Serial Stories Uncategorized நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-18

18

நேரம் காலை ஒன்பதை தொட்டு கொண்டு இருந்தது. அடர் நீல நிறத்திலான புடவையில், மாடியில் இருந்து கூந்தலை உலர்த்திக் கொண்டு இருந்தாள் மலர். வசந்தி பள்ளிக்கு விட்டதால் இவளும் சாப்பிட போகவில்லை. போனால் ஆனந்தன் ?தாவது சீண்டுவான் என்று நினைப்பில் துவைத்த துணியை உலர்த்தி விட்டு கூந்தலை உலர்த்தியவளின் கண்களில் தோட்டத்தில் அமர்ந்து பத்திரிக்கையை புரட்டிக் கொண்டு இருந்த ஆனந்தனின் மேல் படிந்தது.

மலர் கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். வெளியில் ஆனந்தனை வெறுப்பது போல்க் காட்டிக் கொண்டாலும், அவனின் இந்த திடீர் வருகை மனதின் மூலையில் இன்பத்தை கொடுத்ததுதான் உண்மை.

“அக்கா….” நீலா அருகில் நின்று குரல் கொடுத்தாள். “நான் கூப்பிட்டதைக் கூட கவனிக்காமல் அப்படியென்ன வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிங்க.”

“ஒண்ணுமில்லை நீலா, கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தேன். என்ன கூப்பிட்டே?”

“பெரியம்மா சாப்பிட வரச் சொன்னாங்க.”

“அக்கா வந்திடட்டும்”

“அவங்க அப்பவே வந்திட்டாங்க வாங்கக்கா!” கூப்பிடதோடு நிறுத்தாமல் மலரின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போனாள்.

ஆனந்தனைத் தாண்டிக் கொண்டுத்தான் போக வேண்டியிருந்தது.

“ஏய் நீலா டிபன் தயாராகிவிட்டதா?”





“ஆச்சு சின்னய்யா. வாங்க போகலாம்.”

“நீ பெரிய பெரிய ஆளுங்களையெல்லாம் தேடி தேடி கூட்டிப் போறே என்னையெல்லாம் கவனிப்பியா?”

“அச்சசோ இப்ப நான் என்ன செய்யணும்”

“என்னையும் இதே போல் கையைப் பிடிச்சி கூட்டிட்டு போ.” ஆனந்தன் கையை நீட்ட, மலரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“நீலா நீ போய் சாப்பிட எடுத்து வை” நீலாவை விரட்டினாள்.

“உங்களுக்கு விவஸ்தையே இல்லையா சின்ன பொண்ணு அவகிட்ட போய் வேடிக்கை செய்யணுமா?”

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிற கதையா நான் யார்கிட்ட பேசினாலும் நீ சண்டைக் கோழி மாதிரி ஆயிடறே”

“உங்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்” மலர் மேற்கொண்டு நடந்தாள்.

“ஏய்! நில்லு,நீலாவையும் விரட்டி விட்டுட்டே நீயாவது கையைப் பிடிச்சி கூட்டிட்டுப் போகலாமில்லை.”

ச்சீ!” மலர் ஏறக்குறைய ஓட, ஆனந்தன் சிரித்தான்.

எல்லாரும் உணவு மேடையில் காத்திருந்தார்கள்.

“என்ன மலர் இத்தனை கால தாமதமாவா வர்றது? போ உன்னோட சாப்பாடு எல்லாம் வசந்தியே சாப்பிட்டுட்டாள்.” ராஜ் கிண்டல் தொனியில் பேச எல்லாரும் சிரித்தனர்.

பெரியம்மாவின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மலர்.வெண்பொங்கலோடு வடையும் , தேங்காய் சட்னியும் சூடாய் பறிமாறப்?? உணவு உண்ண ஆரம்பித்தாள். ஆனந்தன் நேராய் மலரின் பக்கத்தில் அமர்ந்தான்.

“அம்மா மலரை நாளையிலிருந்து அலுவகத்திற்கு கூட்டிப்போகலான்னு இருக்கேன்.

“கூட்டிட்டு போடா! ஆனா ஜாக்கிரதையா கூட்டிப் போ பாவம் பயந்த பொண்ணு”

“உண்மைதான், மலர் சட்னி எடுத்து போடு, “மலர் ஒரு முறைப்போடு எடுத்துப் போட்டாள். சாப்பிட்ட பின் கைகழுவும் போது, “குடும்ப சகிதமாய் விருந்து சாப்பிட்டாச்சு நீயும் பறிமாறிட்ட, பரமதிருப்தி.”

“ரொம்ப முக்கியம்”

” புடவை தந்தினா கையைத் துடைச்சிட்டு கொடுத்துருவேன்.”

மலர் எரிக்கும் விழிகளை அவன் மேல் பாய்ச்சிவிட்டு நகர ஆனந்தன் புன்னகையுடன் சிரித்தான்.

“மலர் நீ சீக்கிரம் ரெடியாயிரு. அண்ணன் . அலுவகத்திற்கு போகும் போது உன்னைக் கொண்டு வந்து . விட்டுடுவான்.” சொல்லிவிட்டு ஆனந்தன் சென்று விட்டான்.

“ராஜ் தன் .அலுவகத்திற்கு கிளம்பினான். மலர் அவனருகிலேயே அமர்ந்து கொண்டாள். அமைதியாய் இருந்தவளிடம் ” என்ன தீவிரமான யோசனையா ?” என்றான்.

“அந்தமான் ரொம்பவும் கண்களுக்கு குளிச்சியாய் இருகிறதே”

இந்த மண் விவசாயத்திற்கு ஏற்றது இல்லை. அதனால் பயிர் தொழில் குறைவுதான். அதற்கு பதில் சோளம், கரும்பு, ஆரஞ்சு ,தக்காளி,பலா, பூசணி போன்றவை பயிர் செய்யலாம். நெல்தான் ரொம்பவும் முக்கியமானது.”




“இயற்கை காட்சிகள் நிறைந்த இடமும், நீலக் கடலும் அலையலையாய் துள்ளுகிற மீன்களும்,பசுமையான மரங்களும் அதிகம் தான் போ,”

“இங்கே இருப்பதைப் போல ஆபத்தும் அதிகம் தான். நாகரீகத்தில் பின் தங்கிய மக்கள் இங்கே காட்டில் வாழுகிறார்கள். தலைநகர் ஹாட்பேயிலிருந்து டுவாஸ்பீக் பகுதியில் காட்டு வாசிகள் இருப்பார்கள். இவர்களின் உணவு பன்றி, காட்டுத்தேன், அம்பில் விஷம் எறிந்து தன் உணவை அடைவார்கள். அவர்கள் இடத்தில் அத்து மீறி நுழைந்தால் நம்மீது அவ்வம்பு பாயும்.”

“என்னது?”

“பயப்படாதே அவை தடை செயய்யப்பட்ட இடங்கள் அவர்கள் பேசி முடிக்கும் சமயம் தொழிற்சாலை யும் வந்து விட்டது. “

ராஜனும், மலரும் தொழிற்சாலைக்கு வந்து இறங்கும் சமயம் ஆனந்தன் வேலையாட்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.நேர்த்தியான உடை அணிந்து கம்பீரமாய் ஆண்மையுடன் இருக்க அவனிடமிருந்த பார்வையை அகற்றவே வெகு சிரமமாய் இருந்தது.

நாம் எதை வெறுக்கிறோமோ அதே அளவுக்கு அதிகமாய் உள்ளுக்குள் நேசிக்கி??ம் என்ற வாசகம் எத்தனை உண்மையானது. ஆனந்தன் நான் உங்கள் மேல் கொண்ட உண்மையான் அன்பை நீங்க புரிந்து கொண்டிருந்தால் எத்தனை நன்றாய் இருந்திருக்கு??.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த ஆனந்தன் உணர்ந்து விட்டு அவளருகே வந்தான். உடனே பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“என்னடா தாமதம் ஆயிடுச்சா?”

“இல்லேண்ணா, சரியான நேரத்திற்குத் தான் வந்திருக்கீங்க, அப்புறம் அண்ணா உனக்கு நேரம் ஆனா நீ கிளம்பலாம். நான் மலருக்கு தொழிற்சாலையை சுத்திகாட்ட வேண்டியிருக்கு.”

ராஜ் கிளம்பவும், “வா மலர் போகலாம்” என்றான்.

எதற்கு அவரைப் போகச் சொன்னீர்கள்?”

“அண்ணனுக்கு இங்கே வேலை இல்லையே? அவன் தொழிலைப் பார்க்க வேண்டாமா?”

“அவருக்கு தனி தொழிலா ?”

“ஆமாம்.. தீக்குச்சி தயார் செய்வார்கள் தெரியுமா, அந்த மரங்களை தேர்வு செய்து, தீக்குச்சிக்கு ஏற்றாற் போல் ரெடி செய்வான்.அப்பாவோட நண்பரும் அவனும் பங்குதாரர்கள்

“அப்படியா ..?

“ஆனந்தன் யாரோ ஒருவனுக்கு சைகை செய்திட இரண்டு மாம்பழச்சாறு வந்தது சாப்பிடு மலர் இது உனக்குப் பிடிக்குமே நான் எதையும் மறக்கலை.”




“நான் என்னுடைய வேலையப் பற்றி..?

“சொல்றேன்… வா என்னோடு!”

இடது புறமாய் நடந்தார்கள் எதிர் பட்ட ஊழியர்களின் வணக்கங்களைப் பெற்றுக் கொண்டு, அந்த பக்கம் செல்லும் போதே மரத்துகள்களின் நெடி மூக்கில் வந்து மணம் பரப்பியது.

“எல்லா மரமும் மரப்பலகை செய்ய பயன் படாது கெர்ஜிப்,தூப், அகலம் பாரம் போன்ற மரங்களே மரப்பலகை செய்ய பயன்படுகிறது. மரங்களை லாரி மூலம் இங்கே கொண்டு வந்து இதோ தெரிகிறது பார் இந்த பீலிங் மெஷின் கொண்டு மரத்தின் பட்டையை உரிப்போம். பிறகு கேப்ஸின் இயந்திரம் மூலம் அதனை வழுவழுப்பாக்கி, குறிப்பிட்ட அளவுகளில் வெட்டுவோம். மரங்கள் சிறு தகடுகள் போல் காட்சியளிக்கும். இதை தொட்டு பார்.”

ஆனந்தன் தன்னிடம் நீட்டிய பலகைய தடவிப் பார்த்தாள் மலர். “ரொம்ப மென்மையாக இருக்கு.”

“என்னை மாதிரி!”

“அய்யோ!”

“இது பச்சை மரம் இதை உலர்த்தும் இயந்திரம் பார்கிறாயா?”

“ம்..”

ஆஜானுபாகுவாய் உயர்ந்து நின்ற அந்த இயந்திரத்தின் முன் நின்றனர். “இந்த இயந்திரம் தகடு போன்ற மரப்பலகைகையை நீராவி மூலம் உலர்த்தி காயச் செய்து விடும்.”

வேலையாட்கள் பலர் பலகைகளை அளந்து கொண்டு இருந்தார்கள்.

“இது எதற்கு?”

“பலகையில் குறிப்பிட்ட அளவு தேவைப்படும், பட்டை உரிக்கும் போது அந்தந்த அளவுகள் கிடைக்காது. எனவே ஒட்டுபோட வேண்டிய பலகைகளை அளவெடுப்பார்கள்.”

” மரப்பலகை செய்வதில் கூட இத்தனை வேலைகளா?’

“எல்லா வேலைகளிலும் கஷ்டம் உண்டு மலர். புரிந்து நடந்தால் எந்தத் தொல்லையும் இல்லை. தொழிலில் புரிதல் இல்லை என்றால் பணம் தான் நஷ்டமாகும். ஆனால் வாழ்வில் புரிதல் இல்லையென்றால் வாழ்ந்து பிரயோஜனமே இல்லை.”

அவன் தன்னைத் தான் குத்திக் காட்டுகிறான் என்று புரிந்தது. இருந்தாலும், அதைக் காண்பித்து கொள்ளாமல், “இதென்ன ?ரவள்ளி கிழங்கு ?” எதிரே மலையாய் குவித்து வைத்திருந்த அவைகளைக் காட்டிக் கேட்டாள்.

அவள் பேச்சை மாற்றுவது புரிந்தது ஆனந்திற்கு, பலகைகளின் அளவு பெறப்பட்ட பின் ஒட்டுப் போடும் முறைக்கு பாவு போட கூழ் எனப்படும் திரவம் பயன்படும். அதற்கு புளியங்க்கொட்டையும், மரவள்ளிக் கிழங்கும் உதவும். பிறகு, பலகைகள் ஒட்டப்பட்டு மரப்பலகையை ப்ரஸ் என்கிற இயந்திரத்தின் உதவியால் நன்றாய் இறுக்கப்படுகிறது. அடுத்து மேல்பூச்சு செய்யபட்டு மரப்பலகையாக நமக்கு கிடைக்கும்.”

” தொழிற்சாலையை சுற்றிப் பார்த்த பிறகு, ஆனந்தனின் அறையை அடைந்தார்கள். மலர் இதுதான் உன் அறை உன் இருக்கை ! என்னோட அறைக்குள்ளேயேதான், முறைக்காதே வேறு எதற்காகவும் இல்லை, அடிக்கடி குறிப்பு எடுக்க வேண்டியிருக்கும் அதனால் தான் உன்னைக் கூப்பிடறேன் உட்கார்.மலர்.”

அவள் எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

“இந்தா மலர் இந்த கோப்பில் நம்ம தொழிற்சாலை சம்பந்தபட்ட அத்தனை தகவல்கள் இருக்கு படிச்சுபாரு. அப்புறம், மரங்களை ஏலத்தில் எடுத்தற்கான விவரங்கள் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய தொகை விவரம் எல்லாமும் இருக்கு. இதையெல்லாம் மடிக்கணினியில் பதிவு பண்ணிடு, செலவு செய்யிற ஒவ்வொரு பணத்திற்கும் ரசீது கட்டாயம் இருக்கணும். உன் அறையில் ஒரு மடிக்கணினி வைக்க சொல்லிருக்கேன்.”

“உனக்கு தொழிற்சாலையில் மதியம் வரைதான் வேலை, காலையில் சரக்கு வரும் போது சரிபார்த்து கையழுத்து பண்ணிடு, ஒவ்வொரு பிரிவிலும் வேலைக்கும் ஆள் போதுமா ? அவங்களுக்கு எதுவும் தேவைகள், அசவுகரியங்கள் இருக்கான்னு கேளு, அப்புறம், யார் யாருக்கு எவ்வளவு ?????? அனுப்பனுமின்னு பார்த்து சொல்றது உன் வேலை.”

” வங்கி சம்பந்தபட்ட வேலைக்கு மகேஷ் என்பவரை உன்னோட வைத்துக் கொள்.”

“மகேஷ் இவர்தானே பணத்தை கையாடல் செய்திட்டதா ராஜ் எங்கிட்ட சொன்னார்.”

“ஆமாம் ஏன் கேட்குறே?”

ஏற்கனவே பணம் விஷயத்தில் தப்பு செய்தவர்…” மலர் இழுத்தாள்.

“இருக்கட்டுமே, தவறு செய்தவர் திருத்தவே மாட்டார்கள் என்று நினைக்க கூடாது?”

மலர் அவர்கள் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தருவதில் தவறில்லையே! யாராக இருந்தாலும் தங்கள் தரப்பை சரிப்படுத்த வாய்ப்பு நிச்சயம் தேவை.”

“இந்தப் பேச்சு என்னைக் குத்திக் காட்டுவது போல் இருக்கிறது.”

“நான் என் கருத்தச் சொன்னேன். தவறு இருந்தால் மன்னித்து விடு, சரி இப்போ நீ வீட்டுக்குப் போகலாம்.” அண்ணனை வரச் சொல்லி இருக்கேன். ஆனந்தன் சொல்லி வாய் மூடும் முன்பே ராஜ் வந்து விட, மலர் கிளம்பினாள்.




What’s your Reaction?
+1
9
+1
18
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!