Beauty Tips அழகு குறிப்பு

முழங்கை கருப்பை போக்க-இதை தடவுங்கள்!

முழங்கை கருப்பை போக்க?

நாம் அனைவருமே அழகாக இருக்க விரும்புவோம். அதற்காக சரும அழகை மேம்படுத்த பல்வேறு பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதுவும் நாம் பெரும்பாலும் முகம், கை, கால்களுக்கு தான் அதிக பராமரிப்புக்களைக் கொடுப்போம். இதனால் இப்பகுதிகள் அதிக கருமையாக இருக்காது. ஆனால் உடலிலேயே நாம் அதிகம் பராமரிப்புக்களை கொடுக்காத பகுதி என்றால், அது முழங்கைகள் தான். நிறைய பேர் தங்களின் முழங்கைகள் கருமையாக உள்ளது என்று, அவற்றை மறையும் வகையில் ஆடைகளை அணிவார்கள். எத்தனை நாட்கள் இப்படி மறைக்க முடியும். இனி அப்படி மறைக்க தேவையில்லை.




முழங்கையில் உள்ள கருமையைப் போக்க பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகள் சிலவற்றைக் காண்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்-1 ஸ்பூன்

உருளைக்கிழங்கை சாறு-1 ஸ்பூன்

மஞ்சள்- 2 ஸ்பூன்

பால்- 2 ஸ்பூன்




தயாரிக்கும்  முறை

  • நாம் தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.

  • முதலில் சிறிது தேங்காய் எண்ணெயை முழங்கை பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  • குளிர்ந்த நீரில் கழுவிய பின்பு உருளைக்கிழங்கை சாறு, மஞ்சள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் போல் மிக்ஸிங் செய்து கொள்ளுங்கள்.

  • இந்த பேஸ்ட்யை முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பஞ்சுருண்டையை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், முழங்கையில் இருக்கும் கருமையை வேகமாக மறையச் செய்யலாம்.இந்த செய்முறையை கால் முட்டிக்கும்  பயன்படுத்தலாம்.




What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!