Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-10

10

“வினயா….நீ கேமேரா எடுத்துட்டு வந்திருக்கியா பேட்டி எடுக்க??”

“எடுத்துட்டு வந்திருக்கேன்கா…எதுக்கு கேக்கறீங்க…?”

நாம போட்டோ எடுத்துக்கலாம் ,இந்த செல் போன் கேமராவை விட நல்லருக்குமே”.

சிற்றுண்டி அருந்த போன போது எஸ்தர் கூறினாள்.

“சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்.” “4 மணிக்கு மேலே போவோம்…நடுராவுல வந்தது  தூக்க கலக்கமா இருக்கு..”

“எனக்கும் தான் கா….ஆனால் 4 மணிக்கு போட் ரைட் இருக்குமாநு தெரியல..பார்ப்போம்.” என்று ரூம் வந்து  எஸ்எல்ஆரை

உறையிலிருந்து எடுத்தாள்.

தனியே எடுத்து வைத்திருந்த மெமரி கார்டை உள்ளே செருகினாள்.

பழைய வேண்டாத சில படங்களை அழித்தாள்.

பாஸ்கர் மேலே விழுந்த அந்த கேண்டீன் படம் ..அதில் சிதறிய ஆனியன் துண்டும் மார்பின் மேல் இருந்த காபி கறையும் ..

கண்களில் குபுக் என கண்ணீர் கொப்பளித்தது.

“இந்த மனசுக்கும் கண்ணுக்கும் என்ன அப்படி ஒரு ஸ்னான பிராப்தியோ??. ” என நினைத்து கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அடுத்த படம் கொச்சி மெரைன் டிரைவில்

மறக்க முடியுமா???

நினைவுகள் இப்போது நீச்சலடிக்கத் துவங்கின..

அந்த கல்லூரி கல்சுரல் சம்பவத்துக்கு பிறகு,

தினமும் ஒன்றிரண்டு எஸ்எம்எஸ் என ஆரம்பித்த நட்பு, உறவாகி,

‘எந்த சிம்மில் 100 இலவச குறுந்தகவல் கொடுக்கறாங்க என பார்க்க ஆரம்பித்தது.’ பாஸ்கர் வினயா காதல் வேர் பிடித்து வளர ஆரம்பித்தது.

“வினய், வின்னி, வினு, வினுக்குட்டி” என விதம் விதமாக அழைப்பான். “நான் கொஞ்சம் வேலைக்கு போனவுடன் என் குடும்பம் தலையெடுக்கும் .அப்போது நானே உன்னை பெண் கேட்டு வருகிறேன்.அது வரை நம் வீட்டுக்கு தெரிய வேண்டாம்.”

நேரில் சில நேரங்களில் பாஸ்கருடன் பேசி இருக்கிறாள்.. அதுவும் வீட்டில் லைப்ரரி செல்வதாய் கூறி ஒவ்வொரு முறையும் ஒரு தோழியுடன் வந்தாள்.

” ஏய்.வினய் …உங்காளு கொஞ்சம் லூசா…இல்ல டீசன்சி தெரியாதா??

அவனுக்கு…நான் ஒருத்தி வந்திருக்கிறது கூட தெரியாம ,

உன்னை அடுத்த டேபிளுக்கு கூட்டி போய் அப்படி ஒரு அரட்டை..சிரிப்பு..” என எரிச்சலடைந்து ,

“இனிமேல் லாம் என்னை கூப்பிடாதே…”என்றாள் ,பின்னாளில் டிவியில் ரசிகர்களின் ‘கண் கவர்ந்த’ வீஜே ஆன தோழி ஒருத்தி..

“என் ‘பாஸ்’ உன்னையெல்லாம் ஒரு ஆளாவே மதிக்கல டீ “

என அவளை கிண்டல் செய்யும் போதே,

இவன் ஒரு பொக்கிஷம்..இவனைப் போன்றோர் வெகு சிலரே இருப்பார்கள் ..அவனை விட்டு விடாதே ..’என மனம் கூறியது.




‘ஆனால் இப்போது அவனைத் தொலைத்து விட்டு தேம்பிக் கொண்டிருக்கிறேனே..’

வினயாவின் மனதில் நெடுநாட்களாக புதைந்து கிடந்த சம்பவங்கள் ,இன்று வேலையில்லாத டெவில்ஸ் மைண்ட்ஐ ஆக்கிரமிக்க தொடங்கியது.

“பாஸ் …இந்த வாரம் வியாழன் முதல் காலேஜ்ல கேரளா டூர் போகிறோம். திங்கட் கிழமை தான் திரும்பி வருவோம்..ஓணம் பண்டிகை சமயம் செமயா இருக்குமாமே…”

“ஆமாம்..நல்லா தான் இருக்கும்.. என் கூட போனா..ஆனா நீ உங்க கேர்ள்ஸ் கூட போறயே…” “எதுக்கும் பத்திரமா இரு…

அங்கே சிகரெட் , தண்ணி எல்லாம் அதிகம்..

தெரியாத ஊர்நா உங்க பொண்ணுங்க இந்த தப்பெல்லாம் செய்வாங்க,

உன்னையும் தூண்டு வாங்க…”

அது சரிஎது தப்புஎது ரைட்டுனு எப்படி புரிஞ்சுக்கறது??”

 

ரொம்ப சிம்பிள் வினும்மா..”

இன்னிக்கு என்ன நடந்ததுநு அம்மா அப்பாக்கு சொல்வியா??”

 

அது மூட் பொறுத்தது..”

 

ஓகே..ஆனா இதை நாம அம்மா இல்லை, அப்பா கிட்ட சொல்லலாம்நு நினைக்கறச்சே ஒரு பயம் வருமே அது தான் தப்பு..”

இதெல்லாம் சொல்லலாம்நு நினைப்பயே அது தான் சரி..”

அந்தந்த குடும்பத்து வழக்கம், வளர்ப்பை மீறினால் அது தப்பு..”

 

 

“அப்போ நம்ம காதலிக்கறதை இன்னும் சொல்லலியே..”

“இது தப்பு தானே பாஸ்.”

“ஆமாம்..இது தப்பு தான்… ஆனால் தற்காலிகம்..அவங்க சம்மதத்துடன் கல்யாணம் செஞ்சாவிட்டு அது சரியாயிடும்.”

“எங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.”

“அத நான் பார்த்துக்கறேன், எப்படி ஏற்பாடு செய்யலாம் என..

நீ கவலை படாதே…””இது தானே கடைசி வருஷம் உனக்கும் எனக்கும் …” “முடிந்தவுடன் பேசிக்கலாம். இது போல பேச்சிலேயே ரொம்ப நாள் கழிக்க முடியாது வின்னி.”

“அது தான் பாஸ் எனக்கும் கஷ்டமா இருக்கு..உங்கூடவே இருக்கணும் போல இருக்கு..” “என்னனே புரியல..என்னடா செஞ்சி வெச்சுருக்க என்னை??”

“சரி. ஜாலியா ரெண்டு நாள் போய்ட்டு வா…” “அப்புறம் பேசறேன்..

அங்கேலாம் உனக்கு எஸ்எம்எஸ் வந்து சேராது ..” ஓகே பை.”

வியாழன் இரவு ரயிலில் கிளம்பி ஒரு நாற்பது பேர் எர்ணாகுளம் சென்றனர்…எஜுகேஷனல் டூராம்.

“நிறைய விஷுவல் பார்க்கலாம்டி..” என்றாள் ஒருத்தி.

“கேரளா பாய்ஸ் ஒரு தனி அழகு தாம்ப்பா…” அதுவும் அந்த வேட்டிய மடிச்சு கட்டி “னு வாயை ஒரு சுழி சுழித்தாள்.

“ஆமாம் வினயா மாதிரி, எல்லாருக்கும் உள்ளூர்லயே கேரள மாப்பிள்ளை கிடைக்குமா?..”

“ஏண்டீ..உங்க எரிச்சலை எங்கிட்ட தீர்த்துக்கறீங்க. பொறாமை காரிங்க..”

“ஆமாமாம்….பொறாமைடீ.. நீயும் உன்னாளும் பழகறதை பார்த்தா  அடுத்த ஜென்மத்துல தான் கல்யாணம் நடக்கும் போல..” “அவ்…வ….ளோ ஸ்லோ..” “எனக்கெல்லாம் இப்படி ஒருத்தன் கிடைச்சிருந்தா அவன் கூட குடும்பம் நடத்தி ஒரு புள்ளய பெத்திருப்பேன்.”

“ஆமாம்..அவனும் உனக்கு ஒரு புள்ளைய வயித்தில கொடுத்த ஜோர்ல அடுத்தவளை தேடிப் போயிருப்பான்..” “எங்காளு ஒரு தனி டைப் டீ..”

கிண்டல்களும் கேலியுமாக ரயில் பயணம் போய் சேர்ந்தனர்.

‘இப்போது தோன்றுகிறது..

அந்த கரிநாக்குக் காரி சொன்னாளே….அடுத்த ஜென்மத்துல தான் உங்க கல்யாணம் நடக்கும்நு..’

‘சே..என்ன ஜென்மங்களோ..தன் விதியை நொந்து கொள்வதா..இல்லை அந்த பொறாமைகாரிகளின் கண் திருஷ்டியையா??’

சட்டென மனதை மாற்ற வேறு படங்களை பார்த்து கொண்டிருக்கையில் அந்த படகில் தோழிகளுடன் இருக்கும் படம்.

அன்று நடந்தது மறக்க கூடியதா??

 

கொச்சி மரைன் டிரைவிலிருந்து

ஒவ்வொரு தீவாக போய் கொண்டு இருந்தனர்.

வெல்லிங்டன் தீவு, வைபீன் தீவு என…அங்கங்கே சிலர் கழண்டு கொண்டனர்..வேறு வேறு சாக்கு சொல்லி

“இங்கெல்லாம் லோகல் கள்ளு ஃபேமஸ், கோவா மாதிரி ஒரு ஸ்பெஷல் ‘பாங்க்’ கூட கிடைக்குமாம் டீ” என பேசிக் கொண்டிருந்தனர்.

“நீ கூட ஒரு தடவை ட்ரை பண்ணுடி..”

“வீட்டுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது…”

என அட்வைஸ் வேறு கொடுக்க ஆரம்பித்தாள்.

“இல்லடி எனக்கு இந்த மீன் வாடைலாம் ஒத்து வரலேனு”  சொல்லிட்டு கிளம்பி விட்டாள்.

‘ நம்ம பாஸ்கர் எப்படி எல்லாவற்றையும் தெரிந்து வார்ன் செஞ்சிருக்கான் .’ ‘இவளுகளை விட்டா எதிலாவது கலந்து கொடுத்துவாளுங்க…’




கொச்சி ஹார்பரில் இவளும் இன்னும் சிலரும் மட்டும் மீண்டும் போட்டில் ஏறி சில நிமிடங்கள் போயிருக்கும்.

“ஏய். வினு…” என்று ஒரு கத்தல்.

பின்னாடி இருந்து சட்டென அணைத்து தள்ளினான்..

அவளின் பாஸ்கர்.

அதே நேரம் வேகமாக அந்தப் புறம் வந்த ஒரு மீன் பிடி படகு..இவள் நின்றிருந்த இடத்தில் மோதியது..

இவர்களின் போட் கவிழ்ந்து அனைவரும் கடல் நீருக்குள்.

வினயா உள்ளே உள்ளே… சென்று கொண்டிருந்தாள்.

ஆனால் அவளை ஒரு கையால அணைத்துக் கொண்டே நீச்சலடித்து அருகில் இருந்த ஏதோவொன்றை பற்றிக் கொண்டு

மூர்ச்சையானான் பாஸ்கர்.

மயக்கம் தெளிந்து வினயா பார்க்கிறாள்..ஒரு மருத்துவமனை.

அருகில் பாஸ்கர் இல்லை..அது பெண்கள் வார்ட்.

“சேச்சி..சுகமாயிட்டு..”என ஏதோ ஒரு நர்ஸ் சொல்ல,

மெதுவாக ஒரு பூட்ஸ் கால் சத்தம்.

பாஸ்கராக இருக்கும் என திரும்பிய வினயாவுக்கு ஒரு புறம் ஏமாற்றம் ..இன்னொரு பக்கம் அதிர்ச்சி.

அங்கே காவல் சீருடையில் பிரகாஷ்.

“தம்பிமாமா..நீங்க எங்கே??”

“நாங்க தான் பக்கத்து போட்லேந்து குதித்து உங்களை காப்பற்றினோம்..” “நீ காலேஜ் டூர் போயிருக்கேனு அக்கா சொன்னங்க நேத்து… ஆனா எங்கனு கேக்கலை..” “உங்க ஃப்ரெண்ட்ஸ் டீச்சர்ஸ எல்லாம் விட்டுட்டு நீங்க சிலர் மட்டும் ஏன் இதிலே ஏறினிங்க??”

விவரம் சொன்னாள்.

பிரகாஷ்…மிகத் துடிப்பானவன்.

வினயாவின் அம்மா அனுஷாவிற்கு ஒரே தம்பி.

ஆனால் சின்ன வயசுலேந்து போலிஸ் ஆக வேண்டுமென ஆசைப் பட்டு மத்திய ரிசர்வ் படை, தேசிய பேரிடர் படை என வலம் வந்து அவன் ஆசைப் பட்ட படி அட்வெஞ்சர் செய்தபடி இருப்பான்.

கல்யாணம் இந்த அட்வெஞ்சருக்கு தடையா இருக்குமென திருமணமே செய்து கொள்ளவில்லை.

வருடத்திற்கு ஒரு முறை அக்காவை பார்க்க வருவான்.ஆனால் வாரம் ஒரு முறை இவர்களுடன் போனில் பேசி அந்த அந்த வார அப்டேட் கொடுப்பான்.

வினயாவை விட 10 வயது பெரியவன்.. அனுஷாவுக்கு இவன் மேல் தனி பாசம்.

‘இப்போது மாமா விடம் கேட்க முடியுமா.. என்னை காப்பாற்றிய பாஸ்கர் எங்கே ???என..ஒரு வருஷமா அவனை பற்றி ஒன்றும் சொன்னதில்லையே…’

மெதுவாக சுற்று முற்றும் பார்க்கிறாள்.

வேறு ஆண்கள் யாரும் இருப்பதாக

தெரியவில்லை.

“எப்படி வந்து என்னை காப்பாத்தினே மாமா ??”

“எல்லாம் சினிமா போல இருக்கே..

அம்மாக்கு சொல்லிட்டயா…”

“ஆமாம் சினிமா போல தான் இருந்தது..” ” யார் அந்தப் பையன்??”

“யாரு மாமா..??

“யாரா…ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கறயே…”

வினயா , தண்ணீரில் மூழ்கு முன் அவன் குரலிலும், பிடித்த பிடியிலும் ,அந்த ஸ்பரிசத்திலும் ,லேசாக காதில் ‘பயப்படாதே வினும்மா’ என சொல்லிய வார்த்தையிலும் , மூர்ச்சை யாகும் முன் தன்னை பிடித்து கொண்டிருந்தவன் பாஸ்கர் என அறிந்தாள்.

ஆனால் இப்போது,

“தெரியல மாமா..யாரோ ஒருத்தன் ‘ஏய் ‘நு கத்தி என்னை போட் மோதும் போது இழுத்தான் .” “கவிழ்ந்து விழுந்தது தான் தெரியும்”என்றாள் கண்ணை மூடிக் கொண்டே.

கண் திறந்தால் அவளது பேசும் விழிகள் உண்மையை உரைத்து விடுமே.

“பொய் சொல்லாதே வினயா..” “எந்த ஒரு பையனும் இது போல சமயத்தில் காப்பாற்ற வருவது இயல்பு தான் ..ஆனா அவன் தலையில் அடி பட்டு இருக்கும் போதும் இன்னொரு பெண்ணை விடாமல் பிடிச்சுட்டு இருக்க மாட்டான்.” ” நான் செய்வேன் . அது எனக்கு தொழில், எங்களுக்கு கத்து கொடுத்த சேவை ..ஆனால் இவன் சாதாரணன். அதனால் தான் கேட்கிறேன்..யார் அவன்??”

“அவன் பேரு…..பாஸ்கர்……மாமா.. அவன் எப்படி இருக்கான்?? ஒண்ணும் ஆகலியே..”

“ஏன் உனக்கு இந்த அக்கறை அவன் மேலே…”

“அவன் இன்னும் கண் முழிக்கலை..தலையில் அடி பட்டு ரத்தம் அதிகமா போயிருக்கு.”

“அய்யய்யோ..அவனுக்கு ரேர் வகை ரத்தம்.. பாம்பே பிளட் குரூப்பாச்சே மாமா..”

“தெரியும்… இப்பதான் நான் கொடுத்துட்டு வந்தேன்.”

“மாமா..பாஸ்கர் பொழைச்சுடுவானா? என் லைஃபே அவன் தான் மாமா..” கதறி அழத் துவங்கினாள்.

ஆண்டவன் தன் விளையாட்டை ஆரம்பித்திருக்கிறானாஇல்லை முடிக்க நினைக்கிறானா???




What’s your Reaction?
+1
12
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!