Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-21 (நிறைவு)

21

இவ்வளவு நேரமாக கண்களை இறுக மூடி முகம் வியர்க்க அவர் பேசியதை கேட்டு நின்றிருந்த மகேஸ்வரி கை தீண்டியதும்,எழும்பிய வேகத்துடன் அவரை அடித்து தள்ளினாள்.

“தொடாதே” ஒற்றை விரலாட்டி எச்சரித்தாள்.சுந்தர்ராமன் அதிரந்து நின்றிருக்க கலங்கிய கண்களுடன் அமுதவாணியை திரும்பிப் பார்த்தாள்.

“உனக்காக என்று நினைத்துக் கொண்டால் கூட…இல்லை அம்மு.என்னால் முடியாது.தீயில் குளிப்பது போல் இருக்கிறது” என்று விட்டு திரும்பினாள்.

“இன்னமும் ஒரு நிமிடம் என் முன்னால் நின்றாயானாலும் நான் கொலைகாரியாகி விடுவேன்.போ…போய் விடு” வெறி கொண்டவள் போல் கத்த,சுந்தர்ராமன் கைகளும் கால்களும் பதறப் பதற வீட்டை விட்டு ஓடி விட்டார்.

“உனக்கு உன் அப்பாவை ரொம்ப பிடிக்கும் என்று தெரியும் அம்மு, ஆனாலும் என்னால்…”

அமுதவாணி பாய்ந்து வந்து மகேஸ்வரியின் கழுத்தை கட்டிக் கொண்டாள் “அம்மா… அம்மா” திரும்பத் திரும்ப புலம்பல் போல் அழைத்தாள். தாயின் நெற்றி கன்னம் என்று முகம் எங்கும் முத்தங்கள் பதித்தாள். “மன்னிச்சிடுங்க அம்மா, என்னை மன்னிச்சிடுங்க, நான் உங்களை தெரியாமல் இருந்து விட்டேன்”. 




மடை திறந்து பாய்ந்த மகளின் பாசத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறினாள் மகேஸ்வரி.

“அம்மா உங்களுக்கோ எனக்கோ நாளை மனதின் ஏதாவது ஒரு ஓரம் அவரை ஏற்றுக் கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றி விடக்கூடாது பாருங்கள். அதனால்தான் இந்த விஷயத்தை இவ்வளவு தூரம் இழுத்து வந்தேன். இனி ஜென்மத்திற்கும் நீங்களோ நானோ அவரை மனதால் கூட நினைக்க மாட்டோம்தானே?”

“நிச்சயம் )டா அவர் என் தோழி தெய்வானையின் கணவர்…”

கடைசி இரண்டு வார்த்தைகளை இருவரும் சேர்ந்தாற் போல் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டனர்.

“தெய்வானையின் கணவர் என்று அவரை உணர வைக்க முயன்றாயோ?” விபீசன் கேட்டான்.

“ஆமாம் 20 வருடங்களாக உடன் வாழ்ந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிறகாவது அவர் மனதின் கசடுகள் நீங்கி முழுக்க தெய்வாம்மாவின் கணவராக மீத வாழ்வை வாழ்வாரா என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ நான்காவது நாளே புது வாழ்வு வாழ வா என்று அம்மாவை கூப்பிட்டுக் கொண்டு வந்து நிற்கிறார்”

“தெய்வாம்மாவின் இறுதிச்சடங்கில் அவரை கலந்து கொள்ள வைப்பதற்காகவே அடிக்கடி அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்”

“உன் அம்மாவையும் மிரட்டி தெய்வானையை பார்க்க வைத்தாய்…ம்…?”

“ஆமாம் வாழ்வின் இறுதியில் மன்னிப்பு கேட்ட திருப்தியுடன் தெய்வாம்மா போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்”

வீட்டில் எல்லோரும் அமுதவாணியை பிரமிப்புடன் பார்த்தனர். இவளுக்கு என்ன தெரியும்… சின்ன பிள்ளை என்ற ரீதியிலேயே அவளை பேசி ,நடத்தி வந்தவர்கள் இன்றோ மகா பெரியவளம்மா நீ என்று பாராட்டினர்.

“நிறைய யோசித்து இருக்கிறாய். நிறைவாக செய்திருக்கிறாய். ஆனால் இதையெல்லாம் முன்பே என்னிடம் சொல்லி இருக்கலாமே அம்மு?” மாடியில் அமுதவாணியிடம் கேட்டான் விபீசன்.

“மக்கு மண்ணாங்கட்டிக்கு அந்த அளவு தெரியுமா என்ன?”

விபீசன் மெல்ல தலையசைத்தான். “தப்புதான் அம்மு. உன் மனப் போராட்டம் தெரியாமல் உன்னை முட்டாளாக கணித்தது என் தவறுதான். மகி அத்தைக்காக என்பதை தாண்டி நீ எனக்கு கண்டிப்பாக வேண்டும் என்ற என் மனதின் அடத்தை அடக்கும் வழி தெரியாமலும்தான் சீக்கிரமே நம் திருமணம் நடக்க வேண்டும் என்று உன்னிடம் நிறைய நேரம் கடுமையாக நடந்து கொண்டேன்’

“அட காதல்! இது எப்போதிருந்து?” அமுதவாணிக்கு சுவாரஸ்யம் பிறந்திருந்தது.

“அனேகமாக விசாகன் காட்டி, உன்னை தூரத்தில் பார்த்த நாளிலிருந்து என்று நினைக்கிறேன்.ஆனால் இதனை நான் உணர்ந்தது இப்போது சில நாட்களுக்கு முன்புதான். நீ எங்களை எல்லாம் விட்டு உன் அப்பாவுடன் போய்விடுவாயோ என்று நாங்கள் எல்லோரும் பயந்து கொண்டு இருந்தபோதுதான் நீ இல்லாத வாழ்க்கை எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்று என் மனம் உணர்ந்தது.அப்போதுதான் இந்த காதலையும் உணர்ந்தேன்.உருகி உருகி நீ எதிர்பார்த்தாயே அந்த காதலின் வீரியத்தை அதன் பிறகு வந்த நாட்களில்தான் உணரத் துவங்கினேன்”

“அப்படி நான் உருகிய காதலின் நிலையின்மையை எனக்கு உணர்த்தியது 

நீங்கள்தான். எனது கற்பனை காதல் இடங்கள் எல்லாமே இங்கே நேரில் பிசுத்து போய் விட்டன .

அந்த கவிதை காதலின் மேலிருந்த ஈர்ப்பும் போய்விட்டது “

“உண்மை காதல் என்றும் எப்போதும் அனைவரையும் ஈர்க்கும் விஷயம்தான் அம்மு. இதோ நம்முடையதை போல”

“நீங்கள் சரி,நான் எப்போது உங்களை காதலித்தேனாம்?”

“இல்லாமல் தான் காதல் சொல்…சொல் என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தாயாக்கும்?”

விபீசன் வாற அமுதவாணி விழித்தாள்.

“இன்னமும் சந்தேகம் வேண்டாம் அம்மு. வா நம் காதலையும் அன்பையும் நிரூபிக்கிறேன்” இரு கை விரித்து அழைத்த விபீசனின் மார்பில் அளவில்லா காதலுடன் ஒன்றிக் கொண்டாள் அமுதவாணி.

-நிறைவு- 




What’s your Reaction?
+1
28
+1
22
+1
2
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!