Serial Stories மாற்றங்கள் தந்தவள் நீதானே

மாற்றங்கள் தந்தவள் நீதானே -17( நிறைவு)

அத்தியாயம்-17

தேவானந்தனை அவனுடைய வீட்டிற்கு அனுப்ப கோதண்டம் சம்மதிக்க வில்லை.கொஞ்சம் நாட்கள் எங்களுடன் இருங்க மாப்பிள்ளை அவளும் ஒத்தையில உங்களை எப்படி கவனிப்பாள்.? எங்க வீட்ல இருந்தீங்கன்னா நாங்க கவனிக்கிறதுக்கு வசதியாக இருக்கும். பாவம் அவளுக்கும் ஒரு ஆறுதலா இருக்கும் என்றார்கள்

தேவானந்தன் மனைவியைப் பார்த்தார்ன்.

”நீ என்ன சொல்ற மோகனா…?”




“அவங்க சொல்ற மாதிரி செய்யலாங்க..” என்றள் அமைதியாக,

“ஓகே…மாமா அத்தை…நீங்க சொல்ற மாதிரி உங்க வீட்டுக்கு வரேன். ஒரு ஒன் வீக் இருந்துட்டு அதுக்கப்புறம் எங்க வீட்டுக்கு போய்டறேன்.” என்றான்.

“சரிங்க மாப்பிள்ளை…”

மோகனாவையும் தேவனந்தனையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

மெல்ல எழுந்து நடக்கத்தொடங்கியிருந்தால் மாடி அறையில் தங்கிக்கொள்ளுங்கள் உங்களுக்கு எந்தவித டிஸ்டபன்சும் இருக்காது. என்று மேல் அறையை இவர்களுக்காக அரேஞ் பண்ணிக்கொடுத்தார்கள்.

“ஓகே…எங்க இருந்தாலும் ஓகே…” என்றான்.

“காற்றோட்டமாக இருக்கும். அமைதியாக இருக்கும்…அதனால மாடி அறையில் தங்கி இருப்பதே நல்லது என்று மோகனாவும் நினைத்தாள். ஏதாவது சண்டை அல்லது வாக்குவாதம் வந்தாலும் கீழே இருக்கும் பெற்றோருக்கு கேட்காது அல்லவா? அதனால் சரி என்றே பட்டது. அறையை எல்லாம் சரி பண்ணிட்டு வந்து அவனை அழைத்து சென்று படுக்கவைத்துவிட்டு வந்தாள். வேலைக்காரியிடம் அவருக்கு சாப்பிடுறதுக்கு டிபன் எடுத்துட்டு வாங்க என்றாள் மோகனா.

மாமனார் வீட்டு சாப்பாடு சத்துள்ள மாத்திரைகள் என்று இரண்டு நாட்களில் இயல்பாக எழுந்து நடக்க தொடங்கினான் தேவானந்தன். வலிமருந்தின் காரணமாக இரவு நேரங்களில் வெகு விரைவாகவே தூங்கியும் போனான். மோகனாவுக்கும் சற்று நிம்மதியாகவே இருந்தது. காரணம் சில நாள்களாய் இரவு நேரங்கள்தான் மிகவும் கொடுமையான நேரங்களாக மாறியிருந்தது. அவனுடைய குத்தல் பேச்சையும் கோபமுகத்தையும் நினைத்த மறுநிமிடமே அணலில் மாட்டிய புழுவைப்போல துடித்து போனாள். எனவேதான் அவன் சீக்கிரமாக தூங்கிவிடுவது இவளுக்கு நிம்மதியை கொடுத்தது.

அன்று அப்பா அம்மா தங்கை மூவரும் ஒரு ரிசப்சனுக்கு போயிருந்தார்கள். நாங்க வருவதற்கு லேட்டாகும். அதனால எங்களுக்காக காத்திருக்க வேண்டாம். நீயும் மாப்பிள்ளையும் சாப்பிட்டுட்டு வீட்டை லாக்பண்ணிட்டு தூங்கிடுங்க…எங்ககிட்ட சாவி இருக்கு நாங்க வந்து திறந்துக்குறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்கள்.




வேலைக்கார அம்மாவும் தூங்கப்போய்விட பொழுதுபோகாமல் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டே இருந்தாள். மேலிருந்து தேவானந்தன் இவளை அழைத்தான். இந்நேரத்துக்கெல்லாம் அவன் தூங்கி இருப்பானே? இன்னும் ஏன் தூங்காமல் இருக்கிறான் என்ற யோசனையோடு மேலறைக்கு சென்றாள். அவன் இவள் வரவுக்காக காத்திருப்பதுபோல தோன்றியது.

“என்னங்க ஏதாவது வேணுமா?”

“ம்ம்…”

“என்ன வேணுங்க?”

“சரக்கு வேணும். எந்த பிராண்டா இருந்தாலும் பரவாயில்லை” என்றான் எங்கோ பார்த்தபடி.

அதிர்ச்சியோடு அவன் முகத்தை ஏறிட்டாள் மோகனா.

“தூக்கம் வரமாட்டுது அதனாலதான்…”

“தூக்க மாத்திரை கொடுத்தேனே சாப்பிடலையா?”

“இல்லை…சாப்பிடலை தூக்கி போட்டுட்டேன்”

“ஏன்…”

“உங்கிட்ட பேசணும். தூங்கிட்டேன்னா பேச முடியாது அதனாலதான்…புரியுது நீ என்ன யோசிக்கிறேன்னு எனக்கு புரியுது. அப்புறம் எதுக்கு சரக்கு கேட்கிறேன்னுதானே யோசிக்கிறே? நார்மலா உன் முகத்தை பார்த்து பேசுறதுக்கு தைரியமில்லை. அதனாலதான் தண்ணீ அடிச்சா கொஞ்சம் தைரியம் வருன்னு கேட்டேன்.”

“பரவாயில்லை சொல்லுங்க?” என்றாளே தவிர மனசு பட படன்னு அடித்துக்கொண்டது.

மோகனாவுக்கு கணவனோடு தனியறையில் இருந்த போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. பழைய மாதிரி ஒரு அன்னியோனியம் ஏற்படவில்லை. பயமாக இருந்தது திரும்பவும் ஏதாவது பேசி மனச கஷ்டப்படுத்தி விடுவானோ? என்று பயந்து கொண்டே இருந்தாள். ஆனால் அவன் அப்படி எதுவும் நடந்து கொள்ளவில்லை மாறாக

“மோகனா உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” என்றான்.




“முதல்ல  மாத்திரை சாப்பிடுங்க.. நான் தூக்க மாத்திரையை சொல்லல மத்த மாத்திரையை” என்றாள்.

அவள் கொடுத்த மாத்திரைகளை வாங்கி விழுங்கினான்.

“சரி…இப்ப பேசலாமா?”.

“காலையில பேசிக்கலாமே கண் விழிக்ககூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கிறாரே?” என்றாள் சிறு தடுமாற்றத்தோடு.

“இல்ல முதல்ல பேசணும் அதுக்கு அப்புறம்தான் மத்ததெல்லாம். “

எதிரில் வந்து அமர்ந்தவளை, அருகில் வருமாறு அழைத்தான்.

உதடுகள் துடிக்க உடம்பு மெல்ல நடுங்க அவன் முகத்தை ஏறிட்டாள்.

“மோகனா உண்மைய சொல்லு என்னை எந்த அளவுக்கு உனக்கு பிடிக்கும்?”

என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் ஒரு நிமிடம் தயங்கியவள் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

“சொல்ல தெரியல ஆனா நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் உங்க கூடவே இருக்கணும் அப்படின்னு நினைக்கிறேன் கடவுள் கிட்டயும் அதைத்தான் வேண்டுறேன்.”

பட்டென்று அவள் கைகளை பற்றி முத்தமிட்டான். மோகனா என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு அதன் பிறகு உன்கிட்ட ஒரு ரகசியத்தை சொல்றேன்.

“நீங்க தான் என்னை மன்னிக்கணும் நான்தான் தப்பு பண்ணினேன்.” என்றாள் விசும்பலோடு…

“போதும் மோகனா…நாமரெண்டு பேரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தா மனசுக்குள்ள இருக்கிறது பகிர்ந்துக்க முடியாது. அதனால் முதலில் நான்  பேசிடறேன். அதுக்கு அப்புறம் நீ சொல்லு” என்றவன் அவளைத் தன் கை வளையத்துக்குள் நிறுத்தினான்.




“மோகனா அப்போ உனக்கு எட்டு அல்லது ஒன்பது வயசு இருக்கும் நீ ஒரு குழந்தை கண்ணால பாக்குறதெல்லாம் நம்பக்கூடிய ஒரு சின்ன சிறுமி மனசுல தோணுச்சு சொல்லிட்டே அவ்வளவுதான். ஆனால் நீ சொன்னது பொய் என்று நான் மறுக்கவே இல்லை அப்படி செஞ்சிருந்தா ஒருவேளை பிரச்சனைகளை நான் சந்திக்காமல் இருந்திருப்பேனோ என்னவோ? அது என்னன்னு தெரியல மோகனா அந்த வயசுல துருதுருன்னு பட்டு பாவாடை கட்டிக்கிட்டு நீ வெளியே வரும்போது ஒரு தேவதையை பார்க்கிற மாதிரி இருந்துச்சு உனக்கு ஒன்னு தெரியுமா அன்னைக்கு மாடிப்படியில் நான் தான் உன் டிரஸ்சை உருவிட்டேன்னு நினைச்சுட்டு இருக்கே… இல்ல மோகனா நான் உருவல மாடிப்படி முகப்பில் கைப்பிடி இருக்குல்ல அதுல உன்னுடைய டிரஸ் மாட்டிருக்கு. இருட்டில் யாரோ இழுப்பதாக  நினைத்துக்கொண்டு கீழே விழுந்திருக்க. நான் சத்தம் கேட்டு ஓடி வரும் போது கரெக்டா லைட் எரிய அந்த உடையை நான்தான் கையில் எடுத்துக்கொண்டு கொடுக்கலாம்னு வந்தேன். நீ என்னை தவறாக நினைத்துக்கொண்டே உன் நெற்றியில் வழிந்த ரத்தத்தை தொடைக்க உன் முகத்தருகே குனிந்தேன் நீ என்ன  வேறமாதிரி நெனச்சிட்டே ஆகமொத்தம் அப்ப நான் உனக்கு வில்லனாக தெரிஞ்சிருக்கே…

உன்ன போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்தப்போது உனக்காக அடிவாங்கனுன்னு தோணிச்சி. அதான் நான் உண்மையை சொல்லாம அவங்க அடிக்கிற அடியை எல்லாம் தாங்கிகிட்டு இருந்தேன்.இப்ப நெனைச்சாலும் அது பைத்தியகாரதனமாத்தான் இருக்கு.

ஜெயில்ல போட்டு அடைச்சாங்க. கேள்விப்பட்ட எங்கப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து என் புள்ள அந்த தப்பு எல்லாம் பண்ணி இருக்க மாட்டான் அவனை விட்டுடுங்க என்று கெஞ்சினார். ஆனால் அவர் கண்ணு முன்னாடியே என்ன போட்டு அடிச்சாங்க. என்மேல் விழுந்த அடியின் வலி பொறுக்காமல் நான் கதற கதற  அவர் மனசுல ரணத்தை உண்டாக்கிடிச்சி. அன்னைக்கு ராத்திரி படுத்த மனுஷன் அடுத்தநாள் எழுந்திருக்க வில்லை. பிணமா கிடந்திருக்கிறார்.

அப்பாவோட சாவை கேள்விப்பட்டு ஊரிலிருந்து கிளம்பி வந்த அம்மா எங்க போனாங்கன்னு தெரியல…ஏதாவது விபத்து ஏற்பட்டு இருக்கும் சொல்றாங்க…பலநாட்கள் எங்கம்மாவை நான் தேடி சோர்ந்துப்போயிட்டே அவங்க உயிரோட இருந்தா கண்டிப்பா அந்த அரண்மனைக்கு என்னை தேடி வருவாங்க அந்த நம்பிக்கையிலேயே தினமும் அரண்மனை வாசலில் வந்து ஓரமாக உட்கார்ந்திருப்ப. எங்க அம்மா வரவே இல்லை…ஒரே நேரத்தில் தாயும் தகப்பனும் இழந்து என் சித்தப்பா உதவியால ஒரு வேலைக்கு சேர்ந்தேன். படிப்படியா உழைச்சேன்.

எனக்கு  என் குடும்பத்தை இழப்பதற்கு காரணமான உன் முகம்தான் அடிக்கடி நியபகத்துக்கு வரும். அதுதான் என்னுடைய உழைப்புக்கு தூண்டுகோலாய் இருந்தது. வெறி பிடிச்ச மாதிரி உழைப்பில் முழு கவனத்தையும் செலுத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தேன். இந்த அளவுக்கு அதாவது பல கோடி சொத்துக்கள் சொந்தக்காரனா நான் இருக்கிறேனா அது உன் மேல இருக்குற ஒரு வெறுப்பும் பழி வாங்குற எண்ணமும்தான். நீ எங்க இருக்கேன்னு தேடி கண்டுபிடிச்சு உன்னை கல்யாணம் பண்ணி இவ்வளவு பிரச்சினையும் கொடுத்து உன்னுடைய வாழ்க்கை ஃபுல்லா உன்னை சித்திரவதை பண்ணனும்னு நெனச்சேன். ஆனா அதுல நீ ஜெயிச்சிட்டே. நான் தோத்துட்டேன்.  உண்மையை சொல்லன்னுன்னா நான் ஒரு மனநோயாளி. அப்படி சொன்னாதான் சரியாக இருக்கும். ஆனால் உன் கூட பழகப்பழக என்னையே எனக்கு பிடிக்காமல் போனது. நீ இவ்வளவு நல்ல பெண்ணாக இருகிறாய்! உன்னை பழிவாங்க நெனச்சேனே? சில நேரங்கள்ல எனக்கு நானே தண்டனை கொடுக்கணும்னு தோணும்.




ஆனாலும் மனசை ஸ்டெடியா வச்சிருந்தேன். என்ன ஒரு திருடனாக தப்பா அடையாளப்படுத்தின உன்னை பழி வாங்கனும்னு. அந்த எண்ணத்தை மட்டும் நெஞ்சிலே தேக்கி வச்சிருந்தேன். பழிவாங்கனுன்னு அந்த எண்ணத்தை மட்டுந்தான் என் மனசுல நிறுத்தி வைத்திருந்தேன்.

நீ…அன்னைக்கு ஒரு நாளு  அதாவது விபத்து நடக்குறதுக்கு முன்னாடி என் காலைகட்டிக்கிட்டு அழுத்தியே அந்த நிமிஷமே நான் மொத்தமா நொறுங்கிப் போனேன். நான் எவ்வளவு பெரிய கெட்டவன்னு எனக்கு புரிஞ்சது. நம்ப மேல இவ்வளவு அன்பு வச்சிக்கிற ஒருத்தியை பழி வாங்கனும்னு நெனச்சுருந்தேன். ஆனா விபத்துக்கு அதுக்கப்புறம் என் மனநிலை சுத்தமாக மாறிப்போச்சி. என்னையே எனக்கு பிடிக்கல குழந்தை செய்த  தப்பை  மன்னிக்காமல்  பெருசான  ஒரு பெண்ணை தண்டிக்க நினைச்சது ஒரு முட்டாள்தனம்தான். என்று அவள் தோளில் சாய்ந்துகொண்டு தேம்பி தேம்பி அழுதான்.

“போதுங்க இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்ல வேணாம் பழசை நினைச்சு நினைச்சு உங்களையே நீங்கள் கஷ்டப்படுத்திக்கிறீங்க. நானும் பலமுறை அந்த அரண்மனைக்கு வந்து உங்களப் பத்தி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரித்து பார்த்தேன். யாருக்குமே எதுவுமே தெரியல…உங்களை ஒரு முறை பார்த்து மன்னிப்பு கேட்கணும் அப்படிங்கறதுதான் என்னுடைய எண்ணம்.

“……”

” ஏதோ ஒரு ரகசியம் சொல்வதாக சொன்னீங்களே…?”

” அதுவா… வெக்கத்தவிட்டு சொன்ன ஐ லவ் யூ மோகனா”

“யூ…யூ… நான் வேற ஏதோனு நெனச்சிட்டு சீ போங்க ” செல்லமாக அவன் மார்பில் குத்தியவள்,

“நானும் உங்களுக்கு சொல்றதுக்கு ஒரு ரகசியம் வைத்திருக்கேன். சொல்லட்டுமா? என்றாள் வெட்கத்தோடு.

“என்ன…”என்று ஆர்வத்தோடு கேட்டான்.

“நீ…நீங்க..”

“சொல்லு சொல்லு….?”

“நீ…ங்க.அப்பாவாகப்போறீங்க..இன்னைக்கு காலையிலதான் கன்பாமா தெரிஞ்சிச்சி. முதல் முதல் உங்ககிட்டதான் சொல்லுறேன்.”

என்றவளை ஆசைப்பொங்க அணைத்து முத்தமிட்டான் அவள் அன்பு கணவன்.

முற்றும்.




What’s your Reaction?
+1
18
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!