Serial Stories காதல் இளவரசி

காதல் இளவரசி – 20

20TH CHAPTER

 

பாம்பிடம் இருந்து தப்பி முதலையின் வாயில் சிக்குவதைப் போல ப்ரியனின் சதி வலையில் இருந்து தப்பியது இந்த கொடுமையான சுறாவிற்கு இரையாகத்தானோ என்று பத்மினியின் இதயம் தாறுமாறாய் எகிறியது, இன்னும் சில விநாடிக்குள் அந்த சுறாமீனின் வயிற்றுக்குள் செல்லப்போகிறோம் என்று நினைக்கும் போதே, பத்மினியின் இருந்த இடத்திற்கு அருகில் ஒரு சிறு சுவர் போல் முளைத்தது அதனுள் சில வயர்கள் ஒன்றோடோன்று பிண்ணிப் பிணைந்து இருக்க அந்த சிக்கலுக்குள் சுறாமீன் உட்புகுந்து கொண்டது அதன்பின் மீண்டும் அந்த சுவர்கள் உள் அமுங்கிக்கொண்டன. நடந்த எதையும் தன் கண்களாலேயே நம்ப முடியவில்லை ஒரே நாளில் இத்தனை வியப்புமிகு விஷயங்களா ? சற்றே நிதானித்துவிட்டு அந்த இடத்தை மேலும் ஆராய்ந்தாள் ஒரு சிறு ஆய்வுக்கூடம் போல் தோன்றமளித்தளது அவ்விடம் கடலுக்குள் இப்படியொரு சுரங்கப்பாதை தானாக அமைய வாய்ப்பில்லை இங்கே ஏதோ ஒரு தவறான நடவடிக்கைகள் நடத்தப்படுகிறது அதிலும் அந்த சுறாமீன் உண்மையானதும் அல்ல, அன்று உத்ராவும் தானும் கண்டது இந்த சுறாவாகத்தான் இருக்குமோ ? அப்படியானால் அன்று எங்களைப் பயமுறுத்த வேண்டும் என்றே யாராலோ ? யாராலோ என்ன அந்த பரத்தானே இந்த ஏற்பாட்டிற்கெல்லாம் காரணம் அவனாகத்தான் இருக்கமுடியும், கடலுக்குள் தேவையில்லாமல் போக வேண்டும் என்று சொன்னது அக்கறையா இல்லை தன் கயமைத்தனம் வெளியே தெரியக் கூடாது என்ற எண்ணத்தினாலா ? ஆனால் பரத்தின் முகத்தில் அவ்வளவு கொடூரம் இல்லையே ? அப்படியானால் பால் வடியும் பிள்ளையைப் போல இருந்து கொண்டு இந்த ப்ரியன் செய்த காரியம். அப்பாவி பெண்ணை சூறையாடி அவளை கொன்றிருக்கிறான் இதோ எனக்கு அத்தனை விவரமும் தெரிந்து விட்டது என்றுதானே பிளாஸ்டிக் கவரில் கட்டி பரலோகம் அனுப்பப் பார்த்திரக்கிறான். 




என் அதிர்ஷ்டம் இந்த சுரங்கபாதைக்குள் வந்து சிக்கிக்கொண்டது எதனாலோ பட்டு அந்த பாலீதீன் கவர் கிழியாவிட்டால் இன்னேரம் நான் இறந்து இதோ இதைப் போன்ற ஏதாவது ஒரு விலங்கிற்கு இரையாகி இருப்பேன். யோசித்து யோசித்து தலை வலித்தது உத்ராவிற்கு மீண்டும் சிறிது நேரத்தில் சுறாமீன் அந்த வயர் கட்டுக்குள் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பத்மினியை லட்சியம் செய்யாமல் மேல் நோக்கி மிதந்தது, எப்போதும் தயாராக தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த பேனாக் கத்தியின் மூலம் அந்த சுவற்றின் மெல்லிய விலகலை தடுத்தாள் வயர் குமிழ்கள் வர தைரியம் வரப்பெற்றவளாய் அதனுள் நுழைந்தாள் பத்மினி அது ஒரு மின்சாரக் கூடம் போல் இருந்தது. கடலுக்கு அடியில் இத்தனை வெப்பம் சேர்ந்த இடம் எப்படி இருக்க முடியும்.

சந்தேகப்பட்டதைப் போலவே அது செயற்கையாய் உருவாக்கப்பட்ட சுறாமீன் என்று தெரிந்து போனது ஆனா அதை இயக்கும் வல்லமை யாரிடம் உள்ளது என்பதுதான் அப்போதைய சந்தேகமாய் இருந்தது அவளிற்கு ! அந்த சிறிய இடத்தை ஆராய்ந்தாள் நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கும் கேமிராவின் இணைப்பைத் துண்டித்தாள். ஆனால் இதுவும் ஆபத்துதான் ஒருவேளை இதை தொடர்ந்து யாரேனும் கண்காணித்துக் கொண்டு இருக்கலாம் இணைப்புத் துண்டிக்கப்பட்டு விட்டதால் அந்த கயவர்கள் மூலம் எந்நேரமும் தனக்கு ஆபத்து வரும் அதற்குள் இங்கிருந்து தப்பியாக வேண்டும் இத்தனை ரகசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறதென்றால் நிச்சயம் இங்கே ஏதோ ஒன்று அரசாகத்திற்கு எதிராக நடந்து வருகிறது என்பதை அவளால் உணர முடிந்தது ஆனால் அதை கண்டுபிடிப்பது எப்படி ?

சில ரேடார் பதிவுகள் அலைவரிசைகளால் அங்கே ஒடிக்கொண்டு இருக்க, அங்கிருந்த கணிப்பொறியைத் தட்டினாள், விவரங்கள் வழுக்கிக் கொண்டு வந்தது. கடலில் பவளப்பாறைகள் பாதுகாப்பிற்காக ஒரு குழு அமைத்து கனிமவளமான யுரேனியத்தை யாருடைய சந்தேகமும் இல்லாமல் அந்நிய நாட்டிற்கு விற்பதே இவர்களின் நோக்கம் என்பதும் புரிந்து போனது சில பல தகவல்கள், கடிதங்கள், ஒப்பந்தங்கள் என அனைத்தையும் அந்த கொடூரமான கும்பலைப் பிடிக்க ஏதுவாய் சிக்கியது ஆனால் இதற்கெல்லாம் மூலக் காரணம் யார் ? பவளப்பாறைகளை மீண்டும் செயற்கைத்தனமாய் உருவாக்குவதே கடல் வெப்பமயமாவதை தடுக்கத்தான் ஆனால் கனிமவளங்கள் உருகுவதன் மூலம் மேலும் அல்லவா வெப்பசலனம் ஏற்படும் இது இன்னமும் ஆபத்தை உருவாக்குமே ? மனம் நிறைய பயத்தோடு மீண்டும் கண்களை ஓடவிட்டாள். சில கடிதங்களில் சத்யா நிக்கோலஸ், ப்ரியன் என்று பெயர்கள் அடிபட்டு இருந்தது, அப்போது இந்த கும்பலில் பிரியனும் ஒருவன் என்று தெரிந்தது பத்மினிக்கு ஆனால் இந்த பவளப்பாறைகள் பாதுகாப்பு ஏற்பாட்டை அரசாங்கத்திடம் இருந்து பெற்றவன் பரத், சத்யா என்ற நண்பன் ஒருவனும் அதற்கு கூட்டு என்று ஒருமுறை பரத் சொல்லியிருக்கிறான். அப்படியென்றால் பரத்தை பயன்படுத்தி இந்த சதி வேலை நடக்கிறதா இதை அவன் அறிந்திருக்கவில்லையா, நாட்டின் கனிம வளங்கள் எப்படியெல்லாம் சூறையாடப்படுகிறது. இதனால் எத்தனை ஆபத்துகள் விளையும் வெறும் பணத்திற்காக நடைபெறும் இத்துரோகக்கள் நாட்டையே சீர்குலைக்குமே, இதையெப்படி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது முதலில் நான் இந்த இடத்தில் இருந்து தப்பித்தால் அல்லவா இத்துரோகத்தை மற்றவர்களிடம் சொல்லமுடியும்.

கிட்டத்தட்ட 12000கிலோ மீட்டருக்குமேல் ஆழத்தில் இருக்கும் போது சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் எப்படித் தப்பிக்கப்போகிறேன். பத்மினி சில விநாடிகள் யோசித்தாள், பின்னர் ஒன்று இந்த இடத்தில் இருந்து தப்பிககும் வழியை முயலவேண்டும் அல்லது, இந்த துரோகம் நடக்கும் இடத்தோடு அழிந்து போக வேண்டும். மேற்கொண்டு ஏதேனும் ஆதாரங்கள் சிக்குகிறதா என்று கவனித்தாள். இடதுபுறம் உள்ள சிறு கருவியில் அந்த சுரங்கப்பாதைக்கு வெளியே கடலின் அமைதி புலப்பட்டது.




பத்மினி எங்கே என்ற கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் ப்ரியன் அமைதியாய் இருந்ததை பரத் விரும்பவில்லை என்பது அவனின் கோபக் கண்களிலேயே தெரிந்தது. உன்னைத்தான் கேட்கிறேன் ப்ரியன் பத்மினி எங்கே ?

எனக்குத் தெரியாது பரத்…. இங்கே யார் என்னைக் கேட்டு ஏதும் செய்யறாங்க, வேலைக்குன்னு வந்தா அதை தவிர மற்ற எல்லாத்தையும் தெளிவா செய்யறாங்க என்றவனின் பார்வை உத்ராவின் மேல் உஷ்ணமாய் பதிந்தது.

கேட்ட கேள்விக்கு பதில் இங்கே நான் இல்லாத சமயத்தில் நீதானே பொறுப்பு இந்த இரவு வேளையில் அவள் எங்கே சென்றிருக்க முடியும் அல்லது பகலில் இருந்தே அவளைக் காணுமா ?

உங்கள் கேள்வி எதற்கும் என்னிடம் பதில் இல்லை பரத், சிமெண்ட்தளங்கள் வந்திருக்கிறது என்று போன் வந்ததும் நான் பணி நடைபெறும் இடத்திற்கு செல்லும் முன் இந்த கம்ப்யூட்டர் அறையில் மற்ற பணிகளின் நடவடிக்கைகளை கவனித்து கொள்ளும் படி நான் பத்மினியிடம் கேட்டுக்கொண்டேன். அவளும் ஒப்புக்கொண்டாள் உங்களிருவரைப்பற்றி கேட்டதற்கு நீங்கள் வெளியே சென்றிருக்கிறிர்கள் என்றேன் அவளும் பதில் பேசாமல் விறுட்டென்று சென்றுவிட்டாள். நான் ஆட்டோமேட்டிக் கேமிரா புரோஜெக்டரை ஆன்செய்துவிட்டு கிளம்பிவிட்டேன் எனக்கு வேறு எதுவும் தெரியாது வரும்போது பத்மினி இங்கே இல்லை. நடந்த தவறுக்கு நான் உங்களைத்தான் காரணம் சொல்வேன் பரத். வந்த வேலையைச் செய்யவிடாமல் நீங்கள் இதோ இவளிடமும் பத்மினியிடம் நட்பு பாராட்டியதால் தான் இந்த சிக்கலே வந்தது. என்னால் வேலையைப் பார்க்க முடியுமா அல்லது பத்மினியின் பின்னால் அலைய முடியுமா ? ப்ரியன் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் உத்ரா பரத்திடம் வந்தாள்.

பரத் …..பத்மினி எங்கே அவளும் நீரஜாவைப் போல ஏதாவது தவறான முடிவு எடுத்திருப்பாளா ? நீங்கள் அவளை ரொம்பவும் கோபித்துக் கொண்டீர்கள் அவளும் மனம் உடைந்து போயிருந்தாளே !

ச்சீ….அப்படியிராது,,, பத்மினி அத்தனை கோழையில்லை கோபத்தில் சற்றுநேரம் எங்காவது சுற்றிவிட்டு வந்துவிடுவாள் நீ உடைமாற்றிக் கொண்டு ஓய்வெடு நான் பார்த்துக்கொள்கிறேன். உத்ரா தன் அறைக்கு வந்தபிறகும் மனம் ஒரு நிலையில் இல்லை பத்மினியை நினைத்து கவலையாய் இருந்தது. எங்கே சென்றிருப்பாள், அவளின் இந்த மறைவிற்கு நானும் பரத்தும் தான் காரணமா ?

உன்னை புத்திசாலி என்று நினைத்திருந்தேன் நீ இத்தனை முட்டாளாய் இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை அத்தனை எச்சரித்தும் நீ பரத்துடன் சுற்றிவிட்டு வந்திருக்கிறாய் எதற்கு பரத்தை தவிர இங்கே ஆண்களே இல்லையா பணக்காரன் என்றதும் ஏன் இப்படி பாய்ந்து போய் விழுகிறீர்கள் அவனை நம்பி விழுந்தது நீரஜா இன்று பத்மினி நாளைக்கு நீதான் உத்ரா, ச்சீ கண்ணெதிரே இத்தனை தவறுகள் நடந்தும் என்னால் தட்டிக்கேட்கவும் முடியவில்லை அதை சீர் செய்யவும் முடியவில்லை, நான் சொல்லசொல்ல கேட்டாகமல் அந்த பத்மினி பரத்துடன் நெருங்கிப் பழகினாள் இப்போது அவளையும் காணவில்லை,

பத்மினி காணாமல் போனதாக சொல்லப்படும் பரத் என்னுடன் தான் இருந்தார் ப்ரியன் வெறும் வாய் வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு நீங்கள் பரத் மேல் குற்றம் சாட்டுவது தவறு, பரத்தான் தவறு செய்தார் என்று ஆதாரத்துடன் நிரூபியுங்கள் நான் அவரை விட்டு விலகிவிடுவதோடு செய்த தவறுக்கு தண்டனையும் வாங்கித்தரப் போராடுகிறேன் அந்த பலம் உங்களுக்கு இருக்கிறதா அல்லது நீங்கள்

நெருப்பு சுட்டுவிடும் என்று எச்சரித்தால் கை வைத்து பார்த்துக்கொள்கிறேன் என்கிறாய் எங்கேடோ கெட்டு ஒழி…….! ப்ரியன் வெறுப்போடு கணிப்பொறி அறைக்குள் புகுந்து கொண்டான். உத்ரா மிகச்சோர்வாய் கட்டிலில் விழுந்தாள். கணிப்பொறியின் அறைக்குள் நுழைந்த ப்ரியன் வேகமாய் தன் முஷ்டியைக் குத்திக்கொண்டான். ச்சே… இவனுக்குன்னு அமையுது பாரு, உத்ராவை மட்டும் அவனை அடைய விடக்கூடாது எப்போவாது கண்ணயர்ந்த நேரத்தில் அவளை என் வசமாக்கிக் கொள்ளவேண்டும், சத்யாவிடம் இருந்து இமெயில் வந்திருந்தது. நிக்கோலஸ்க்கு அந்த சுரக்கப்பாதையில் யுரேனியத்தின் உருக்கும் செயல்பாடுகளைப் பார்க்கவேண்டுமாம் அதன் புட்டேஜ்களை அனுப்ப சொல்லிக் கேட்டு இருந்தான் ப்ரியன் தனக்கென ஒதுக்கப்பட்ட அந்த கருவியில் சுரங்கப்பாதையின் செயல்பாடுகளை கண்டறிய உயிர்ப்பித்த போது அது செயலிலந்து இருந்தது, சில நேரம் ஏதாவது ஒயரின் குறைபாடு ஏற்படுவதுதான் ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணிரேங்களாக அந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறதே என்று சந்தேகமாக இருந்தது, மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சேமித்து வைத்திருந்த தகவல்களை ஒடவிட்டான். மிகப்பொறுமைாகப் பார்த்தபோது அங்கே மானிட்டரில் ஒரு உருவம் கேமிராவைச் செயலிழக்கும் வேலையைச் செய்தது. மீண்டும் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்க்க அங்கே பத்மினி தெரிந்தாள். அடிப்பாவி நீ இன்னமும் சாகவில்லையா, கடலில் தானே எரிந்தேன் இவள் எப்படி இந்த சுரங்கத்திற்குள் சென்றாள்,

அவன் முகம் விகாரமாய் விரிந்தது. ம், என்னடா இத்தனை அழகான பெண்ணை அனுபவிக்கமால் வெறுமனே கொலைசெய்ய வேண்டி வந்ததே என்று கவலைப்பட்டேன் எனக்காகவே நீ உயிர் பிழைத்து அங்கே காத்திருக்கிறாய் இதோ வருகிறேன் பத்மினி கடலில் போட்டிருந்தாலும் இன்னும் இரண்டு நாளில் மிதந்து வர வாய்ப்புள்ளது இப்போது அங்கே வைத்து உனக்கு சமாதி கட்டிவிட்டுதான் மறுவேலை காத்திரு வித்தியாசமான அனுபவங்களுக்காக….கையில் கிடைத்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு ப்ரியன் விரைந்து வ்ந்தபோது அறைக்கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது?!

வெளிப்பக்கம் உத்ரா கட்டிலுக்கு அடியில் இருந்த பத்மினியின் மொபைலோடும், ப்ரியனை பூட்டிய அறைச்சாவியுடன் பரத்தை தேடிச் சென்றாள்.




 

What’s your Reaction?
+1
13
+1
15
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!