Serial Stories குறளி வசியம்

குறளி வசியம்-9

9

” கோமளம், இங்க வெளியே வா”.

“என்னன்னா, ஏன்  கத்துறீங்க”?  ஆமா யாரு இது குழந்தை,  ரொம்ப லட்சணமா இருக்காளே?

வீட்டு வேலைக்கு ஆள் கேட்டிருந்தோமோ இல்லையோ? அதான்’ சங்கர்ராமன் ‘ அனுப்பி வைத்திருக்கிறான்.
ஏன்னா இந்த குழந்தை ரொம்ப அழகா இருக்கான்னா,
” ஏண்டியம்மா உன் பேர் என்ன”?

அவளுடைய பேரு ‘வள்ளி ‘அம்மா, அப்பா இல்லாத குழந்தை. நம்ம ஊரு இல்ல வெளியூர் .சங்கர்ராமன் கிட்ட வேலை பார்த்துக்கிட்டு இருக்கா. நமக்காக ஒரு வாரம் நம்ம வீட்டில வேலை செய்ய அனுப்பி வைத்திருக்கிறான். தகவல் போதுமா இன்னும் வேணுமா?

ஏன்னா; ,இப்போ இதெல்லாம் நான் உங்ககிட்ட கேட்டேனா ? “செத்த தள்ளுங்கோ”….
” நான் அந்த குழந்தை கிட்ட பேச போறேன்”.

அடியே கோமளம்  ; ‘,அவளுக்கு பேச வராது டி’..,.

“அச்சச்சோ” இந்தக் கடவுள் ஏன் இந்த குழந்தைக்கு இப்படி ஒரு பாவத்தை பண்ணினார்.

“அது அது அவருடைய கர்மா. இது கூட தெரியாத நோக்கு”.  “இந்த பார் வள்ளி நீ வீட்டுக்குள்ள போயி வேலைய பாரு”. எந்தந்த வேலைய எப்படி எப்படி பார்க்கணும், எவ்வளவு நேரத்துக்குள்ள பார்க்கணும் எல்லாம் நான் உனக்கு சொல்லி இருக்கிறேன். நான் சொன்னது எல்லாம் மனசுல இருக்கு இல்ல?
வள்ளியின் முகத்தின் மீது தன்னுடைய கண்களை அழுத்தமாக பதிய வைத்து ,ஒரு அர்த்த புஷ்டியான பார்வையுடன் இந்தக் கேள்வியை கேட்டார் ஐயர்.
ஐயரின் இந்த கேள்விக்கு எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் தலையை அசைத்து விட்டு வள்ளி வீட்டிற்குள் நுழைந்தாள்.

வள்ளிக்கு நன்றாக இருந்தால் 12 வயது இருக்கும். அப்படியே வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல் இருந்தாள். பொன் நிறமான தேகம், வட்டமான முகம் கூர்மையான நாசி ,நீண்டு வளைந்த வில் போன்ற புருவம், இமை, முடிகளும் கூட மிகவும் நீளமாக வளர்ந்து இருந்தது. அவளின் கூரிய கண்கள் எவரின் இதயத்திற்கு உள்ளும் ஊடுருவி விடும் என்பது போல் இருந்தது .பாவாடை சட்டையில் பார்ப்பதற்கு மொத்தத்தில் பளிச்சென்று இருந்தாள். முக்கியமான ஒன்றை சொல்ல மறந்து விட்டேனே, வள்ளிக்கு தலைமுடி மிகவும் நீளம்  ஒற்றை ஜடையில் இன்னும் இடுப்புக்கும் கீழே முடி தொங்கிக்கொண்டிருந்தது.




அடுத்து வந்த நாட்களில் வள்ளி அந்த வீட்டின் வேலைகள் அனைத்தையும் கவனிக்க ஆரம்பித்தாள். எல்லாம் ஐயரின் சொல்படிதான் நடந்தது. ஒவ்வொரு வேலைகளையும் ஐயர் குறித்த நேரத்திற்கு முடித்தாள்.

கோமளத்தம்மாளுக்கு வள்ளியை மிகவும் பிடித்துவிட்டது. எந்த வேலை சொன்னாலும் சலைக்காமல் நேர்த்தியாக ,அழகாக செய்யும் அந்த பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்.

“கோமளம், நான் நாளை ஊருக்கு செல்கிறேன், நீ பத்திரமாக வீட்டில் இருந்து கொள்வாய் தானே”?
“ஏன்னா ,நான் என்ன குழந்தையா”? மாறி மாறி இதை எத்தன தடவ சொல்வேள்?.
அப்படி இல்லடி  ,கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல உன்னைய தனியா விட்டுட்டு நான் போனதில்லை.

அதான் துணைக்கு ‘வள்ளியை’ வைத்திருக்கிறீர்களே!!!!நான் பாத்துக்குறேன்னா..

சரி ,அப்ப நான் கிளம்புறேன்.
மறுநாள் ஐயர் ஊருக்கு வெளியேறினார்.

”  வள்ளி, இங்கே வா”.….  அய்யரின் அருகே வந்த வள்ளி குனிந்தபடி இருந்தாலும் ,தன்னுடைய தலையை ஓர் அளவிற்கு மேலே உயர்த்தி விழிகளை மேல்நோக்கி திருப்பி ஐயரைப் பார்த்தாள்.

இங்கே பார் ,”நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு தானே”?
தலையை மேலும் கீழும் ஆட்டி தன்னுடைய ஆமோதிக்க தெரிவித்தாள் வள்ளி.

வீட்டில் வேலை இருக்கும் நேரம் வேலை செய்ய வேண்டும். வேலை இல்லாத நேரம் கழுதை முடியை எண்ண போய்விடவேண்டும் தெரிந்ததா? ஒற்றை விரலை உயர்த்தி கட்டளையிடுவது போல் ஐயர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

அய்யரின் இந்தக் கட்டளைக்கும் தலையை மேலும் கீழும் ஆட்டி தன்னுடைய ஆமோதிப்பு வெளிப்படுத்தினாள் வள்ளி.  ஆனால், வள்ளியின் பார்வையிலும் இதழ்களின் ஓரத்திலும் ஏதோ ஒரு புன்னகை ஒளிந்திருப்பதை ஐயர் கவனிக்க தவறிவிட்டார்.

நீ இங்க வாடி, நான் சொன்னத நல்லா ஞாபகம் வச்சுக்கோ;
அடடடடா!!! ஆரம்பிச்சிட்டேளா,  கிளம்புகோன்னா …
கிளம்புறேன் டி; கிளம்பி கிட்டு தானே இருக்கிறேன்  . தீபாவளி வருது, பண்டிகை வருது அப்படின்னு ஏதாவது காரணம் சொல்லி வள்ளிய குளிக்க வைக்க முயற்சி பண்ணாத, அவள் குளிக்க மாட்டாள். அந்தக் காரணத்தை எல்லாம் நான் ஊருக்கு போய்ட்டு வந்து சொல்றேன் தெரிஞ்சதா?..

சொன்னபடி வீட்டின் வாசல் வரை நடந்து சென்ற ஐயர், மீண்டும் திரும்பி கோமளத்தம்மாள் பக்கம் வந்தார்.
” எண்ணை தேய்க்க போகிறேன், தலைவார போகிறேன் என்று கூட நீ, அவள்  மீது கை வைக்கக் கூடாது தெரிந்ததா”? அதிகாரமாக குரலை உயர்த்தி கூறினார் அய்யர்.

சரின்னா ,நீங்க சொன்னபடியே நடந்துக்குறேன் போதுமா….

ஐயர் முழு மனநிறைவுடன் வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஏதோ ஒன்று அவர் அடிமனத்தில் அழுத்திக் கொண்டுதானிருந்தது .அது என்னவென்று அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வீட்டின் பூஜையறையில் மகாகாளி மந்திர தகடு இருக்கிறது; குலதெய்வ சூலமும் தீர்த்தமும்  வீட்டிற்கு காவலாக இருக்கிறது; குறளியின் சக்தியை நூற்றில் ஒரு பங்காய் குறைத்தே செலவிட அதனை இறுக்கிக் கட்டி ஆகிவிட்டது.எப்படிப் பார்த்தாலும் கோமளம் பாதுகாப்பாகத் தான் இருப்பாள் என்று தனக்குத்தானே மனதை தைரியப் படுத்திக் கொண்டு  வெளியேறினார் அய்யர்.

(தொடரும்..)




What’s your Reaction?
+1
4
+1
6
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!