Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-12

12

அந்த விபத்துக்கு பிறகு ஒரு வருடம் ஓடி விட்டது..

வினயாவுக்கும் படிப்பு முடிந்து விட்டது..ஒரு கல்லூரியில் மேல் படிப்பு படிக்க ஆசை…வைத்தியநாதன் ஓகே சொல்ல,

அம்மா அனுஷா தான் “நீ கல்யாணம் பண்ணி கிட்டு அவங்க சொன்னா மேலே படி…..” “இந்த கால பொண்ணுங்க போல காதல் கீதல்நு மாட்டிகிட்டு அப்புறம் சங்கடப் படுவே..”

அன்றே தம்பி மாமாவுக்கு போனில் மெஸ்ஸேஜ் அனுப்ப,

“அக்காவும் என்னை மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருக்காங்க..

நான் ஒரு பையனை நினைச்சிருக்கேன்…அவங்க வீட்டில் இப்போ கல்யாணம் செய்கிறாங்களானு கேட்டுட்டு சொல்கிறேன்நு சொல்லிட்டேன்.நீ கவலைய விடு..” நான் பார்த்துக்கறேன்.”

“ஆனா அவங்க மலையாளி ஆச்சே மாமா…”

“ஹா.ஹா…”

காதல் ஜாதி பார்க்காது..ஆனா கல்யாணத்துக்கு இதெல்லாம் உண்டு.” ” அந்த குடும்பம் பத்தி நான் முழுக்க விசாரிச்சுட்டேன்.”

“நம்ம ஊரு தான் .நம்ம சாதி தான்.அப்பா சின்ன வயசிலேயே கேரள அரசில் பணியில் சேர்ந்துட்டதால அவங்க அப்படி பேசறாங்க.அம்மா பாலக்காடு..””நீ தைரியமா தூங்கு..”

கல்யாணக் கனவு காணும் போது, ‘எந்த பெண்ணுக்கு தூக்கம் வந்திருக்கிறது,வினயாவுக்கு மட்டும் வர?’

 

அறைக் கதவை அடிக்கடி சார்த்திக் கொண்டு, அடிக்கடி சிரித்துக் கொண்டாள்.

அந்த வாரம் மாமா வந்து பேசி விட்டு பாஸ்கரின் போட்டோ காட்டி விவரம் சொல்லி…

“உனக்கு பிடிச்சுருந்தா மட்டும் சொல்லு..” “பிடிக்கலேனா வேண்டாம்..வேறு இடம் பார்க்கலாம்” என்று அவளிடம் கண்ணடித்தான்.

“இந்த பையனை பிடிக்காமல் போகுமா…ராஜ களை என அப்பா சொல்ல..”

“நல்ல அழகு..வினயாவுக்கு பொருத்தமா இருப்பான்.

நாம சொன்னா போதும்…இவளுக்கு எது பிடிக்கும். எது பிடிக்காதுநு எனக்கு தெரியும்..” என்றாள் அனுஷா.

“அதானே மாமா! …

அம்மா என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்.”

“அப்படிச் சொல்லுடி இவங்கிட்ட..

என் பொண்ணு என் சொல் மீற மாட்டாடா…”

“சரி.சரி..உன் புராணம் இருக்கட்டும்.

அவங்களை எப்போ வர சொல்ரே..

அவங்களுக்கும் ‘ஓகே’ தானே…”என்றார் வைத்தி.

ஏற்கனவே பாஸ்கர் வீட்டில் பேசி ரெடி பண்ணி இருந்தான் பிரகாஷ்.

அடுத்த வெள்ளிக் கிழமை ,பாஸ்கர் அம்மா அப்பா தங்கையுடன் வினயா வீட்டுக்கு ‘பெண் பார்க்க’ வந்தான்.

பிரகாஷ் வேலை விஷயமாக போன வாரமே வட நாட்டுக்கு போய் விட்டான். எல்லோரும் ஒருவருடன் ஒருவர் பேசப் பேச பிடித்து விட்டது.

 “நீங்க வேணும்னா வினயா கிட்ட பேசுங்க சார் என்றார் பாஸ்கரிடம்.




“இல்லே வேண்டாம் சார்..

அவங்க பார்வையிலேயே சொல்லிட்டாங்க பிடிச்சுருக்குனுட்டு..”

“நீ ஏதாவது பாஸ்கர்ட்ட பேசணுமாம்மா..” என்றார் பாஸ்கரின் அப்பா.

“இல்ல…வேணாம்ப்பா…அவர் ஓகே சொன்னதே போதும்..”

“என்னது அப்பாவா ..அதுக்குள்ள..”

“அவருக்கு அப்பான்னா எனக்கும் அப்பாதானே….”

“அடி சக்கை..

இனிமே என்ன..கல்யாணம் தான்..”

“நீங்க ஏதாவது சாப்பிடறீங்களா??..

தோசை மாவு இருக்கு..ஒரு ஸ்வீட் செஞ்சுடறேன்.”

“ஆனியன் ஊத்தப்பம் என் பையனுக்கு பிடிக்கும். அதுவே செஞ்சுடுங்க..என்றாள் பாஸ்கரின் அம்மா.”

பாஸ்கர் வினயாவை விவகாரமாக பார்க்க..

அவள் ஒன்றும் சொல்லாமல் அம்மாவுக்கு உதவவது போலே ஓடி விட்டாள்.

“என்ன ஸ்கோர் சார்??.”

டிவி போடுங்க பார்க்கலாம்..”

டிவி பார்த்துக் கொண்டிருக்கையில்

ஆனியன் ஊத்தப்பம், ரவா கேசரியுடன் அனுஷா எடுத்து வர..

திடீரென நியூஸ் சேனலில் செய்தி.

இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மத்திய போலீஸ் படையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்.

“அதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரகாஷும் ஒருவர்..”

என சொல்லிக் கொண்டே போக..

‘தம்பீ …’ என கத்திக் கொண்டே மயங்கி விழுந்தாள் அனுஷா.

அவள் கையிலிருந்த ஆனியன் ஊத்தப்பம் வினயா மேலும் பாஸ்கர் மேலும் பட்டுச் சிதறியது




What’s your Reaction?
+1
7
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!