Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-18 (நிறைவு)

18

          “அழாதே..எல்லாம் கேள்விப்பட்டேன்.”

“மாமா..நீங்க இன்னும் உயிருடன் இருக்கீங்களா???”

ஒரு தகவலும் இல்லையே மாமா??”

“ஏன் பாஸ்கருக்கு தகவல் கொடுத்தேனே..?சொல்லவில்லையா??

எங்கே அவன்??” “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா..”கழுத்தில் காலில் தலை வகிட்டில் எல்லாம் பார்த்து விட்டு கேட்டார்.

“ராஸ்கல்..அன்று இதே ஊர்ல எப்படி பேசினான் ..நீ தான் உயிர்நு சினிமா டயலாக்லாம் சொன்னானே?? அவனை நம்பி கடைசியா அவனுக்கு மட்டும் ஃப்ளாஷ் மெஸ்ஸேஜ் அனுப்பிச்சனே…”

“மாமா..அவர் நல்லவர் தான்.”

“நாந்தான் அவரை தொலைச்சுவிட்டு திண்டாடறேன்.”

பெண் பார்க்க வந்த சம்பவம் முதல்

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக், ஆபரேஷன், அம்மா கத்தி அழுதது, பின்னர் எல்லா தகவலையும் அழித்து மூன்று வீடு மாறி..இப்போது வலை பக்கங்களில் கூட காணோம் என்பது வரை சொல்லி முடித்தாள்.

“நீங்க எப்படி தப்பிச்சீங்க??”

“எனக்கு ஆபத்து எதுவும் இல்லே.

அந்த நாளில் அது நடந்தது ஒரு சீக்ரட் ஆபரேஷன்.நான் இறந்ததாக நிறைய பேரை நம்ப வைத்து நான் வேறு உருவத்தில் அந்த தீவிரவாதிகளுடன் பழக வேண்டி இருந்தது.”

“நேத்திக்கு முந்தா நாள் டிவி பார்க்கலயா மேடம்.”

“சார் பத்தின நியூஸ் தானே..மெயின் நியூஸ் சேனல்ல ஒடிக் கிட்டிருந்தது..நீங்க பார்க்கலையா??முந்தாநாள் அந்த கூட்டம் மொத்தமாக சரணடைந்து விட்டார்களே…”

“ஓ.அப்படியா..?” க்ரேட் மாமா நீங்க..”

வீட்ல நியூஸ் சேனல் வெச்சாலே அம்மா கத்துவாங்க.”

‘நேத்து ரெண்டு நாளா பாஸ்கர், சதீஷ், விபாகர் இவர்களுக்கு நடுவில் சிக்கிப் போராட்டத்தில் இருக்கிறேன்…இதுக்கு நடுவில் செய்தி வேறு பார்ப்பேனா??” என நினைத்துக் கொண்டாள்.

“நீ சரியான சமயத்தில் காப்பாற்றப் பட்டிருக்கிறாய். இன்னும் ஓரிரு நாளில் உன்னை நாட்டை விட்டே கடத்திப் போக திட்டமிட்டிருந்தார்கள். அதில் ஒருவன் நாங்க ஏற்கனவே தேடப்படும் தீவிரவாதி.” அது சம்மந்தமாகத்தான் இன்று காலை வந்தேன்…மத்திய மந்திரி வந்ததற்கும் எனக்கும் சம்மந்தமில்லை. எனக்கே அந்த விபாகரை பார்க்க வேண்டும் போல இருக்கிறது.”

“மாமா..அவர் லஞ்ச் சாப்பிட வருவார்..முடிஞ்சா நீங்க முடிஞ்சா சேர்ந்துக்குங்க..அவர் எப்படினு பார்த்துட்டு நீங்க உங்க ஒபினியன் சொல்லுங்க..”

“ஓகே..நீ போய் கலந்துக்கோ..

அப்புறம் பார்க்கலாம்.”

மாமா..இன்னொரு விஷயம்… பாஸ்கரையும் இன்னிக்கு இதே ஒட்டலில் பார்த்தேன். விஷயம் சொன்னாள்.

“ஓ..அப்போ உயிருடன் தான் இருக்கிறான்..ஆனால் உன்னைத் தேட முயற்சிக்கலை..உன்னை அவன் பார்த்தானா??”

“இல்லை மாமா..”

“அதுவும் நல்லதுக்கு தான்…” “அவனை மறந்துட்டு புது வாழ்க்கைக்கு தயாராகு.ஆல் தி பெஸ்ட்.”

திரும்ப அந்த நிகழ்ச்சி நடக்கும் அறைக்கு உள்ளே போனாள்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும். நீ ஏதாவது செய்தி சேகரிச்சுக்கோ…” எனக் கூறி எஸ்தர் வெளியே போனாள்.

வினயா உள்ளே போய் சில படங்கள் எடுத்து ஆடியன்ஸ் திசையை போட்டோ எடுக்க லென்ஸை ஸூம் செய்ய…அதில் பாஸ்கர் தோன்றினான்.  ஆனால் அவன் முகத்தில் வினயாவைப் பார்த்து எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை..




“என்ன இது ..கண்டும் காணாமலும் இருக்கிறானே….”

“நீ அவனை மறக்க வெறுமனே நினைத்தால் முடியாது..அவன் வந்து உன்னை உதாசீனப் படுத்தினால் தான் நீ அவனை மறப்பாய்..”

அவள் உள்ளுணர்வு சொன்னது..

மதிய உணவு இடைவேளை..

வினயாவும் வேலன் சாருடன் உணவு அருந்தும் டேபிளில்.

“எங்கே விபாகர்??”  “கூப்பிடு..அப்புறம் வேலை பார்க்கலாம்’ என எஸ்தரிடம் வேலன் கூறினார்.

“வினயா விவகாரம் கூறி அவனைக் கூப்பிட்டேன். அவள் உனக்கு நன்றி சொல்லணுமாம்.. அதோட உங்க ரெண்டு பேருக்கு ஓகே நா மூன்று முடிச்சுக்கு ஏற்பாடு செய்யலாம் நு சொன்னேன்..”

அதுக்கு விபா ,”இதுக்கெல்லாம் பிரதி உபகாரமாக வாழ்க்கையை ஒரு பொண்ணு கொடுக்க மாட்டா..”

“நானும்அவங்களுக்கு உதவி செய்யணும்நு தான் செஞ்சேன்..

அவங்க காப்பாற்றப் பட்டு விட்டாங்க..”

“இதை மறந்துடு எஸ்தர்” என்கிறான் சார்..”

சரி …பரவாயில்லை..அவனை கூப்பிடு.

அவன் வரட்டும்.வினயா நன்றி சொல்லட்டும்.இவளை நேரில் பார்க்கட்டும். அப்புறம அவன் இஷ்டம்.




இந்த விபாகரை பார்க்காமலேயே ஆசைப்பட ஆரம்பித்து விட்டோம்.

“ஆனால் பாஸ்கர் பார்த்தும் பார்க்காமல் இருக்கிறான். நானும் அவன் கூட பேச முயற்சி செய்யலை..”

காதல் கூட ஒருவேளை சந்தர்ப்ப வாத கூட்டணியோ..”

விபாகர் வரவழைக்கப்பட்டான்..

அங்கே வந்து நின்றது மற்றவர்களுக்கு விபாகர்,

வினயாவுக்கு மட்டும் பாஸ்கர். ஆமாம் சற்று நேரம் முன் பார்த்துக் கொண்ட இவளின் அதே பாஸ்கர்.

“பாஸ்…இவ தான் வினயா??”

இவங்க உனக்கு உதவி சொல்லணுமாம்.

நீங்க பேசிக் கிட்டு இருங்க..

இவர்களை தனிமையில் விட்டு அகன்றனர்..

நீங்கதான் அவங்க சொன்ன விபாகரா??ஆச்சர்யத்தில்

முதலில் வினயா ஆரம்பித்தாள்.

“ஆமாம் .உன் வாழ்க்கைலேந்து விலகணும்னு ஒரே அடியா ஊரு , வேலை எல்லாத்தையும் மாத்தணும்னு பைத்தியம் போல அலைஞ்சேன். அப்போதான் ஒருத்தர் பேர் மாத்த சொன்னார்.. அப்பா பேர் ஈச்வரனில் இருக்கற

‘ஐ ‘ எடுத்து , ‘வி ‘முன்னாடி போட்டுக்கச் சொன்னார். சுருக்கி ‘விபாகர்’ ஆனேன்.

நீ தான் இல்லை எனக்கு…. பேரிலாவது உன் முதல் எழுத்து என்னை வழி நடத்தட்டும் என மாத்தினேன்….அப்புறம் தான் வேலன் சாருடன் சேர்ந்து உழைக்க ஆரம்பிச்சேன்..உன்னை மறக்க முழுவதும் வேலையில் மும்முரமானேன்…கம்பெனிக்கு அடித்தளமானேன்.

அப்போது தான் உன் மெயில் பார்த்தேன். உன் ஐடி பார்த்தேன்.

உன்னையும்..பார்த்தேன்.சதீஷ் வந்த நோக்கம் சரியில்லே நு தெரிஞ்சுகிட்டேன்.” “ஆனால் இவ்வளவு தீவிரமாக ஆகுமென நினைக்கல..” உன் வாழ்க்கைல மீண்டும் உன்னைக் காப்பாத்த எனக்கு உதவிய அந்த ஆண்டவனுக்கு நன்றி..”

“எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லையே வினயா.”

“இனிமேலும் அப்படி உனக்கு உதவ முடியுமா என தெரியவில்லை..”

“உடனடியாக நீ ஒரு கல்யாணம் செஞ்சுக்கோ..”

“உனக்குத் தான் இன்னும் கல்யாணம் ஆகலையே பாஸ்..”

மெதுவாக ஒற்றை வார்த்தை உதிர்த்தாள். “ஏன் என்னை வேண்டாம் என்கிறாய்??”

உன் அம்மாவை பொறுத்தவரை நான் பொய்யன்.”

அப்பாவை பொறுத்த வரை நான் யாரோ ஒரு அன்னியன்.

உனக்கு நான் முன்னாள் காதலன்நு எப்படி சொல்வாய்..??

என்னால் உண்மையை நிருபிக்க முடியவில்லையே..”

இப்போது வினயா குஷி ஆகிவிட்டாள்.

“அட லூசு..பாஸு,.இது தான் காரணமா???….”

” அந்த உண்மைய நான் பார்த்திட்டேன்.”

“நீ என்ன உளறரே???” “நான் உன் தம்பிமாமா பத்தி பேசினேன்.”

“நானும் அவரைப் பத்தி தான் பேசினேன்.அவர் உயிரோட தான் இருக்கார்.நேத்து நியூஸ்ல லாம் காமிச்சாங்களாமே..அவருடைய

சாகசத்தைப் பற்றி.. ” “நீ பார்க்கலயா??”

“நான் எங்கே டிவி பார்த்தேன்??

உன்னை தானே ஃபாலோ செஞ்சுகிட்டு இருந்தேன்.”

“நீ உண்மையாதான் சொல்லறயா?..”

இப்போ இருவருக்கும் பழைய காதல் பற்றிக் கொள்ள..

“காட் பிராமிஸ், மதர் பிராமிஸ்..”

என மாறி மாறிச் சொல்லி கண்ணீர் திவலைகள் ஒருவர் முகத்திலிருந்து இன்னொருவருக்கு மாறியது.

எஸ்தர் அப்போது வர..

“பாஸ் என்னது..இது..??”

“அதுக்குள்ள அவ மேலே பாஞ்சுட்டே???”

இருவரும் ஒருவர் பிடியிலிருந்து ஒருவர் விலக.

வினயா மீண்டும் அவனைக் கட்டிப் பிடித்து ” இனிமே எப்பவுமே அப்படித்தான்.” என்றாள். எஸ்தர் ஒன்றும் புரியாமல் சந்தோஷமானாள்.




“அட பாஸ்கர் நீயாப்பா???”

“நீ அவளை கண்டுக்கல நு கொஞ்ச நேரம் முன்னோடி தான் சொல்லி குறைப் பட்டுட்டாளே..” என்றார் உள்ளே வந்த பிரகாஷ் .

வினயாவின் காதில் அந்த விபாகரை நீ பார்க்காததும்

 நல்லதா போச்சு என்றார்..

“தம்பி மாமா..””அந்த விபாகர் தான் ,என் பாஸ்..”

“என்னடி நீயும் இவனை பாஸ் என்கிறே..??”

என்றாள் எஸ்தர்.

“ரெண்டு பேருக்கும் பாஸ் தான்… ஆனா வேற வேற மாதிரி..”

என வினயாவை பார்த்து கண்ணடித்தான்.

அப்போது பட்லர் அங்கே வந்து மதியம் மீட்டிங்குக்கு ஒரு சேஞ்சா

“ஸ்னாக்ஸ் ,ஆனியன் ஊத்தப்பம் சட்னி செய்யட்டுமா சார்..” என்றான்.

இருவரின் குபீர் சிரிப்பில் ,வாயில் இருவரும் வைத்திருந்த

ஜூஸ் இப்போது அடுத்தவரின் உடையில் ஏறிக் கொண்டு ஆடையில் உறிஞ்சப்பட்டு உடலில் சில்லென கோலம் போட ஆரம்பித்தது.

  _________________________________________________________

மூன்று மாதம் கழித்து,

கூட்டுக் குடும்ப வீட்டில்,

பாஸ்கருடன் வினயா ,தாலி மெட்டியுடன்.

“அம்மா அப்பா தம்பி தங்கைக்கு நடுவிலே நீ வேணும் நு கூப்பிட நான் என்ன செய்யறது??”

“சே..தத்தி..பாஸ் நீங்க.” “எத்தனை சினிமா பாக்கறே. இதுக்கெல்லாம் கோட் வோர்ட் வெச்சிக்கணும்.” “ஆனியன் ஊத்தப்பம் நு வெச்சுக்கலாம்..”

“சரி.. என்ன பண்றே.??..”

“நம்ம கதைய எழுதிட்டு இருக்கேன்.”

“தலைப்பு ??….

“நேசத்தினால் நெருங்கிவிடு “

நல்லாருக்கா??”

இப்போது அவளை மெதுவாக அணைத்து,

“யார் யாரை நெருங்கினாங்க..”

“அதெல்லாம் படிக்கறவங்களுக்கு புரியும்.”

“அந்த பேட்டி எடுத்தது எப்போ வரும்??..”

“யாருக்குத் தெரியும்??”

“என்னடி இப்படி சொல்றே??..”

உன்னை நம்பி பேட்டிக்கு ஏற்பாடு செஞ்சனே..??”

“எனக்கு உதவணும் தானே செஞ்சே,உதவி செஞ்சாச்சு….அவ்ளோ தான்.”

“சரி…அப்போ…இந்த கதைக்கு “ஆனியன் ஊத்தப்பம்“னு பேரு வை.”

“டேய் காலங்காத்தால ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டா நெஞ்சை கரிக்கும்டா..” என்றாள் அரை குறையாக உள்ளிருந்து கேட்ட பாஸ்கரின் அம்மா.

“கரெக்டா சொன்னீங்கம்மா..” “ராத்திரிக்கு தான் இனிமேல் இவனுக்கு ஆனியன் ஊத்தப்பம் .”

உங்களுக்கு அனுமதி கிடைத்து விட்டதுஎன மெயில் வரும்

 

அப்போ வா..” .இப்போ தள்ளிப் போ!!!!!.”    

***************************************************************************************************************




What’s your Reaction?
+1
15
+1
10
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!