Serial Stories காதல் தேசம்

காதல் தேசம்-8

ரயில் நிலையத்தில் எதிர்பார்ப்புகளோடு  அமர்ந்திருந்தான் அன்வர். தாயாரின் உடல்நிலை நல்லபடியாக இருந்தாலும் நடப்பதற்கு அவள் சிரமப்பட்டால் அதனால் சக்கர நாற்காலியில் அவளை அமர்த்தி இருந்தான். அந்த ரயிலில் தங்களுக்காக உறுதி செய்யப்பட்டு இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்த படி இருந்தனர். சீட்டின் பின்னால் சாய்ந்த படி அல்லாவின் நாமத்தை விடாது முனுமுனுத்தபடி இருந்தார் அன்வரின் தாய்.

என்ன ஆயிற்று, இந்த கணேஷிக்கு. இந்த நேரம் இங்கு வந்திருக்க வேண்டுமே, எப்பொழுது வேண்டுமானாலும் ரயில் இங்கிருந்து கிளம்பி விடலாம். கணேஷிடம் சொல்லிக்கொள்ளாமல் போவதற்கு மனது இடம் தரவில்லை.

இருப்புக் கொள்ளாமல் ரயிலின் வாசலுக்கும் ஜன்னல் வழியாகவும் இங்குமங்கும் நடந்து கொண்டே இருந்தான் அன்வர்.

அன்வர் அமர்ந்திருந்த பெட்டிக்கு நேரெதிரே இருந்த கடையில்  தண்ணீர் குடிப்பதற்காக  வந்த ஆயிஷா அன்வரை பார்த்தாள்.

இது…….இது அன்வர் தானே? கையில் எடுத்த நீர் கீழே சிந்துவது தெரியாமல் வாயில் ஊற்றவும்  செய்யாமல் பார்வையை அகற்றாமல் வைத்த கண் வைத்தபடி அவள் அன்வரை கவனித்தாள்.

“மாற்றம் இல்லை” இது நிச்சயம் அவர்தான். அன்வர் இங்கே இருக்கிறான் என்றால், சத்தி எங்கே? ரயில் நிலையம் வந்த பிறகும் என்னை ஏன் பார்க்கவில்லை? அவ்வளவு தூரம் நான் வேண்டாதவளாகி போனேனா? சக்தியின் மீது சிறிய கோபம் வந்தது.

சரி எப்படியோ இருவரும் சந்தோஷமாக இருந்தால் சரி தான். தன் மனதை தேற்றிக் கொண்டாள். அன்வர் யாரையோ எதிர்பார்ப்பது போல் தெரிகிறதே? யாரை எதிர்க்பார்கிறார்.

சக்தி என்னை பார்க்க விரும்பவில்லை என்றாலும், தூர இருந்து சக்தியை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் ஆயிஷாவிற்கு அந்த ஆசை வந்தது.

அன்வருக்கு அவளை யாரென்று தெரியவில்லை. அந்த தைரியத்தில் அன்வர் இருந்த பெட்டியின் அருகே சென்று ஜன்னல் வழியாக மெதுவாக உள்ளே பார்த்தால் கண்களை அங்கும் இங்கும் சுழற்றினாள். எங்கே சக்தி இல்லையே.

இப்பொழுது ரயில் பெட்டிக்கு உள்ளே ஏறிச் சென்று தேடி விடுவது என்ற முடிவு எடுத்தாள் அவள். பாதையை மறித்து நின்ற அன்வர், ஹலோ இது  ரிசர்வேஷன் கம்பார்ட்மென்ட்  என்று அறிவிப்பு போல் வெளியிட்டான்.

ஆயிஷாவிற்கு அன்வர் மீது வெறுப்பு வந்தது. பணத் திமிரை காட்டுகிறான் பார் .இவன் இந்த பெட்டியில் செல்வதற்கு தானே அனுமதி வாங்கியிருக்கிறான். இந்தப் பெட்டியை விலைக்கு வாங்கி விடவில்லையே மனதில் தோன்றியதை வெளிப்படையாக கேட்கவும் செய்தாள் ஆயிஷா.

ஆயிஷாவின் இந்தக் கேள்வி அன்வருக்கு சிரிப்பை வரவழைத்தது. நீ மிகவும் துடுக்காக பேசுகிறாய் பெண்ணே .உடல் நலம் சரியில்லாத என் தாயார் இப்பொழுதுதான் கண்ணயர்ந்து இருக்கிறார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் உன்னை தடுத்தேன்.

சரி ,சக்தி எங்கே? இப்பொழுது,  அன்வரை நோக்கி நேரடியாக அந்தக் கேள்வியை கேட்டாள் ஆயிஷா.

அன்வருக்கு தூக்கிவாரிப்போட்டது.

“என்னடா, இவள் திடீரென்று சக்தி எங்கே என்கிறாளே”. நீ என்ன சொல்கிறாய்? முதலில் நீ யார்? என்பதை சொல்.

நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் அன்வர் தானே? பீகாரைச் சேர்ந்தவர் தானே?. சக்தியின் ஆசைக் காதலன் தானே? இப்படி படபடவென்று கேள்விகளை அடுக்கினாள்.

பொறுமை சகோதரி பொறுமை. உன் அத்தனை கேள்விகளுக்கும் என்னுடைய ஒரே பதில் ‘ஆம்’ என்பது மட்டும்தான். இப்பொழுதாவது நீ உன்னை அடையாளப்படுத்திக் கொள்ளலாமே?.

நான் ஆயிஷா சக்தியின் தோழி. இதோ இந்த ரயிலில் நானும் பாகிஸ்தான் பயணிக்கிறேன்.

சரி ,சக்தி எங்கே என்று என்னிடம் ஏன் கேட்டாய்?

பிறகு யாரிடம் கேட்பதாம். என்னுடன் வந்துகொண்டிருந்த சக்தியை கணேஷ் என்ற ஒரு நபர் உங்களிடம் அழைத்துச் செல்வதாக சொல்லித்தானே கூட்டிச் சென்றார்.

அன்பருக்கு தலை ‘கிர்ரென்று’ சுற்றியது .பெண்ணே உனக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும். நீ சக்தியை சந்தித்ததில் இருந்து நடந்த விசயங்களை தெளிவாக கூறு.

சூரியன் மெல்ல மறைய தயாராகிக் கொண்டிருந்தான். ஆள் அரவமற்ற அந்த கல் மண்டபத்தின் கணேஷ் படுக்க வைக்கப்பட்டிருந்தான் அவன் தலையில் சில பச்சிலை களை பிழிந்து சாறெடுத்து தடவி விட்டிருந்தாள்  சக்தி. அவளது கண்கள் முழுவதும் கவலை சேர்ந்திருந்தது.




என்னுடைய இந்த துரதிஷ்டம், இன்னும் எத்தனை பேரை துரத்தியடிக்க காத்திருக்கிறது. சக்தி அந்த முரடர்களின் மேலே மிளகாய் பொடியை தூவி தப்பித்த பின்னரும், அவர்கள்   இவர்களை துரத்தியபடி வந்தனர். அவர்களுக்கு அங்கும் இங்கும் போக்குக் காட்டிவிட்டு இந்த மண்டபத்தில் அடைக்கலமானாள் சக்தி. அவளுக்கு எந்த ஒரு உதவியும் செய்ய முடியாதவனாக நினைவிழந்த நிலையில் இருந்தான் கணேஷ். சிறிதுநேரம் இவர்களைத் தேடி வந்த கும்பல், பிறகு சென்றுவிட்டது.

ஆனால் கணேஷிற்கு தான் நினைவு திரும்பவில்லை. சக்தியின் உடலிலும் முற்றிலும் வலிமை இல்லை. மீண்டும் ஒருமுறை கணேசயை ரிக்க்ஷாவில் ஏற்றவும்,  வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும் அவளுக்கு தெம்பில்லை.

கணேஷ் அடைந்திருப்பது சாதாரண மயக்கம்தான் என்பதை அவள் நன்றாக உணர்ந்ததனாள். அவன் மயக்கம் தெளியும் வரை காத்திருக்க முடிவு செய்தாள். தான் அறிந்த வரையில் ஆன மூலிகைச் செடிகளை அருகில் இருந்து பறித்து வந்து அவன் காயங்களில்  இட்டுக் கொண்டு இருந்தாள்.

இப்பொழுது கணேஷ் மெதுவாக அசையா ஆரம்பித்தான் .மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய விழிகளை திறந்தான். எதிரே அமர்ந்திருந்த சக்தியைக் கண்டதும் அவனுக்கு ஏதோ புதுவிதமான சக்தி வந்துவிட்டது போலும் .சட்டென்று துள்ளி எழுந்து அமர்ந்தான்.
அவனுடைய இந்த அவசரம் சக்தியை பயம் கொள்ளச் செய்தது..

அண்ணா மெதுவாக, ஏன் எதற்கு இந்தப் பரபரப்பு?
ஐயோ!! தங்காய் நாம் இப்பொழுது எங்கு இருக்கிறோம்?. சக்தி விளக்கமாக அவனுக்கு சூழ்நிலையை விளக்கினாள்.

நேரம் இப்பொழுது என்ன இருக்கும்?

கணேஷின் கேள்விக்கு வானத்தை அண்ணாந்து பார்த்து எப்படியும் ஆறு மணி இருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா என்று பதிலளித்தாள்.

கிளம்பு ….. கிளம்பு நீ உடனே கிளம்பு என்று உத்தரவாக அதட்டலாக அவன் சக்தியிடம் பேசினான். அவள் சற்றே திகைத்து நிற்க ,தங்காய் முதலில் நட, மற்றதை பிறகு பேசலாம் என்று அவளை துரிதப்படுத்தினார்.

புதர் மறைவில்  சக்தி மறைத்து வைத்திருந்த கை ரிக்க்ஷா  அவன் கண்ணில் பட்டது. அதில் சக்தியை ஏற்றிக் கொண்டு மின்னலென கிளம்பினான்.

செல்லும் வழியில் அன்வர் இன்றைக்கு பாகிஸ்தான் செல்லும் ரயிலில் பயணம் செய்ய இருக்கும் விசயத்தை சக்தியிடம் கூறினான். ரயில் ஏழு மணிக்கு வெளியேறிவிடும் அடுத்து ஒரு வார காலத்திற்கு  பாகிஸ்தான் செல்வதற்கு நேரடி ரயில் கிடையாது. மேலும், சக்தி அன்வரை தேடி வந்து கொண்டிருப்பது அன்வருக்கு இப்பொழுது வரை தெரியாது என்பது போன்ற பல்வேறு விசயங்களை, சக்தியிடம் போட்டு உடைத்தான்.

‘அன்வர் பாக்கிஸ்தான் கிளம்புகிறான்’.

” மீண்டும் அன்வரை துளைத்து விடப் போகிறேன்”. சக்திக்கு உள்ளும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.அது அழுகையாக வெளிப்பட்டது.

‘அழ வேண்டாம் தங்காய்.’ இது நான் வேண்டுமென்று செய்த தவறு அல்ல, எப்படியாவது ரயில் கிளம்புவதற்கு முன்னால் உன்னை கொண்டு போய் அன்வரிடம் சேர்ப்பேன். என்னை நம்பு.

ஜல்லிக்கட்டு காளையின் வேகத்துடன் ரிச்சாவை இழுத்தபடி பாய ஆரம்பித்தான் கணேஷ்.

அவன் ரயில் நிலையத்தில் வாசலை அடைந்தபொழுது ரயில் நிலைய ஒலிபெருக்கி,” யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்”, லக்னோ டூ பாகிஸ்தான் என்று அறிவிப்பை முழங்க ஆரம்பித்திருந்தது.

சக்தி கணேஷ் இருவரது ஓட்டத்தால் ரயில்நிலையம் அதிர ஆரம்பித்திருந்தது.  படிக்கட்டுகள் வழியாக ஏறி நடைபாதையில் அவர்கள் இறங்கி இருந்த அந்த வினாடியில் ரயில் கிளம்புவதற்கான கொடி அசைக்கப்பட்டு விசில் ஊதப் பட்டிருந்தது. ஏறத்தாள ஓடிக் கொண்டிருந்த ரயிலில், ஏதோ ஒரு பெட்டியில் சக்தியை மிகவும் சிரமப்பட்டு கை கொடுத்து தூக்கி ஏற்றிவிட்டான் கணேஷ் .சக்தியிடம் அன்வருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை எண், மற்றும் பெட்டி எண் போன்ற குறிப்புகளை கொடுத்து, அடுத்த ரயில் நிலையத்தில் அவனை சந்தித்துக் கொள்ளுமாறு ரயிலில் பின்னாலேயே ஓடியபடி கூறினான். இப்பொழுது ரயில் முழுமையாக வேகமெடுக்க ஆரம்பித்தது.

(தொடரும்….)




What’s your Reaction?
+1
9
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!