Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-11

11.

“ஆயாளு போதம் விண்ட்டுத்.”

ஒருவர் சொல்ல,

பிரகாஷ் அங்கே விரையுமுன்,வினயா எழுந்திருக்க முயற்சிக்க,

“இரு …யாரென பார்த்து விட்டு வருகிறேன்.ஒரு மூணு பேர் சீரியஸாக இருந்தாங்க…”

கண் விழித்திருக்கும் பாஸ்கர் முன்னாடி போய் நின்றான்.

அவன் முன்னால் போலீஸ் போன்ற தொரு உடையில் பிரகாஷ்.

பாஸ்கருக்கு லேசாக பயம் வந்தது..

‘வினயாவுக்கு என்ன ஆயிற்றோ..என்னை விசாரிக்க போகிறார்களோ??’

இவர் தான் ரத்தம் கொடுத்தவர்,என ஒரு ஸிஸ்டர் அறிமுகப் படுத்த,

“ரொம்ப தாங்க்ஸ் சார்..”

‘வினயா பற்றி கேட்கலாமா??.’ என நினைத்தான்.

காவல் துறையின் விசாரிப்பு பற்றிய இயல்பான பயம் தொற்றிக் கொள்ள,

அதற்குள் இன்னொரு சிஸ்டர்,

“இவர் தான் அந்தப் பெண்ணை பத்தி கேட்டு கிட்டிருந்தாரு “என அங்கு வந்திருந்த ‘போலீஸ்’ பிரகாஷிடம் போட்டு உடைத்தாள்.

“யார் அந்த பெண்??” “உனக்கும் அவளுக்கும் என்ன உறவு??”

“எப்படி ரெண்டு பேரும் இந்த போட்டில் வந்தீங்க..”

“ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியுமா??”

“அந்த பெண் வேறு கல்லூரியில் படிக்கிறாளே..?”

“அவங்க டூர் வருவது உனக்கு எப்படி தெரியும்??”

அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க..

இது எதையும் கவனிக்காத

பாஸ்கர்..

“சார்…என் வினு எப்படி இருக்கா சார்??”

“அவ தான் என் உயிர் சார்..மொதல்ல அவளை காட்டுங்க..”

கதறி ‘ஓ’ வென பெருங்குரலெடுத்து அழ தொடங்கினான்.

“மெதுவா..மெதுவா..”

“ஆண்பிள்ளை இப்படி குரலெடுத்து அழலாமாங்க.. “என்றாள் அந்த ஸிஸ்டர். “அவளுக்கும் இப்போ தான் மயக்கம் தெளிஞ்சுது..”

தேம்பல் குறைந்து விக்கி விக்கி பேச ஆரம்பித்தான்.




“வினயா என் உயிர் சார் ..”

“அடுத்த வருஷம் வீட்டில் சொல்லி கல்யாணம் செய்து கொள்ளலாம் என இருக்கோம்..”

“அவளுக்கு ஏதாவது ஆகும் என திடீர்னு என் உள் மனசு சொல்ல ஆரம்பித்தது..”

“அதான் நேத்து காலை ஃபிளைட் பிடிச்சு இங்கே வந்து தேடினேன்..

அவ சிம் கார்ட் இந்த ஊர்ல எடுக்காது..”

“நல்ல வேளையாக அவளின் சீனியர் இப்போ அந்த கல்லூரியில் லெக்சரர்…அவளை பிடித்து இவர்களுடன் வந்திருக்கும் ஒரு லெக்சரர்க்கு போன் செஞ்சு..”

விட்டு விட்டு குழந்தை மாறி கேவி விட்டு…

“அந்த போட்டுக்கு போனேன்.”

” எங்க ரெண்டு பேருக்கும் ஏதோ ஆபத்து என நினைக்கும் வேளையில் வேகமாக அந்த போட் மோத வந்தது..”

“அப்போது மோதி இருந்தால்..

என் கண்ணெதிரே யே…என் வினயா…”திரும்பவும் தேம்ப ஆரம்பித்தான்.

“நீ சொல்றது சரிதான்.அந்த பக்கத்தில் இருந்தவங்க சிலர் இறந்துட்டாங்க..”

“நாங்க ஒவ்வொருவராக காப்பாற்றி கரைக்கு கொண்டு வரும் போது நீ அந்த பெண்ணை இறுக அணைச்சுக்கிட்டு இருந்தயே…எப்படி??”

“சார் ..எனக்கு கொஞ்சம் நீச்சல் தெரியும். எப்படியாவது விடாமல் இருந்தா வினயாவையும் காப்பாற்றலாம் என அவளை கெட்டியா பிடித்திருந்தேன். ‘நான் தான், பயப்படாதே..’

என அவளிடம் முனகினேன்..ஆனால் அவளுக்கு அது தெரியுமானு தெரியல சார்..ஆனால் திடீர்னு தலையில் ஒரே வலி..கையில் ஏதோ அகப்பட்டிருந்ததை ஒரு கையால் கெட்டியாக பிடித்தது தான் தெரியும் சார்..”  “ஆனால் வினயாவுக்கு நான் வந்தது தெரியுமானு தெரியாது சார்..”

அதற்குள் வினயாவை ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்து வந்தனர்..

“இந்த பொண்ணு ரொம்ப அழுவுது சார்..இவனை பார்க்கணும்னு..”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த பார்வையில் ஓராயிரம் சொற்கள் பரிமாறப் பட்டன.

இதனை பிரகாஷும் பார்த்தான்.

அவன் மனதில் ஒரு திருப்தி.

‘நம்ம வினயா இவ மேல் உண்மையான ஆசையுள்ள ஒரு பையனை தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள்…பரவாயில்லை ‘ என் நம்பிக்கை வந்தது.

ஒருவரை ஒருவர் பார்த்து

‘நீ எப்படி அந்த போட்டுக்கு வந்தே..’

என எல்லாம் விசாரிக்கப்பட்டு.. சொல்லி..

அழுது… சிரித்து…

அங்கே மெதுவாக ஒரு காதல் நாடகம்

முழுமை பெறக் காத்திருந்தது.

“இவர் தான் எனக்கு ரத்தம் கொடுத்த பிரகாஷ் சார்..” என்றான் பாஸ்கர்.

“எனக்குத் தெரியும்..?”

“எப்படி தெரியும்நு கேளேன்!..”




“நீ தானே இப்போ சொன்னேநு அரதப் பழசான ஜோக் சொல்லுவே..”

“எனக்கு சிரிக்க கூட தெம்பில்லேடி..”

“இல்லே..நீ தோத்துட்டே..” குழந்தையாக மாறி சிரித்தாள்.

“இவரை நான் பொறந்தபோதிலேந்து தெரியும்

இவர் எங்க பிரகாஷ் மாமா..”

“அப்போ..நீ சொல்லுவியே அந்த தம்பி மாமாங்கிறது யாரு??”

“அம்மா இவரை தம்பிநு தான் கூப்பிடுவாங்க ..

அதனால நான் தம்பிமாமா நு சொல்லியே பழகிட்டேன்.”

மெதுவாக இப்போது பிரகாஷ் இவர்கள் பேச்சின் ஊடே நுழைந்தான்.

“ஓ..உங்க காதலுக்கு நடுவிலே என் பேரை எல்லாம் சொல்லி வெச்சுருக்கியா??”

“இல்ல மாமா..’எங்க தம்பிமாமா’னு ஒருக்கா இவண்ட சொன்ன போது இதும் மூஞ்சி போன போக்கை பார்க்கணுமே.. “

“நீங்க முறை மாமன்நு…”

“அதான் அப்பப்போ உங்க பேச்சை இழுப்பேன்..”

“அதானே பார்த்தேன்.”

“இல்ல தம்பிமாமா..நான் உங்க மூலமா தான் வினயா வீட்டில் எங்க கல்யாணத்துக்கு பெர்மிஷன் வாங்கணும் நு நெனச்சிருந்தேன்.”

“என்னது..நீயும் தம்பி மாமாங்கிறே..”

“வினயாவுக்கு என்ன உறவோ அதே தானே எனக்கும் மாமா..”

” தப்பா தம்பிமாமானு “சொல்லி இருவரும் சிரிக்க..

“சரி..இப்போது இப்படி சிரிக்கறீங்களே ..வினயாவாவது பெண்..நீ ஒரு ஆண்.. நீ இப்படி பயந்து ஓ வென அழலாமா??”

“மாமா..பயங்கிறது ஏதாவது நடக்குமோநு நினைக்கும் போது எழறது..

அப்போ தைரியமா தான் இருப்பேன்..”

“ஆனா இவளுக்கு ஏதோ ஆகி விட்டதுங்கிற நினைப்பு வந்த போது…”

லேசாக எட்டிப் பார்த்த கண்ணீரை இடது விரலால் சுண்டி விட்டு…

அழும் மனசுக்கு ஆண், பெண் வித்தியாசம் தெரியுமா மாமா?..”

இந்த பாழும் மனசுக்கு உயிர் தானே தெரிகிறதுஅந்த உடம்பு தெரியறதில்லையே..”

 

பாஸ்கர் சொன்னது பிரகாஷுக்கும் உரைத்தது.

‘உடம்பில் உயிர் இல்லாத போது அது ஆணா..பெண்ணா??’

‘ஆனால் அந்த உயிருக்கு தானே மனசு அழுகிறது.’

“கவலைப் படாதே..நீ ரெண்டு நாளில் ஊர் போய் சேர்.”

“நான் இப்போது வீட்டில் உங்களைப் பத்தி ஒன்றும் சொல்லலை..”

“வினயாவுக்கு இப்படி ஆனதை சொல்லி அவ வீட்டுல விட்டுட்டு என் அக்காவை தேற்றி விட்டு போகிறேன்.

நீ தைரியமா ரெஸ்ட் எடு..

உனக்கு வேலை கிடைக்குமா?? எப்போது சேருவாய்..”

“இப்போதே ஒரு பெரிய கம்பெனியில் இண்டெர்ன் செய்கிறேன் மாமா..அவர்களே என்னை எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கு..ஐ ஐ டி எம் பி ஏ ங்கிறதாலே…மாசம் ஒரு லட்சம் கூட கிடைக்கும்.”

“அடப்பாவி..பாஸு..இதை நீ எங்கிட்ட சொன்னதே இல்லையே…”

“நமக்கு நடுவே எப்பவும் பணம் பத்தி பேச்சே வந்ததில்லையே வினயா..”

“நான் அவ்வளோ நல்லவ.” “மத்தவளுங்க மாதிரி தினமும் உன்னை பிடுங்கி எடுக்கல பாத்தியா??”.

“உனக்கும் எனக்கும் பிடிச்ச ஆனியன் ஊத்தப்பத்துக்கு ஒரு இருநூறு ரூபாவே அதிகமாச்சே..”

“அது என்ன ஆனியன் ஊத்தப்பம்??”

“அது எங்களுக்குள்ள தனி டிராக் மாமா..”

“சரி ..சரி.அதெல்லாம் நான் கேட்கலை..”

அலுப்பு போக குளித்து விட்டு ஒரு தூக்கம் போடணும் என நினைத்த வினயாவை இந்த படங்கள் மூலம் வந்த நினைவுகள் தூக்கி அடித்து பந்தாடின.

அடுத்த படம்… பிரகாஷ் நடுவே, இரு புறமும் வினயாவும், பாஸ்கரும்.

இதை பார்த்ததும்

அந்த முக்கியமான நாள் நினைவுக்கு வந்து கண்களில் தாரை தாரை யாக கண்ணீர் கொட்ட தொடங்கியது.




What’s your Reaction?
+1
8
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!