Beauty Tips அழகு குறிப்பு இது ஒரு காதல் மயக்கம் 

வேர்க்குரு வர ஆரம்பிச்சிடுச்சா?இதை ட்ரை பண்ணுங்க உடனே மறைஞ்சு போயிடும்…

வெயில்காலம் வந்துவிட்டாலே போதும் சருமப் பிரச்சினைகள் வரிசைகட்டி வந்து நிற்கும். அதில் மிக முக்கியமானப் பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது வேர்க்குரு பிரச்சினை. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரைக்கும் எல்லோருக்கும் ஏற்படும் சருமப் பிரச்சினை தான் இந்த வேர்க்குரு. இந்த வேர்க்குருவை ஆரம்பத்திலேயே விரட்ட வேண்டுமென்று நினைத்தால் இந்த சில எளிமையான டிப்ஸசை  பின்பற்றுங்கள்.

 




தேவையான பொருட்கள்

கொத்த மல்லி இலை – 1 கைபிடி அளவு

சந்தனம் -2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

  • கொத்தமல்லி இலையில் அதிக அளவு ஆன்டி- செப்டிக் பண்புகள் இருக்கின்றன. அதோடு சந்தனம் குளிர்ச்சி பொருந்தியது என்பதால் சருமத்தில் வெப்பத்தின் காரணமாக உண்டாகும் வேர்க்குரு, சரும எரிச்சல், சருமத் தடிப்புகள் ஆகியவற்றைச் சரிசெய்ய உதவி செய்யும்.

  • இரண்டு கைப்பிடியளவு கொத்தமல்லி இலைகளை எடுத்து சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து ஜூஸ் பிழிந்து கொள்ளுங்கள்.




  • இந்த சாறுடன் இரண்டு ஸ்பூன் அளவு சந்தனப் பொடியும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரைக் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்களுடைய முகம், கழுத்து, முதுகு மற்றும் வேர்க்குரு அதிகமுள்ள இடங்களில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

  • பின் 15 – 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் குளிர்ச்சியான நீர் கொண்டு கழுவிக் கொள்ள வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வருவதன் மூலம் வேர்க்குரு பிரச்சினைகள் வேகமாக சரியாகும்.

    குறிப்பாக குழந்தைகளுடைய சருமம் மிகவும் மென்மையாக இருப்பதால் வேர்க்குரு போன்ற பிரச்சினைகள் அதிகமாக ஏற்படும். அதனால் வாரம் ஒருமுறை இந்த பேஸ்ட்டை குழந்தைகளுக்கு அப்ளை செய்து குளிக்க வைக்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!