைக்கு இருக்கும் அறிவு உன் பொண்ணுக்கு இல்லையே….”

“என்ன….. என்ன….. சொன்னப்பா…. இப்போ….???”என்றாள் ஆவலாக வீணா.

” உனக்கு அறிவு இல்லை யே என்றேன்…????”

“அது எனக்கே தெரியும்….”

“அதுக்கு முன்னாடி என்ன சொன்னே??”

” உனக்கும் ஒரு குறை இருக்கு னு சொன்னேன்…”

“போப்பா…அதுக்கும்… இதுக்கும்… நடுவில என்ன சொன்னே….?”

” நான் எங்கே சொன்னேன்…????

“உங்க அம்மா தான் ‘தம் பொண்ணு உசத்தி ….’நு எம்மேல கோபப் பட்டா…???”

” நீங்க ‘மாப்பிள்ளை’க்கு இருக்கிற அறிவு இவளுக்கு இல்லயே நு சொன்னதை சொல்றா….”

“அதான்….அதான்….எங்க அம்மா…ஒரு பொண்ணு மனசு அம்மாக்கு தான் தெரியும் ….விஜியைக் கட்டிக் கொள்கிறா…”

“இந்த அப்பா இப்பவும் திரும்ப சொல்றாளா பாரு…”

“அந்த வார்த்தையை…”

“கெத்தா இருக்கா பாரு….”

” அவ ஏதோ சொல்றா. வீணா…”

“நீ தான் சொல்லேன்… நான் என்ன சொன்னேன்…???”

” என் மாப்பிள்ளைக்கு இருக்கும் அறிவு ஒம் பொண்ணுக்கு இல்லயேநு சொன்னியே….” ” சரி தானே…” என சொல்லி வெட்கப்படுகிறாள் வீணா…

” அப்போ உனக்கு அறிவில்லைனு நான் சொன்னது சரிதான் நு ஒப்புக்கறே…”அப்பா மீண்டும் வம்புக்கிழுக்க….

” இதே போலத்தான் மோகன் தன்னைப் பேச விட்டு ஒரு நாள் இரவு வேடிக்கை பார்த்தது நினைவுக்கு வந்தது….”

” இதே போலத்தான் அவனும் என்னை பேச விட்டு கிண்டல் பண்ணுவான்…”என்றாள் வீணா….

“அவனா…..?? யாரு…??”

அதான் உங்களோட செல்ல… புத்திசாலி….. மாப்பிள்ளை….”

என சொல்லி விட்டு எழுந்து ஓடி விடுகிறாள்..

விஜியும் ரகோத்தமனோடு சேர்ந்து சிரிக்கிறாள்.

அடுத்த நாள் கல்லூரியில் ரகோத்தமன் கலைக் கல்லூரிக்கு முதல்வராகிறார் என்ற அறிவிப்பு வருகிறது…




What’s your Reaction?
+1
5
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!