Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள்-23

23

நடந்தது எல்லாம் கனவைப்போலவே இருந்தது அபிராமிக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்தில் இருந்து தப்பி வந்திருக்கிறாள் அவள். சிவாவும் மதனின் அன்னையும் இல்லையென்றால் தன் வாழ்வு இன்று அதளபாதாளத்தில் விழுந்திருக்குமே கண்கள் திறக்கவும் தெம்பு இல்லாமல் இன்னமும் சுழன்றது. மிருதுவான மெத்தை அவளைத் தாங்கியிருக்க அதுவொரு படுக்கையறை என்பதை அவள் உணர்ந்ததும் சிவாவும் மதனின் தாயும் அருகே நின்றிருந்தனர் எழுந்திட்டியாம்மா இந்தா இந்த எலுமிச்சை பானத்தை குடி தெம்பா இருக்கும் என்று ஒரு கண்ணாடித் தம்ளரை நீட்டிட அவளும் அதைக் குடித்தாள். மனதிற்குள் உடலுக்கும் தெம்பு சேர என்ன நடந்தது என்ற கேள்வியைத் தாங்கியபடி அவளைச் சுற்றிலும் இன்னமும் சிலர் ராகவனும் ராதிகாவும்.

ஆமா விஜி எங்கே ?

அவ…மருத்துவமனையில் செய்த பாவம் சும்மா விடுமா ராதிகாவின் கேவல் வார்த்தைகளை கடந்து மதனின் தாயின் மேல் நிலைத்தது அபிராமியின் பார்வை. அவர் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தார். 

நீ அன்னைக்கு மருத்துவமனைக்கு வந்து போனதும் எதையோ சொல்ல வந்து சொல்லாம போனாமாதிரி எனக்கு தோணுத்து, ஆனா இங்கே மதனும் ஸ்வேதாவும் இருக்கிறதால என்னாலே எதையும் தெளிவா கேட்க முடியலை மதன் நாம பேசறதை ஸ்வேதாவை வாக் கூட்டிட்டுப்போறா மாதிரி கேட்டுகிட்டு இருந்தாகவும் எனக்குப் பட்டது. அதனாலதான் நான் உன்னை உடனே கிளப்பினேன். ஆனா வெளியே வந்த நீ ஆட்டோக்காக காத்திருக்க உன்னை டிராப் செய்யலான்னு வண்டியை எடுத்துகிட்டு வர்றதுக்குள்ளே யாரோ ஒரு பொண்ணோட நீ ஆட்டோவில போனே. 

விஜிங்கிற பொண்ணோட நடவடிக்கைகள் எதுவும் சரியில்லைம்மா தம்பி சும்மா இருந்தாலும் அந்தப்பொண்ணு மேலேமேலே வந்து விழறான்னு மேனேஜர் சொன்னதால அவளை வேலையை விட்டு எடுக்கச் சொல்லியிருந்தேன். நீ வர்றதுக்கு கொஞ்சநேரத்துக்கு முன்னாடிதான் அவர் வந்து வேலைரத்துக்கான ஆர்டர்ல கையெழுத்தும் வாங்கிட்டு போனார் பயோடேட்டாவில் அவளோட போட்டோவை ஏதேச்சையாய் பார்த்தேன். அந்த பொண்ணு கூடத்தான் நீ ஆட்டோவில போனே. அப்ப கூட எனக்கு எந்த பயமும் தட்டலை. மறந்துபோன கைப்பையை எடுக்க நான் மீண்டும் ஆஸ்பிட்டல் வந்தப்போ மதன் தன் கூட்டாளி சுரேஷ்கூட சேர்ந்து தான் போட்ட அந்த படுபாதக திட்டத்தை தெளிவாக விவரித்துக்கொண்டு இருந்தான்.

ஏற்கனவே எனக்கு அவன் மேல கொஞ்சம் சந்தேகம் இருந்தது ஆனா ஸ்வேதாவை அவன் நல்ல முறையில் பார்த்துக்கிட்டதாலே நான் அந்த சந்தேகத்தை விட்டேன். எல்லாம் நடிப்புன்னு ரொம்ப லேட்டாத்தான் புரிந்தது 

 மதனோட திட்டத்தை என்னாலே உடனே முறியடிக்க முடியலை அதுக்குள்ளே அந்த பொண்ணு விஜி உன்னைக் கூட்டிட்டுப் போயிட்டா. நானும் உன் பின்னாலேயே வந்தேன் அப்படி வந்தது நல்லதாப்போச்சு.




ஆமாம்மா நான் விஜிகிட்டே பேசினேன் மதன் அத்தனை நல்லவர் இல்லை அவரோட சகவாசம் வேண்டான்னு சொன்னேன் அவ திருந்தினமாதிரிதான் இருந்தது உங்களைப் பார்த்து விஜி விஷயமா பேசத்தான் வந்தேன் அங்கேயிருந்த சூழ்நிலை என்னை பேசவிடலை. ஸ்வேதாவோட எதிர்பார்ப்பும் உங்க நம்பிக்கையும் குறுக்கே விழுந்தது. கூடவே மதனோட நடவடிக்கைகள் ஒருவேளை விஜிதான் தவறா நடக்கிறாளோன்னு கூட எனக்கு தோணுச்சி அப்போ ஆட்டோக்கு காத்திருக்கும் போது விஜியே வந்தா 

 இங்கே என்ன நிக்குறே அபிராமி 

 தெரிந்தவங்களைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தேன் நீ….

வீட்டுக்குத்தானே போறே உட்காரு பேசிகிட்டே போகலாம் என்று வழிவிட்டு அமர்ந்தாள் எனக்கு இருந்த மனநிலைமையிலே என்ன சொல்றதுன்னு தெரியலை, தனக்கு வேலை போயிட்டதாகவும் மேனேஜர் தன் கணக்கை முதலாளியம்மா முடிக்கசொன்னதாகவும் கையிலிருந்த பணத்தையும் காட்டினா விஜி. அவளோட கண்களில் கோபத்தையோ வருத்தத்தையோ நான் பார்க்கலை மாறாக அவ ஏதையோ சாதிச்சிட்டா மாதிரி உட்கார்ந்து இருந்தா.

ஒருபக்கம் தோழியோட வாழ்க்கையா இல்லை இந்த சின்ன பொண்ணோட வாழ்க்கையான்னு நான் ரொம்பவே குழம்பிப்போனேன் அப்பத்தான் எனக்கு ஒரு விஷயம் உறைக்க ஆரம்பிச்சது. ஆட்டோ வீட்டுக்குப் போகும் வழியில் போகலை வேற வழியில் போக ஆரம்பித்தது. நான் உணர்ந்து சப்தம் போடறதுக்கு என் முகத்தில் ஒரு துணி அழுத்தப்பட்டது அதற்கு பிறகு எனக்கு என்னாச்சுன்னே தெரியலை. சிவாவோ நீங்களோ அங்கே எப்படி வந்தீங்கன்னு ?

நான் சொல்றேன் அபிராமி நீ விஜிகிட்டே பேசினது எனக்கு தெரியாது ஆனா அவளோட வாழ்க்கையிலே நீ ரொம்பவும் அக்கறை கொண்டு இருக்கேன்னு ராதிகா ரவிகிட்டே சொல்லியிருந்தாங்க எனக்கும் அது நல்லதாப்பட்டது. மதன் விஷயமாக ஏற்கனவே எனக்கு அம்மா அறிமுகமானதால நானும் நேரடியா இந்த விவகாரத்தை அம்மா காதுலே போட்டு வைச்சா ராமருக்கு அணில் உதவினாற்போல இருக்குமேன்னு மருத்துவமனை போனேன் அங்கே அம்மா குழப்பத்தோட நின்றுகிட்டே இருந்தாங்க என்னைப் பார்த்ததும் அவங்க குரல் பதட்டமா இருந்தது.

விவரம் கேட்டேன் எல்லாம் சொன்னாங்க யாரோ ஒரு பொண்ணு அவ நம்ம ஆபீஸ்ல வேலை பார்க்கிறான்னும் அவ கூட நீ ஆட்டோவிலே போனேன்னு சொன்னதுமே எனக்கு அது விஜின்னு ஊர்ஜிதம் ஆகிட்டது. அவ இன்னமும் அந்த மதன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறா அவ கூட நீயெப்படி போவேன்னு ஒரு உறுத்தல் நானும் நடந்ததை அம்மாகிட்டே சொன்னேன். மதனோட டெலிபோன் பேச்சு அவன் அவசரமாக கிளம்பிப்போனதுன்னு எல்லாம் தெளிவா பேசினோம் ஒரு வழி புலப்பட ஆரம்பிச்சது.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு வலையில் நீ சிக்கிகிட்டேன்னு மட்டும் எனக்கு தோணுச்சி.நல்லவேளையா நீங்க போன ஆட்டோவோட நம்பரை அம்மா குறித்து வைச்சிருந்தாங்க அதுக்குப்பிறகு எங்களுக்கு ரொம்ப நேரம் ஆகலை. அந்த ஆட்டோவை டிரேஸ் பண்ணச்சொல்லி கமிஷனர்கிட்டே பேசினாங்க.நீங்க போன வண்டியை சில ஆபீசர்கள் எல்லாம் டிரேஸ் பண்ணாங்க பயந்து போன டிரைவர் வண்டியை வேகமா ஒட்டிட்டு விபத்தாயிடுச்சு உனக்கு அத்தனை அடியில்லை ஆனா விஜிக்கு அடி ரொம்ப பயங்கரம் பிழைச்சாலும் யாராவது துணையில்லாம அவளால ஒரு அடி கூட நடக்க முடியாது. 

கடவுளே ? இப்போ எப்படியிருக்கா ?

ம்….பரவாயில்லை இலேசான அடி பட்ட நீயே மூணாவதுநாள் தான் கண்விழிச்சிருக்க ஆனா அவளுக்கு சுயநினைவு வந்திட்டது. தான் செய்த தப்புக்கு தனக்கு இத்தனை பெரிய தண்டனை தேவைதான்னு அழுதா. காலம் கடந்துபோச்சு என்ன புண்ணியம். 

அன்னைக்கு அவ உன்னை எதற்கு கூட்டிப்போனா தெரியுமா ? மகாராணி மாதிரியொரு வாழ்க்கை தனக்கு கிடைக்கப்போகுதுன்னு அவளுக்கு நினைப்பை விதைச்ச மதன் அவளோட பேராசை மூலமா உன்னை சூறையாடப் பார்த்திருக்கான். உனக்கு மயக்கமருந்து கொடுத்து தவறான முறையில்….

ப்ளீஸ் சிவா சொல்லாதே ?!

இதைக் கேள்விப்பட்டதும் எனக்கு அத்தனை ஆத்திரம் வந்தது அபி. அவனை வெட்டணும் போல.

உண்மைதான் அபிராமி மதன் மேல இருந்த அன்பெல்லாம் மாறி இப்போ முழு வெறுப்புதான் மிஞ்சியிருக்கு. நானே போலீஸ்க்கு சொல்லி அவன் மேல கேஸ் போடச்சொல்லிட்டேன். இன்னும் நிறைய பெண்களோட வாழ்க்கை அவனால பாதிக்கக் கூடாதே ?! பெத்தவளா மனசு கேட்கலை என் சொத்துக்கு ஒரே வாரிசும்மா மதன். பாவி இப்படி கெட்டு சீரழிஞ்சிப் போயிட்டானே. அவர் கண்களில் கண்ணீர் கொஞ்சநாள் ஜெயில்லேயே இருக்கட்டும் அப்பத்தான் திருந்துவான்.

அம்மா ஸ்வேதா…

அவளுக்கு எல்லாம் சொல்லிட்டேன் இனிமே அவ எனக்கு மருமகள் இல்லை மகள் அவளுக்கு ஸ்வேதா பேருலே அந்த மருத்துவமனையை எழுதிவைச்சிட்டேன் என் காலத்துக்குப் பிறகு அவதான் அதை நிர்மாணிக்கப்போறா. இதுகூட ஒருவகையில் லஞ்சம்தான் என்மகனால வாழ்க்கைப்போன அவளுக்கு ஒரு வழி. என்னைப் பொறுத்தவரையில் நீ மதனை கல்யாணம் பண்ணிகிட்டா நிச்சயம் நிம்மதியா இருக்க முடியாதுன்னு சொல்லிட்டேன் அவளும் புரிஞ்சிகிட்டா அவளைப் பத்தி நீ கஷ்டப்படாதே அபிராமி மதன் தன்னோட புள்ளிகளை எப்போதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. நீயாவது குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமா இரும்மா அவர் தன் கைவிரல்களை தூக்கி ஆசிர்வாதம் செய்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.




What’s your Reaction?
+1
7
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!